கம்யூனிசம் என்றால் என்ன ? அதை படிக்காத பாமரரும் புரியும்படி எப்படி விளக்குவீர்கள்-10



                    அடிக்கட்டுமானம் மேட்கட்டுமானம் குறித்து பேசும்போது ஒவ்வொரு சமூகத்திலும் என்ன உற்பத்தி செய்யப்படுகிறது , உற்பத்தி உறவுகள் என்ன என்பதை பொருத்தே மனிதர்களின் சிந்தனை ஓட்டம் அவர்களின் உணர்வுகள் பாசங்கள் எல்லாம் அமையும் ?
ஒரு சின்ன உதாரணத்தை பார்ப்போம் நிலவுடமை சமூகத்தில் அண்ணன் தம்பி மற்றும் குடும்ப உறவுகள் மிகவும் முக்கியம் ஏனெனில் அங்கே விவசாயம் செய்ய ஆட்கள் என்பது கிடைக்காவிட்டால் அந்த குடும்பமே வேலை செய்யும் .
பணத்தை விட மனிதர்களின் மீதான மதிப்பு இருந்த காலகட்டம் அது. ஆனால் முதலாளித்துவ சமூகத்தில் பண்ட உற்பத்தி தொடங்கியது . தனது உழைப்பு சக்தியை தவிர இழப்பதற்கு ஏதுமில்லாத பாட்டாளி வர்க்கம் உருவாகியது இன்னொரு பக்கம் தனது தேவைக்கு போக மீதம் அதிகமுள்ள உபரி அதிகம் கொண்ட ஒரு வர்க்கம் தோன்றியது.
பேச்சு வழக்கில் சொன்னால் இருப்பவன் இல்லாதவன் என்கிற பாகுபாடு அதிகமாகியது.
இருப்பவனை புகழ்வதும் இல்லாதவனை இகழ்வதும் இன்றைய மனிதநீதி. இருப்பவனின் கோமண துனியை கூட துவைக்க இங்கே ஆட்கள் இருக்கிறார்கள் – அமைதி படி சத்திய ராஜ் கழட்டி போடும் அண்டராயருக்கு நடக்கும் அடிதடியை பார்த்து நகைசுவையை ரசித்திருப்பீர்கள் அதுதான் நிசம்.
வாழ்நிலைதான் சிந்தனையை தீர்மானிக்கிறது வர்க்கம் என்பது , சமூகத்தில் மட்டுமில்லை குடும்பத்திலும் இருக்கு, வசதியான் அண்ணன் வசதி குறைவான தம்பி மீது அதீத குற்றம் காண்பான் . கொஞ்சம் பண வசதி இல்லாவிடில் எடைபோடுவார்கள் . சரியாக மரியாதை தரமாட்டார்கள்.
           இதை புரிந்து கொள்ளாத பாச உள்ளங்கள் ஏன் எதற்கு என்று தத்தளிக்கும் அதுதான் தவறு ? நமது வாழ்நிலையே சிந்தனையை தீர்மானிக்கிறது என்பதை புரிந்து கொள்ளாமையால் வந்த விளைவு இது.
சமூகத்தை புரிந்து கொண்டால் சிந்தனையை புரிந்து கொள்ளலாம் மாறாக சிந்தனை ஏன் அப்படி இருக்கிறது என்று கேள்வி கேட்டால் சமூகம் இப்படி இருக்கிறது என்பதுதான் பதில்.
மார்க்சியம் கற்று கொள்பவர்கள் எந்த ஒரு விசயத்திலும் மார்க்சிய அடிப்படையில் ஆராயவேண்டும்.
மனித சிந்தனைகள் , உறவுகள் , உறவு சிக்கல்கள் அனைத்துக்கும் அடிபடை சமூகத்தில்
வாழ்நிலையில் உள்ளது / சிந்தனையும் வாழ்நிலையை தீர்மானிக்கும் அது எப்படி என்றால் அதன் பங்கு குறைவு உதாரணமாக கம்யூனிசத்தை கற்றவர்கள் / அதிக நூல்களை படித்து விவாதித்து அறிந்தவர்கள்  ஆகியோர் தமது வாழ்க்கை நிலமையை மாற்றி அமைத்து கொள்வார்கள் . ஆனால் அவ்வாறு அமைவது மிக குறைவு . 

கவிஞரின் பாடலோடு


பாடல்: அண்ணன் என்னடா தம்பி என்னடா
படம்: பழநி.
ஆண்டு: 1965
பாடலாக்கம்: கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்: T.M. செளந்தரராஜன்
இசை



அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே
ஆசைகொள்வதில் அர்த்தம் என்னடா
காசில்லாதவன் குடும்பத்திலே..

தாயும் பிள்ளையும் ஆனபோதிலும் வாயும்
வயிறும் வேறடா
சந்தைக் கூட்டத்தில் வந்த மந்தையில்
சொந்தம் என்பதும் ஏதடா..

அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே
ஆசைகொள்வதில் அர்த்தம் என்னடா
காசில்லாதவன் குடும்பத்திலே..

பெட்டைக் கோழிக்கு கட்டுச் சேவலை
கட்டி வைத்தவன் யாரடா..
அவை எட்டுக் குஞ்சுகள் பெற்றெடுத்ததும்
சோறு போட்டவன் யாரடா..

வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதும்
வருந்தவில்லையே தாயடா..

மனித ஜாதியில் துயரம் யாவுமே
மனதினால் வந்த நோயடா..


அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே
ஆசைகொள்வதில் அர்த்தம் என்னடா
காசில்லாதவன் குடும்பத்திலே..

வாழும் நாளிலே கூட்டம் கூட்டமாய்
வந்து சேர்கிறார் பாரடா
கை வறண்ட வீட்டிலே உடைந்த பானையை
மதித்து வந்தவர் யாரடா..

பணத்தின்மீதுதான் பக்தி என்றபின்
பந்தபாசமே ஏனடா..

பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும்
அண்ணன் தம்பிகள் தானடா. 



Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post