கம்யூனிசம் என்றால் என்ன ? அதை படிக்காத பாமரருக்கும் புரியும் படி எப்படி விளக்குவீர்கள்
இப்படி ஒரு கேள்வியை தம்பி ஜீவா கேட்டிருந்தார் இந்த கேள்விக்குள்ளே இருக்கும் விசயம் இதுவரை கம்யூனிசம் பற்றி அவர் படித்த விசயங்கள் ஒரு தெளிவை ஏற்படுத்தாமல் இருப்பதால் இருக்கலாம் .
கம்யூனிசம் பற்றி தெரிந்து கொள்ள முயலும் ஒவ்வொரு வருக்கும் போராட்டம் இருக்கவே செய்கிறது.
கம்யூனிசம் பற்றி எழுதபட்ட புத்தகங்கள் சொல்லபட்ட கட்டுரைகள் இணையத்தில் கிடைக்கும் எண்ணற்ற தகவல்கள் வாதபிரதிவாதங்களை படித்து கொண்டே கம்யூனிசம் பற்றி தெரிந்து கொள்ள இயலுமா என்றால் இயலாது மேலும் கணக்கு, அறிவியல் , பூகோலம் போன்று பாடங்களை வரிசையாக கற்று கொண்டு
பரீட்சை எழுதி வகுப்பு வகுப்பு தாவிச்செல்லும் வழமையான நமது பள்ளிக்கூட முறையில் மார்க்சியம் பயில முடியுமா என்றால் அதுவும் இயலாது.
ஏனெனில் மார்க்சியம் என்பது நடைமுறை - நடைமுறைக்கான தத்துவம் .
சரி அப்படின்னா நான் கம்யூனிஸ்டு கட்சியில் சேர்ந்து - போராட்டம் செய்து கத்துகனுமா ? ஓ யப்பா பெரிய வேலையாக இருக்கே இருக்கிற பெரிய கம்யூனிஸ்டு கட்சிகளே அதிகார சண்டையில் இருக்கும் போது எனக்கு வகுப்பெடுப்பாங்களா இல்லைன்னா என்னையும் அவங்க கட்சி வேலைக்கு பயன்படுத்திகுவாங்களா?
என்ற கேள்வி எழும்
இது நடைமுறையில் கம்யூனிஸ்டு கட்சிகளுக்குள் இருக்கும் முரண் உண்மைதான் இதுவும் இருக்கிறது .
ஆனால் நான் சொல்ல வருவது நடை முறை என்பது பற்றி ஒரு உதாரணம் சொல்கிறேன்
உங்கள் தெருவில் சாக்கடை அடைத்து கொள்கிறது நீங்களாக சென்று கேட்டால் எந்த பயனும் இல்லை என வைத்து கொள்ளுங்கள் அடுத்து என்ன செய்வீர்கள் தெருவில் நின்று கத்துவார்கள் சிலர் அதிகார வர்க்கத்தை திட்டுவார்கள் சிலர் தாங்களே அந்த அடைப்பை எடுக்க முடியுமா வென்று பார்ப்பார்கள் .
மேற்கண்ட செயல்களை நன்கு கூர்ந்து பாருங்கள் இதெல்லாம் தனிமனித முயற்சிகள்
1.தானே போய் அதிகாரியை பார்ப்பது
2.கோபத்தில் திட்டுவது சண்டை போட்டு சரி செய்ய பார்ப்பது
3.தானே சாக்கடையின் அடைப்பை எடுப்பது
வேறு விதமான மாற்று வழிமுறைகளும் இருக்கின்றன அதாவது சாக்கடை என்பது பொதுவான ஒரு நீர் வழியேற்று பாதை அதை பராமரிப்பது அரசாங்க பணியாளர்கள் நிர்வகிப்பது அதிகாரிகள் பயன்படுத்துவது மக்கள் (முக்கியமா கவனிக்க) தான் ஒருத்தரே இந்த சாக்கடையை பயன்படுத்தவில்லை மக்கள் அனைவரும்
பயன்படுத்துகிறார்கள் எனவே மக்களை திரட்டி சென்று மனு கொடுப்பது, ஆக வில்லை என்றால் மக்களை திரட்டி போராடுவது இதான் மார்க்சியம் சொல்லும் வழிமுறை .
நடைமுறையில் நீங்கள் தனிமனித வாதத்தை கைக்கொண்டு செயல்படுபவராக
இருந்தால் கம்யூனிசம் புரியாது
நடைமுறையில் நீங்கள் கூட்டு வாதத்தை கைக்கொள்பவராக இருந்தால் கம்யூனிசம் புரியும் .
ஏனென்றால் இரண்டாவது வழிமுறை சமூகத்தை பற்றிய கண்ணோட்டத்தை வழங்குகிறது , அப்போதுதான் சமூகத்தின் இயக்க விதிகளை படிக்கும் போது புரியும் இல்லை என்றால் ஒவ்வொரு சொல்லும் ஒரு கனமான இரும்பு குண்டுமாதிரி பிளக்க முடியாமல் தெரியும் .
குறிச்சொற்கள்:
-------------
மார்க்சியம் சில பிரத்யேகமான சொற்களை கொண்டிருக்கிறது “வர்க்கம் , உற்பத்தி சக்திகள், உற்பத்தி நடைமுறை , சமூக உணர்வு , முரண்பாடுகள் , முரண்பாடுகளின் வளர்ச்சி , இயக்க்வியல் , வரலாற்றின் இயக்கவியல் , இயக்கவியல் பொருள் முதல்வாதம்” இப்படி விரிந்து கொண்டே செல்லும் இந்த சொறகளை
பார்த்த உடனேயே தலைகால் புரியாமல் இருக்கும் அதற்காக இந்த சொற்களின் அர்த்தங்களை அறிந்து கொள்ளாமல் கம்யூனிசத்தை புரிந்து கொள்ள முயல்வதும் தோல்வியை தரும் .
அடிப்படை தத்துவம் :
--------------
கம்யூனிஸ்டுகளிடம் பேச ஆரம்பித்தால் அடிப்படையில் இருந்து பேச ஆரம்பிப்பார்கள் “ஏன் கரண்டு கட்” என்றால் திமுக காரனை கேட்டால் எங்க ஆட்சியில் கரண்டு கட் குறைவு என்பான்
அதிமுக காரனை கேட்டால் “ அவங்கனாலதான் கரண்டு கட்டு அவங்க போதுமான ஒப்பந்தங்களை ஏற்படுத்த வில்லை “ என்பான் ஆனால் ஒரு மனிதனுக்கு இந்த குழப்பமான பதில் திருப்தியாக இருக்கிறது ஆனால் இதில் இருக்கும் தந்திரம் புரிவதில்லை மேலும் இந்த இரண்டு பதில்களுக்குள்ளே போய் யோசனை செய்து கொண்டு உக்கார்ந்திருக்க அவனுக்கும் விருப்பமாக இருக்கிறது ஆனால் ஒரு கம்யூனிஸ்டிடம் கேட்டால் அடிப்படை பிரச்சனையை பேசுவார்
1.இன்றைக்கு நடைமுறையில் இருக்கும் சமூக அமைப்பு
2.இந்த அமைப்பில் உள்ள பிரச்சனை என்ன
3.வரலாற்று ரீதியாக இந்த அமைப்பு எப்படி வந்தது
4.பிரச்சனைக்கும் இந்த சமூக அமைப்புக்கும் இருக்கும் தொடர்பு
5.இந்த அமைப்பின் முடிவு என்ன இது தொடரும் போது மின்சார தட்டுபாடுமட்டும்தான் வருமா
அல்லது உணவு உடை இருப்பிடம் முதலானவைகளே கேள்விக்குள்ளாகுமா
6.இந்த பிரச்சனை தீர நோய்க்கு என்ன மருந்து கொடுக்கனும்
என்று விளக்க ஆரம்பிப்பார் - ஆனால் நமக்கோ உடனடி பதில் வேண்டும் .நன்கு கவனிக்கவும் பதில் வேண்டுமா தீர்வு வேண்டுமா
பதில்தான் என்றால் திமுக அதிமுகவின் பதில் போதுமானது தீர்வு வேண்டும் என்றால் கம்யூனிஸ்டுகள் சொல்லும் வழிமுறையில் ஆராய வேண்டும் இதான் அடிப்படை தத்துவத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பது மேலும் மேற்சொன்னது உதாரணம் மட்டுமே அதற்குள் ஆழ்ந்து செல்ல வேண்டாம் (வழக்கமா நாம செய்வது அதைத்தான் )
-தொடரும்