தத்துவம் நடைமுறை போராட்டம்



தத்துவம் நடைமுறை போராட்டம்

பெரும்பாலும் சல்லிகட்டின் எதிர்ப்பாளர்கள் பின் வருமாறு வகைப்படுத்தலாம் 

இடதுசாரி மற்றும் மார்க்சியம் பேசுபவர்கள்
1.    இந்த சல்லி கட்டு ஆதிக்க சாதிகளின் கையில் இருக்கிறது . இது ஒரு ஆதிக்க சாதிகாரன் தனது காளையை அடக்கினால் பெண்ணை தருவேன் என சொல்வது ஆதிக்க திமிர் வகை என
2.    வர்க்க போராட்டமல்ல விவசாய தொழிலாளர்கள் நன்மைக்கு ஏதுமில்லை
3.    பல்வேறு தொழிலாளர்கள் பிரச்சனை இருக்கும் போது அதை விடுத்து ஜல்லி கட்டு பெரிய கோரிக்கை இல்லை
பீட்டா மற்றும் விலங்கு நல ஆர்வளர்கள் கூற்று
4.    மிருகத்தை வதை செய்தல் தவறு
5.    வீரம் எல்லாம் சிங்கத்தை அடக்கினால் வருமே அதை அடக்கலாமே என கிண்டல் செய்வது
6.    பல்வேறு மிருகவதைகளை பீட்டா தடை செய்திருக்கிறது காளை அடக்குகிறேன் பேர்வழின்னு அதன் வாலை கடிப்பது அதன் கொம்பை சிதைப்பது இப்படி மாட்டை மிரள விடுவது இதெல்லாம் தவறு

நமது பதில் :

இந்த சல்லி கட்டு ஆதிக்க சாதிகளின் கையில் இருக்கிறது . இது ஒரு ஆதிக்க சாதிகாரன் தனது காளையை அடக்கினால் பெண்ணை தருவேன் என சொல்வது ஆதிக்க திமிர் வகை என
        எல்லா இடங்களிலும் ஆதிக்க சாதிகள் தமது ஒடுக்குமுறையை நடத்தவே செய்கிறார்கள் இங்கே சாதிதான் வர்க்கம் வர்க்கம்தான் சாதி என்ற அளவுக்கு ஆதிக்க சாதிகள் முதலாளிகளாக ஆண்டான்களாக வலம் வருகிறார்கள் கொங்கு மண்டலத்தில் கவுண்டர்கள் முதலாளிகள் என்றால் தெற்கே தேவர்கள் முக்குலத்தோர்கள் ஆண்டைகள் சென்னை பக்கம் வன்னியர்கள் ஆண்டைகள் இப்படி ஆண்டைகள் எல்லாம் ஆதிக்க சாதிகளாக வலம் வருகிறார்கள் அவர்களிடன் பெரும்பாலும் நிலம் தொழில் வளம் இருப்பதை காணலாம் . இது முந்தைய நிலபிரபுத்துவ தொடர்ச்சியாக ஒரு முதலாளித்துவ புரட்சி நடக்காமலேயே சமூகம் முதலாளித்துவத்தை உள்வாங்கியதால் வந்த விசயமாகும்.

ஆக இது வர்க்க முரண் கொண்ட சமூகம்தான் சாதி முரண் அதனால் வர்க்க முரந்தான் அதில் போராட்டம் இருக்கவே செய்கிறது . ஆனால் ஜல்லி கட்டில் தலித்துகளும் இருக்கிறார்கள் மாட்டை பிடிக்கிறார்கள் ஒரு சில இடங்களை தவிர அவர்கள் எல்லா இடங்களிலும் மாடு பிடிக்க அனுமதிக்கப்படுகிறார்கள் இதன் மூலம் வர்க்க வேறுபாடு சாதி வேறுபாடு மோதல்கள் இருக்கு என்றே சொல்லலாம்

இந்த சல்லி கட்டு ஆதிக்க சாதிகாரன் கையில் மட்டும் இல்லை என்பதே பதில்

7.    // வர்க்க போராட்டமல்ல விவசாய தொழிலாளர்கள் நன்மைக்கு ஏதுமில்லை
//
எல்லா போராட்டங்களும் வர்க்க போராட்டமாக இருக்கனும் இருக்க வேண்டும் என்ற அவசியம் இருக்கா இது கலாசார ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டம் . அப்போ கலாசாரம் என்பது பொதுவானதாக இருக்கான்னா ஆமாம் இருக்கு
ஜல்லி கட்டு நிலபிரபுத்துவம் தொடர்ச்சி கலாசாரம்
இதை ஆதரிப்பதன் மூலம் நிலபிரபுத்துவத்தை ஆதரிக்கிறோமா பின்னோக்கி செல்ல போகிறோமா
இல்லை ஒரு சமூகத்தை இன்னொரு சமூகம் தனது கலாசார ஒடுக்கு முறை மூலம் தீர்த்து கட்டு கிறது
அதை தமிழ் சமூகம் புரிந்து கொண்டதை ஏன் அப்படி பார்க்க மறுக்கிறோம் .
ஏற்கனவே தமிழன் பல்வெறு இடங்களில் தமிழன் என்ற இன அடையாளத்துக்கக தாக்கப்பட்ட போது மற்ற
இனத்தை சேர்ந்த பாட்டாளி வர்க்கம் ஏன் குரல் கொடுக்கலை என்ற கேள்வியை தமிழின ஆதரவாளர்கள் வைக்கிறார்கள்
ஆக ஒடுக்கப்படும் இன கலாசாராத்துக்கு கம்யூனிஸ்டுகள் ஏன் ஆதரவளிக்க கூடாது . அவர்களை மீட்டெடுத்து உங்களுக்கு சமமாக்கி உலக தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்ற லட்சியத்தை நோக்கி தள்ளுவது சரியா ? இல்லை எனில் அவர்கள் தாக்கப்படும் போது அதை எதிர்த்து போராடும் போது ஆதரவ்ளிக்காமல் வியாக்கியானம் பேசுவது சரியா?



தேசிய இனம் என்பதே முதலாளித்துவ சந்தைக்கானதாக இருக்கலாம் ஆனால் தேசிய இனங்களை அவற்றின் தனிபண்புகளை அவற்றின் விடுதலையை லெனின் ஸ்டாலின் யாருமே மறுக்கவில்லை .

தேசிய இனங்களின் ஒற்றுமை என்பது அந்த இனங்களின் பாட்டாளிவர்க்க ஒற்றுமையை கட்டி அமைப்பதாகும் ஆகவே முதலாளிகள் கோரும் தேசிய இனத்தில் பாட்டாளிகளை பகைவர்கள் ஆக்குவார்கள் ஆனால் நாம் கோரும் தேசிய இனங்களின் ஒற்றுமை என்பது இன்னொரு தேசிய இனத்தின் பாட்டாளிகளின் பிரச்சனைக்கு கூட நமது தேசிய இனம் வர்க்க ரீதியா உதவனும் ஆக தேசிய இனம் என்பது மொத்த பாட்டாளி வர்க்கத்தின் கூறுதான் என்பதாகும் .

இந்த போராட்டம் ஆளும் தேசிய இனம் ஒன்று இருகிறது அது இந்தியா முழுக்க இந்து ஆட்சியை கட்டமைக்க துடிக்கிறது என்பதை உணர்த்த வில்லையா?
தமிழன் அவன் மதம் அவன் கலாச்சாரம் எல்லாம் இந்து என்கிற ஒற்றை கலாசாரத்திற்குள் வெறும் கடுகை போல கரைந்து போகனும் என நினைப்பதுதான் நீதிமன்றம் வாயிலாக , சட்டத்தின் வாயிலாக வெளிப்படுகிறதை ந்நீங்கள் உணரவில்லையா?

நாலு தேசிய இன மாணவர்கள் இருக்கும் ஒரு விடுதியில் ஒரு தேசிய இன மாணவன் இருந்தால் கூட அவனது உணவை தயாரிக்கனும் என லெனின் சொல்ல வில்லையா?

ஒரு துண்டு ரொட்டிக்கு லெனின் மதிப்பு கொடுத்தார் ?

ஆகவே ஜல்லி கட்டு என்பது பெரிய விசயம் அந்த தேசிய இனம் முடிவு செய்து கைவிடுவது வேறு மேலிருந்து இன்னொரு தேசிய இனம் அழுத்தம் கொடுத்து கைவிட வைப்பது என்பது வேறு இதை இப்படித்தான் பார்க்க வேண்டும்


Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post