காந்தியத்தின் தேவை -மார்க்சிய சமூகத்தில்

தனிமனிதனும் சமூகமும்

சமூகம் என்கிற பெரிய கதைபாடலில் தனிமனிதன் ஏதுமற்ற துளியாக இருக்கலாம் ஆனால் தனிமனிதனின் முயற்சி அவனது கருத்துக்கள்
இன்றி எந்த சமூகமும் இருந்ததில்லை .

மார்க்ஸ் சொல்கிறார் தன்னை மாற்றி கொள்வதன் மூலம் பாட்டாளிவர்க்கம் சமூகத்தை மாற்றவேண்டும்

சமூகமாற்றத்தின் தலையாய கோரிக்கை தனிமனித மாற்றத்துடன்
சேர்ந்ததே.

ஊழல் , கருப்பு பணம் என்பன சமூகத்தின் அமைப்பில் ஏற்பட்டுள்ள
கோளாறு என சொல்வோமாயின் தனிமனிதனின் கோளாறு என்றும்
புரிந்து கொள்ளப்படவேண்டும்

A என்பது B யின் மீது செயல்வினை புரிகிறது

காந்தி சொல்கிற கிராம அளாவிலான தன்நிறைவு என்பது மார்க்சியத்தை
நடை முறை படுத்த ஏதுவானதாக இருக்கும் என கருதுகிறேன் உற்பத்தி
பகிர்வு என்பதை கிராம பஞ்சாயத்துகள் கிராம தன்னிறைவு என செய்து விட்டால் மைய்யபடுத்தபட்ட ஒரு அதிகார வர்க்கம் உருவாகாது

அடுத்து காந்திய போர் முறைகளானா சத்தியாகிரகத்தை எடுத்து கொள்ளலாம் நீ எனக்கு தீங்கு செய்தால் நான் உனக்கு தீங்கு செய்வேன்
என்பது தற்காலிக நிவாரணத்தையே தரும்

மாறாக நீ எனக்கு தீங்கு செய்வது சரியல்ல அதை நான் சத்தியாகிரகம் மூலம் உணரவைப்பேன் என ஒவ்வொருவரும் உறுதி பூண்டால் அந்த சமூகம் ஒருத்தரை ஒருத்தர் உணர்ந்த சமூகமாக இருக்கும்

இந்த இடத்தில் புரட்சி தேவையா இல்லையா என்கிற கருத்தும் தடையும் வருகிறது .

சமூகத்தில் தேவை பட்டால் ரத்தம் சிந்தவேண்டும் அதற்கு தடையாக இருப்பவர்கள் ஒழிக்கப்பட வேண்டும் ஆனால் அது வெளிப்படையாகவும்
சமூக நீதிபடியும் இருக்க வேண்டும்

ஆக இந்தியாவை பொறுத்தவரை மேற்கத்திய நாட்டின் மனநிலை இல்லாத ஒரு நாடாகவே அது இருக்கிறது

எனவே இந்தியாவுக்கு தகுந்த அதன் மரபை ஒட்டிய ஆனால் மார்க்சிய
வழிபட்ட சமூக மாற்றமே தேவை


Note:

1.காரல் மார்க்ஸ் கண்ணால் பார்த்த எழுச்சிகள் அனைத்தும் ஆயுதம் தாங்கிய எழுச்சிகளாகவும் ஆயுதம் மூலமே ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை எதித்ததாகவும் இருந்தது
2.இந்தியாவின் பிரத்தியேக நிலமையில் அதன் மத ஆதிக்க கருத்துருவாக்கத்தின் படி அமைக்கப்பட்ட காந்திய போர்முறையை மார்க்ஸ் க்கு பின் நடந்தன
3.சோசலிசத்தை நடைமுறை படித்தி அதன் படிப்பினைகளை
மார்க்ஸ் காலத்துக்கு பிறகு சோசலிச ருஸ்யாவில் கற்றோம்

4. அதன் படி மைய்யபடுத்தபட்ட உற்பத்தி முறை அரசு
அதிகாரவர்க்கம் என்பது பெரிய அளவில் ஒரு அதிகார மைய்ய
மாக மாறிவிடுவதையும் சோசலிச டெம்போவை தொடர்ந்து
கொண்டு செல்வது சாத்தியமில்லாத படிக்கு ஆக்கி விடுகிறது

--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

4 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post