சமச்சீர் கல்வியும் மக இகவும்

முதலாளிகளின் கைகூலியா வினவு


வினவு தோழர்களை அப்படி எல்லாம் சொல்லபிடாது பின்ன வெள்ளையன் கூட உக்கார்ந்து போராட்டம் செய்தா அவர்கிட்ட சந்தா வாங்கின முதலாளியின் கைக்கூலின்னு எப்படி சொல்ல முடியும் தப்பு தப்பு கன்னத்தில போட்டுகொள்

பிறகு ஏன் தேசிய முதலாளிகளை சொன்னால் கோபம்வருதுன்னு கேட்கிறீங்களா ? ஹய்யோ ஹய்யோ

இந்தியாவில் இருக்கும் தேசிய முதலாளிகளின் வாலை பிடித்து கொண்டே
உலகமயமாக்கலை ஒரே தாவாக தாவி அந்தாண்ட போய் உக்கார்ந்து கொள்ளலாம் என்பதே தனிபதிவா போடுங்க அதுவரைக்கும் வினவுக்கு ஏன் திடீரென என் மீது தாக்குதல் நடத்தும் அளவு கோபம் வந்ததுன்னு பாருங்க


சமச்சீர் கல்வி என்கிற ஏமாற்று :

தமிழகத்தில் வினவு பக்தர்களால் பரவாயில்லை என்றும் காலி பெருங்காய டப்பா என்றும் போற்றப்படும் கருணாநிதி தனது வாழ்நாள் சாதனையாக நிறைய படங்களுக்கு பாட்டெழுதி இருக்கார் அதை போலவே ஒரு சில என் ஜீ ஓக்களின் பேச்சை கேட்டு இந்த சமச்சீர் கல்வியை கொண்டு வந்தார்
அதை வந்து இந்த ஜெ அம்மா வேணாம்னுட்டாங்க மனுசன் கொண்டு வந்ததும் கொண்டு வந்தார் தன்னோட ஒப்பேராத ரெண்டு கவிதை தன்னை பற்றியும் தான் செம்மொழிக்கு எழுதிய கட்டுரையையும் போட்டு
சும்மா 200 கோடிக்கு மேல புத்தகமெல்லாம் பிரிண்டு அடிச்சு வச்சிட்டார்

ஏன் அடிச்சார் அதான் மே வுல தேர்தல் ஜூனில் வீட்டுக்கு போகனுமில்ல
ஆனால் மனுசன் தனது பேர் விளங்கனுமில்ல என நினைத்து மானாட மயிலாட போல என்றும் நீங்காத ஒரு நினைவு சின்னமாக சமச்சீர் கல்வியை கொண்டுட்டு வர நினைச்சார் தப்பில்லை

ஆனால் பாருங்கள் அரசு பள்ளிகளில் என்ன பாடதிட்டம் கொடுத்தாலும் அதில் ஒழுங்க நடத்த ஆளில்லை இந்த குறைபாட்டை மறைக்க ஏற்கனவே நல்லா படிச்சிட்டு இருக்கிறவன கீழ தள்ளிவிடும் படி ஒரு கல்வி திட்டம் போட்டு எல்லாரும் மக்கா ஆகுங்கடான்னு சபிச்சுட்டார்

அவனவன் காச பொறட்டி பிள்ளையை நல்லா படிகக் வைக்கனும்னு ஆளா
பறந்து தனியார் பள்ளியில் இடம்பிடிக்க அங்கயும் ஒன்றுமில்லை இங்கையும் ஒன்றுமில்லைன்னு ஆக்கிட்டார் தலைவர்

பிரச்சனையும் தொழிற்சங்கங்களும் :

இதை என்னவோ பெரிய சாதனையாட்டம் கற்பிதம் செய்த மக இக
இது ஒரு புரட்சிகர பாடதிட்டம் மாதிரியும் இதை கொண்டுவந்தால் சமூகத்தில் பெரிய சாதனை செய்தமாதிரி ஆகிடும்னும் நினைச்சு
போராட்டம் அது இதுன்னு எழுதிகிட்டு இருக்கானுவ

உண்மையில் கீழே இறக்குவதல்ல மேலே ஏற்றுவதே சிறந்த கல்வி

கல்வி என்பது வெறும் பாடதிட்டத்தை மாற்றுதால் மட்டும் வந்துவிடுதல்ல

அதன் இணை அமைப்பான சிறந்த ஆசிரியர்கள் படிக்கும் சூழல் குடும்பத்தின் பொருளாதாரம் எல்லாம் தேவை

இந்தியாவில் 52 சதவீதம் மாணவர்கள் 8 ஆம் வகுப்புடன் தனது கல்வியை நிறுத்த்தி விடுகிறார்கள் என்கிறது புள்ளி விபரம்

300 மில்லியன் குழந்தைகளில் 52 சதவீதம் வெறும் கூலி அடிமைகளாக போக இங்குள்ள ஏனோதானோ கல்வி அமைப்பே காரணம்

இதை மாற்ற என்ன போராட்டம் செய்கிறீகள் என்றால்

தோழர் அதெல்லாம் புரட்சி வந்தால் சரியாக போகும் என்பார்கள்

ஆசிரியர்களின் சங்கங்களும் இடதுசாரிகளும்

எல்லா ஆசிரியர் சங்கங்களும் இடதுசாரி தொழிற்சங்கத்தில் இருக்கவே
செய்கிறார்கள் ஏற்கனவே தனிநபர் வாதமாகிப்போன தொழிற்சங்கங்களில்
இந்த மக இகவினரின் தொழிற்சங்களும் அடங்கும்

என்னன்னா ஆசிரியர்களின் திருட்டு தனத்தை சொல்லவும் அவர்களை ஒழுங்க பாடம் எடுக்க சொல்லவும் இங்கு எந்த சங்கமும் தயாரில்லை
அப்படி சொன்னால் எவனும் சந்தா கொடுக்கமாட்டானில்லையா?

ஆக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தாங்கும் இந்த சங்கங்கள் தனியார் பள்ளி ஆசிரியர்களை கைவிடுகிறது

எனக்கு தெரிந்து எல்லா பள்ளிகளும் கிட்டதட்ட 8 பீடியடுகள் நிற்கவைத்தே வேலை வாங்குகிறார்கள் அவர்களுக்கு மக இகவோ வேறு எந்த கம்யூனிஸ்டு அமைப்பொ ஏன் தொழிற்சங்கம் கட்டவில்லை என்பது தெரியவில்லை

ஆனால் நல்லா வறுமானம் வரும் அரசு பள்ளி ஆசிரியர்களை கொண்டு தொழிற்சங்கம் கட்டி இருக்கிறார்கள் அவர்களும் சங்கம் இருக்குன்னு
பள்ளிக்கு செல்வது எப்போதாவதுதான்

நேர்மையான சங்கம் என்றால் தனியார் பள்ளி ஆசிரியருக்கும் ஆதரவாக
அரசு பள்ளி ஆசிரியருக்கு எதிராக போராடி இருக்கும் அங்கெல்லாம் வர்க்கமும் கிடையாது ஒன்றும் கிடையாது

ஆக ஒருபக்கம் ஒடுக்குமுறைக்கு எதிராக மெள்னமும் இன்னொரு பக்கம்
வேண்டுமென்றே பிள்ளைகளில் கல்வியை கொலை செய்யும் ஆசிரியர்களிடம் வாங்கி திண்ணும் கூட்டமாகவும் சீரழிந்து போன மக இக போலி கம்யூனிஸ்டுகள்

சமச்சீர் கல்வி ஒரு அரசியல் செய்யும் கருவி :

சமச்சீர் கல்வியை ஒரு எதிர்ப்பு அரசியலுக்கான கருவியாக பயன்படுத்துகிறார்களே தவிர இவர்களுக்கு மாணவர்களின் கல்விமீது
ஒரு அக்கறையும் இல்லை மண்னும் இல்லை

எல்லாமே பண்டமாகிப்போன சமூகத்தில் கல்வியும் பண்டமாகிப்போனது
இந்த பண்டத்தை உற்பத்தி செய்பவன் அதில் லாபம் அடைய போராடும் முதலாளிகளான தனியார் தேசிய முதலாளிகளும் இன்னொரு பக்கம்
அரசு வேலையில் உக்கார்ந்து கொண்டு சுரண்டும் அதிகார வர்க்க கும்பலும் உண்மையான கல்வியை மாணவனுக்கு தர சந்தை போட்டியை நிகழ்த்துகிறார்கள்

அரசு அதன் சார்ந்த அமைப்புகள் நாளுக்கு நாள் அழுகிவரும் சூழலில்
தனியார் அமைப்புகள் வேகமாக அந்த இடங்களை தக்க வைக்க்கிறதையும்
அதற்கு ஒட்டு போடும் வேலையை பார்க்கும் தரகர்களான கலைஞர் போன்றோரின் ஒட்டு வேலைகளையும் இந்த மக இக ஆதரிப்பது
சரியான அரசியல் புரிதல் இல்லாமையே

ஒட்டு வேலை என்பது அரசியல் போராட்டம் ஆகுமா?

சமச்சீர் என்கிற பெவிக்கால் ஒட்டும் என்கிறார் கலைஞர் ஆமாம் ஒட்டு என்கிறது மக இக இதுதான் மார்க்சிய அரசியல் என மிளகாய் அரைக்கிறார்கள்

கல்வி என்பது இன்று தனியார் மயமானது ஒரு மிகப்பெரிய தேவைப்பொருள் முதலாளிகளில் கையில் சிக்கி உள்ளது என்றால் மறுபுறம் அதற்கு காரணமான அரசு துறையின் ஆசிரியர்களே என்கிற பார்வை இருந்தால்

நாம் போராட போவது புத்தகங்களுக்காக இல்லாமல் உண்மையான கல்விக்காக இருக்கும் இதை மக இக புரிந்து கொள்ளாது அல்லது புரியாத மாதிரி நடிக்கும்
--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

4 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post