அடி கட்டுமானம்
என்பது மாறிக்கொண்டே இருக்கிறது முறை
மார்க்ஸின் கருத்துப்படி மொத்தம் நான்கு வகையான சமூக அமைப்புகள்மாறிக்கொண்டே வந்துள்ளன
1.ஆரம்ப கால கம்யூனிசம்
2.ஆண்டான் அடிமை சமூகம்
3.நிலபிரபுத்துவம்
4.முதலாளித்துவம்
5.சோசலிசம்
6.கம்யூனிசம்
ஆரம்பகால பொதுவுடமை சமூகம்
வேட்டையாடி
வாழ்ந்த காலங்களில் ஒருவிதமான சம பங்கீடு மற்றும்
வாழ்க்கை
முறை இருந்தது. வேட்டை கிடைக்காத போது கிடைத்த வேட்டைஅடி கட்டுமானம் என்பது மாறிக்கொண்டே
இருக்கிறது முறை ஆரம்பகால பொதுவுடமை சமூகம் வேட்டையாடி வாழ்ந்த காலங்களில் ஒருவிதமான
சம பங்கீடு மற்றும்
வாழ்க்கை
முறை இருந்தது. வேட்டை கிடைக்காத போது கிடைத்த வேட்டையை பகிர்ந்து உண்ணுதல் மற்றும்
உடல் பலகீனமானவர்கள் பெண்களை காப்பாற்றுவது
விலங்குகளில்
இருந்து தற்பாதுகாத்து கொள்ள கூட்டு சேர்ந்து போரிடுவது.
இங்கே
கவனிக்க வேண்டியது :
உற்பத்தி
கருவிகள் / உற்பத்தி உறவுகள் ஆகியவை ஒரு ஆரம்பகட்ட உற்பத்தி கருவிகளை கொண்ட சமூகம்
உறவு
சம நீதி சமூகம்
//மனித வாழ்வுக்கு ஆதாரமான சாதனங்களின் உற்பத்தியும், உற்பத்திக்கு அடுத்தபடியாக, உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களின் பரிவர்த்தனையுமே சமூகக் கட்டமைப்பு முழுமைக்குமான அடித்தளம் ஆகும்; வரலாற்றில் உருவாகி வந்த ஒவ்வொரு சமுதாயத்திலும், செல்வம் வினியோகிக்கப்படும் முறையும், சமுதாயம் வர்க்கங்கள் அல்லது படிநிலைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் முறையும், [அந்தச் சமுதாயத்தில்] என்ன உற்பத்தி செய்யப்படுகிறது, எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது, உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் எவ்வாறு பரிவர்த்தனை செய்து கொள்ளப்படுகின்றன என்பதைச் சார்ந்தே உள்ளது. வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கருத்துரு, இந்த வரையறுப்பிலிருந்தே தொடங்குகிறது.// கற்பனாவாத சோசலிசமும்
விஞ்ஞான சோசலிசமும் என்ற நூலில் எங்கெல்ஸ்
இந்த
ஆரம்பகட்ட கம்யூனிசத்தின் கூறுகள் :Primitive communism :
1.சமபங்கிடபட்ட
சொத்துக்கள் : சொத்துன்னா மாட மாளிகை அப்போது இல்லை எல்லாம் வேட்டையாடும் கருவிகள்
மற்றும் குகை மற்றும் தோல் ஆடைகள் இவைதாம் (
2.வேட்டையாடுதல் ஒன்று கூடுதல்:
இன்னும் விவசாயத்தை கண்டு பிடிக்கவில்லை இந்த சமூகம் இதன் மொத்த முழு நேர வேலையும்
வேட்டையாடுதல்
3.ஆரம்ப கட்ட ஜனநாயகம் : இங்கே தலைமை
அமைப்பு ஏறபட வில்லை அதிகாரம் இன்னும் உருவாகவில்லை வேட்டையாடும் மனிதர்கள் சிறந்த
வேட்டைகாரனால் வழிநடத்த பட்டார்கள்.
இதன்
மேல் கட்டுமானம் என்பது அந்த காலத்திய நடைமுறை சட்டங்கள் ,வழிபாடுகள் ஆகியவைதாம்
பாம்பை
வணங்குதல் இடி மின்னலை வணங்குதல் ஆகிய இயற்கை வழிபாடு தோன்றியது இந்த காலகட்டத்தில்தாம்
.
பாம்பு
போன்றவற்றால் வேட்டையாடும் மனிதன் மிக அதிகமாக பாதிக்கப்பட்டான்
அடுத்து
திடீரென தோன்றும் இடி போன்றவை இவற்றை கையாள முடியாமல்
வணங்க
ஆரம்பித்தான் ஆதி மனிதன்.
ஆக இந்த
உற்பத்தி முறை உற்பத்தி உறவுகளை தீர்மானித்தது /
அதற்கு
அடுத்த கட்டமான அடிமை சமூகத்தை நோக்கி நகந்தது .
குறிப்பு
: சமூகம் என்பது மாறிக்கொண்டே வந்துள்ளது
மாற்றத்திற்கு
காரணம் உற்பத்தி முறை , உற்பத்தி உறவுகள்
இதில்
மானசீகமான கருத்து சமூகத்தின் மாற்றத்தை செய்யவில்லை
பொருளுற்பத்தியே
சமூகத்தை நடத்துகிறது தீர்மானிக்கிறது என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டுகிறேன்.
also read :http://socialistworker.co.uk/art/33429/Primitive+communism%3A+life+before+class+and+oppression
also read :http://socialistworker.co.uk/art/33429/Primitive+communism%3A+life+before+class+and+oppression
Tags
communism