ஈழமும் ஆனந்த விகடனும் சவுக்குமற்றும் பிறர்




 
இலங்கையில் நடந்த ஈழ போராட்டம் என்பது ஒரு வலதுசாரி ஆயுத போராட்டம் என்று வகைப்படுத்தும் நாம் எந்த வகையிலும் அந்த போராட்டத்தில் ஈடுபட்ட புலிகளின் வீரத்தை கொச்சை படுத்தோ தியாகத்தை குறைத்து மதிப்பிடவோ முடியாது அதே வேளையில் புலிகளின் அரசியல் தவறுகளை பற்றிய விமர்சனத்தையும் நாம் புலி எதிர்ப்பு என்கிற ஒற்றை சொல்லை கொண்டு மூடிவிடவும் முடியாது .

ஆனந்த விகடனில் வந்த இந்த கட்டுரையில் ஒரு பெண் போராளி தற்போது உடலை விற்று வாழக்கூடிய பரிதாபமான நிலமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார் என சொல்கிறது . சவுக்கு உள்ளிட்ட புலி ஆதரவு
பத்திரிக்கைகள் இணைய தளங்கள் எல்லாம் எப்படி எல்லாம் இந்த கட்டுரை உண்மை இல்லாததாக இருக்க வாய்ப்பிருக்கிறது என ஆய்ந்து கண்டுபிடித்து எழுதுகிறார்கள் .

குறிப்பிட்ட இந்த கட்டுரையின் நம்பகத்தன்மை அது உண்மையான ஒரு போராளியால் பேட்டி கொடுக்கப்பட்டிருக்குமா என்பதெல்லாம் மிக தெளிவாக இங்கே விவாதிக்கப்படுகிறது .உதாரணமாக இப்படி
செல்கிறது சவுக்கு கட்டுரை  http://savukku.net/home1/1695-2012-11-04-16-52-
06.html வருவாய்க்காக பொய் உரைத்தது விகடன் என நீண்டு செல்லும் இந்த கட்டுரையில்

இருக்கும் விசயங்கள் இப்படி முடிகின்றன இந்த பேட்டி நிச்சயம் ஒரு பொய்யான பேட்டி ஒரு போரின் போது இறந்தவர்களின் கணக்கையே சரியாக சொல்லமுடியாதபடிக்கா ஒரு போராளி இருப்பார்  என்று லாஜிக்காக கேட்கிறது இவர்களுடைய கட்டுரை .

இந்த இடத்தில் ஆனந்த விகடனின் வந்த கட்டுரையின் உண்மை தன்மையை பற்றியோ அல்லது ஆனந்த விகடன் ஒரு அரிச்சந்திரன் என்றோ விசயத்தை நாம் விவாதித்து செல்லவில்லை .

புலிகளின் போர்படையில் இருந்த ஒரு பெண் போராளி தனது பொருளாதார நிலையின் காரண்மாக உடலை விற்கிறார் என்பதையே மறுக்கும் அளவு ஏன் எதார்த்தத்தில் இருந்து கண்ணை மூடிக்கொள்ளும் மனநிலை இவர்களுக்கு வந்தது.

ஒரு பக்கம் சிங்கள வெறியர்களால் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டும் இன்னொரு பக்கம் பேசக்கூட ஆள் இல்லாத நிலையில் தன் குழந்தைகளை காப்பாற்ற துடிக்கும் அந்த பெண் முகம் நினைவுக்கு வருகிறது .

ஆனால் நமக்கு போர்த்த பட்ட போர்வையோ அந்த எதார்த்தைதை மூடி மறைக்க சொல்கிறது .அதான் கட்டுரையே உண்மை அல்ல என்கிற போது நிலமையை குறித்து என்ன பேச்சு குறிப்பான விசயம்
இல்லை என்கிற போது மொத்த நிலமை குறித்து என்ன விவாதம் என கேட்கலாம் .

மொத்த நிலமைகள் இப்படி இருக்கையில் குறிப்பான ஒரு நிலமையை மறுப்பதன் மூலம் என்ன சொல்ல விளைகிறோம் என்கிற கேள்வியே இங்கு பிரதானமானது .

சரி ஆனந்த விகடன் கட்டுரை உண்மை என்றால் என்ன உண்மை இல்லை என்றால் என்ன என இதை விரிவு படுத்தினால் நமக்கு புலிகளின் அரசியல் நகர்வுகளின் வரலாற்று சித்திரம் கிடைக்கும்.

புலிகளின் போர்படையில் என்றில்லை தமிழ் நாட்டில் கூட பொருளாதார நிர்பந்தத்தில் பெண் உடலை விற்பது நடக்கக்கூடிய விடயம் தான் விசயம் அப்படி நடக்காது என மூடி மறைப்பதா அல்லது ஆம் அதுதான் யதார்த்தம் இந்த யதார்த்தத்தை மாற்ற போராடனும் என்பதா?


//இந்த போராளி எப்படி தன் சக தோழிகளின் வாழ்க்கை பற்றி எந்த வித கவலையும் இன்றி இப்படி பேட்டி கொடுத்திருப்பார்? பல ஆண்டு காலங்கள் ஒன்றாக இருந்தவர்கள். தமிழ் சமூகத்தின் போக்கை நன்கே உணர்ந்தவர்கள்.  தாம் சொல்லும் விடயங்களால் தனது சக போராளிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதை உணர்ந்தவர்கள். இப்படி வெளிப்படையாக வந்து பேசுவார்களா?//

தாம் சொல்லும் விசயங்களால் சக போராளிகள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக தனது நிலமையை சொல்லமாட்டார்கள் என்கிற யூகமே முன்னால் நிற்கிறது .

எல்லாமே யூகம் . எல்லாமே நம்பிக்கை . உணர்ச்சி கோபம் இப்படித்தான் நகர்கிறது புலி ஆதரவு இணைய தளங்கள் போராளிகள் அனுதாபிகள் ஆகியோரது உணர்ச்சி பொங்கும் உரைகள் .

விகடனை பிழைப்பு வாதி என விமர்சிக்கும் இந்த சவுக்கு இதற்கு முன்பு பல சந்தர்பங்களில் விகடனுக்கு நன்றி பாராட்டுகிறது அதாவது விகடன் மூலம் ஏதேனும் பலன் கிடைக்கும் இடங்களில் (http://savukku.net/pidithadu/1682-2012-10-25-13-04-20.html)
(அந்த பொய் வழக்கே சவுக்கை பலதரப்பட்ட வாசர்களிடம் சென்று சேர்த்தது.  அந்தக் கைது குறித்து, குமுதம் ஓ பக்கங்களில் எழுதிய தோழர் ஞாநியின் கட்டுரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், தோழர் ஞாநி, குமுதத்தில் ஓ பக்கங்கள் எழுதுவதை நிறுத்தினார். சவுக்கு கைது குறித்து வினவு தோழர்களும் கட்டுரை எழுதி, இணைய தளத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  ஜுனியர் விகடனில், இரா.சரவணன் கட்டுரை எழுதினார்.  அதுவும் அந்தப் பொய் வழக்கு குறித்த செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்த்தது.)

இதன் மூலம் ஆனந்த விகடனை ஆதரிக்கனும் என்றோ சவுக்கை குறை சொல்ல வேண்டும் என்றோ நான்கங்கணம் கட்டி எழுதவில்லை .

நமக்கு சாதகமான உண்மைகளை பேசும்வரை நன்றி சொல்வதும் எதிரான ஆனால் எதார்த்தமான விசயங்களை பேசும் போது பிழைப்புவாதி என்பது
நம்பிக்கைகுரிய நபர் சொல்லும் விசயமல்ல .

சரி நாம் புலிகளின் ஆதரவு அரசியலின் உணர்ச்சி கட்டத்துக்கு வருவோம்

இந்த பெண் போராளி சொல்கிறார் தோற்பது பற்றியே நாம் நினைக்கவில்லை தோற்றால் என்ன செய்வோம் என்றும் திட்டமிடவில்லை .

இதான் அதீத நம்பிக்கையின் பிரச்சனை . நாம் தோற்கமாட்டோம் என்று நினைத்து போராடுவது . விசயம் எல்லை மீறி போகும் போது வகை தெரியாமல் மாட்டி கொள்வது .

இதான் புலிகளின் வரலாற்றில் நடந்தது.

இந்த உணர்ச்சிகர இமாஜினேசன் அரசியல் முடிவுக்கு வரும்போது மட்டுமே உண்மை நிலமைகள் கண்ணுக்கு தெரியும் அடுத்து என்ன செய்ய வேண்டும்
எனவும் தெரியும் . நான் எழுதுவதன் நோக்கம் இதுவரை நீங்கள் கொண்டிருக்கும் அதீத நம்பிக்கை அரசியலை விட்டு விட்டு நடைமுறை ரீதியான அரசியலுக்கு புரிந்துணர்வுக்கும் வரவேண்டும் என்பதே.


அந்த பெண் போராளியின் குரலை கொண்டு இந்த மொத்த அரசியலையும் சொல்லிவிடலாம்

/அதுவரை எந்த உணர்ச்சியும் இல்லாமல் தன்மையாக ஒலித்த குரலில் அனல் ஏறுகிறது) ''இந்தியாவில் இருந்துகொண்டு ஈழத்துக்காகப் போராடுவதாகச் சொல்லும் எந்தத் தலைவர் களிடமும் ஈழம் சம்பந்தமான நேர்மையான புரிந்துணர்வே இல்லை. 'ஈழத் தமிழர்களாகிய நாங்கள் தோற்றுவிட்டோம்என்கிற நிர்வாண கசப்பான உண்மையைக்கூட இன்னும் ஏற்றுக் கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள்.அதனால்தான் இன்றும் 'இனி ஒரு ஈழப் போர் வெடிக்கும். பிரபாகரன் திரும்பி வருவார்என்றெல்லாம் சும்மா எழுதிக் கொளுத்திப்போடு கின்றனர். எமது போராட்டம் ஈழத்தில் இருந்து சர்வதேசத்தின் சதியால் வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கப்பட்டுவிட்டது. எனது குழந்தைகளுக்கு அடுத்த வேளை உணவு இல்லாமல் பாலியல் தொழில் செய்துவரும் என்னிடம் வந்து, 'எப்போது உங்கள் அடுத்த போராட்டம்?’ என்று கேட்டால், விளக்குமாறால் அடிப்பேன். (சட்டென ஆற்றாமை பொங்க, குரல் உடைந்து அழுகிறார்.) இந்தியத் தலைவர்களே... உங்களைக் கை கூப்பித் தொழுகிறேன்... எங்களை வைத்து வியாபாரம் செய்வதை இனியாவது நிறுத்துங்கள். எமது அடுத்த சந்ததி வாழ வேண்டும். ஒரு நாளேனும் நிம்மதியான உறக்கம்கொள்ள வேண்டும். உங்களுடைய பிள்ளைகள் மட்டும் படித்தால் போதுமா? எமது அடுத்த சந்ததியும் கல்வி கற்க வேண்டும்.//

தமிழ்நாட்டில் வைக்கோ உள்பட பிழைப்பு வாதிகள் இந்த வேலையை இன்னும் செய்கிறார்கள் சிறிதும் வெக்கமின்றி தமது அரசியல் வாழ்க்கையை காப்பாற்ற பிரபாகரன் வருவார் என்கிற
பொய் உரைக்கிறார்கள் இதற்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் யதார்த்த நிலையை பேசு என்ன செய்ய போகிறோம் என்று சொல்லு என இளைஞர்கள் கிளர்ந்தெழ வேண்டும்.

முத்துகுமரன் சடலம் கிடத்தபட்ட போது முத்துகுமரன் தனது சடலத்தை வைத்து போராடுங்கள் என சொன்னபோது போராடாமல் பின் வாங்கியவர்கள்தான் தமிழ்நாட்டு அரசியல் வாதிகள்
அவர்களுக்கு ஈழம் என்பது சாப்பாட்டுக்கு கிடைத்த அப்பளம் அவ்வளவே





Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post