பார்பனர்கள் ஆதிக்க வர்க்கமா?



பார்பனர்கள் ஆதிக்க வர்க்கமா?

ஆதிக்க சாதியென்றும் , வந்தேறிகள் என்றும் வசைபாடப்படும் பிராமணர்கள் நாம் நினைப்பது  மூன்று வேளை தங்கதட்டில் உண்பவர்கள் அல்ல, மொத்த ஜனதொகையில் 5.6 கோடி பிராமணர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள்
Total Population: 5.6 crore
Poor Brahmins:
13%
Rich:
19%
Literacy levels above the age of 18:
84%
Graduates:
39%
Brahmin chief justices between 1950 to 2000:
47%
Associate justices between 1950-2000:
40% 
அவர்களுள் 13 சதவீதம் அதாவது 78 லட்சம் பேர் வறியவர்கள் என்கிறது இந்த புள்ளிவிபரம். ஒரு சாதி என்பது ஆதிக்க சாதியா இல்லையா என்பது எதை வைத்து தீர்மானிக்கப்படுகிறது அந்த சாதியில் சிலர் ஜனாதிபதியாகி இருக்கிறார்கள் பலர் விஞ்ஞானியாகி இருக்கலாம் அதெல்லாம் அந்த சாதியின் அறிவு திறத்தை குறிக்கிறது அதை வைத்து ஆதிக்க சாதி என சொல்ல முடியாது. 

சாதியின் ரீதியாக நிலத்தை கொண்டிருந்திருந்தவர்கள் மற்றவர்களை பண்ணை அடிமைகளாக்கி வேலை வாங்கியவர்களில் நிச்சயமாக பார்பனர்கள் இல்லை .

நில உடமை சமூகத்தில் பிராமணர்கள் சாதி அமைப்பில் முதலிடத்தில் இருந்தார்கள் .

 As the most educated members of traditional Indian society, Brahmins advised kings for millenia.

 ஆனால் நிலபிரபுத்துவ சமூகம் முடிவுக்கு வந்தபின் ஜனநாயகத்தில் அதாவது முதலாளித்துவ சமூகத்தில் பார்பனர்களுக்கு அதே முக்கியத்துவம் என்பதெல்லாம் இல்லை ஏனெனில் பண்ட உற்பத்தி சமூகத்தில் எந்த உற்பத்தியில் ஈடுபடுகிறாரோ அந்த அளவு சமூக முக்கியத்துவம் மட்டுமே தரப்படும் சமூகம் இது .

இதில் உடல் உழைப்பில் பின் தங்கிய பிராமணர்களுக்கு முக்கிய இடமில்லாமல் போய்விட்டது எதார்த்தமே.
இந்தியாவின் சமூக உற்பத்தியில் உற்பத்தி கருவிகளை வைத்திருப்பவர்கள் அல்ல பிராமணர்கள் – அவர்களின் சொத்து கோவில்களும் சாஸ்திரமும் வேதங்களும் அதன் அனுட்டானங்களும் தான்.


 http://www.rediff.com/news/2006/may/23franc.htm
 Dalits often have five to six kids, but they are confident of placing them easily and well," he says. As a result, the Dalit population is increasing in villages. He adds: "Dalits are provided with housing, even their pigs have spaces; whereas there is no provision for gaushalas (cowsheds) for the cows of the Brahmins."


உண்மையில் இந்தியாவில் சாதிகள் தோன்றி வளர்ந்து அதன் அடிப்படையிலான உற்பத்தி முறை நடைபெற்ற காலத்தில் இவர்கள் மேல் நிலையில் இருந்திருக்கலாம் ஆனால் தற்போது அப்படி அல்ல.
சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கும் அரசாங்க வேலையோ, சலுகையோ கிடைக்காதவர்கள் தமது திறமையினால் முன்னுக்கு வருகிறார்கள்.
தலித்துகளுக்கு இன்று இருக்கும் அங்கீகாரம் – இவர்களுக்கு இல்லை.
சாதியில் உயர்ந்தவன் என்பதே இவர்களின் தற்போது சாபக்கேடாகிவிட்டது.
பிராமணர்களின் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டு அவர்கள் சாதியை நிலை நிறுத்தினார்கள் – மனுதர்மத்தை பாதுகாக்கிறார்கள் என்பதே.
ஆனால் சாதியை ஒருவேளை பார்பனர்கள் உண்டாக்கி இருந்தாலும் அனைத்து ஆதிக்க சாதிகளும் சேர்ந்துதான் அதை பராமரித்து தம்முடைய சுரண்டலை செய்தார்கள்.
மிகுந்த அறிவாளிகள் என எல்லா மக்களாலும் கருதப்படும் இவர்களில் வெறும் 39 சதவீதம் பேர்தான் பட்டபடிப்பு படித்தவர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?
அப்போ பட்ட படிப்பை படிக்க முடியாத அளவுக்கு வறுமையில் உள்ளவர்களை எப்படி ஆதிக்க சாதியின் முதலிடம் என்று சொல்ல முடியும் .

சாதிய ஒடுக்கு முறைக்கு அனைத்து ஆதிக்க சாதிகளுமே பொறுப்பானதாகும்.
எதோ ஒரு காலத்தில் யாரோ ஒரு சிலரால் ஏற்படுத்தப்பட்ட சாதியமைப்பு முறையின் விளைவாக இன்று அனைத்து தீமைகளுக்கும் பொறுப்பேற்பவர்களாக இணையமெங்கும் தூற்றப்படுபவர்களாக, உண்மையான அரசியல் சிந்தாந்த பார்வை அற்ற கம்யூனிஸ்டுகளால் அவமான படுத்தப்படுபவர்களாக இருக்கும் இந்த பார்பனர்கள்.
நமது சமூகத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி இருக்கிறார்கள் .
ஊ.வே சாமிநாத அய்யர் இல்லை என்றால் இன்று – தமிழ் தமிழ் என முழங்கும் தமிழ் சான்றோர்க்கு குறிப்பிடதக்க நூல்கள் இல்லை.
தனது 34 வயதிற்குள் உலக வியக்க வைத்த ராமானுஜ அயங்கார் இல்லை என்றால் – பைக்கான மதிப்பு உலகத்திற்கு தெரியாமல் போயிருக்கும்
வெறும் சிலேட்டால் பை மதிப்பை தோறாயமாக (துல்லியமாக) சொன்னவர்

----------------------------------------------------------------------------------------------------------------------
In 1910, the Indian mathematician Srinivasa Ramanujan found several rapidly converging infinite series of π, including

which computes a further eight decimal places of π with each term in the series. His series are now the basis for the fastest algorithms currently used to calculate π. See also Ramanujan–Sato series.

நிறைய கோவில்களில் கிடைக்கும் அற்ப தட்டுகாசுக்காகவே தமது வாழ்நாள் பூராவும் கோவில் பணி செய்யும் ஒரு அர்ச்சகரை விட ஒரு கூலி தொழிலாளி அதிகம் சம்பாதிக்கிறான் இன்று.
ஆனால் மத எதிர்ப்பாளர்களின் முதல் எதிரியாக ஆனால் வாய்மூடி மெளனியாக இருந்து வரும் பார்பனர்கள் . தமது கடமையை கண் என செய்து வருகிறார்கள் .
இயல்பாகவே அமைதியை விரும்பும் இவர்களை பூணூல் அறுக்க துடிக்கும்
திகவோ திமுகாவோ  வன்முறையோடு இருக்கும் மற்ற மத அடிப்படை வாதிகளிடம் முண்டுவதில்லை.
ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர் விவேகானந்தர் துவங்கிய எழுச்சியால் இந்திய சுதந்திர போராட்டம் வளர்ச்சியும் எழுச்சியம் அடைந்தது.இந்த ராமகிருஷ்ணரும் பிராமணர்தாம்.
ரமணர்  இந்தியாவின் திருவண்ணாமலையில் எளிமையாக வாழ்ந்து உலகிற்கு நான் எனும் தத்துவத்தை போதித்து வந்தார் இவரும் பிராமணர்தான் .

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி என உலகமெங்கும் புகழப்படும் தத்துவ ஞானி
பார்பன சாதியில் பிறந்தவரே.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொலிட் பீரோ உறுப்பினர் – சீத்தாராம் யெச்சூரி பிராமணரே

தமிழகத்தில் மக இக எனப்படும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ( எம் எல்)க்கும் பொது செயலர் மருதையன் ஒரு பிராமண குலத்தில் பிறந்தவரே.
பார்பனராக பிறந்து இந்தியாவில் சாதனை செய்தவர்களின் பட்டியல் மிக நீண்டது 

Scientists


    Chess


    மேலும் மேலும் பார்பான் என சொல்லி ஒரு குறிப்பிட்ட சாதியினரை இழிப்பது அறிவுடைய செயலாகாது .
     http://www.outlookindia.com/article/brahmins-in-india/234783
    இணையத்தில் நான் நுழைந்த காலத்தில்(2006) பார்பனர்கள் மீதான தாக்குதல் அதிகமாக இருந்தது அதை செய்தவர்கள் தமிழ் திராவிட ஆதரவாளர்களும்,
    அசுரன் போன்ற தளங்களும் . இதுதான் இடதுசாரிகளின் அடையாளம் என்பதாக நினைத்து கொண்டு பார்பனர்களின் மேல் பார்பனியம் ஒழிகன்னு தாக்க ஆரம்பித்தேன் . ஆனால் மார்க்சியத்தை தவறாக போதித்தவர்களிடம் இருந்து விலகி முறையாக கற்கும் போது இந்தியாவில் சாதிரீதியான ஒடுக்குமுறை என்பது குறைந்து வர்க்க ரீதியான ஒடுக்குமுறையே அதிகம் என்பதும் – வர்க்க சமூகத்தில் சாதி என்பது அழிந்து வரும் விசயமாகும் என்பதையும் அறிந்து கொண்டேன்.
    ஆகவே இந்த விச வட்டத்தில் இருந்து வெளியே வந்து – அதன் அரசியலை அறிந்து விலகி கொண்டேன்.
    பார்பனர்களும் நம்மை போல சதையும் ரத்தமுமான மனிதர்கள். 

    அவர்களின் முன்னோர்கள் செய்த தவறுக்கு இவர்களை பொறுப்பாக்கி வசைபாடுவது தவறாகும் -.
    சமத்துவ சமூகம் என்பது எப்போது பிறக்கும் என்றால் சக மனிதனை புரிந்து கொள்ளும் போதுதான் பிறக்கும்.


    1.பார்பனர்களை தாக்குதல் என்பது ஓட்டு அரசியலாகும் அது அம்பல பட்டு விட்டது 
    2.பார்பனர்கள் அவர்களில் மொத்த ஜனதொகையில்  சரி பாதி வறுமையில் வாடுகிறார்கள் 
    3.டெல்லியில் ரிக்சா இழுப்பவர்களில் 50 சதமானோர் பிராமணர்கள்



    # 50 per cent of the rickshaw pullers in Delhi’s Patel Nagar are Brahmins.
    # 70 per cent of people employed in the 1,783 public toilets in Delhi are upper caste Hindus.
    # 75 per cent of domestic help and cooks in Andhra Pradesh are Brahmins.
    # 44 per cent Brahmins drop out of primary school and 36 per cent drop out by mariculation. Nearly 70 per cent of Brahmins and Other Upper Castes don’t go beyond 12th standard.
    # All purohits live below the poverty line, according to a book Brahmins of India, by J Radhakrishna, published by Chugh Publications. And 53.9 per cent of upper caste population live below poverty line.
    # A priest’s salary in Ranganathaswamy Temple in Tamil Nadu is Rs 300 per month and a measure of rice; the government staff at the same temple earn Rs 2,500.
    # 52.4 per cent of Brahmins and Other Upper Castes do not own more than 100 cents of land, according to a paper presented by D. Narayana of the Centre for Development Studies, Trivandrum.

    கம்யூனிஸ்டுகள் ஒடுக்கப்பட்டவர்களுக்காக போராடவேண்டுமென்றால் வறுமையில் வாடும் பார்பணர்களுக்கும் சேர்த்துதான் போராடவேண்டும் .


    தமிழகத்தின் உதாரணத்தை எடுத்துகொண்டால் முதலில் ஜஸ்டிஸ் கட்சி தோன்றியது இதில் மிட்டா மிராசுகளும் பணக்காரர்களும் இடம்பெற்று இருந்தார்கள் . இந்த கட்சி பார்பனர் அல்லாதார் இயக்கமாக தமிழகத்தில் வளர்ச்சி பெற்றது . அதன் வழித்தோன்றிய சமூக சீர்திருத்த வாதியான பெரியார் .கடவுள் மறுப்பை ஒரு கொள்கையாக்கினார்.

    அவரது காலகட்டத்தில் பார்பனர்களின் ஆதிக்கம் இந்தியாவெங்கும் இருந்தது . காசியில் ஒரு மடத்தில் மதிய உணவு இல்லை என்று மறுக்கப்பட்டார் பெரியார் அதற்கு காரணம் அவர் பிறப்பால் பிராமணர் இல்லை என்பதே .
    அதன் வளர்ச்சியாக பிராமணர்களே - அவர்கள் ஏற்படுத்திய சாதிய அமைப்பே
    சமூகத்தின் ஏற்றத்தாழ்வுக்கு காரணம் என கருதி .

    பிராமண துவேசம் என்கிற விசயத்தை துவங்கி வைத்தார் தமிழகத்தில்.
    ஆனால் பிரிட்டீஸ் வசமிருந்து சுதந்திரம் வாங்கப்பட்டு இந்திய முதலாளிகளின் கைக்கு போவது குறித்தோ , முதலாளித்துவ சுரண்டல் குறித்தோ வர்க்க பார்வை அற்ற பெரியார் - பார்பன எதிர்ப்பும் இந்து மத கடவுள் எதிர்ப்புமே புரட்சிகர , பகுத்தறிவு சமூகத்தை படைக்கும் என நம்பினார்.

    விளைவு எல்லாரும் பார்பன எதிர்ப்பை கைகொள்ள ஆரம்பித்தார்கள்.
    கம்யூனிஸ்டு கட்சிகளும் இதையே பின்பற்ற துவங்கின - உண்மையில் பெரியாரும் அம்பேத்கரும் மார்க்சிய விரோத கொள்கை கொண்டவர்களே.

    இந்தியாவிலோ அல்லது தமிழகத்திலோ மார்க்ஸ் எங்கெல்ஸ் , லெனின் என பேசினால் ஏற்படும் அந்நியமய தோற்றத்தை மறைக்க இவர்கள் கைகொண்ட விசயம்தான் பெரியாரியம் அம்பேத்காரியம் என்பது மார்க்சியமே என்ற கொள்கையாகும்.

    ஆனால் முரணற்ற ஒரு வர்க்க போராட்டத்தை பேசும் மார்க்சியத்தை இவர்கள் திரித்து விட்டார்கள் விளைவு .

    பார்பனியம் பார்பன எதிர்ப்பு என்பதே இவர்கள் அரசியல் என்றானது .

    Discrimination in any form must be avoided 

    சுட்டிகள் படிக்க:

    http://idlyvadai.blogspot.in/2014/12/krish-texas.html

    எனக்கென்னவோ, பெரும்பாலான வெளிநாட்டினர் இன்னமும் இந்தியாவை பாம்பாட்டிகளின் நாடு என்று நினைப்பதை போல எப்போதோ மனதில்தங்கிவிட்ட ஒன்று என்றுதான் தோன்றுகிறது. இப்போதெல்லாம் அரசு அலுவலகங்களிலோ அல்லது பாங்குகளிலோ கவனித்தால் அப்படி ஒன்றும்பிராமண கூட்டம் இருப்பதாகத்தொரியவில்லை.



    சிலேடை பேச்சுகள் பார்பனர்கள் மற்றும் இந்து கோவில்களின் மேலான நையாண்டியின் மூலமே திராவிட இயக்கம் வளர்ந்தது இதை கம்யூனிஸ்டுகள் செய்யமுடியாது

    வி.பி.துரைசாமி: ஆஞ்சநேயர் கோவிலில் அசையும் சொத்து எவ்வளவு? அசையா சொத்து எவ்வளவு?
    முதல்வர் கலைஞர்: அசையும் சொத்து, அங்கே வந்து போகும் பக்தர்கள். அசையா சொத்து, ஆஞ்சநேயர்!
    (24-4-1990) நன்றி:ஆனந்தவிகடன்

     மேலும் யுவகிருஷ்ணா எ லக்கிலுக் கீழ்கண்ட பட்டியலை இட்டு இருக்கிறார்.
    உண்மைதான் பார்பனர்கள் தங்கள் மீது தாக்குதல் நடக்கும் போது இணைய வெளியில் அதற்கான எதிர் செயல்களை செய்யவே செய்வார்கள் .
    முதலில் முற்போக்கு பேசுபவர்கள் இம்மாதிரி சாதிய தாக்குதல்களை பார்பனர்கள் மேல் செய்யாமல் நிறுத்த வேண்டும் அதுவே பகுத்தறிவு

    குழு சேர்ந்து பார்ப்பனரல்லாதவர்களை கிண்டல் செய்வது. முதல் தலைமுறையாக கல்விகற்று இணையத்துக்கு வருபவர்களை நக்கல் அடித்து துரத்தி அடிப்பது. பிறப்பு, வளர்ப்பு குறித்த inferiority complex ஏற்படுத்துவது.
    2) இடஒதுக்கீடு போன்ற விவாதங்கள் வரும்போது ‘தகுதி’ பேசுவது. தகுதி என்பது பூணூலா என்று பதில் கேள்வி கேட்டால், ‘அய்யய்யோ… சாதிவெறி புடிச்சவன்’ என்று கூப்பாடு இடுவது.
    3) ‘லைக்’ இடுவது, ‘கமெண்டு போடுவது’, ‘விவாதிப்பது’ போன்ற விஷயங்களில் இருக்கும் partiality. நீண்டகால இணைய விவாதங்களில் நீடிப்பவர்கள் இதை தெளிவாக உணரமுடியும்.- யுவகிருஷ்ணா


    சாதிய  ஒடுக்குமுறை தீண்டாமை போன்றவற்றை பொருளாதார சிக்கலாக பார்க்காமல் தலைகீழாக பார்த்தனர் பலர் அவர்களுள் பெரியார் , அம்பேத்கார் போன்றவர்களும் அடக்கம் உதாரணமாக சிங்காரவேலர் எழுதிய/பேசிய இந்த பகுதியை சொல்லலாம்

    //அதனைத் தொடர்ந்து 1925 டிசம்பரில் கான்பூரில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் தலைமை உரையாற்றிய தோழர்.சிங்காரவேலர் ‘தீண்டாமைச் சிக்கலை ஒரு முழுமையான பொருளாதார சிக்கலாகக் காண வேண்டும் என்றும் நிலஉடைமை உறவுகளில் உள்ள பாரதூரமான ஏற்றத் தாழ்வே இதற்குக் காரணம்’ என்றும், ‘தீண்டாமைச் சிக்கல் சாராம்சத்தில் ஒரு விவசாயப் பிரச்சனை’ என்றும், ‘பொருளாதார அடிமைத் தனத்திலிருந்து விடுவிக்காமல் தீண்டாமை ஒழிப்பைப் பற்றி பேசுதல் அடிப்படையில் நேர்மையற்ற செயல்’ என்றும், ‘சமூகத்தில் ஏனைய பிரிவினருக்கு இணையான ஒரு பொருளாதார சமத்துவத்தைப் பெறுதலே இதற்கு வழியாகும்’ 4 என்றும் குறிப்பிட்டார்.

    அதன் பின் 1930களில் ‘சுயராஜ்யம் யாருக்கு?’ என்று அவர் எழுதுகிற பொழுது ‘தீண்டாமை என்பது மூலாதாரத்தில் பொருளாதார வித்தியாசத்தால் ஏற்பட்டதென்றும், பிறகு இங்கு சாதி வித்தியாசமாக எண்ணப்பட்டது என்றும், இந்த சாதி மனப்பான்மை இந்தியருக்குள் இருக்கும்வரை தீண்டாமை ஒழியும் என்பது வீண் எண்ணமே 5’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
    //

    சாதி ஒழிப்பு  என்கிற போராட்டத்தை பார்பனர் ஒழிப்பு என தவறாக புரிந்து கொள்ள பட்டமைக்கு  தத்துவ பிரச்சனையே காரணம்.



     சாதி அடிப்படையில் வேலை முறை இல்லை வேலை பிரிவினை அடிப்படையில் சாதி வந்தது என புரிந்து கொண்டால் தான் தற்போது உற்பத்தி உறவுகள் மாறியது அதனால் பார்பனர்களுக்கு உற்பத்தி உறவில் இடமில்லாமல் போனதும் புரிந்து கொள்ள இயலும் ..

    சாதிய அடுக்கு முறையில் மேலான இடத்தில் இருந்து சாதியத்தை நிறுவ எந்த வகையில் உதவினாலும் . உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி அதிகமாகும் போது ஏற்படும் முரண்களில் சாதிய அடுக்கு முறையை தக்க வைக்க முடியாமல் இந்த உற்பத்தி உறவுகள் ஒழிந்தன.

    தற்போது சாதி கட்சிகள் எல்லாம் தங்களை பிற்படுத்த பட்டோர் பட்டியலில் சேர்த்து கொள்ள சொல்லி போராடுகின்றன என்பதை பாருங்கள்.

    நான் ஒரு பிராமணன் எனக்கு உங்கள் கம்பெனியில் வேலை கொடுங்கள் என்று எந்த பார்பனரும் வேலை கேட்டு பெறமுடியாது.

    ஆனால் தான் ஒரு தாழ்த்தபட்டவர் என சொல்லி அதற்கான ஒதுக்கீட்டில் வேலை தரும் படி ஒரு தாழ்த்தபட்டவர் கோர வழி வகை செய்திருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் காலம் காலமாக இவர்கள் தாழ்த்தபட்டவர்களாக இருந்தார்கள் என்பதாலேயே.

    ஆனால் இட ஒதுக்கீடு பெற்றதே தமது மேலான குறிக்கோள் என்று ஒரு நிவாரணத்தை தீர்வாக கருதுவது பெரியாரிஸ்டுகள் அம்பேத்காரிஸ்டுகளின்
    கருத்தாக இருக்கலாம் .

    ஆனால் பொதுவுடமை பொன்னுலக கருத்தாக்கம் பேசும் கம்யூனிஸ்டுகள்
    வர்க்க போராட்டத்தில்  உழைக்கும் மக்களின் வர்க்கத்தில் வந்து சேர்ந்த பார்பனர்களை தம்மோடு சேர்த்து கொள்ள வேண்டும் .

    வர்க்கமாக திரள வேண்டும்

    5 Comments

    Please Select Embedded Mode To Show The Comment System.*

    Previous Post Next Post