கம்யூனிஸ்டுகளால் பெருவாரியான மக்களை கவரும் போராட்டம் செய்யமுடியவில்லை ஏன்

தொழிற்சங்கங்கள் கடமையை செய் உரிமையை கோரு என எப்போதும் சொல்வதில்லை சந்தாவை கட்டு ஆளை சேரு போராடு என்பதை மட்டுமே சொல்கின்றன இவ்வாறு சங்கம் எல்லாம் தனிநபர் வாதத்தில் போய் முடிகின்றன

தொழிற்சங்கம் என்பது தனிமனிதனுடைய பாதுகாப்புக்கு என்பதாக குறுக்கப்பட்டு அந்த தனிமனிதன் மற்ற சமூகத்தின் மீது எந்த அக்கரையும் இல்லாதவனாக உருவாகவே பயன் பட்டது

மொத்த மார்க்சியமுமே தொழிற்சங்கத்தில் கொண்டுபோய் நிறுத்தியதைத்தான் இவர்கள் செய்தார்கள்

ஒரு தொழிலாளிக்கு சமூகத்தின் மீதான கடமை என்ன
எப்படி ஒரு தொழிலாளி சமூகத்தில் புரட்சிகரமானவன் ஆகிறான்
தொழிற்சங்கம் என்பது ஒரு கருவியே எதற்கு என்றால் சமூகத்தில் புரட்சியை கொண்டுவர தொழிற்சங்க போராட்டங்கள் ஒரு இணை கருவியே அதுவே சாஸ்வதமானாதாகிவிடாது

என்பதெல்லாம் சொல்லி தந்து ஒரு தொழிலாளிக்கு அவனது வேலையை தவிரவும் செய்ய வேண்டிய கடமைகளை நினைவுபடுத்த வல்லனவாகவும்
தொழிலாள்ர்களை மற்ற பெருந்திரளான மக்களுடன் இணைக்கும் போராட்டங்களையும் அதே நேரத்தில் தொழிலாளர்களில் குறிப்பிட்ட வகை போராட்டங்கள் மற்ற மக்களுக்கு இடைஞ்சல் தந்தால் அதை உணர செய்பவனாகவும் இங்கே சங்கங்கள் தங்கள் பணியை ஆற்றவில்லை

வருடவருடம் போனஸ் கூலி பிரச்சனைகளை பேசும் வெறும் ஏஜெண்டுகளாகி போனார்கள் அதுதான் முடியும் என அதைத்தான் செய்தார்கள்

தொழிலாளர்களோ தொழிற்சங்கத்தில் இருந்தாலும் வெளியே வேறு அரசியல் கட்சிகளில் இருந்தார்க்ள் சங்கத்துக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை என்பதாக புரிந்து கொண்டார்கள்

இவ்வாறு மேலும் மேலும் தனிநபர் வாதமாகி போன தொழிற்சங்கள் தொழிற்சாலைகளையும் தொழிலாளிகளையும் ஒரு வழி செய்கிறது

அரசியல் அளவில் ஓட்டு பெறுவதை குறிக்கோளாக கொள்ளும் போது
அரசியல் அரங்கிலும் பலதவறுகளை செய்கிறது மேலும் மேலும் இந்த கம்யூனிஸ்டு கட்சிகள் மக்களிடம் இருந்து விலகி போனது இப்படித்தான்

இப்போது திடீரென தனது தொழிறசங்கத்தின் தொழிலாளியையே ஊழலுக்கு அல்லது கறுப்பு பணத்துக்கு போராட அழைக்க முடியாதா சூழலில் ஒரு ஏஜெண்டாக இருக்கிறது போலி கம்யூனிஸ்டு கட்சிகள்

ஆரம்பத்தில் இருந்தே சமூக அரசியல் போராட்டங்களில் பங்கெடுக்காத தனிநபர் வாதம் பெற்ற தொழிலாளர்கள் அன்னா ஹசாரே , ராம் தேவ் போராட்டத்தை பற்றி கேட்டால் அது பிஜேபி பின்னின்று இயக்கும் போராட்டம் என பூசி மொழுகுகிறது கம்யூனிஸ்டு கட்சி

தானே தன் சுய முரண்பாட்டில் சிக்கி கொண்டது இந்த கம்யூனிஸ்டு கட்சிகள்

--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post