வினவு என்கிற வசை கும்பல்


வினவு என்கிற இடது தீவிர வசைகும்பல் என்மீது தனிநபர் தாக்குதலை ஆரம்பிச்சுட்டானுக
விசயம் இல்லைன்னா தனிநபர் தாக்குதல்தான் இவனுகளுக்கு தெரிந்தது என்பதை மக்கள் மீண்டும் உணர்ந்து கொள்வார்கள் .

காலபோக்கில் இந்த வசை கும்பல் சட்டையை கிழித்து கொள்வது உறுதி

சுட்டி :
http://www.vinavu.com/2011/06/14/samacheer-kalvi-injustice/

ஊசிJune 16, 2011 at 8:50 pm
26.1

தம்ப்ரி சுண்டல் விப்பது தப்பில்லை, கூட்டம் இருக்கும் இடத்தில்தான் விக்கும் ஆனா அதை சுண்டல்னு சொல்லி விக்கனும், ப்லாப்பழம்னு சொல்லி விக்கப்பிடாது..

அந்த சுட்டிக்கும் சமச்சீர் கல்விக்கும் மயிறளவுக்காவது சம்பந்தம் இருக்கா? அதுல இருப்பது சுத்த அரசியல் புரிதலற்ற பிதற்றல், அந்த 'இயக்க' நபருக்கு தேசிய முதலாளின்னாலும் என்னான்னு தெரியல, அதை பற்றிய மார்க்சிய கொள்கையும் புரியல. சொந்த மூளை இல்லாம பிட்டசிச்சே அரசியல் பேசும் தற்போது களப்பணிகளிலிருந்து ஓய்வு பெற்று ஆய் போய்கொண்டிருக்கும் திருப்பூர் மென்டலுக்கு வேண்டுமானால் இது பெரிய் ஆய்வாக தெரியலாம், மத்தவங்களையும் அந்த மாதரியே நினைச்சா தகுமா… சுண்டல் விக்கிறத நிறுத்திட்டு சந்தேகம் எதனா இருந்தா நேர்மையா கேட்டுட்டு பதில் வாங்கிட்டு போங்க

வினவுடைய சீற்றத்துக்கு காரணமான கட்டுரை :(நன்றி இயக்கம் வலைப்பூ)

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரில் இன்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்), மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ), இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி(மாவோயிஸ்ட்), ம.க.இ.க.-வின் அரசியல் கட்சியான மாநில அமைப்புக் குழு உட்பட அனைத்து எம்.எல். அமைப்புகளுக்கும் இடையே ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இவை அனைத்திற்கும் இடையே ஒரேயொரு ஒற்றுமை உண்டு. அது என்னவென்றால் இக்கட்சிகள் அனைத்தின்
புரட்சித் திட்டத்தின்படியும் தேசிய முதலாளிகள் புரட்சியின் நேச சக்திகள். அவர்கள் நடத்தப் போவதாகக் கூறும் புரட்சியை, தேசிய ஜனநாயகப் புரட்சி, மக்கள் ஜனநாயகப் புரட்சி, புதிய ஜனநாயகப் புரட்சி என்று என்ன பெயரிட்டு அவர்கள் அழைத்தாலும், அவை அனைத்திலும் நேச சக்தியாக தேசிய முதலாளிகள் வருவார்கள். இத்தேசிய முதலாளிகளை புரட்சியின் நேச சக்தியாக வைத்திருக்க பல செயல் தந்திரங்கள் வகுத்து அவர்களை நம்மோடு வைத்திருக்க வேண்டும் என்றும் கூறுவார்கள்.

இவர்கள் தேசிய முதலாளிகளுக்குச் சொல்லும் வரையறையின்படி தனியார் பள்ளி-கல்லூரி முதலாளிகள் தேசிய முதலாளிகளே. இவர்கள் தரகு முதலாளிகளுக்குச் சொல்லும் வரையறையின்படி பார்த்தாலும் தனியார் பள்ளி-கல்லூரி முதலாளிகள் தரகு முதலாளிகள் அல்ல; தேசிய முதலாளிகளே. ஆனால் தேசிய முதலாளிகளான தனியார் பள்ளி-கல்லூரி முதலாளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக இன்று இவர்கள் போராடுகிறார்கள் அல்லது குறைந்தபட்சம் அதற்கு எதிராகக் குரல் கொடுக்கிறார்கள்.

இவர்களது தேசிய ஜனநாயக அல்லது மக்கள் ஜனநாயக அல்லது புதிய ஜனநாயகப் புரட்சித் திட்டத்தின்படி தங்களது நேச சக்தியான கல்வி முதலாளிகளை - பல செயல் தந்திரங்கள் வகுத்து தங்கள் பக்கம் வைத்துக் கொள்ள வேண்டிய கல்வி முதலாளிகளை - இவர்களே எதிர்த்துப் போராட வேண்டியநிலையை இன்றைய வாழ்க்கையின் யதார்த்தம் உருவாக்கியுள்ளது.

இந்தக் கல்வி முதலாளிகள் எதிர்த்துப் போராடப்பட வேண்டியவர்களே. தனியார் பள்ளி-கல்லூரி முதலாளிகள் ஒருபக்கம் குறைந்த சம்பளம் கொடுத்து ஆசிரியர்கள் - ஊழியர்களையும் மறுபக்கம் அளவுக்கதிகமான கட்டணங்களை வசூலித்து பெற்றோர்களையும் ஒரேநேரத்தில் சுரண்டும் கொடூரமான சுரண்டல்காரர்கள்.

இப்படிப்பட்ட கொடூரமான சுரண்டல்காரர்களை இந்தக் கட்சிகளின் புரட்சித் திட்டம் தங்களின் நேசசக்தி என்று சொல்கிறது. தங்களது புரட்சித் திட்டத்திற்கு உண்மையுள்ளவர்களாக இருந்து இந்தக் கல்வி முதலாளிகளை தங்களோடு கூட்டாளியாக வைத்திருக்க உதவும் செயல்தந்திரங்களை இவர்கள் வகுக்க முடியாதவாறு வாழ்க்கையின் யதார்த்த நிலைமை உள்ளது. நியாயமாகப் பார்த்தால் இந்த யதார்த்த உண்மைக்கு மதிப்பளித்து தங்களது புரட்சித் திட்டத்தை மறுஆய்வுசெய்து தேசிய முதலாளிகளையும் எதிரி வர்க்கமாக ஆக்கி வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும். ஆனால் இவர்களோ கட்சித் திட்டத்திற்கும் நடைமுறைச் செயல்பாட்டுக்கும் ஒருசம்பந்தமும் இல்லை என்பதுபோல் செயல்படுவதால், தனியார் பள்ளி-கல்லூரி முதலாளிகள் ஒரேசமயத்தில் இவர்களது புரட்சித் திட்டத்தில் நேசசக்தியாகவும் நடைமுறையில் எதிரியாகவும் இருக்கும் விநோதம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

"ஓ! நண்பனே, உனது தத்துவத்திற்குத் தலை நரைத்து விட்டது; ஆனால் வாழ்க்கை என்றும் மாறாத பசுமையுடன் இருக்கிறது" என்று கதே-யை மேற்கோள் காட்டும் லெனின்தான் இங்கே நம் நினைவுக்கு வருகிறார்.


--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

5 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post