ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பதும் மாறாதோ
என்கிற பாடல்தான் நினைவுக்கு வருகிறது
நாம் மெட்ரிக் பள்ளி மாணவன் அளவுக்கு முன்னேறிய அறிவு பெற வேண்டும் எனவே அவன் பாடதிட்டத்தை நமது பாட திட்டமளவுக்கு
குறைத்து விடுவதே சிறந்தது .
இந்த மனப்பான்மை எங்கிருந்து எழுகிறது .
மார்க்சியத்தில் தனிசொத்துரிமையை ரத்து செய்யவும் பணக்காரர்களிடம் குவிந்து கிடக்கும் செல்வங்களை அரசு தன் கட்டுபாட்டில் எடுத்து கொள்ளவும் வேண்டும் என சொன்னால்
இதே பார்முலாவை கல்வியில் செய்யலாமா?
உடனே மக இக தோழர்கள் தங்களது கொஞ்சூண்டு மூளையால்
அதுதான் சரி என்பார்கள்
ஏனெனில் பெண்ணியத்துக்கு போராடும் இவர்கள் லீணா என்கிறா
பெண்ணை கேவலமாக பேசியவர்கள் ஆச்சே
கல்வி என்பது வளர்ந்து செல்ல வேண்டும் அது எந்தவகை கல்வியானாலும் உலகின் போட்டி சூழலில் நமது நாட்டின் மக்கள்
தாக்கு பிடித்து வளரவேண்டும்
ஏற்கனவே நமது பட்டதாரிகள் படித்தோர் நிறைந்த சபைகளில்
ஆங்கிலம் பேச முடியாமலும் குறைந்த பட்ச ஒரு அறிவியல் சொற்றொடரை ஆங்கிலத்தில் பேச முடியாமலும் வெக்கி தலைகுனிவதும்
வட மாநிலங்களில்வேலை வாய்ப்புகள் கிடைத்தாலும் தெரியாத இந்தி
நந்திமாதிரி குறுக்கேவர திறமையை மொழிக்காக அடகு வைத்துள்ளா
நிலையில்
சமச்சீர் என்கிற கல்வி வருகிறது
என்ன செய்திருக்க வேண்டும்
அனைத்து பாடதிட்டங்களின் நல்ல அம்சங்களை ஒருங்கினைப்பதற்கு பதிலாக மெட்ரிக் பாட திட்டமோ அல்லது ஆங்கிலொ இந்தியன் பாடதிட்டமோ எது மிக திறமையான மாணவனை உருவாக்கும் என்பதை அறிந்து அதை எல்லா மாணவர்களும் படிக்க வேண்டும் என்கிற சட்டத்தை போடவேண்டும்
இது ஓரிரு ஆண்டுகளில் நடைபெறாது என்பது உண்மையே
ஆனால் ஒரு பத்தாண்டுகாலகாலகெடுவில் இதை செய்து முடிக்கலாம்
என்ன தேவை ஆசிரியர்களின் உழைப்பு பெற்றோரின் கவனிப்பு
மாணவனின் ஊக்கம் இதுமட்டுமே தேவை
பணத்தை போல படிப்பு என்பது ஒரு பொருள் அல்ல
படிப்பு என்பது அடிப்படை தேவை
அடிப்படை தேவை எல்லாருக்கும் சமமான அளவில் தேவை என்கிற போது அது அதிகபட்ச தரமானதைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்
பாவம் நமது மாணர்வர்கள் இன்னும் இன்னும் அரசியல் விளையாட்டு பேர்வழிகளிடம் தனது கல்வியை அடகு வைக்கிறார்கள்
மக இகவில் இருக்கும் ஒரு நபருக்கு கூட மெட்ரிக் பள்ளியின் பாடத்தில் என்ன இருக்குன்னு கூட தெரியாது
ஆனால் இதை ஒரு அரசியலாக செய்ய கருவியாக கல்வியை பயன்படுத்துவதை வன்மையாக எதிர்கிறேன்
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================