கட்டற்ற சுதந்திரம் குறித்து
எந்த கருத்தும் மட்டறுத்தபடாமல் வெளியிட கோரும் சுதந்திரமாக இதை கொள்ளலாம் ஆனால் அபப்டி ஒன்று
நிதர்சனத்தில் இல்லை என்பதே உண்மை
சுதந்திரம் குறித்து பேசும் தம்பிகள் தாம் யார்மீது வேண்டுமானாலும் எந்த குற்றச்சாடை வேண்டுமானாலும்
வைக்க வேண்டும் எனவும் அதற்குரிய சுதந்திரம் தமக்கு இருக்கிறதென்றும் இயம்புகிறார்கள் ஆனால் தங்கள்
மேல் இப்படியானதொரு குற்றச்சாட்டை யாரேனும் வைக்க ஆரம்பித்தால் சட்டம் என்ன செய்கிறதென கூவுகிறார்கள் .
இவர்களுக்கு சுதந்திரம் என்பதன் பொருள் தமக்கு மட்டும் கிடைக்கும் பொருளாகவும் எதிரிக்கு அது அரிதானதாகவும் இருக்க வேண்டும் என்பதே
இணையம் :
இணையம் என்பது இப்போதல்ல எப்போதுமே கட்டற்ற சுதந்திரம் கொண்டதல்ல அப்படி நினைப்பது பெரிய
மாயையாகும் இணையக் கட்டுபாடுகளை கொண்டதுதான் அதன் சட்ட திட்டங்களை உணர்ந்தவர்கள் அதை
அறிவார்கள்
இணையமும் சமூகமும்:
சமூகம் எப்போதுமே அதிகாரத்தின் பிடியிலும் அதன் அச்சுறுத்தலிலும் தொடர்ந்து இருந்து வருகிற தொன்றாகும்
அதற்கு உட்பட்டதுதான் இணையமும் இணையம் எங்கோ தனியாக இருக்கும் ஒரு அதீதமானதொரு பொருளல்ல
இணையத்தில் போராட்டம் என்பது சமூகத்தின் போராட்டத்தின் தொடர்ச்சியாகவும் சமூகத்தின் போராட்டம் என்பது இணையம் வரையிலும் நீள வேண்டும் இல்லையேல் இணையம் வேறு சமூகம் வேறு என்கிற நிலைக்குள் தள்ளப்படுவது மட்டுமன்றி . ஒருத்தரை திட்டுவதற்குரிய கட்டற்ற சுதந்திரம் கோரும் அற்பவாதிகளாகிவிடுவோம்
தனிமனிதனும் சமூகமும் :
தனிமனிதன் எப்போதுமே சமூகத்தின் அங்கம் அதைபோலவே சமூகமும் தனிமனிதர்களால் நொடிதோறும்
விமர்சிக்கவும் கருத்து திணிப்பை ஏற்படுத்தவும் படுகிறது தனிமனிதர்கள் பலநேரம் சமூகத்தின் ஒரு சாரரின்
கருத்தை பிரதி பலிப்பார்கள் ஆனால் பெரும்பாலும் அவர்கள் தனிமனித ரீதியாக விசயத்தை அனுகுவார்கள்
ஏனெனில் அவர்களுக்கு சமூகத்தை பற்றிய புரிதல் இருப்பதில்லை . சமூக மாற்றத்தை கோருபவர்கள் மட்டுமே
தனிமனிதனுக்கும் சமூகத்துக்கும் இருக்கும் இந்த இடைவெளியை புரிந்து கொள்ளவும் அதற்கேறப் பேசவும்
இயலும் .மற்றவர்கள் தம்மோடு உரையாடுபவர்களின் சொந்த கருத்தாக அவர்கள் கொண்டிருக்கும் சார்புநிலையை புரிந்து கொண்டு இவ்வாறு பேசுபவர்களை தாக்கி பேசினால் இந்த கருத்தை ஒழித்து விடலாம்
என்றும் கருதி கொள்வதற்கு இடமுண்டு
தேவை என்ன ?
எப்போதுமே சமூகத்தின் பால் தணியாக அக்கறையும் அன்பும் இருந்திருப்பதே முதல் முந்தேவை நாம் இவர்களுடன் உரையாடுகிறோம் என்றால் சமூகத்திற்கு அதனால் ஏதேனும் பயன் கிடைக்குமா என்பதே
அப்படி பட்டவர்களின் உள்மன ஆவலாக இருக்கும் இல்லையே வெட்டி அரைட்டைகளே பிரதான இடம் பிடிக்கும்
வெட்டி அரட்டியில் இருந்து ஆக்கபூர்வமாக சிந்திக்க :
நமக்கு பிரதான விருப்பமாக இருப்பது அரட்டையே அதில்லாமல் கொஞ்சம்கூட நகரமுடியாது இயற்கையே ஆனால் சமூகத்தின் நிலவும் கருத்துக்களை அலசும் போது அரட்டை தொணியிலோ அல்லது நமது சொந்த
விருப்பமாகவோ கருதி கொள்வொமானால் நாம் மேலும் மேலும் பிரதான விசயத்தை மழுங்கடிப்போம் அல்லது
எதிரானவர்களின் வலையில் வீழ்வோம் அல்லது எதிரானவர்களின் மேல் வசவுகளை பொழிவோம் .
இணையத்தின் கட்டற்ற சுதந்திரத்தை கோரும் உரிமை சமூகத்தை நேசிப்பவர்களுக்கும் அதை மாற்ற கோருபவர்களுக்கும் இருக்கிறதே அன்றி அரட்டை அடிப்பவர்களுக்கில்லை
எழுத்தாளர்கள் இன்னமும் நமது வழிகாட்டிகள் அல்ல :
சிந்தனையாளர்கள் எழுத்தாளர்களிடம் இருந்து விசயங்களை கைமாற்றி வைத்தது இணையத்தின் மிகப்பெரிய சாதனை அந்த சாதனையை நாமே முறியடிக்க கூடாது மீண்டும் நம்மை பற்றி எழுத்தாளர்களும் சிந்தனாவாதிகளும் கணிப்பு கூறவும் அறிவுரை கூறவும் வைக்கும் படியான நிலைக்கு நாம் இணையத்தை
உட்படுத்த கூடாது பொறுப்போடு நடந்து கொள்வோம் இணையத்தில் கிடைக்கும் குறைந்தபட்ச சுதந்திரத்தை
பேணிகாக்க
நட்புடன் தியாகு