ஜெ இறப்பின்னால்
நகர்ந்த நாட்டின் நிலவரம்
செப்டம்பர் 22
அன்று ஜெ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு நிகழ்ந்த குறிப்பிடதக்க சம்பவங்கள்
நவம்பர் 8 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட
பணமதிப்பு இழப்பு
அது முடிந்தது ஜனவரி மாதம் நடந்த ஜல்லி கட்டு போராட்டம் – அது முடிந்ததும் நாம் கண்ட
காட்சி பன்னீர் சசி பதவி மோதல் .
மேற்கண்ட மூன்று
நிகழ்வுகளும் ஒன்றுகொன்று தொடர்புடையவை அதன்
அடிநாதம் கொள்ளை
லாபம் முதலாளித்துவ வெறி இதை கணக்கில் கொள்ளாமல் ஆரிய திராவிட இன மோதலாக கருதியவர்கள்
மேலும் மேலும் தோல்வி அடைந்தார்கள் தமது கருத்தாக்கத்தில் .
பண மதிப்பிழப்பை
குறித்து போதுமான அளவு பேசினோம் அதனால் இந்தியாவுக்கு பெருத்த நன்மைகள் நடக்கும் என
சொன்ன டீம் ஆளையே காணோம் .
ஜெ இறந்த பின்
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என சொன்ன டீம்
பிரான்சில் இருந்தது
ஆனால் அவர்கள் சொல்வதை நம்ப முடியாத சூழல்
அடுத்து ஜல்லி
கட்டுக்கும் நடந்த போராட்டம் ஒரு இன போராட்டம் என சொன்ன டீம் அதிலிருந்து விலகி நின்றது
கடைசியா நடக்கும்
விவாத போர் சசி இடைசாதி அதனால தண்டனை என சொல்லும் சொத்தை வாதம் நமது கண்முன் நிற்கிறது
.
முதலாளித்துவ பண்ட
உற்பத்தி நடக்கும் சமூகத்தில் தனிநபர் லாபம் கொள்ளை என்கிற போக்கை கணக்கில் எடுக்காமல்
இன்னும் ஆரிய திராவிட போரை கற்பனையில் வைத்து சண்டை போடுபவர்கள் .
ஜெ செய்த தவறை
இதே உச்சி குடுமி நீதி மன்றம் ஏன் தட்டி கேட்டது இதே சு சாமி ஏன் வழக்கு தொடர்ந்தார்
என வினவுவதில்லை
சசி இடை சாதி என்பதால்
இவர்கள் அவர் செய்த பல விசயங்களை மறக்க நினைக்கிறார்கள் – இவர்கள் ஹிட்டலரை கூட ஆதரிப்பார்கள்
இன பாசம் தெரிந்தால் என்பது மிக வேதனையான உண்மை .
நடப்பது அதிகார
பதவி போட்டி இது ஒரு முதலாளித்துவ தனிநபர் நோக்க நாடு மற்ற நிலபிரபுத்துவ கருத்துக்கள்
இருந்தாலும் ஆகபெரிய முரண்பாடு
வர்க்க முரண்பாடே
இந்த விசயத்தில்
ஆனால் ஜல்லி கட்டு
விசயத்தில் வர்க்க முரண்பாடு இல்லாமல் இன முரண்பாடு முன்னனிக்கு வந்தது அதன் கலாசார
கூறுகள் அதன் மீதான தாக்குதல் இவற்றை மறுத்து அந்த போராட்டத்தை கொச்சை படுத்த இயலாது