ஒரு வெயில் காலத்து மழை
--------------------------------------------------
உள்நுழைய வழியில்லாமல்
அடைத்து கொண்ட சாக்கடையின்
மேல் நடக்கும் தாத்தாவின்
திட்டுதலை வாங்கி கொண்டு
சென்று விட்டது அந்த மழை
மீண்டும் வராதென
மூடி வைக்கப்பட்ட கடைகளை
திறக்கும்பாதையோரத்து
வியாபாரிக்கு உண்மையாக
இருகாத மழை
கசகசப்பையும் சிறு வேர்வையும்
கொண்டு வந்தபின் தடமின்றி
மறைந்து விட்டாலும் நெடுநாள்கள்
ஞாபகத்தில் இருக்கலாம்
துரோகத்தை நிரப்பிவிட்டு
சென்ற நண்பனை போல்
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================
Tags
கவிதை