கம்யூனிசம் என்றால் என்ன ? அதை படிக்காத பாமரரும் புரியும்படி எப்படி விளக்குவீர்கள்-7











வரலாற்று பொருள் முதல்வாதத்தை ஆராய காரல் மார்க்ஸ் அவர்களை 









தூண்டியது எது ? 

















முதலாளித்துவ பொருளுற்பத்தி தொடங்கியது பர முரண்களை கண்டார் ,









அதாவது ஒவ்வொரு சமூகமும் அதன் உற்பத்தியை அடிபடையாக









கொண்டு அதன் மேலே அதன் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன 









என்பதுதான் மார்க்ஸ் வரையறுத்து சொன்னது.










அதைத்தான் அடி கட்டுமானம் மேல் கட்டுமானம் என்கிறோம்









ஒரு சமூகத்தின் அடிகட்டுமானம் முதலாளித்துவ உற்பத்தி இருக்கும்









போது அதன் மேல்கட்டுமானங்கள் அந்த முதலாளித்துவத்தை பாதுகாக்கவே









இருக்கும் உதாரணமாக தற்போது நிறைய முதலாளித்துவ அறிவு ஜீவிகள்









இதன் முறையை பாதுகாக்க கட்டுரைகள் எழுதுவதை காணலாம்.









அதை சார்ந்தே அந்த சமூகத்தின் சட்டம் ஒழுங்கு மற்றும் ஒடுக்கு









முறைக்கு ஆதரவான சட்டம் . பெண்கள் மீதான ஒடுக்குமுறை 









இதெல்லாம் முதலாளித்துவ உற்பத்தி முறை என்கிற அடிகட்டுமானத்தை









சார்ந்ததே.















இதற்கு முன்பு உள்ள சமூகம் நில வுடமை சமூகமாகும் .









இந்த நிலவுடைமை சமூகத்தின் கூறுகள் கூட்டு குடும்பம் சிதைந்து









நியூக்ளியஸ் எனப்படும் தனிகுடும்பம் உருவானதன் பின்னனி 









முதலாளித்துவ அடிகட்டுமானமாகும் .











நானும் எனது மனைவியும் எனது குழந்தைகளும் என்கிற மிக மிக









சுயநலமான பிற்போக்கான எண்ணம் இந்த முதலாளித்துவ 









பொருளுற்பத்தி முறையே தந்தது 












அதெப்படி தந்தது என்பதைத்தான் மார்க்சின் அரசியல் 









பொருளாதார ஆய்வு நூல்கள் விளக்குகின்றன 


கீழ்கண்ட படம் மேல்கட்டுமானம் கீழ் கட்டுமானத்தை விளக்கும் 




Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post