Saturday, November 07, 2009

இதுதான் புரட்சி

இனிமேல் இல்லை அடிமை
அவன் மேல் இல்லை சுமைகள்
உழுதவனும் உழைத்தவனும்
உரிமைக்கு போராட புகுந்தான்
அதுதான் பாரில் புரட்சி!


கிழிந்ததை கட்டிகிடப்பான்
மெலிந்தவன் மிகவும் அங்கெ
வலிந்தவன் ஏறி மிதிக்க
முதுகை காட்ட மறுப்பான்
அதுதான் பாரில் புரட்சி


அனைவரின் உழைப்பும்ஒருவன்
சுரண்டுதல் இனியார் பொறுப்பர்
துவக்கிடு உரிமை போரை
அதுதான் பாரில் புரட்சி

நெடுநல் வாழ்தல் எளிது
நெறிபட வாழ்தல் எளிது
அடிமையாய் வாழ மறுத்தால்
அதுதான் பாரில் புரட்சி


விடியலை நோக்கி நடந்தால்
விடியலும் வாசல் வருமே
இடியென எழுந்து நடடா
அதுதான் பாரில் புரட்சி

சிகப்பிலே துணியை உடுத்தி
சிரத்திலே பொதுமை நினைத்து
கரத்திலே துவக்கை ஏந்தி
நடப்பதே பாரில் புரட்சி

--


அனைத்து சிகப்பு சிந்தனை காரர்களுக்கு

நவம்பர் புரட்சிதின வாழ்த்துக்கள்



நன்றி:http://longlivelenin.blogspot.com/2007_05_01_archive.html

1917-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் நாள் உலக வரலாற்றில் என்றுமே நிலைத்து
நிற்கும் நாள். முதன் முதலாக சுரண்டல் ஒழிக்கப்பட்டது. அந்த நாளில் தான்.
கஞ்சிக்கு வழியில்லாமல் வயிறு காய்ந்து கிடந்த உழைப்பாளிகள்
தன்மானத்துடன் நிமிர்ந்து நின்றது. அந்த நாளில்தான். அன்றுதான் உலகின்
முதல் பாட்டாளி வர்க்க அரசு அமைக்கப்பட்டது.

அன்று காலை முதல் பெத்ரோகிராடு வீதிகளில் தொழிலாளர்கள் ஆயுதங்களுடன்
அணிவகுக்கத் தொடங்கினர். அரசு அலுவலகங்கள். ரயில் நிலையங்கள், காவல்
நிலையங்கள், வானொலி நிலையம் முதலியவை கைப்பற்றப்பட்டன. அரசின் தலைமையகமான கிரெம்ளின் மாளிகை இறுதியாக வீழ்ந்தது. முதலாளிகள் அலறி அடித்துக் கொண்டு ஊரை விட்டு ஓடினர். இப்படியாக உலகின் முதல் பாட்டாளி வர்க்க அரசு அமைக்கப்பட்டது. ரசியா சோசலிச நாடு என அறிவிக்கப்பட்டது. லெனின் அதனுடைய அரசு தலைவரானார்.

ஆட்சியில் அமர்ந்த அடுத்த கணமே நாடுகளுடனும் போர் நிறுத்த ஒப்பந்தம்
செய்து கொள்வதாக லெனின் அறிவித்தார். போரினால் நீண்ட காலமாக அமைதி
இழந்திருந்த மக்கள் நிம்மதி அடைந்தனர். ரசியாவின் அனைத்து நிலங்களும்,
வளங்களும் தேசிய உடைமை ஆக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை
வளைத்துப் போட்டிருந்த பண்ணையார்களின் நிலங்கள் ஏழை உழவர்களுக்கு
பகிர்ந்து அளிக்கப்பட்டன. உழவர்களின் வறுமை இருந்த இடம் தெரியாமல்
மறைந்தது.

உழைப்பாளி மக்கள் அரசு அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டனர்.
சோவியத்துகள் என்ற உழைக்கும் மக்கள் மன்றங்கள் அரசு நிர்வாகத்தை நடத்தின.
ஒரு ஊரின் உழைக்கும் மக்கள் அனைவரும் கூடி ஊருக்குத் தேவையான
சட்டங்களையும், திட்டங்களையும் தீட்டுவார்கள். அதை அமல்படுத்த ஒரு
நிர்வாகக் குழவும் தேர்ந்தெடுக்கப்படும். நிர்வாகக் குழ உறுப்பினர்கள்
கடுமையாக வேலை செய்து அந்த திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். சரியாக
ஒருமாதம் கழித்து மீண்டும் சோவியத்தின் கூட்டம் நடைபெறும். அதில்
நிர்வாகக் குழு உறுப்பினர்களின் வேலைகள் பரிசீலிக்கப்படும். திட்டம்
நிறைவேற்றப்படவில்லை என்றாலும், ஊழல் புகார் எழுந்தாலும் அவர்கள் பதவி
நீக்கம் செய்யப்படுவார்கள். அதுமட்டுமல்ல நீதிமன்றங்களாக செயல்படும்
அதிகாரமும் சோவியத்துகளுக்கு இருந்தது.

மக்களே சட்டங்களை இயற்றி, மக்களே அவற்றை அமல்படுத்தி, மக்களே நீதி
வழங்கும் ஆட்சி முறைதான் சோவியத் ஆட்சி முறை. லெனினால் உருவாக்கப்பட்ட
இந்த ஆட்சி முறைதான் உண்மையான, ஜனநாயகம். இதில் மக்களே சர்வ அதிகாரம்
படைத்தவர்கள்.

தொழிற்சாலைகளின் நிர்வாகம் தொழிலாளர்களிடம் வழங்கப்பட்டது. இதுவரை
தனிப்பட்ட முதலாளிகளின் லாபத்திற்காக பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன.
புரட்சிக்குப் பின்னர் மக்களுக்கு எவ்வளவு பொருட்கள் தேவையோ அவ்வளவு
பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. ஒவ்வொருக்கும் திறமைக்கேற்ற வேலை
வழங்கப்பட்டது. வேலைக்கேற்ற ஊதியம் வழங்கப்பட்டது. வேலையில்லா
திண்டாட்டம் நொடியில் மறைந்தது.

நாட்டின் எதிர்காலம் குழந்தைகள் கையில். இதை மனதில் கொண்டு 20 வயது வரை
கட்டாய இலவசக் கல்வி அளிக்கப்பட்டது. ஒரே நாளில் புதிதாக ஆயிரக்கணக்கான
பள்ளிகளும், கல்லூரிகளும் உருவாக்கப்பட்டன. மனப்பாட கல்விக்கு
முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அறிவு மற்றும் திறமைகளின் வளரச்சிக்கு
முன்னுரிமை கொடுக்கப்பட்டது.

அதுமட்டுமல்ல, உலகில் எந்த நாடும் செய்யாத மற்றொரு விசயத்தையும் சோவியத்
ரசியா செய்தது. ஜார் மன்னன் பல அண்டை நாடுகளை அடிமையாக்கி
வைத்திருந்தான். புரட்சி அந்த அடிமைச் சங்கிலிகளை உடைத்தெறிந்தது. லெனின்
அந்த நாடுகளுக்கு முழுவிடுதலை அளிப்பதாக அறிவித்தார். இச்செயல் உலக
மக்களால் போற்றப்பட்டது. ஆயினும் அந்த நாடுகளிலுள்ள மக்கள் பிரிந்து போக
விரும்பவில்லை. லெனின் தலைமையில் தங்கள் நாட்டிலும் சோசலிசம்
அமல்படுத்தப்பட வேண்டும் என்று விரும்பினர். அதனால் இந்த நாடுகள்
அனைத்தையும் ஒன்றிணைத்து சோவியத் யூனியன் என்ற கூட்டமைப்பை லெனின் ஏற்படுத்தினார்.

தொழிற்சாலை உற்பத்தி, விவசாய உற்பத்தியும் பெருகியது. வளமான எதிர்காலத்தை நோக்கி சோவியத் யூனியன் வேகமாக நடைபோட்டது. அப்போதுதான் அந்தக் கொடுமை
நடந்தது. ஒரு இளம் குழந்தையைக் குத்திக் குதற 22 கழுகுகள் பாய்ந்தன.
சோவியத் யூனியன் மீது 21 பணக்காரநாடுகள் படையெடுத்தன.

தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

Friday, November 06, 2009

உபரி என்பது மாயை அல்ல

கீழ் கண்ட கட்டுரையை அதியமான் பண்புடனில் எடுத்து போட்டு இருந்தா அதற்கான
பதிலை நான் கொடுத்து இருக்கிறேன்

//உபரி மதிப்பு என்னும் மாயயை'//


உபரி மதிப்பு (surplus value) என்பதே மார்க்சிசத்தின்
மையக்கூறு என்று சொல்லலாம : http://en.wikipedia.org/wiki/Surplus_value


தொழிலாளர்களின் உழைப்பிற்க்கு அளிக்கப்படும் சம்பளம்,
அவர்களால் உருவாக்கப்படும் பெருட்களின் மதிப்பை விட
(அல்லது உழைப்பின் 'சரியான மதிப்பை' விட) மிக மிக
குறைவானது, அந்த 'கொடுக்கப்படாத' சம்பளமே, உபரி
மதிப்பு என்று மார்க்சிசம் சொல்கிறது. அந்த உபரி மதிப்பு
'சுரண்டப்பட்டு', லாபமாக வெளிப்படுகிறது. அதுவே பின்
முலதனமாக உருவெடுக்கிறது. இதுதான் மார்கிசியத்தின்
மைய்யக் கரு. இது எப்படி மிக தவறான, பொய்பிக்கப்பட்ட
'போலி' விஞ்ஞானம் என்பதை பார்ப்போம்.


//மதிப்பு என்பது வாங்குபவரின் கோணத்தில் தான் நிச்சியக்கப்
படுகிறது. வாங்குபவருக்கு பயன் இல்லாவிட்டால், பெரும்
உழைப்பில் உருவான எந்த பெருளுக்கும் மதிப்போ,
தேவையோ இருக்காத். உதாரணமாக, பாலைவனத்தில்
சிக்கி, குடிநீருக்கு ஏங்குபவருக்கு, ஒரு மர மேசை தேவை
படாது. பயன் படாது. அம்மேசையை ஒரு தொழிலாளி
எத்தனை பாடுபட்டு, உழைத்து உருவாக்கியிருந்தாலும்,
அங்கு அதற்க்கு மதிப்பில்லை / தேவையில்லை. அதே
போல் தான் அனைத்து பொருட்க்கள் / சேவைகளுக்குமான
'மதிப்பு'. ஒரு பொருளின் மதிப்பு என்பது அதை உருவாக்க
உழைத்த தொழிலாளியின் உழைப்பின் சாரம் மட்டுமே
என்பது மார்கிசிய கருத்து.//


இது ஒரு கேலிக்கூத்தான கருத்து டிமாண்டு சப்ளை என்பதே

பொருட்களின் நடமாட்டத்துக்கு காரணம் என்ற அடிப்படையில் சொல்லப்படுவது

பாலைவனத்தில் இருப்பவனுக்கு மேசை தேவைப்படாது என்பதால்

மேசையை தயாரிப்பு செலவைவிட குறைவாக கொடுக்க எந்த

முதலாளியும் முன்வரமாட்டான் .

எப்பொழுது ஒரு பொருளுக்கு தயாரிப்பு செலவு கிடைக்கவில்லை

அந்த பொருளை தயாரிப்பதை முதலாளிகள் நிறுத்தும் அதன் தேவை

எந்த அளவில் இருந்தாலும் சரி .



உபரி மதிப்பு என்று ஒன்று உள்ளது என்று வைத்துக்
கொள்வோம். அந்த 'உபரியை' 'சுரண்டி' லாபாமாக
மாற்றுகிறார் ஒரு முதலாளி (இந்த சொல் எமக்கு
ஏற்புடையதாக இல்லை. வில்லத்தனமான அர்த்தம்
இதற்க்கு, பொது புத்தியில் ஏற்றப்பட்டுள்ளதால், 'தொழில்
முனைவோன்' என்ற சொல்லே சரியனது.) இந்த லாபம்
என்பது தொழிலாளர்களின் உழைப்பின் உபரி மதிப்பு
என்கிறது மார்க்சியம். சில கேள்விகள் :


//1.தொழில்முனைவோரின் 'உபரி மதிப்பு' என்ன ? ஒரு
நிறுவனத்தை கட்டமைக்க, organisational and managerial ability
மிக மிக மிக தேவை. Risk taking mentality, pioneering spirit,
innovative thinking, will power, leadership and communication skills :
இவை இல்லாமல் தொழில் முனைவோர் ஒரு நிறுவனத்தை
உருவாக்கி, வெற்றிகரமாக நடத்த முடியாது. இவற்றின்
உபரி மதிப்பு என்ன ?//

தொழில் முனைவோரின் உபரி மதிப்பா உபரி என்றால் என்னவென தெரிந்தால்

இப்படி லூசுத்தனமா கேட்டு இருக்க மாட்டீர்கள்

ஒரு தொழிலாளின் கூலி கொடுப்படாத உழைப்பே உபரி மதிப்பு

இதில் தொழில் முனைவோனின் உழைப்பு எங்கு வரும் அவனுக்கு

யார் கூலி கொடுக்காமல் விட்டார்கள்


//2. ஒரு தொழிற்பேட்டையில், ஒரே வகையான இரு
தொழிற்சாலைகள் (சம அளவிலான முதலீட்டில்), ஒரே
நாளில் துவக்கப்படுகின்றன என்று வைத்துக்கொள்வோம்.
இரண்டும் ஒரே வகையான எந்திரங்களை கொண்டு, ஒரே
வகையான பொருட்களை உற்பத்தி செய்து, ஒரே சந்தையில்
விற்க்க முயல்கின்றன. இரண்டிலும், ஏறக்குறைய சம
அளவு திறமை, உற்பத்தி திறன் கொண்ட தொழிலாளர்கள்
வேலை செய்கின்றனர். ஒராண்டிற்க்கு பிறகு, ஒரு
தொழிற்சாலை ஒரளவு லாபமும், மற்றொன்று நட்டத்தையும்
அடைகின்றன. முதல் தொழிற்சாலையின் நிகர லாபம்,
அதன் தொழிலாளர்களின் உழைப்பின் உபரிதான் என்றால்,
பிறகு நட்டத்தில் இயங்கும் இரண்டாவது தொழிற்சாலையின்
தொழிலாளர்களின் 'உபரி மதிப்பு' எங்கு சென்றது ?
இரு நிறுவனங்களிலும் சம திறன் கொண்ட தொழிலாளர்கள்,
சம எண்ணிக்கையில், சம திறன் கொண்ட எந்திரங்களை
கொண்டு, ஒரே ரகபொருட்களை தான் உற்பத்தி செய்தனர்.
பிறகு லாப அளவில் வித்தியாசம் எப்படி ஏற்பட்டது ?//

இந்த மாதிரி கற்பனைக்கு நாம் பதில் சொல்ல முடியுமா சொல்லுங்கள்

மார்க்ஸ் அனேக விதமான ஆதாரங்களை எடுத்து காட்டி ஒரு நூல்

எழுதி இருக்கிறார் அதாவது டேட்டா எதுவும் இல்லாமல் ஒரு குறையை

எப்படி சொல்ல முடியும் அந்த நூலுக்கு எதிராக



//3. கூட்டுறவு அல்லது அரசு துறையில், மேற்கொண்ட
உதாரணத்தில் உள்ளதை போன்ற அதே வகை / அளவிலான
நிறுவனத்தை (தொழிலாளர்களுக்கு அதே சம்பளம் என்று
வைத்துக்கொள்வோம்) உருவாக்கினால், அதன் லாபம்
மற்றும் உற்பத்தி திறன், தனியார் நிறுவனங்களை விட
குறைவாக இருப்பது இய்லபு. ஏன் ? காரணம், உரிமையாளர்
என்று யாரும் இல்லாவிட்டால் ஏற்படும் பெறுப்பற்ற
மனோபாவம். Sense of ownership gives rise to sense of responsibity.
அரசு துறையின் managers மற்றும் workers : இவர்களின்
உற்பத்தி திறன் (productivity) தனியார் துறையை விட
குறைவாகவே இருக்கிறது. இவர்களின் 'உபரி மதிப்பு'

எப்படி குறைந்தது ? அது எங்கு சென்றது ?//

பொறுப்பில்லாமல் இருந்தால் எந்த நிறுவனமும் லாபத்தில் ஓடாது

அந்த பொறுப்பற்ற தனத்தில் முதலே காணமல் போகும்போது உபரி

மட்டும் ஒட்டிகொண்டா இருக்கும்


//மார்க்ஸ் அனுமானித்த அடுத்த முக்கிய விசியம் : ஒரு
சமூகத்தின் நிகர உபரிமதிப்பு படிப்படியாக சுரண்டப்பட்டு,
ஒரு கட்டத்தில் மிக மிக மிக குறைந்து, அந்த சமூக
கட்டமைப்பே அழியும் என்பது//

அட நண்பரே அவர் சொன்னது அது இல்லை உபரி சுரண்டப்பட்டால்

அது வளரும் பிறகு அது சமூகத்தை இருப்பவன் இல்லாதவனாக்கும்

ஒரு போதும் தேயாத் இந்த லட்சனத்தில் புரிந்து கொண்டால் என்ன சொல்லது


// Business cycles என்று சொல்லப்படும்
பொருளாதார சுழற்சிகள் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை
நிகழ்கின்றன. மார்க்ஸின் 'விஞ்ஞானப்படி' ஒவ்வொறு சுழற்ச்சியின்
மந்த நிலையின் முடிவில், சிறு தொழில் நிறுவனங்கள் அழிந்து,
குறைந்த எண்ணிக்கையிலான பெரு நிறுவனங்கள் மட்டும்
பிழைக்கும். மனித ம்உழைப்பை குறைக்கும் திறன் கொண்ட
புதிய எந்திரங்களை பெரு முதலாளிகள் மேலும் மேலும்
உருவாக்கி, தொழிலாளர்களின் உழைப்பின் )உபரி மதிப்பை
மேலும் மேலும் 'சுரண்டி, ஒரு கட்டத்தில் இனி சுரண்டவே
முடியத நிலை உருவாகி, முதலாளித்துவ பெருளாதார
கட்டமைப்பே இயல்பாக அழியும். //


உலகின் பொருளாதார மந்தநிலைக்கு காரணம் அதுவென மார்க்ஸ்

சொல்லவில்லை அதிக உற்பத்தி சந்தையில் அதிகளவிலான

பொருள்களை தேங்க வைக்கும் பிறகு அந்த தேக்கம் சரியாக

நாளாகும் என்பதுதான் இதுதான் நடந்து வந்து இருக்கிறது

உதாரணமாக செருப்பின் தேவையை விட அதிகமான செருப்புகள்

உற்பத்தி செய்யப்படால் செருப்பு விலை குறைந்து விடும்

இப்படியாக ஏறத்தாழ அனைத்து பொருட்களும் அதிகளவில்

சேரும் போது ஒரு தேக்க நிலை உருவாகும் அதைத்தான் சொல்கிறார்

எனவே லாபநோக்கில் இல்லாமல் சந்தை உற்பத்தி இல்லாமல்

தேவை கருதி உற்பத்தி செய்யுங்கள் என்றார் அதுதா சோசலிச உற்பத்தி

புரிந்ததா/


ஆனால் கடந்த 150 வருட
பொருளாதார வரலாறு இதை பொய்பிக்கிறது. ஒவ்வொறு
பொருளாதார மந்தமும், அதன் முன்பு உருவான மந்தத்தை
விட மோசமானதாக இருக்கும் என்ற கணிப்பும் பொய்யானது.
தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் மார்க்ஸ் சொன்னது போல
படுமோசமாக ஆகாமல், மாற்றாக மிக மிக உயர்ந்துள்ளது.


இன்றைய உலகப் பொருளாதார மந்தம், 1930களின் பெரு
மந்தத்தை விட மிக மோசமானதாக மாறி, முதலாளித்துவமே
அழியும் நிலை (மார்க்ஸ் சொன்ன இறுதி பேரழிவு) வந்துவிட்டது
என்று ஆர்பாரித்த மார்க்ஸியவாதிகள் இன்று

world economic recovery அய் கண்டு வாயடைத்துப் நிற்கின்றனர்.

//அப்படி யாரும் அதிர்ச்சி அடைய வில்லை உண்மையில் அதிகளவிலான்

பொது துறை உற்பத்தியை நம்பிய இந்தியா போன்ற நாடுகள் இதிலிருந்து

தப்பித்ததால் அனைத்து பொருளாதார நிபுணர்களும் மார்க்சின் நூல்களை

மறு வாசிப்பு செய்கிறார்கள்

மார்க்சியம் ஒரு போலி விஞ்ஞானம். அதன் தாக்கத்தால் சென்ற
நூற்றாண்டில் ஏற்பட்ட பேரழிவு மிக மிக கொடுமையானது.
ஏற்றத்தாழ்வுகளை அகற்றும் லட்சியவாதம், எதிர் மறையான
விளைவுகளையே ஏற்படுத்தியது. The road to hell is paved with
good intentions என்கிறது ஒரு ஆங்கில முதுமொழி.//


எனது பதில்

முதலில் உபரி மதிப்பு என்றால் என்னவென இந்த கட்டுரையாளர் காப்பிடலை நன்கு படித்து இருந்தால் இவ்வாறு கருதமாட்டார்

உலகில் மதிப்பு என்பது விலையை வைத்துதான் நிர்ணயிக்கப்படுகிறது என்றால் ஒரே மதிப்புள்ள பொருட்கள் எப்படி பரிமாற்றம் செய்யப்படும்

உதாரணமாக என்னிடம் 50 கிலோ அரிசி இருக்கிறது உங்களிடம்

இதற்கு சமமான துணி இருக்கிறது இதில் சமமான என்பதை எதை வைத்து சொல்வீர்கள் உழைப்பு மதிப்பைத்தான் அதாவது 50 கிலோ அரிசியை நான் உற்பத்தி செய்ய எடுத்து கொள்ளப்பட்ட உழைப்பு 100 மீட்டர் துணியை நெய்ய எடுத்துகொள்ள ப்பட்ட உழைப்புக்கு சமமானால் அரிசியும் துணியும் பரிமாறிகொள்ளப்படும் ஆனால் இதில் பணம் இடையில் வருகிறது

50கிலோ அரிசியும் 100 மீட்டர் துணியிம் பணத்தில் பரிமாறப்படும்போது

அதற்கு விலை நிர்ணயிக்கப்ப்டுகிறது விலை என்பது எப்படி நிர்ணயிக்கப்படுகிறது அதில் ஈடுபடுத்தப்பட்ட கூலியை கொண்டு

கூலி என்பது உழைப்புக்கு சமமாக கொடுக்கப்படுவதில்லை 100 மீட்டர் துணியை நெய்ய நியாயமாக 6 மணி நேரம் தேவைப்பட்டால் பணிரெண்டு மணி நேரம் உழைப்பு வாங்கப்படுகிறது மிச்சம் இருக்கும் ஆறு மணி நேரம் அதாவது கூலி கொடுப்படாதா உழைப்பு என்பதுதான் உபரி மதிப்பு இதுதான் முதலாளியின் பாக்கெட்டில் போய் விழுகிறது

அதாவது உழைப்பு இங்கு ஒரே நெரத்தில் பயன்பாட்டு மதிப்பாகவும் பரிமாற்று மதிப்பாகவும் செயல்படுகிறது

இதைத்தான் மார்க்ஸ் கண்டறிந்து சொன்னார்

--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

Wednesday, October 28, 2009

ஆம்வே இன்னும் பிற ஏமாற்று வலைகள்

இந்த தீபாவளி லீவில் இருந்து ஒரு நண்பர் என்னை ஆம்வேயில் சேரும்படி விரட்டி கொண்டு இருக்கிறார்

சந்தையை வளைக்கும் மூலதனம் என்பதே ஆம்வே

தரமான பொருட்கள் ஆனால் 15 ஆயிரம் ரூபாய்க்கு டார்கெட்
ஏனிந்த டார்கெட் கேள்வி கேட்க கூடாது உங்களை மில்லியனர்
ஆக்கனுமா வேணாமா என கேட்டு 1 மணி நேரம் மரண மொக்கை போட்டார் எனது சகலையின் நண்பர் .

சரி போகுது என சகலைக்காக பொறுத்து பார்த்து பிறகு சந்தை பொருளாதாராம் மறுகாலனி யாதிக்கம் என்பவை பற்றி வகுப்பு
எடுத்ததும் நான் எந்த காலத்திலும் மில்லியனர் ஆகபோவதில்லைஎன்றார்

இனி இந்தியாவில் பணக்காரர்கள்: ஏழைகள் இரண்டு வர்க்கம்தான் இருக்குமாம் இதில் சேரவில்லை என்பதால் நான் இரண்டாவது வர்க்கத்தில்தான் இருப்பேனாம்

சுவிட்சர் லாந்து பயணத்தையும் , ஸ்டார் ஹோட்டல் களில் காலம்போக்குவதையும்

வெறுமனே வங்கி கணக்கை மட்டும் பார்ப்பதையும் செய்யாமல்
வேலைக்கு போவது படு முட்டாள் தனமாம்

உலகில் இன்வெஸ்டர்களுக்கு மட்டும்தான்
நேரம் , பணம் , பாதுகாப்பு கிடைக்குமாம்

அத்தகைய இன்வெஸ்டராகாவிடில் நான் காணமல் போய்விடுவேனாம்

மொத்தத்தில் மகாலட்சுமியை காலால் உதைக்கிறேனாம்

அப்படி பட்ட ஆம்வே என்றால் என்ன என்று இணையத்தில் படித்த போது

ஒரு நண்பர் இந்த கட்டுரை எழுதி இருந்தார்

மலைச்சரிவு

இப்படியெல்லாம் நடக்கும் என்று நான் நினைத்திருக்கவே இல்லை. நன்றாகப் பழகிக்கொண்டிருக்கும் நண்பர்களை திடீரென ஏதோ அற்பகாரணங்களுக்காக இழக்க உங்களுக்கு மனம் வருமா?

இது என்ன கேள்வி என்கிறீர்களா? வாழ்க்கையில் பல நண்பர்களை நான் அப்படி இழந்திருக்கிறேன். நீங்களும் பல நண்பர்களை இப்படி இழந்திருப்பீர்கள். இழப்பதற்குக் காரணமாகவும் இருந்திருப்பீர்கள். அப்படிப்பட்ட அற்பகாரணங்கள் பல இருக்கலாம் ஆனால் அவைகளில் முக்கியமானது மல்டி லெவல் மார்க்கட்டிங் எனும் வியாபாரம் சம்பந்தமாக உங்கள் நண்பர் உங்களை வற்புறுத்தி, அதை நீங்கள் மறுத்து அதனால் ஏற்படும் சங்கடம் ஆகும்.

மல்டி லெவல் மார்க்கட்டிங் என்றால் என்ன? ஒரு சட்டை வாங்குங்கள் உங்கள் நண்பர்களில் நான்கு பேரை அறிமுகப்படுத்துங்கள் உங்களுக்கு பணம் வரும். ஆயுள் காப்பீடு எடுங்கள், உங்கள் நண்பர்களில் இருவரை அறிமுகப்படுத்துங்கள் உங்க்ளுக்கு பணம் வரும். மாதமாதம் கைநிறைய சம்பாதிக்கலாம். இப்படியெல்லாம் கவர்ச்சிகரமாய் விளம்பரம் செய்வார்கள். வேண்டாம் என்று சொன்னாலும் விடமாட்டர்கள். இந்தக் கொடுமையைப் புரியவைத்து மாட்டிவிட ஓரிடத்தில் கூட்டம் வேறு நடத்துவார்கள். நான் இப்படிப்ப்ட்டவர்களிடம் இந்தமாதிரி பலவற்றைப்பார்த்திருக்கிறேன். இதில் இவ்வாறு குறைகள் இருக்கின்றன என்றால் அது வேறு இது வேறு நீங்கள் ஒருமுறை மீட்டிங் வந்து பாருங்கள் என்பார்கள். எனக்கு இந்தமாதிரி நண்பர்களைப் பிடிக்க நேரமில்லை என்றாலும் விடமாட்டர்கள். நீங்க உங்களை இணைத்துக் கொள்ளுங்கள் மற்றபடி நண்பர்களைப் பிடிப்பதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்பார்கள்.

இப்படி தன் அரசாங்க, உயர்பதவிகளைத் தொலைத்தவர்கள் கணக்கிலடங்காதவர்கள். உழைப்புக்கு இருக்கும் மரியாதையை கேவலமான ஆள்காட்டி வேலை செய்து சோம்பேறிகளாகவும் தாந்தோன்றிகளாகவும் மக்களை ஆக்கும் முயற்சிதான் இந்த மல்டி லெவல் மார்க்கட்டிங். இது இந்தியாவில் எனக்குத் தெரிந்து அறிமுகமானது ஆம்வே எனும் அமெரிக்க நிறுவனத்தால்.

ஆனால் இது உலகில் எந்த மூலையில் தோன்றியது தெரியுமா? புரட்சிக்கு முற்பட்ட இரஷ்யாவில் சில நிறுவனங்கள் சராசரித் தரமுள்ள தமது பண்டங்களை விற்பதற்கு இந்தச் சாதுரியமான வழியைக் கையாண்டன. அதிகமாக விற்பனை ஆகும் செய்தியேடுகளிலும் இதழ்களிலும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் வெளியிடப்படும். உதாரணத்துக்கு, ஒரு மிதிவண்டி 50 ரூபிள் என்று விற்ற காலத்தில் 10 ரூபிளுக்கு உங்களுக்கு மிதிவண்டி வேண்டுமா? நாங்கள் தருகிறோம். மேலும் விபரங்களுக்கு தொடர்புகொள்க, இவ்வாறு விளம்பரம் செய்தால் யார்தான் மயங்க மாட்டார்கள். உண்மையில் 10 ரூபிளுக்கு அந்த நிறுவனம் ஒருவருக்கு அளிப்பது மிதிவண்டி அல்ல. நான்கு சீட்டுக்கள். இந்த நான்கு சீட்டுக்களையும் அந்த மனிதரின் நான்கு நண்பர்களுக்கு தலா 10 ரூபிளுக்கு விற்கவேண்டும். பின் அந்த 40 ரூபிளை அந்நிறுவனத்திடம் கொடுத்தால் அவர்கள் மிதிவண்டியைக் கொடுப்பார்கள். அந்த மனிதர் கையிலிருந்து செய்த செலவு 10 ரூபிள்தான் ஆனால் அவருக்கு 40 ரூபிளுக்கான மிதிவண்டி கிடைத்தது. அதேபோல அவரின் அந்த நான்கு நண்பர்கள் அவர்களின் இதர நான்கு நண்பர்களுக்கு விற்க வேண்டும். இவ்வாறு 10ரூபிளுடன் அவர்வர்களின் நான்கு நண்பர்களையும் சேர்த்து விற்று வந்த காசில் அவர்கள் மிதிவண்டி வாங்கிக்கொள்கிறார்கள்.

இதில் மோசடி எதுவுமில்லை என்றே தோன்றுகிறதல்லவா? விளம்பரம் செய்த நிறுவனமும் அதன் வாக்கை நிறைவேற்றுகிறது. நிறுவனத்துக்கும் இழப்பு எதுவுமில்லை. இதை சோவியத் இரஷ்யாவில் மக்கள் மலைச்சரிவு என்றே அழைத்தார்கள். சரி ஒன்று நான்கானது புரிகிறது. நான்கு எவ்வளவாகும், 4 x 5 = 20 ஆகும். அவர்கள் நான்கு நான்கு பேரை இந்த சரிவில் தள்ளிவிடுவதாய் வைத்துக்கொண்டால் 20 x 5 = 100 ஆகிறது எண்ணிக்கை. ஆக மொத்தம் 1 + 4 + 20 + 100 = 125 புதிய ஆட்கள் இந்த மலைச்சரிவில் உருண்டுவிழுந்து விட்டார்கள்.

மொத்தம் மிதிவண்டி வாங்கிய 25 நபர்கள் போக ஏனைய 100 பேருக்கு மிதிவண்டி வாங்கலாம் என்ற நம்பிக்கை மட்டுமே கிடைக்கிறது. மலைச்சரிவு நண்பர்க்ளது குறுகிய வட்டத்தை உடைத்துக்கொண்டு நகரெங்கும் பெருகிப் பரவுகிறது. ஆனால் ஒவ்வொருவரும் சீட்டுவாங்கக் கூடிய புதிய ஆட்களைத் தேடிப் பிடிக்க மிகுந்த சிரமத்துக்குள்ளாக வேண்டிவருகிறது. இந்த வியாபாரத்தில் இழுக்கப்பட்டு மலைச்சரிவில் உருண்டு விழுவோரின் எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்துச் செல்கிறது. 1, 4, 20, 100, 500, 2500, 12,500, 62,500 இப்படியாக விரல்விட்டு எண்ணக்கூடிய 8 அடுக்கினில் அறுபதாயிரம் அப்பாவிகளைத் தாண்டிச் செல்கிறது. அடுத்த அடுக்கில் எத்தனை பேர் தெரியுமா? மூன்று இலட்சத்திற்கும் மேல். இதில் வாங்க விருப்பமில்லாதவர்கள், இந்தக்கட்டுரையைப் படித்து சுதாரித்துக்கொண்டவர்கள் என ஒரு கூட்டம் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓட இந்தக்கூட்டம் பெருகும் வாய்ப்பை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து இப்போது முழுக்க தன் வளர்ச்சியை இழந்து நிற்கும். அப்போது ஏமாந்து போனவர்களின் எண்ணிக்கை ஐந்தில் நான்கு பங்காய் இருக்கும். இன்னொரு உண்மை என்னவென்றால் மோசடிவேலையை ஆரம்பித்த நிறுவனத்துக்கு இப்போது முழுக்க இலாபமே. ஏனென்றால் 10 ரூபிள் மட்டும் கட்டி அட்டை வாங்கியவர்கள் மீதம் நாற்பது ரூபிளுக்கு ஆள் கிடைக்காமல் ஆப்பு வைக்கப்படும்போது அவர்கள் கட்டிய தலா 10ரூபிளை இந்த நிறுவனமே சுவாகா செய்து கொள்ளும். தாங்கள் காசு கொடுத்து வாங்க முடியாத பண்டத்தைப் பெற ஒவ்வொரு மனிதனும் தன் நண்பரைப் பணயமாக வைத்து வாங்கிக்கொள்ள நண்பர்களே கிடைக்காதவர்கள் தலையில் நாமம் போட்டு திருப்பதி போய் மொட்டை போடக் காசுகூட இல்லாத நிலைக்கு வர காரணமாய் அமைந்து விடுகிறார்கள். இரஷ்யாவின் பிரபல எழுத்தாளர் இந்தக் கூத்தினை "பரஸ்பர மோசடியின் பெரும் பெருக்கு" என்று குறிப்பிடுகிறார்.

ஆம்வே ஆரம்பித்த மோசடியில் பல நிறுவனங்களும் குதித்தன. ஒருகாலத்தில் இது பெருகி வரும் அபாயம் உணர்ந்து இதனை இந்திய அரசாங்கம் தடை செய்திருந்தது. ஆனால் காசால் அரசாங்கத்தையே விலைக்கும் வாங்கும் நிறுவனங்களால் இந்தச் சட்டம் என்னவானதென்றே தெரியாமல் போனது. மக்களைப் பாதுகாக்க அரசாங்கத்துக்குள்ள பொறுப்புகளை அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்துக்காக அழித்து மக்களை விலைபேசத்துணிந்திருப்பார்கள் என்பதில் நம் யாருக்கும் சந்தேகமில்லை.

இந்த மோசடியில் காப்பீட்டு நிறுவனமாகக் காலடி வைத்துள்ள பஜாஜ் அலயன்ஸ் நிறுவனமே ஈடுபடுகிறது. ஆயுள் காப்பீடு வேண்டுமா நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். ஏன் இன்னொருவரை நான் கட்டாயப்படுத்த வேண்டுமென்றால், உங்களுக்கு இலட்சலட்சமாய்ப் பணம் வருகிறது என்று சொல்கிறது. இப்போது இதை பைனரி மார்க்கட்டிங் என்று பெயர்மாற்றம் செய்துவிட்டனர்.

ஆதாவது நான்குபேருக்கு பதில் இருவரை அறிமுகப்படுத்துவது. எதுவாயினும் மோசடி மோசடிதான். கடைசியில் நண்பர்களை அறிமுகப்படுத்த முடியாதவர்கள் கட்டிய பணம் அமுக்கிக் கொள்ளப்படும்போது அவர்களின் சாபம் நம்மைச் சும்மா விடாது. இது அப்பட்டமான உண்மை காப்பீடே தேவைக்கு அதிகமாகப் போகும் போது அது வெட்டிச் செலவு ஆகும். LIC, UTI போன்ற அரசு நிறுவனங்களில் காப்பீடு செய்வது நமக்குப் பாதுகாப்பு. சமீபத்தில் ஒரு வங்கி திவாலான போது பொதுத் துறை நிறுவனமான LIC அதன் வாடிக்கையாளர்களுக்கு பணத்தைத் திரும்ப அளித்தது. மியூட்சுவல் பண்டு எனும் பரஸ்பர நிதிகளில் கவர்ச்சி விளம்பரங்களைக் காட்டிவிட்டு விளம்பரத்தின் கடைசியில் வேகமாகப் புரியாத அளவுக்கு கசமுசா கசமுசா என்று ஒருவன் பேசக் கேட்டிருப்பீர்கள். அதை உன்னிப்பாகக்கேட்டால் "மியூட்சுவல் பண்டுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை முதலீடு செய்யும் முன் பங்குப் பத்திரத்தைக் கவனமாப் படிக்கவும்" என்பது விளங்கும். ஏன் அதை நிறுத்தி நிதானமாய்ச் சொன்னால் என்ன? அப்போ எவனாவது அதைப் பார்க்காமல் வாங்கி ஏமாறமாட்டானா என்று அவர்கள் ஏங்குகிறார்கள் என்றுதானே அர்த்தம். உழைத்த காசே நிலைக்காத இந்தக்காலத்தில் ஏமாற்றி பெருக்கும் காசு எம்மாத்திரம்.

நல்ல நண்பர்களை இந்தமாதிரி மோசடிகளால் இழந்திருப்பீராயின் அதற்காகக் கவலைப்படாதீர்கள். அப்படிப்பட்டவர்கள் நல்ல நண்பர்கள் இல்லை. நம்மை விற்க நாம் ஒத்துக் கொள்ளாததால் இலாபத்தை இழந்து புத்திமாறிப்போன இவர்கள் நமக்கு நண்பராகவே இருக்கலாகாது. மலைச்சரிவு என்று இந்த மல்டி லெவல் மார்க்கட்டிங் முறைக்குப் பெயரிட்டது முற்றிலும் சரி. ஆனால் அந்தச்சரிவு ஒன்றில் நீங்கள் யாரும் விழுந்துவிடாமல் இருக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.


--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

Saturday, October 24, 2009

தேசிய இனபிரச்சனையில் அருணபாரதியுடன் விவாதம்

தோழர் அருணபாரதி இணையத்தில் அறிமுகமானவர் அவருடன் நடத்திய உரையாடலை விவாதத்துக்காக அவரின் அனுமதி பெற்று இங்கு பதிகிறேன் -தியாகு


me
: எந்த முரண்பாடுகள் முதன்மையானது தோழர் வர்க்க முரண்பாடா இன முரன்பாடா
அருணபாரதி: ஓர் இனம் தன்னைத் தானே ஆளக்கூடிய உரிமையல்லாத எல்லா இடத்திலும், அவர்களை ஒடுக்கக்கூடியவர்களிடத்திலிருந்து பிறக்கும் இன முரண்பாடே முதன்மை முரண்பாடு...
ஓர் இனம் தன்னைத் தானே ஆளக்கூடிய ஒர் தேசிய அரசில், அம்மக்களுக்கும் அவர்களை ஒடுக்கும் தேசிய முதலாளிகளுக்குமான வர்க்க முரண்பாடே முதன்மை முரண்பாடு..
தமிழ்நாட்டுத் தமிழர்கள் தொடர்ந்து தில்லியால் ஒடுக்கப்படுவதால் ஆரியப் பார்ப்பனிய இந்து மதவெறி இந்திய அரசுக்கும், தமிழ்த் தேசிய இனத்திற்குமான இன முரண்பாடே முதன்மையானது...
அதே போல், ஈழத்தமிழர்களை ஒடுக்கும் சிங்கள அரசுக்கும் ஈழத்தமிழர்களுக்குமான முதன்மை முரண்பாடும், இனமே ஆகும்..
புரிகின்றதா,..?
me: ம்ம் ஆகவே இனவிடுதலைக்குத்தான் முதலில் போராடனுமா அதற்கு வர்க்க போராட்டம் அடுத்த கட்டமா அப்படியெனில் எப்போ வர்க்க போராட்டம் நடத்துவது
அருணபாரதி: முதலில் உங்களுக்கென ஒரு நாடு, வரையறுக்கப்பட்ட எல்லைப் பகுதியை உருவாக்குங்கள்.. அந்நாட்டில் உள்ள தேசிய அரசை, அரசு என்ற ஒடுக்குமுறைக் கருவியைக் கைப்பற்றுங்கள்..
அதை விடுத்துவிட்டு, எல்லையே இல்லாத ஓர் பகுதியில், முதலில் யாரை யாரையெல்லாம் திரட்டி புரட்சி நடத்துவீர்கள்..?
கேரளமும், கன்னடமும், ஆந்திரமும் என்றைக்காவது தமிழகத்தைப் போல தில்லி எதிர்ப்புக் கருத்தியலைக் கொண்டிருந்ததா..?
ஆரிய மொழியான சமஸ்கிருதத்துடன் மட்டுமல்லஆரிய இந்தியத் தேசியத்துடனும் சமரசம் கொண்ட அவர்கள் நம்மோடு இணைந்து போராட முதலில் முன் வருவார்களா...?
தமிழ்நாட்டு தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்குக் குரல் கொடுக்க வேண்டும் என சொல்லும் தமிழரல்லாத ஒரு இந்தியத் தேசியரை எங்காவது நீங்கள் கண்டதுண்டா..?கேரளப் பாட்டாளி வர்க்கமும், தமிழ்த் தேசியப் பாட்டாளி வர்க்கமும், இன்னபிற பாட்டாளி வர்க்கங்களும் இணைந்து இந்திய முதலாளிகளை முறியடிக்க வேண்டும் என்கிற இந்தியப் புரட்சிக்கு, இன்றைய சூழ்நிலையில் ஏதேனும் சாத்தியமிருக்கிறதா...?
கேரளாவில் உள்ளப் பாட்டாளி வர்க்கம் எவ்வளவு புரட்சிகரமானதாக இருந்தாலும், முல்லைப் பெரியாற்றில் தமிழ்நாட்டுக்கு உள்ள உரிமை சரி தான் என்று அறிவிக்குமா..me: ம்ம்
அறிவிக்காது
அருணபாரதி: சேகுவேரா வழிவந்த கியுபா, சாவேஸ், மாவோ வழிவந்த சீனா என வர்க்கப் புரட்சி வெற்றி பெற்ற எல்லா பொதுவுடைமை நாடுகளும் அவரவர் சொந்த நலனில் அக்கறை காட்டி சர்வதேசியத்தை அழித்துவிட்ட பிறகு, புதிய பாட்டாளி வர்க்க சர்வதேசியம் தோற்றம் பெற வேண்டிய அவசியம் உள்ளது..
me: அப்போ பொதுப்படையான் இராணுவமும் பொது அரசாங்கமும் கொண்டிருக்கும் இந்திய அரசை துண்டு துண்டாக இருக்கும் புரட்சிகர சக்திகல் இணைந்து எப்படி எதிர்க்க முடியும்
அருணபாரதி: அதற்கு இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒர் இனமாவது தமக்கான சுயநிர்ணய உரிமையைப் பெற தீர்க்கமாக போராடி, மற்ற இனங்களை அத்துடன் இணைத்துக் கொள்ள வேண்டும்..
me: இந்திய தேசிய புரட்சியின் மூலம் இந்திய அரசை தூக்கி எறிய வேண்டாமா
அருணபாரதி: தமிழ்த் தேசியப் பாட்டாளி வர்க்கம் இதற்குத் தயார்...
ஆனால், மற்ற தேசிய இனங்களில் யார் இதற்கு தயார்..?
அவர்கள் தயராகி வரும் வரை நாம் இந்தியத் தேசிய அரசின் இன ஒடுக்குமுறையை அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டுமா..?
நல்லாயிருக்கிறது ஞாயம்..
தமிழ்நாட்டில் ஓரளவு தற்பொழுது மெல்ல எழுந்துள்ள இந்தியத் தேசிய எதிர்ப்பு நிலை, காசுமீர், மணிப்புர், அசாம், மிசோரம் தவிர வேறு எந்த மாநிலத்திலாவது எழுந்திருக்கிறதா..?
முதலில் அதனை எழச் செய்யுங்கள்..
கேரளாவிலும் கர்நாடகத்திலும் ஆந்திரத்திலும், மகாராட்டிரத்திலும் முதலில் இந்தியப் புரட்சிக்கான விதையை விதையுங்கள்..
தமிழ்நாட்டில் ஏற்கெனவே புரட்சித் தேவை என்ற உணர்வு எழுந்து விட்டது..
தமிழ்நாடு மட்டுமே விடுதலை பெற வேண்டுமென புரட்சியை முன்னெடுக்கும் பொழுது தான் கேரளம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் புரட்சிக்கான ஆதரவு, எதிர்ப்புக் குரல்கள் எழும்பி, ஒருவேளை சாத்தியப்பட்டால் அதுவே இந்திய புரட்சிக்கு இட்டு செல்லும்..
me: ம்ம்
அருணபாரதி: ஆனால், வெறும் தமிழ்த் தேசியப் புரட்சியை மட்டுமே குறை கூறிக் கொண்டிருந்தால், நீங்கள் நம்பியிருக்கும், கனவுகாணும், இந்திய புரட்சிக்கும் அது ஆப்பு வைக்கும்..
me: ம்ம்
அருணபாரதி: தமிழ் இனம் மற்றும் அனைத்துப் பிற இனங்களின் சுயநிர்ணய உரிமைகளையும் மதிக்கும், அதற்கு மதிப்பளிக்கும் இந்திய அரசு என்பது சாத்தியமே இல்லை..
அதனை வரலாற்றில் பின்னால் தான் நீங்கள் உணர்வீர்கள்..
தமிழகத்தைத் தவிர வேறு எங்குமே இவ்வாறான புரட்சிகர சக்திகளை வளர்த்தெடுக்காமல் இது சாத்தியப்படாது..
முதலில் அதற்கான முன்முயற்சியை எடுங்கள்..
me: ரச்யா போன்ற நாடுகலில் நடந்த புரட்சி இப்படித்தான் தனிதனியாக நடந்ததா
அருணபாரதி: இந்தியாவில் தற்பொழுது இருக்கும் நிலை ரசியாவில் அன்று இல்லை..
அருணபாரதி: ரசியா மன்னராட்சியின் கீழ் ஒன்றுபட்டிருந்த நேரத்தில், அங்குள்ள பல்வேறு இன மக்களும் இணைந்து போராடுவதற்கான ஒரே இயக்கமாக லெனினின் இயக்கம் வளர்ந்திருந்தது..?
இந்தியாவில் அது போன்ற இயக்கத்தை கட்டி எழுப்புவது சாத்தியமா முதலில்...?
me: அத்தகைய ஒரு இயக்கத்தை நாம் இந்ஹியாவில் கட்ட முடியாமைக்கு என்ன காரணம்
அருணபாரதி: முல்லைப் பெரியாற்றை விட்டு கொடுக்க மறுக்கும் மலையாளிகளும், காவிரியை மறுக்கும் கர்நாடகமும், நமக்கு எதிரிகளல்ல.. அவர்களை தூண்டி விட்டு தேசிய இனங்களின் புரட்சிகர சக்திகளை இணைந்து விடாமல் தடுக்கும் இந்திய ஆரிய இனவெறி அரசே இதற்கு முதல் எதிரி..
மலையாளிகள் உள்ளிட்ட இந்தியாவில் அனைத்து தேசிய இனங்களும், தமிழர்களுக்கும் வேறுபாடு உள்ளது..
தமிழர்கள் இத்துணைக் கண்டத்தின் மூத்தக் குடிமக்கள்..
தமிழர் அல்லாத அனைத்து இனங்களும் ஆரிய இனத்துடன் சமரசம் செய்து கொண்ட இனக்குடும்பங்கள்..
இது அடிப்படை..
me: ம்ம்
அருணபாரதி: இந்திய அரசு ஆரியப் பார்ப்பனர்களின் தலைமையிலான அரசு..
ஆரியத்துடன் சமரசம் கொள்ளாத அரசுகள் மட்டுமே இந்தியாவை எதிர்ப்பது ஏன் என்று யோசிசத்துண்டா..?
தமிழர்கள் தமிழர் மரபினம்..
காசுமீரகள் தனித்த மரபினம்..
அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் மங்கோலிய மரபினம்..
me: தனிதனி இனமாக இருப்பதால் புரட்சி தனிதனியாத்தான் நடத்த முடியும் என்பது எப்படி சாத்தியம் இல்லை ஏனென்றால் தமிழ்நாட்டில் புரச்சி நடக்கும்போது இந்திய் அரசு அப்படியேதான் இருக்கும் அது எளிதாக தமிழ் நாட்டில் நடக்கும் புரட்சியை நசுக்கும் அல்லவா
அருணபாரதி: கண்டிப்பாக நசுக்கும்.. அப்பொழுது, நமக்காக கேரளமும், கர்நாடகமும் இணைந்து குரல் கொடுக்குமா அல்லது இந்திய அரசுடன் சேர்ந்து கொண்டு அவர்கள் நம்மை ஒடுக்குவார்களா..?
me: கேரளாவில் புரட்சிகர பாட்டாளிவர்க்கம் இருக்கிறதா?
அருணபாரதி: உருவாக்க வேண்டும்..
me: அவர்கள் தற்போதைய நிலவரப்படியும் தனியாக புரட்சி செய்யும்போதும் ஒடுக்கத்தான் செய்வார்கள்

அருணபாரதி: ஒரு ஒடுக்கும் அரசு, தன்னிடமுள்ள அடிமை விலகிச் செல்ல முற்படும் போது ஒடுக்காமல், கம்யுட்டர் கீபோர்டையா சொடுக்கிக் கொண்டிருப்பான்..?
ஒடுக்குமுறைகளை வென்று தேசம் படைப்பது தானே பாட்டாளி வர்க்கத்தின் லட்சியம்..
me: கண்டிப்பா ஒடுக்குவான்
புரட்சிகர பாட்டாளி வர்க்கம் உருவானாலும் அது தமிழ் பாட்டாளி வர்கத்தை ஆதரிக்காது என்று எப்படி நீங்கள் முன் முடிவுடன் வருகிறீர்கள்?
அகில இந்திய அளவில் ஒரு புரட்சிகர கட்சியை கட்டாமல் இந்த ஒருங்கினைப்பை எப்படி செய்வது
அருணபாரதி: இந்தியா என்ற கட்டமைப்பை, ஆரியப் பார்ப்பனியபப் புனைவை, தேசியத்தை ஏற்றுக் கொண்ட எவரும் தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கு குரல் கொடுக்க மாட்டார்கள்..
இந்தியாவின் போலி விடுதலை எப்படி சாத்தியமானது..?
me: உலக பாட்டாளிகளே ஒன்று சேருங்கள் என்ருதான் மார்க்ச் சொன்னார் உலக இனமே ஒன்று சேர் என சொல்லவில்லையே
அருணபாரதி: அய்யோ.. அய்யோ..
Workers of all Countries Unite..
இது தான் மார்க்சின் முழக்கம்..
me: போலி விடுதலையே இந்தியா பூராவும் குறிப்பிட்ட நிபந்தனையுடன் இந்தியவிடுஹலை எனும் ஒர்ரே குறிக்கோளுடன் மட்டுமே செய்யப்பட்டதை பார்க்கும் போது
அருணபாரதி: இதற்கு தமிழாக்கம், அனைத்து நாடுகளின் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்பது தான்..
me: இதை உணருகிறீர்களா
அருணபாரதி: மார்க்சின் முழக்கப்படி தமக்கான நாடுகள் உள்ள பாட்டாளி வர்க்கங்கள் இணைவது தான் சர்வதேசியம்..
me: மார்க்ஸ் இனபிரச்சனையை பேசி இருக்கிறாரா
அருணபாரதி: அதிகாரம் கொண்ட நாட்டை பெறாத, தமிழினம் உங்கள் சர்வதேசியத்தில் முதலில் இணைய முடியுமா என்று கூறுங்கள்..
me: பாட்டாளி வர்க்கமாக ஏன் இனைய முடியாது
சுரண்டபடுகிற வர்க்கமாக ஏன் ஒன்றிணைய கூடாது
அருணபாரதி: எங்கு இணைந்திருக்கிறது என்ற காட்டுங்கள் முதலில்..
me: ஏன் இனிமேல் ஒன்றினைக்க முடியாதா
அருணபாரதி: முடியும்...
me: நீங்கள் தான் சொன்னீங்க கேரளாவில் புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தை உருவாக்கனுன் என்று
அதையும் நாம்தானே செய்யனும்
அப்படி இல்லவிட்டால் நடுவழியில் நிற்போம் அல்லவாஅருணபாரதி: ஒன்றிணைக்க முடியும்.. அதற்கான முதல் தேவை, அங்கு பாட்டாளி வர்க்கங்களை எழும்ப செய்வது...
கேரளாவில் அதற்கு வேலை செய்யுங்கள் யார் வேண்டாமெனத் தடுத்தது..?
அருணபாரதி: தமிழ்நாட்டில் மட்டும் அமைப்புக் கட்டிக் கொண்டு அதனை சொல்ல வேண்டாம்..
நாம் தான் அதனை செய்ய வேண்டும் என்று யார் சொன்னது..?
me: கேரளாவில் கட்டினால் என்ன அங்குள்ள கட்சியுடன் இணைத்து கொண்டால் என்ன
அருணபாரதி: முதலில் அந்தந்தப் பாட்டாளி வர்க்கம் பக்கத்துப் பாட்டாளி வர்க்கத்துடன் இணைவதற்கான விருப்பத்துடன் இருக்க வேண்டுமே..
கேரளாவில் அது போன்ற பாட்டாளி வர்க்கக் கட்சி, புரட்சிகரமானக் கட்சி எழுந்துவிட்டால், நாம் நிச்சயமாக அவர்களுடன் உறவு வைத்துக் கொள்வோம்..
me: ஒரு விசய்ம் என்னவென்றா ல்ஒரு விவாதம் செய்து ஒரு குறிப்பிட்ட நிபந்தனையில் நீங்களும் நாங்களுமே ஒன்ரினைய முடியவில்லை எனில் எப்படி அவர்களை இணைப்பது
எனக்கு என்னமோ தெளிபடுத்தல் ரொம்ப முக்கியமா படுது
அருணபாரதி: ஆனால், அவர்களும் முல்லைப் பெரியாறு எங்களுக்கெ என்று முழக்கமிட்டால் என்ன செய்வீர்கள் அய்யா..?
21:06 me: முல்லை பெரியாறு முல்லை பெரியாறு மொத்த பாட்டாளி வர்க்க புரட்சிக்கும் இதுஹான் முன் நிபந்தனையாகவும் குறுக்காகவும் நிர்கிறது
அருணபாரதி: தோழரே.. நாம் அதற்கான முயற்சிகளை எடுக்கலாமே தவிர.. இதனை அவர்கள் மீது திணிக்கக் கூடாது.. அவர்கள் தம் சொந்த தேசிய இனத்திற்கு விடுதலை தேவை என்று உணராத நிலையில், இது எப்படி சாத்தியமாகும்..?
21:07 முல்லைப் பெரியார் ஓர் அணை சிக்கலாக குறுக்கிப் பார்க்காதீர்..
ஓர் உரிமை சிக்கல்..
நமக்கான உரிமையை அவர்கள் மறுப்பதற்கான காரணம் தான் என்ன..?
ஏன் எதிர்க்கிறார்கள்..?
me: இன உரிமையை முன்னிலைப்படுஹ்தாமல் வர்க்க நிலையை முன்னிலைபடுத்தினால்
21:08 அருணபாரதி: முல்லைப் பெரியாற்றின் நீரால் பாசனம் செய்வது தமிழ்நாட்டு விவசாயப் பாட்டாளி வர்க்கம் அல்லாமல் டாடாவும், பிர்லாவுமா பாசனம் செய்கிறான்..? முதலில் இதை சொல்லுங்கள்..
me: வர்க்கமாக திரட்டுவதில் என்ன சிக்கல் இருந்தாலும் அதுவே முதலும் முடிவுமான ஒரு புரட்சியை நோக்கி கொண்டு செலுத்துமா இல்லையா
21:09 அருணபாரதி: நிச்சயமாக.. ஆனால், இணைவது என்ற பெயரில் எம தேசிய இனத்தின் உரிமைகளை எக்காரணம் கொண்டும் எம்மால் விட்டுக் கொடுக்க முடியாது..
me: சரிநாளை தொடருகிறேன்
அருணபாரதி: மகிழ்ச்சி..
விவாதம் நன்றாகவே இருந்தது..
நாளை எனக்கு வேலை இருக்குமென நினைக்கிறேன்..
21:10 நானே உங்களை தொடர்பு கொள்கிறேன்..
தொடர்ந்து பேசுவோம்..
me: எப்போ முடியுமோ அப்போ செய்யலாம் அவசரம் இல்லை
சரி
அருணபாரதி: மகிழ்ச்சி..



--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

Wednesday, October 21, 2009

ஒபாமா தீபாவளி கொண்டாடினார்





நன்றி: திரு .பாக்கியராசன்

செய்தி - ஒபாமா தீபாவளி கொண்டாடினார்)

இந்தியாவா இருந்தாலும், அமெரிக்காவா இருந்தாலும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவனோடு நெருங்கி இருக்கும் வித்தை பார்பானுக்கு தெரியும்...

ஒரு பூணூலும், நெத்தி நாமமும், கவுட்டுக்கு குறுக்கே கட்டிய பழைய வேட்டியும் அவனை எங்கே கொண்டு நிறுத்துகிறது பாருங்கள்...

எதற்கு இப்படியான சாதிகளை, மூட பழக்கவழக்கங்களை, பண்டிகைகளை உருவாக்கினான் பார்பான் என்று இப்பொழுது புரிகிறதா?..



--
தியாகு
--
//Washington: Barack Obama celebrated Diwali by lighting the ceremonial
lamp at the White House amidst chanting of Vedic mantras seeking world
peace, becoming the first US President to personally grace the
occasion.

"I think it's fitting that we begin this work in the week leading up
to the holiday of Diwali -- the festival of lights -- when members of
some of the world's greatest faiths celebrate the triumph of good over
evil," Obama said in his remarks on the occasion at a White House
function held at its historic East Room yesterday.//

அய்யா இது நல்லவை கெட்டவற்றை வெற்றி கொண்டதன் அடையாளம்
அல்ல திராவிட மக்களை ஆரியர்கள் வெற்றி கொண்டதை கொண்டாடுகிறார்களாம் அதாவது உங்களின் நீக்ரோ சகோதரர்களை
அமெரிக்காவில் கொன்று அமைதியான கைகளை ஏந்தி வணக்கம் சொன்ன
செவ்விந்தியர்களின் கைகளை கூட வெட்டி கொன்றார்களே வெள்ளையர்கள்
அவர்கள் அதை ஞாபக படுத்த கொண்டாட்டம் நடத்தினால் எப்படி உணர்வீர்களோ அப்படி உணர வேண்டும் ஓபாமா ( போய் ஆரிய திராவிட வரலாறு படிங்க )

These brahmin evil occupy all over the world to create unbalanced society like india in the base of sathi

அப்படியே கதையை திரிச்சு அமெரிக்கா வரையிலும் கொண்டு போய் இருக்கானுகடோய்


[]

This is for the first time that a US President attended and celebrated
Diwali at the White House -– thus giving an official recognition to
the festival of lights celebrated across the world by millions of
Hindus, Sikhs and Jains.


"This coming Saturday, Hindus, Jains, Sikhs and some Buddhists, here
in America and around the world, will celebrate this holiday by
lighting 'Diyas', or lamps, which symbolise the victory of light over
darkness, and knowledge over ignorance," Obama said.

[]
Among those present at the occasion were several eminent members of
the Indian community, nearly half a dozen members of his Cabinet and
several Indian American members of his administration. The visiting
Union Minister of Commerce, Anand Sharma, and Indian Ambassador to the
US Meera Shankar graced the occasion.

"While this is a time of rejoicing, it's also a time for reflection,
when we remember those who are less fortunate and renew our commitment
to reach out to those in need," Obama said, minutes before lighting
the lamp while Pandit Narayanacharya Digalakote from the Sri Shiva
Vishnu temple chanted Vedic mantras.

"While the significance of the holiday for each faith varies, all of
them mark it by gathering with family members to pray and decorate the
house and enjoy delicious food and sweet treats," said the US
President.

"In that spirit of celebration and contemplation, I am happy to light
the White House Diya, and wish you all a Happy Diwali, and a Saal
Mubarak," Obama said amidst a round of applause from the audience
invited for the occasion.

Using the occasion, Obama announced to re-establish the advisory
commission for Asian American and Pacific Islanders (AAPI) and White
House initiative created by the former US President Bill Clinton, 10
years ago. Obama signed an executive order at this occasion.

அய்யா ஒபாமா உலகை ஆக்கிரமித்து உள்ள அமெரிக்க படைகள்
என்று வெளியேறு கிறார்களோ இராக்கின் எண்ணெய் வயல்களில்
இருந்து உங்களை போன்ற சுரண்டல் வர்க்கம் என்று வெளியேறுமோ
அன்றுதான் எங்களுக்கு தீபாவளி

[]
"On a personal note, when I talk about America's AAPI communities,
I'm talking about my own family: my sister, Maya; my brother-in-law,
Konrad; my beautiful nieces, Suhaila and Savita; and the folks I grew
up with in Indonesia, and in Honolulu, as part of the Hawai'ian Ohana,
or family," he said.

Obama said the AAPI communities have roots that span the globe, but
they embody a rich diversity, and a story of striving and success that
are uniquely American.

"But focusing on all of these achievements doesn't tell the whole
story, and that's part of why we're here. It's tempting, given the
strengths of the Asian American and Pacific Islander communities, for
us to buy into the myth of the "model minority," and to overlook the
very real challenges that certain AAPI communities are facing: from
health disparities to educational disparities, that still exist in
some communities, to economic disparities – higher rates of poverty in
some communities, and barriers to employment and workplace advancement
in others," he said.

Some AAPIs, particularly new Americans and refugees, Obama said still
face language barriers. "Others have been victims of unthinkable hate
crimes, particularly in the months after September 11th -- crimes
driven by ignorance and prejudice that are an affront to everything
that this nation stands for," he said.

"And then there are the disparities that we don't even know about
because our data collection methods still aren't up to par. Too often,
AAPIs are all lumped into one category, so we don't have accurate
numbers reflecting the challenges of each individual community," he
said.

Noting that smaller communities in particular can get lost, their
needs and concerns buried in a spreadsheet, Obama said: "That's why I
am signing this executive order today, re-establishing the advisory
commission and White House initiative created by President Clinton 10
years ago."

Obama said: "Because when any of our citizens are unable to fulfil
their potential due to factors that have nothing to do with their
talent, character, or work ethic, then I believe there's a role for
our government to play."















தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================


--
Posted By தியாகு to செம்மலர் at 10/21/2009 01:51:00 PM


--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================
 
Free Signature Generator
Free Signature Generator