வாழ்நிலையில் இருந்துதான்
சிந்தனை தோன்றுகிறதுன்னு சொன்னவுடனே
என்னடா வாழ்நிலை
, சிந்தனை என்று குழப்புகிறார் என நினைக்க வேண்டாம். நீங்கள் வேலைக்கு போகிறீர்கள் ஒரு கம்பெனியில் கூலி
யாக அல்லது மேனேஜராக இருக்கிறீர்கள் அது உங்களது வாழ்நிலை. இப்படி இந்த சமூகத்தில்
எல்லாரும் வேலைக்கு போகிறார்கள் அல்லது வேலை வாங்குகிறார்கள் அதாவது முதலாளியாக இருக்கிறார்கள்
இந்த கூட்டு மொத்த வாழ்நிலை என்பதை நாம் முதலாளித்துவ சமூகம் என்கிறோம்.
இந்த சமூக அமைப்பில்
எழக்கூடிய சட்டங்கள் அரசியல் இதெல்லாம் எதோ மேம்போக்காக ஒரு சினிமாவின் காட்சிகளை போல
தோன்றி விட இயலாது.
இந்த வாழ்நிலைக்கேற்ப
சட்டமும் அரசியலும் இருந்தாக வேண்டும் இல்லாவிட்டால் தலைக்கு பொருந்தாத தொப்பி கழட்டி
வீசப்படும் .
முதலாளித்துவம்
தோன்றிய காலகட்டத்தில் வாழ்நிலை என்பது நிலபிரபுத்துவ சமூகமாகவும் – பெரும்பாலும் ஜனநாயகமற்ற
மன்னர் ஆட்சி
நிலவியது. ஒரு
சுதந்திரமான தொழிலாளி தோன்ற இது தடையாக இருந்தது எனவே ஆங்காங்கே புரட்சிகள் நடந்தது
பிரெஞ்ச் புரட்சி ஏன் தோன்றியதுன்னு ஒரு கருத்து
முதல்வாதிகிட்ட கேட்டு பாருங்க
கலிகாலம் அல்லது
ஆதிக்க போட்டி , ஆசைதான் உலகத்தின் துன்பங்களுக்கு காரணம் என்று சொல்வாங்களே தவிர உண்மையான
சமூக பொருளாதார நிலமை என்ன என விளக்க முடியாது அவங்களால?
காரல்
மார்க்ஸ் சொல்கிறார்
'தொழில்நுட்பவியல் இயற்கையுடன் மனித கொண்டுள்ள தொடர்புகளுக்கான வழிமுறையை, மனிதன் உயிர் வாழ்வதற்குரிய நேரடியான உற்பத்தி முறையை வெளிபடுத்துவதுடன் அதன் மூலம் அவனது சமுதாய உறவுகளின் அமைப்பு முறையையும் அந்த உறவுகளிலிருந்து தோன்றும் எனக் கருத்தோட்டங்களையும் புலப்படுத்துகின்றது.' (இயக்கவியல் பொருள்முதல்வாதம் பக்..340)
சிந்தனைக்கும்
வாழ்நிலைக்கும் உள்ள தொடர்பை விளக்கும்போது இயக்கவியல் ரீதியாகத்தான் விளக்க
வேண்டும் .
அதாவது வாழ்நிலையும் இயங்கி
கொண்டு இருக்கிறது சிந்தனையும் இயங்கி கொண்டு இருக்கிறது . ஒன்றின் மீது ஒன்று
வினை புரிகிறது .
//
இயற்கையும் இயங்குகிறது. சமூகமும் இயங்குகிறது. சிந்தனையும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த இடைவிடாத இயக்கத்தில் வாழ்நிலையிலிருந்து சிந்தனை எழுகின்றது. மறுவிளைவாக சிந்தனை வாழ்நிலையின்மீது செல்வாக்குச் செலுத்திகிறது. வாழ்நிலைக்கும் இடையிலான முரண் இருந்து கொண்டே இருக்கின்றது.
சமூக வாழ்நிலை என்பது பொருளாதார வாழ்வும், கருத்தியல் வாழ்வும் இரண்டும் சேர்ந்ததாகும். பொருளாதார நிலைமை சிந்தனையைத் தீர்மானிக்கச் செய்கின்றது. அதே சமயம் சிந்தனை பொருளாதாய நிலைமைகளை பாதிக்கவும் மாற்றவும் செய்கின்றது. அது மட்டுமின்றி, ஏற்கனவே நிலவிவரும் முந்தைய கருத்தியல் நிலைமைகளும் சிந்தனையின் மீது செல்வாக்கு செலுத்துகின்றன.
//
மார்க்சின் கருத்துப்படி உற்பத்தி மறு உற்பத்தி இதான் சமூகத்தின்
அடிப்படை இதைத்தான் பெரிய பெரிய பதங்களில் எல்லா இடத்திலும்
மார்க்சியம் பேசும்
//‘உற்பத்தியும் மறு உற்பத்தியுமே சமூகத்தின் அடிப்படையான விசயங்களாகும்’ என்று வரையறுத்த மார்க்சு அது குறித்து முதன்முதலில் ‘செர்மன் கருத்தியல்’ (1846) என்ற நூலில் பதிவு செய்கின்றார்.
“மனிதனது கருத்துகளும் நினைப்புகளும் கண்ணோட்டங்களும்
- சுருங்கச் சொன்னால் மனிதனது உணர்வானது- அவனது பொருளாதாய வாழ்நிலைமைகளிலும் சமூக உறவுகளிலும் சமூக வாழ்விலும் ஏற்படும் ஒவ்வொரு மாறுதலுடனும் சேர்ந்து மாறிச் செல்வதைப் புரிந்து கொள்ள ஆழ்ந்த அறிவு வேண்டுமா, என்ன?
“பொருள் உற்பத்தியில் ஏற்படும் மாறுதலுக்கு ஏற்ப, அறிவுத் துறை உற்பத்தியின் தன்மையிலும் மாற்றம் ஏற்படுகிறது - கருத்துகளின் வரலாறு நிரூபிப்பது இதன்றி வேறு //என்னவாம்? ஒவ்வொரு சகாப்தத்திலும் ஆதிக்கம் செலுத்தும் கருத்துகள் அந்தச் சகாப்தத்தின் ஆளும் வர்க்கத்தினுடைய கருத்துகளாகத்தானே எப்போதுமே இருக்கிறது .
சரி
இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் இந்த ஒரு விசயம் மட்டுமல்ல சிந்தனை வாழ்நிலை
என்பதை ஆராய்வதன் மூலம் உலகின் மொத்த வரலாற்றையும் அடக்கி அடுத்து உலகம் செல்ல
வேண்டிய பாதையை காட்டுது மார்க்சியம் அதற்காக சிந்தனை வாழ்நிலை ஆகிய கருத்தாங்களை
மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.
Tags
communism