எனது தகப்பனார் - உழைப்பின் உதாரணம்

தந்தையர் தினம்


எல்லா தந்தைகளையும் போலவே எனது தந்தையும் படிக்கவைத்தார் என்னளவில் அவரை மிக உயர்வாக நினைக்க சில காரணங்கள் இருக்கின்றன .

என்ன காரணம் என்றால் அவர் என்னை படிக்க வைத்தார் சமூகத்தை
புரிந்து கொள்ள கம்யூனிஸ்டு கல்வியை தந்தார் என்பதே அது

அவரது வேலை என்பது காலை நான்கு மணிக்கு ஆரம்பிக்கும்
மூன்றரை மணிக்கு எழுந்து பணிக்கு சென்றாக வேண்டும் அவர்
சைக்கிளில் சென்று சாயுங்காலம் வரை வேலை இருக்கும்

அப்பள உற்பத்திக்கு பயன்படும் மாவை இடுப்பொடிய இடிக்க வேண்டும்
மிக குறைந்த கூலியும் அதிக சுரண்டலும் உள்ள வேலை அது

காலை 4 மணிக்கு சென்று அந்த வேலையை செய்ய முடியும்
என்று என்னால் நினைத்து கூட பார்க்க இயலாது அத்தகைய
கடுமையான வேலை ஆனால் எங்களை படிக்க வைக்கனும்
என்ற நினைப்பு மாத்திரம் அவர் விடவில்லை .

ஆரம்பமுதல் அரசு பள்ளிகளில் படித்த நான் முதல் மாணவனாக
வரும் போது பள்ளிக்கு ஒரு முறை உன் தந்தையை அழைத்துவா
என எனது ஆசிரியர்கள் எவ்வளவோ அழைத்தும் வராதவர்
ஏனெனில் தனது சொந்த உழைப்புக்கு ஒரு புகழை தேடுவதை விரும்பாத
வர் .

இதற்கிடையே ஒரு தங்கைக்கு திருமணம் சீக்காளியான தம்பி
என்று அவரது வாழ்க்கை புயல்கள் நிரம்பியது.

இப்போது அவருக்கு சுமார் எழுபது வயது இருக்கலாம் ஆனால்
இன்றும் ஒரு சிறிய வேலைக்கு சென்றுகொண்டுதான் இருக்கிறார்

உழைப்பு உழைப்பு உழைப்பு இதுமட்டுமே அவரது மந்திரம்

பத்தாம் வகுப்பு விடுமுறை மற்றும் ஐடிஐ படிப்பு இப்போதெல்லாம்
நானும் அவருடன் வேலைக்கு சென்று இருக்கிறேன்

அந்த பகுதியில் சுமார் 500 குடும்பங்கள் இந்த தொழிலை நம்பி
இருந்தமையால் இவர் தலைமையில் அங்கே தொழிற்சங்கம் ஆரம்பித்து
கடுமையான அச்சுருத்தலுக்கிடையே முப்பது ஆண்டுகள் தொடர்ச்சியா
கூலிக்காக போராடியவர்

ஒரு முறை ஒரு போராட்டத்தில் கைது செய்யப்பட்ட நானும் தம்பியும்
சிறைக்குள் இருந்த போது அதை பாராட்டியது மட்டுமல்லாமல்
தெருவின் அனைத்து பிரச்சனைகளிலும் தலையிட்டு போராடும்படி தூண்டியவர் .

நடைமுறையே தத்துவத்தின் உரைகல் என்பது நான் தந்தையிடம் இருந்து கற்று கொண்டது

ஆனால் இளமையில் வறுமையே கம்யூனிசத்தை கற்க தூண்டியதென்று
சொல்லலாம்

ஏனெனில் கம்யூனிச சிந்தனை என்பது த்ந்தை மூலம் மகனுக்கு
கடத்தபடுவதல்ல .

எங்கள் குடும்பத்தின் தலைவர் என்பதையும் மீறி அவரது
கடும் உழைப்பு போராட்ட குணம் இவை என்றும் எனக்கு பிரம்மிப்பான
ஒன்று

ஒரு முறை ஒரு பெரிய வெள்ளம் எங்கள் பகுதியை சூழ்ந்து எங்கள் வீட்டின் பின் புறம் இடிந்து கொண்டே வந்தது கொஞ்சம் கூட கலங்காமல் சொன்னார் ஒரு அறை மிச்சம் இருந்தால் போது இடிந்த பிற பகுதிகளைஇ
கட்டி விடலாம் என்று .

துணிச்சல் என்பது பேப்பரில் எழுதி வருவதில்லை அது
நடைமுறையில் வருவதென்பதே அவரிடம் இருந்த நான்
கற்றுகொண்டது



--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post