மேலோட்டமான வரலாற்று புத்தகத்தில் எழுதுப்பட்டு நம்மால் மனப்பாடம்
செய்யப்பட்டு பரீட்சையில் எழுதப்பட்ட வரலாறு ஒன்று . அது மன்னர்களை பற்றி பேசுகிறது
அவர்களின் எழுச்சி வீழ்ச்சியை பேசுகிறது , ஆட்சி பீடத்துக்கு நடக்கும் சதிகளை பற்றி
பேசுகிறது.
அதுதான் வரலாறா அந்த வரலாறை வைத்து என்ன கற்று கொண்டோம்.
ஒன்றுமில்லை. சமூகத்தின் வாழ்நிலையை அதன் உற்பத்தி உறவுகளை உள்ளது
உள்ளபடி சொல்ல அன்று வரலாற்று ஆசிரியர்கள் இருந்தார்கள் அவர்களும் பெரும்பாலும் யாருடைய
ஆட்சி எப்படி பட்டது அதன் வரிவசூல் நிலமைகளை நிறைய இயம்பித்தான் சென்று இருக்கிறார்கள்.
அதை தாண்டி மத ஆதரவாளர்கள் வரலாற்றில் இருந்து வன்முறைக்கான
தளத்தை உருவாக்கி கொள்கிறார்கள் , அதாவது முஸ்லீம் படையெடுப்புகளால் இந்து கோவில்கள்
அழிந்தன என்ற வரலாற்றை மட்டும் சொல்லி – இந்து மன்னர்கள் இமயம் வரை படை யெடுத்தார்கள்
என்று பெருமை பட சொல்வார்கள் .
படையெடுப்படுகள் சமூகத்தின் பொருளாதார நிலைமைக்கான போர்களே.
ஆதிக்கம் என்பது எப்போதுமே பொருளாதார நலன் சார்ந்தது . அன்றைய
இந்தியாவின் அன்னிய ஆதிக்கம் ஆகட்டும் இன்றைய இலங்கை ஈழத்தின்
வீழ்ச்சி ஆகட்டும் அனைத்தும் நாடுகளின் பொருளாதார நிலையை சார்ந்து
நிர்ணயமானது.
இனப்போர் அதன் தோல்வி என்பது துரோகத்தால் நடந்தது என்றும் ராஜீவ்
காந்தி படுகொலையினால் நடந்தது என்றும் சொல்பவர்கள் – இலங்கையின்
பொருளாதார நலனை (ஆதிக்க சக்தியாக வளரும் இந்தியாவின் நலன் ஆகியவற்றை)
இந்தியா கவனித்துதான் ஈழத்தை தோற்கடித்தது என்பதை கவனிக்காதவர்கள் மார்க்சியம் தெரியாவதவ்ர்கள்.
நிலபிரபுத்துவ சமூகம்:
ஆண்டான் அடிமை
சமூகம் அதன் உற்பத்தி சக்திகள் போதமை மற்றும் வளர்ச்சி பெற்ற வேறொரு நிலமை தேவை பட்டதால்
அழிந்தது.
அதாவது ஆளும் வர்க்கம் ஆளப்படும் வர்க்கத்தின் முரண்பாடு கூர்மை
அடைந்தவுடன் அழிந்தது. இந்த முரண்பாடு கூர்மை அடைவதற்கும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி
அடிப்படையாகும்
சமூகம் இயங்கி கொண்டும்
மாறி கொண்டும் இருக்கிறது என்பதையும் அது மாறுவதற்கான காரணி அதன் உள்ளேயே இருக்கும்
முரண்பாடு என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்
.
இப்போது நிலங்கள் நில
பிரபுக்களின் வசம் வந்தது அதன் முழு அதிகாரமும் ஆண்டானிடம் இருந்து நில பிரபுக்கு மாற்றம்
பெற்றது.
துண்டு நிலத்தை உழுது பயிறிடும் ஒரு உழவன் தன் குடும்பத்தோடு
அந்த நிலபிரபுக்கு அடிமை ஆனால் அவனுக்கு ஒரு சிறிய சுதந்திரம் என்னவென்றால் சாட்டையுடன்
இருக்கும் ஒரு ஆண்டானின் அடியாள் அவனுடன் இருப்பதில்லை .
தனது நிலத்தோடு கட்டப்பட்ட உழவன் உழைத்து நிலபிரபுக்களிடம் கொடுத்துவிட்டு
தனது குடும்பத்துக்கும் எடுத்துகொண்டான்.
இந்த சமயத்தில் இனகுழு முறை ஒழிந்தது / குடும்பம் தனி சொத்து
ஆணாதிக்கத்தின் தோற்றம் ஆரம்பமானது.
//இதன்
மூலம்
உழவர்களுக்கு
பெரிய
வாழ்வு
ஏதும்
பெற்றிடவில்லை, என்றாலும், அடிமைச்
சமூகத்தை
விட
சிறிது
முன்னேற்றம்
கண்டது, நிலச்
சொந்தக்காரனுக்காக
வாரத்தில்
சில
நாட்கள்
உழைத்து
முடித்து, தமக்கு
ஒதுக்கப்பட்ட
நிலத்தில்
பிறநாட்களில் உழைத்திட
முடிந்தது, அந்தளவிற்கு
உரிமை
பெற்வராக
இருந்தனர்.//
உற்பத்தி கருவிகள்
|
மனிதனால் இயக்கப்படும் அரிவால்கள் , கோடாலிகள்
, கலப்பை
|
உற்பத்தி சக்தி
|
மனிதன்
|
வர்க்கம்
|
நிலபிரபுகள் ஆளும் வர்க்கம்
உழவர்கள் –அடிமை வர்க்கம்
|
ஆட்சி
|
மன்னர் ஆட்சி
|
குடும்ப அமைப்பு
|
ஆணாதிக்க சமூகம்
|
பண்ட மாற்று முறை
ஒழிந்து – பணம் அறிமுக மானது இந்த பணத்தின்மூலம் பல்வேறு விதமான வர்க்க பிரிவுகள் வளர்ச்சி
பெற்றது.
வியாபாரிகள் என்கிற
வர்க்கம் உருவானது. இந்த சமூக அமைப்பில்தான்.
Tags
communism