இணையத்திலிருந்து சமூகத்திற்கு (சவாலே
சமாளி?)
இணையத்தின் மூலம் எதையேனும் சமூகத்திற்கு
செய்யவேண்டும் என நீங்கள் நினைத்தீர்கள் என்றால் சமூகத்தை ஆய்வு செய்யவும்
செயல்படவும் உங்களுக்கு மார்க்சியத்தை தவிர
வேறு கருவிகள்
கிடைப்பது அரிதே.
மார்க்சியம் என்பது எதோ அயல்நாட்டு கனவான்களின் தத்துவமொழி
அதுவும் அந்நிய நாட்டின் வளர்ந்துவிட்ட அறிவு பெற்றவர்களால் இயலுமான காரியம்
என்றும் நிறையபேர் நினைத்தும் எழுதிகொண்டும் வருவது நாம் அறிந்ததே.
இவர்களெல்லாம் சமூகத்துக்கு ஏதேனும் செய்ய முயன்று
தோற்றுவர்கள் என்று நீங்கள் கருதுவீர்களெனில் உங்களை அப்பாவிகள் என்று நான்
கூசாமல் சொல்வேன்.
கான்செப்டும் செயலும்:
----------------------------------------
நிறையபேருக்கு பேசுவதற்குரிய கான்செப்டுகள்தான் முக்கியமே தவிர
பேசி என்ன செய்யபோகிறீர்கள் என கேட்டால் உதட்டை பிதுக்கிவிடுவார்கள். ஏனெனில்
நிறைய நல்லவர்கள் வெளிநாட்டில் உக்கார்ந்து கொண்டு இந்தியாவின் பிரச்சனையை
கதைப்பவர்கள். சிலர் எப்படி இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் கிடைத்திருக்கும் ஒரு சின்ன கம்யூட்டர் பெட்டியை வைத்து கொண்டு இலங்கை
பிரச்சனைக்கும் இன்னும் உலகில் இருக்கும் அனைத்து பிரச்சனைக்கும் தீர்வெழுதி தள்ளுகிறார்களோ;
அவர்களை போன்றவர்கள். இத்தகையவர்களை ஞானஒளியை பெற்றவர்கள் என நீங்கள் நினைப்பதை
யார்தான் தடுக்கமுடியும்.
எந்த கான்செட்டை கொடுத்தாலும் கணினிமுன் உக்கார்ந்து அதை
எதிர்த்தும், நீட்டியும் வளைத்தும் சில சுட்டிகள் போட்டும் எழுதி தள்ளும் இந்த
கனவான்கள் ;தானும் இணையத்தில் பெரிய பிஸ்தா என்கிற பெயரெக்க அப்பாவி ஜீவன்களுடன்
மல்லுக்கு நிற்பதுண்டு நானும் இவர்களோடு மோதி விட்டு ஒதுங்கிகொள்வதுண்டு.
செயல்பூர்வமான திட்டமேதுமின்றி, இப்படி பேசித்திரிபவர்கள்
நாளுக்கு நாள் மெருகேறிவிடுகிறார்கள்;எப்படியெனில் அதுதான் அடுத்தவன்
சொல்வதை காது கொடுக்காமல் காதை மடக்கி கக்கத்தில் வைப்பது எப்படி என்றும் .
எவனாவது மிகவும் கடும் முயற்சியெடுத்து பேசிவருகின்ற
நேரத்தில் அவனை சந்துபொந்துக்குள் அழைத்து சென்று மீளமுடியாத பெரும்பள்ளத்தில்
தான் நினைப்பது தனக்கு கூட சரியாகாதோ ஒருவேளை இந்த இணைய பிஸ்தாக்கள் சொல்வதுசரியோ? என நினைக்கும் அளவுக்கு அவனது மண்டையில் இருக்கும் மயிரை
பிச்சுகொள்ள வைத்துவிடுவார்கள் .
அகிம்சைக்கு காந்தியை வைத்து கொள்வார்கள் ஆகா எதோ புடிமானம்
கிடைத்ததென பக்கத்தில் போனால் (அவரை போல பொய் பேசாமல் இருப்பார்கள் )என்று நீங்கள்
கனவு கண்டுவிட கூடாது காந்தி ஒன்லி கான்செட்ப் அடுத்து பெரியாரை வாழ்த்துவார்கள்
,ஆகா பெரியார் சொல்லும் விசயங்களை அறிந்துகொள்ள, இவர்கள் பேச்சை கேட்போம் என்றால்
அதானில்லை, பெரியார் பெண்களுக்கு பாலியல் தேர்வு சுதந்திரம் வேண்டுமென்று சொன்னதால்
அவர்கள் பெரியாரின் சீடர்களை போலவாவர்கள் அதாவது பெரியார் கான்சப்டில் அவர்
பெண் முன்னேற்றத்தை பற்றி பேசிய விடயம் மட்டுமே ஏற்று கொள்வார்கள்.
இதனை படிக்கும் யாராவது ஒரு அப்பாவி இவர்களது மிக நல்ல குணாம்சங்களை பட்டியலிட
கிளம்பி அய்யா உமது வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இத்தகைய சுதந்திரம் கொடுத்திருக்கிறீரா என கேட்டால் போதும் அடுத்த கணம் முதல் இத்தகைய கேள்வியை
வைத்தவன் எதிரியாகிவிடுவான் கேள்வி தனிமனித தாக்குதலாகிவிடக்கூடும் அதாவது இதெல்லாம் கான்செப்டு :)
அதென்ன செயல் என்றால் எந்த வேலையும் தத்துவமின்றி செய்யமுடியாது இணையத்தில் கட்டுரை எழுதுவதற்கும் அரட்டை அடிப்பதற்கும் தேவைப்படும் பல்வேறு
கான்செப்டுகளை வைத்து நடைமுறை வாழ்க்கையில் ஒன்றும் செய்ய இயலாது என்பதை நமது
தம்பிமார் நன்குணர்ந்து கொண்டுள்ளனர். எனவே செயல் என கேள்வி வந்ததும் சுலபமாக
தப்பிவிடுவர் . நான் செய்வது எல்லாம் வெளியில் சொல்வதில்லை என்றும் அப்படி சொல்வது
தன்னை பற்றி தம்பட்டம் அடித்து கொள்வதாகுமென்றும் அள்ளிவிடுவார்கள் .
எனவே இவர்களுடன் மல்லுகட்டுவதும் இவர்களுக்காக மார்க்சியத்தை எடுத்தியம்புவதும்
மார்க்சியமல்ல.
மார்க்சியம் என்றால் என்ன :
-----------------------------
மார்க்ஸ் எதேனும் பொழுதுபோகாமல் சாப்பிட்ட சோறு செமிக்கவேண்டி ஒரு சிறு நடை நடந்து கொண்டிருந்தபோது சிந்தித்ததல்ல மார்க்சியம் .
ஜெர்மானிய தத்துவத்தின் மிக உயர்ந்த தத்துவமெனும் ஹெகலின் தத்துவத்தில்
இருந்து இயக்கவியல் என்ற தத்துவத்தை மட்டும் எடுத்துகொண்டு அதை வைத்து இந்த உலகில்
‘என்ன நடக்கிறது என
ஆய்வு பூர்வமாக அனுகி கண்டு பிடித்ததே மார்க்சியம் .
தத்துவத்தை நடைமுறையில் சோதிப்பதும் நடைமுறையை தத்துவத்துடன் உரசி பார்பதும் மார்க்சியமாகும்.
எதுக்கு தத்துவம் வேண்டும் என்றால் வெறுமனே சந்தை மடத்தில் உக்கார்ந்து அரட்டை
அடிக்கவோ இணையதளங்கள் நிருவி செய்திகளை தினமும் பத்து எண்ணிக்கையில் வெளியிடவோ அல்ல .
இந்த சமூகத்தில் அனைவரும் சமமாக ஒரு சகோதரத்துடனும் பகையின்றி ஏற்றதாழ்வின்றி வாழும்
ஒரு சமூக அமைப்பை உருவாக்க போதிய திராணி கொண்டதே தத்துவம்.
தத்துவம் என்பது மேப் என்றால் அதை பின்பற்றுதல் நடைமுறை என கொள்ளலாம் .
இதிலிருந்து பேசுகிற விசயத்திற்கு செயலறிவும் செயலுக்கு தத்துவ அறிவும் முக்கியம் என்பதை உணரலாம் .
மேற்கண்ட நமது பிஸ்தாக்கள் வெறுமனே புஸ்தக புளுக்கலாக இருப்பதால்
மார்க்சியத்தை பற்றி பேசினால் நாம் எதோ நடைமுறைக்கு உதவாத ஒரு விடயத்தை காட்டு
கத்தாக
கத்தி கொண்டிருப்பதாக நினைக்கிறார்கள் ஏன் அப்படி அவர்கள் மேல் யாதொரு குற்றமுமில்லை அவர்கள் அலுவலகத்தின் கணினிமுன் அமர்ந்து
பார்பதுதான் சமூகம் தனக்கு முன்னால் உக்கார்ந்திருப்பவனின் முதுகும் தனக்கு
மாதமுடிந்தால் கிடைக்கபோகும் சம்பளமும் , வார இறுதியில் செல்லும் சினிமாவும் குவார்டரும் சைடிசும் என சமூகத்தை பற்றிய ஒரு அவுட்லைன் வைத்திருக்கிறார்கள்.
அவர்களால்தான் மார்க்சியத்தை புரிந்து கொள்ள இயலாது பசித்த வயிறு என
எழுதிபார்ப்பவனுக்கு பசித்த வயிற்றை பத்தி புரிந்துகொள்ள இயலாது ஏனெனில் அவனுக்கு பசித்த வயிறு ஒரு கான்செப்ட் .
இவர்கள் ஏதேனும் ஒரு சின்ன போராட்டத்துக்கு கூட போலீஸ் ஸ்டேசனுக்கோ சிறைக்கோ
போயிருப்பது துர்லபம் .மற்றவனுக்கு அடிபட்டிருக்கவோ மற்றவனுக்காக சிந்தித்து
கொண்டிருப்பதோ ”நான்சென்ஸ்” .
இவர்களை தாண்டி மக்களிடம் செல்வது:
----------------------------------------------------
சிறுபான்மையினராக இந்த வாய்ச்சொல்வீரர்கள்
முக்கியமற்றவர்கள் எனினும் எதாவது
ஒரு சந்துக்குள் நின்றும் வந்தால் சாணி அடிப்பதற்கு காத்து கொண்டிருப்பவர்கள்
இவர்கள் உண்மையான மார்க்சியவாதிகளின் முகத்தில் சாணி அடிப்பதன் மூலம் தங்களை
ரவுடிகளாக
காட்டிகொள்ள முனையும் பேர்வழிகள் இதற்காக கொஞ்சமும் வெக்கமடைவதில்லை இவர்கள்
ஏனெனில் எதுவுமே நிகழ்தளத்தில் இல்லை எல்லாமே வெர்சுமெமரியில் மெசின் டோசில்
நடப்பது.
வரலாற்றை தங்களிஸ்டத்துக்கு புணர்ந்துகொண்டிருக்கும்
சரித்திராசிரியர்கள் இவர்கள் . இவர்களை தாண்டியும் தேடலுடன் மக்கள் இருக்கிறார்கள் . ஒரு சிலர் இத்தகையவர்களை
புரிந்து கொண்டு தவிர்க்கிறார்கள் . நல்ல தேடலும் சமூக அக்கறையும் கொண்ட அறிவு
ஜீவிகளானவர்களை இந்த அதிதீவிர கம்யூனிஸ்டுகள் வேறு ஒரு கோட்டுக்கு
தள்ளிவிடுகிறார்கள் மெசிண்டோசில் கேள்வி கேட்பவனின் முகம் தெரியாதபடியால் .
எல்லாவற்றையும் ஒரே தட்டில் வைத்து வன்மத்துடன் வார்த்தை பேசி
அந்த தேடலை காலி செய்துவிட்டு அவனிடம் ஜாதியத்துடன் கூடிய வன்மத்துடன் கபடத்துடன் தன்னை மறைத்து கொண்டு தாக்கும் ஒரு அரசியலை
ஒன்றுக்கும் ஆகாத அரசியலை போதிக்கிறார்கள். இவர்களை தாண்டி மக்களிடம் இணையத்தை
கொண்டு செல்வது ஒரு சவால்
சவாலே சமாளி:
-----------------------
சமூகமாற்றம் என்பது மிகமிக சவால்நிறைந்தது அதே நேரத்தில்
ஆர்வம் எந்தளவுக்கு அதிகமாகிறதோ அந்தளவு சவால் குறையும் என்கிற எதிர்நிலை
விகிதமுடையது.
என்ன செய்வதென்று
கேட்டால் தனிநபர்தாக்குதலற்ற - முக்கியமான ஆர்வத்துடன் சமூகத்தின் மாற்றத்தை கோரும் மனங்கள் இணைந்து ஒரு விவாத களம் அமைப்பதும் அதன்
தொடர்ச்சியாக அடுத்த கட்டத்துக்கு செல்வதும் முக்கிய தேவையாக இணையத்தின்
மூலம் சமூக கடமை என்பதில் நிற்கிறது .