கம்யூனிசம் என்றால் என்ன ? அதை படிக்காத பாமரரும் புரியும்படி எப்படி விளக்குவீர்கள்-9



          சமூகம் என்றால் திரை விலக்கியதும் தோன்றும் காட்சிகள் போன்றோ அல்லது மற்றொரு திரையை போட்டதும் இன்னொரு சமூக அமைப்பு
வந்தது போன்றோ நாடகபாணியில் வந்ததாக கற்பனை செய்து கொள்ள கூடாது. உதாரணமாக ஆதி கம்யூனிசம் இருந்து ஆண்டான் அடிமை சமூகம் வந்தது என்று மார்க்ஸ் சொன்னால் அது திடுமென இன்ன தேதி இன்ன ஆண்டு இத்தனை மணிக்கு உலகம் பூராவும் மாறி விட்டதாகவும் கருத கூடாது என வேண்டி கொள்கிறேன்.
மாபெரும் சைன்யங்கள் கோட்டை கொத்தளங்கள் ,போர்கள் எல்லாம் தற்போது இல்லாமல் ஒழிந்தன அதே நேரத்தில் அந்த சமூகத்தில் இருந்து கொண்டு வரபோகும் சமூகமான ஜனநாயகத்தையும் மன்னர் அற்ற சமூகத்தையும் யாரும் சிந்தித்து எழுதி இருக்க இயலாது ஆனால் அது வந்தே தீர்ந்தது. அதை போல ஆண்டாண் அடிமை சமூகமும் வேறு வழி இல்லாமல் ஒழிந்தது ஏன் ஒழிந்தது.
ஆதி பொது உடமை நீண்ட ஆண்டுகள் நீடித்து இருக்கலாம் ஆனால் அதன் தொடர்ச்சியான கண்டு பிடிப்பு அதை இல்லாமல் செய்தது அதாவது உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி – விவசாயம் செய்வது எப்படி என்பது கண்டுபிடிக்கப்பட்டவுடன் காடுகளில் கூட்டமாக சேர்ந்து வாழ்ந்து கிடைப்பதை உண்ணும் தேவைஇல்லாமல் போனது அதாவது –உழைத்து 







 


உணவை தேட , பசி ஆறிக்கொள்ள மனிதன் பழகி விட்டான்.
தற்போதும் இந்த விவசாயத்தை செய்யவும் ஆட்கள் தேவைப்பட்டார்கள் உழைப்பு சுரண்டல் தேவை பட்டது அதற்கான போர்களும் போரில் தோற்றவர்களை தங்களது நிலத்தில் வேலைக்கு இருத்துவதும் தொடர்ந்துதது ஆனால் இந்த காலகட்டங்களிலும் சமூகம் இன்னும் பெண் தலைவராக இருந்த  ஒரு பெண் பல ஆணுடன் வாழும் சமூகமாகவே இருந்தது ( வாசிக்க எங்கெல்ஸின் குடும்பம்,தனிசொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்) என்ற நூல்.
ஆனால் ஆண்டான் அடிமை சமூகத்தில் தனிசொத்து தொடங்கிய உடனே குடும்பம் அரசு ஆகியவை தோன்ற ஆரம்பித்து உள்ளது ஏனெனில் தனிசொத்து என்கிற நிலை பாட்டை மனிதன் கைகொள்ள ஆரம்பித்தவுடன்
பாலுறவு கட்டுபாடுகள் அண்ணன் தங்கை தாய், என்கிற கோடுகளை மனித சமூகம் தங்களிடையே இட்டு கொண்டது.
தனிசொத்து தோன்றியதுதான் குடும்பம் தோன்றியதன் அடிப்படை என்றார் எங்கெல்ஸ் (ஆதாரங்கள் அவரது நூலிலேயே உள்ளது)
எளிதாக புரிந்து கொள்ள

1.ஆதி பொதுவுடமையில் இருந்து உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி

உற்பத்தி உறவில் மாற்றத்தை கொண்டு வந்தது

 (நீரை ஒரு குறிப்பிட்ட அளவு கொதிக்க வைத்தவுடன் ஆவியாகும் நிகழ்வு நடக்கும் அளவு மாற்றம் பண்பு மாற்றத்தை கொண்டு வரும் )

2.உற்பத்தி உறவில் மாற்றம் என்பது சமூக மாற்றத்தை கொண்டு வரும்

3.சமூக மாற்றம் தவிர்க்க இயலாமல் மேல்கட்டுமானம்

   கருத்துக்கள் / சட்டம் / இலக்கியம் ஆகியவற்றில் மாற்றம் கொண்டு வரும் 



உற்பத்தி கருவிகள் வளர்ச்சி : கல்லால் ஆன வேட்டையாடும் கருவிகளில் இருந்து இரும்பாலான கருவிகள் உருவானது
உற்பத்தி உறவு மாற்றம்: சக வேட்டை காரன் என்ற நிலை போய் ஆண்டான்கள் ஒரு சில அடிமைகள் பலர் என மாறியது
உற்பத்தி பண்டம் : விவசாயம் கண்டு பிடிக்கப்பட்டதால் மாமிசத்தை தவிர மண்ணில் விளைவிக்கப்பட்ட அனைத்து பொருட்களும் உண்ண வழி காணப்பட்டது
உழைப்பு கருவிகளை உருவாக்க கைவினைகள் என்ற பிரிவினர் உருவானார்கள்
அடிமை சமூகம் வீழ்ச்சி அடைந்ததற்கு காரணமும் அடிமைகளின் மேலான ஆண்டைகளின் சுரண்டல் அதிகரித்ததும் அடிமைகள் கொந்தளித்து எழுந்தனர்  

உற்பத்தி சக்திகளின் பற்றாகுறை இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகிறது .
பெரிய நிலமும் அடிமை முறையும் அதன் ஆட்கள் பற்றாகுறையாலும்
அடக்குமுறையாலுமே தகர்ந்து சிறிய நில குத்தகை காரர்கள் தோன்றினார்கள்


Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post