ஜெ ஒரு பெண்ணிய
போராளியா
ஜெயலலிதாவை அவர்
இறப்பை ஒட்டிய விவாதங்கள் எழுந்துவருகின்ற போது நான்
1.ஜெவை அவர் ஆணாதிக்கத்தை
எதிர்கொண்ட விதம்
பாராட்டுக்கு உரியது
என்றேன் . இதன் மூலம் நாம் ஜெவின் அனைத்து அராஜக ஊழல் நடவிடிக்கைகளையும் ஆதரிக்கிறோமா
என்றால் இல்லை
அவர்கிட்ட பெண்ணியம்
அது தொடர்பான பார்வை இருந்ததா அவரது ஆசான் சோ வாச்சே பெரிய பார்பனிய ஆதரவாளரை தனது
குருவாக கொண்டவர் ஜெ ஆச்சே என்பது சரியே
ஜெ வின் அனைத்து
தவறுகளும் இந்த சாதி ஆதிக்க கருத்தியலில் இருந்தே உற்பத்தி ஆகிறது .
அவர் இலவசங்களை
கொடுத்தது சமூக ரீதியான முன்னேற்றத்தை தரவில்லை மாறாக கிடைக்காதவர்களுக்கு ஏதேனும்
கிடைத்தது
இதெல்லாம் தவறாமல்
அவர் ஓட்டுக்காகத்தான் செய்தார்
அவரை புனித படுத்த
முயலவில்லை இந்த ஆட்சி அதிகாரத்தின் மொத்த கேடுகளையும் செய்தவரை எப்படி புனித படுத்த
முடியும் ஆனால்
மாற்றான் தோட்டத்தில்
இருக்கும் மல்லிகைக்கும் மணம் உண்டு இல்லையா அவர்களிடம் கற்று கொள்ள நமக்கு ஏதும் இல்லையா?
ஜெ விடம் இருந்து
கற்று கொள்ள வேண்டியது தன்னம்பிக்கை ஆண்களுக்கு ஆணாதிக்கத்துக்கு பனிந்து போகாத குணம்
ஆகியன
திமுக ஜெவுக்கு
கொடுத்த நெருக்கடி போல எம்ஜி ஆருக்கு கொடுக்கவில்லை என்பது உண்மைதானே ஏன் இந்த நெருக்கடி
கொடுத்தார்கள் ஆணாதிக்கம் இல்லையா அது
பூர்சுவா வர்க்க
பெண்களின் ஆணாதிக்க போரை நாம் ஏற்று கொள்ள கூடாது என்றும் அது ஹிட்லரையும் ,ராஜ பக்சேவையும்
ஆதரிப்பதற்கு ஒப்பாகும்னும் ஒரு அறிவாளி எழுதிக்கிறார்
நண்பா போய் வரலாற்றை
நல்லா படி
ஜெவின் மீது விமர்சனம்
உண்டு ! அவரை பாராட்ட வேண்டிய விசயமும் உண்டு
அவரை தயவு செய்து
ஹிட்லருடன் ராஜபக்சேவுடன் ஒப்பிடாதீர்கள்
ஜெ ஒரு பெண்ணிய
போராளியா ? - இல்லை
அவர் புரட்சி தலைவிதான் புரட்சிக்கு என்ன செய்தாய் ? - ஒன்றும் இல்லை
அவரை எப்படி ஆதரிக்கலாம் - பூர்சுவா தலைவர்களின் நல்ல சில குணங்களை கூட பாராட்ட கூடாதுன்னு மார்க்சியம் சொல்லி கொடுத்துச்சா