ஒரு கலாசாரத்தின் எச்சம் நீடிப்பது நீடிக்காமல் போவது அந்த சமூகத்தில் உற்பத்தி உறவுகளில் மாற்றம் நிகழும் போது ஏற்படும் சில கலாசாரங்கள் தவறென பரவலாக கருதப்பட்டு ஒழித்து கட்டப்பட்டன. அதில் ஒன்று பெண் உறுப்பு சிதைப்பு பெரும்பாலும் ஆப்பிரிக்க நாடுகளில் புனிதமாக போற்றப்படும் இந்த கலாசாரம் பெண்களின் உயிருக்கே உலைவைப்பதாகும். ஆப்பிரிக்க நாடுகளின் ஏற்பட்ட முதலாளித்துவ உற்பத்தியால் இந்த கலாசாரம் ஒழிக்கப்பட்டதுன்னு சொல்ல முடியாது ஆனால் முதலாளித்துவம் கோரும் கல்வி வளர்ச்சி மக்களை இது தகாததென்ற சிந்தனையை ஊட்டி அதிலிருந்து விடுபட செய்கிறது. ஏறு தழுவுதல் மக்களின் வீரத்தை பறை சாட்டும் ஒரு நிலபிரபுத்துவ எச்சம் . இதன் தேவை இன்று இல்லை என்ற வாதம் வைக்கப்படுகிறது. பெண் உறுப்பை சிதைக்கும் கலாசாரத்தோடு ஒப்பிட்டால் நம்மிடம் மூட நம்பிக்கை சார்ந்த உயிருக்கு உலைவைக்கும் பண்பாடு இல்லை இது. வீீரம் மற்றும் வீரனின் மனைவியாதல் என்கிற கருத்துக்கள் தற்போதைய தேவை இல்லை என கருதுவதற்கு இடமில்லை. நிலபிரபுத்துவ காலகட்டத்தின் வீரம் என்கிற கருத்து தற்போதும் நமக்கு தேவையானதே.வீரம் என்றைக்குமே தேவையான உணர்வாகும் .இதில் வீரத்தை காட்ட சிங்கத்தை அடக்கலாம் என நீதிபதிகள் கமெண்ட் அடிச்சதா செய்தி வந்தது இது உண்மை யெனில் கண்டனங்கள். வீரனுக்கு உயிர் என்பது வெறும் சட்டை மாதிரி அவன் தான் தொடர்ந்து வாழ்கிறான். இன்றைய காலகட்டதில் மாடு பிடித்தல் வீரத்தை நிரூபிக்கும் ஒரு விசயமா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டிய இடத்தில் கோர்ட் இருப்பது சரியா என்ற கேள்வி எழுகிறது. பீட்டா போன்ற அமைப்புகள் பிராணிவதைக்கு எதிராக போராடுகிற அதே கால கட்டத்தில் விவசாயிகள் கூட்டம் கூட்டமாக த்ற்கொலை செய்கிற காலகட்டத்தில் வாழ்கிறோம்.தற்கொலை செய்து கொண்டவன் சொந்த நிலம் வைதிருக்கான கூலி தொழிலாளியா என பேதம் பார்த்து நாம் போராடனுமா?இல்லையே .ஜல்லிகட்டு நடந்தால் விவசாயிகள் தற்கொலை நடக்காது என சொல்லவில்லை. ஜல்லி கட்டு போராட்டம் மக்களின் கோப வெளிப்பாட்டின் குறீயீடே. அவ்ளோதான். ஈழத்தில் இன அழிப்பின் போது மக்கள் கோபமடைந்து போராட புகுந்தார்கள். ஆனால் அரசு மொண்ணையாக்கியது. நமது கலாசாரத்தை அடையாளத்தை தீர்மானிப்பது நாமாக இருக்கனும் எப்போ நடக்கும்?. உதாரணமா முன்பெல்லாம் சாதி பெயரை போட்டு எழுதினார்கள் பெரியார் போன்ற தலைவர்களின் வரவால் சாதியை பகிரங்கமா வெளியே சொல்ல கூசினார்கள். ஆனால் சாதி ஒழியலை எப்போ ஒழியும் சமூக உற்பத்த்தி உறவுகள் மாறும் போது சாதி ஒழியும் அதற்கு காலமெடுக்கும். ஜல்லி கட்டு போன்ற சில விசயங்கள் கடா வெட்சுதல் அழகு குத்துதல். கா வடி எடுத்தல் எல்லாமே கலாசார எச்சங்களே . உற்பத்தி சார்ந்த உறவுகளின் நிகழும் மாற்றத்தின் விளைவால் இயற்கையாகவே இவை மாறிவிடும் மேலும் அதற்கான தேவை இருக்காது. பீட்டா போன்ற தன்னார்வ தொண்டு நிருவனங்கள் இந்தியா போன்ற நாடுகளில் இருக்கும் கலாசார விழ்ய்மியங்களை ஒழிக்க நினைப்பது ஏன் என வினவ வேண்டும் . பீட்டாவுக்கு பணம் எங்கிருந்து வருகிறது அவனுக்கு நம்ம மக்கள் மாடுகள் மேல என்ன அக்கரை என பார்க்கவேண்டும். பீட்டாவுக்கு பின்னாடி இருக்கும் வர்க்க அரசியலை பேசாமல் மாடிபிடிக்கும் சாதிகளின் வர்க்க அரசியலை மட்டும் பேசுவது ஏன்?. தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் இயக்கங்கள் கட்டி அமைக்கப்பட்டு போராட்டங்கள் நடத்தப்படுவது உலக பாட்டாளிவர்க்க ஒற்றுமைக்கு உலை வைக்கும் செயல். மக்களின் அடையாளங்களை அழித்து அவனது கே எப் சி கலாசாரத்தை அவனது வணிகத்தை கொண்டுவர முயலும் வர்க்க அரசியலை ஏன் பேச கூடாது. மேலும் டி மானிடைசேசன் மூலம் ஒரே இரவில் மாற்றம் கண்டுவரும் மோடி போன்ற அரசுகள் மக்களின் கருத்துக்கு மதிபளிக்காமல் இருப்பதை வேடிக்கை பார்க்கனுமா? அவர்கள் எங்களுக்கு தரும் அழுத்தத்தில். நூறில் ஒரு பகுதி கூட இல்லையே இந்த போராட்டங்கள் . மக்களின் கோபம் சரியான இலக்க நோக்கி இல்லை என்பது உண்மை ஆனா அவர்களே அதுக்கு காரணம் இல்லை. ஆனா சில தம்பிகள் கார்பரேட் அரசியல் எல்லாம் பேசுவதை பார்க்கும் போது ஆனால் மாணவர்கள் இந்த மொத்த அரசியல் பற்றி குறுக்கு வெட்டு பார்வை சரியாகவே கொண்டுள்ளனர் அது போராடாமல் தீர்வு கிடைக்காது என்பதே #SupportJallikattu.
Sent from my vivo smart phone