2016 ஆம் ஆண்டுக்கு முன்பு இவர்கள் இருவருமே கட்சியின் உறுப்பினர்கள்
பொது ஜனங்களுக்கு அவ்வளவாக அறியபடாதவர்கள். ஒரு செப்டம்பர் 22 2016 அன்று அன்றைய முதல்வல்
ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார் அதன் பிறகு டிசம்பர் 5 2016 அன்று காலமானார் .
இந்த இடைப்பட்ட காலத்தில் ஜெவுக்கு என்னாயிற்று என சோசியல் மீடியாவில் மக்கள் புலம்பி கிடந்த போது
அந்த காட்சிகள் நகர்ந்து - சசிகலாவால் பன்னீர் செல்வம்
ஜெயலலிதா இறந்த போது ஓ.பன்னீர் செல்வம் இடைக்கால முதல்வர் ஆகிறார் டிசம்பர் 6 ஆம் தேதி பிறகு பிப்ரவரி 2017
அவர் பதிவியில் இருந்து இறக்கப்படுகிறார் எடப்பாடி முதல்வர் ஆகிறார்.
இந்த அனைத்து நிகழ்வுமே சசிகலாவின் அறிவுத்தலில் நடக்கிறது இதற்கிடையே சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி
சிறை செல்கிறார் சசிகலா பிறகு நிலமைகள் மாறுகிறது எடப்படி பன்னீர் இருவரும் சேர்ந்து சசிகலாவை கழற்றி விட்டு
கட்சியை கைப்பற்றுகிறார்கள் இந்த சூழல் எல்லாமே பாஜகவின் பின் புலத்தில் நடந்து வருகிறது .
பாஜக ஒரு பொம்மை நிர்வாகத்தை தமிழகத்தில் உருவாக்கி திமுகவை ஒழிக்க நினைத்திருக்கலாம்
அல்லது தமிழகத்தில் காலுன்ற வசதியாக -சசிகலாவை உள்ளே தள்ளி இருக்கலாம் என பல்வேறு கருதுகோள்கள்
இருக்கிறது
தற்போது எடப்பாடி சசிகலாவுக்கும் துரோகம் செய்தபின் பன்னீரையும் கழற்றி விட்டு
தாந்தான் ஒற்றை தலைமை என்கிறார் .
பொம்மைகள் துள்ளுவது ஒருபுறம் இருக்கட்டும் நம்ம பிக்பாஸ் என்ன நினைக்கிறார் என்பதுதான் முக்கியம்
தற்போது இதில் நீதிமன்றங்கள் தலையிட்டு முரண்பாடான இரண்டு தீர்ப்புகளை கூறி இருப்பதும் வெளியில் இருந்து
பார்பவர்களை குழப்பலாம் ஆனால் மத்திய ஆளும் கட்சிக்கு ஒத்து போக கூடிய குப்பனோ சுப்பனோ அவர்களுக்கு
ஆதரவாக நீதி கிடைக்கும் என்பதுதான் இதில் கண்டு கொண்ட நீதி .
மற்றபடி இந்த வழக்காடு மன்றங்களின் பல்வேறு தீர்ப்புகளை கொண்டு மண்டையை குழப்பி கொள்ள வேண்டாம் மக்களே.