கடந்த சில நாட்களாக வடிவேலுவின் வீடுகள் அடித்து நொறுக்கப்படுவதை பார்த்தால் நடப்பது ஜனநாயக மக்கள் நலம் விரும்பும் அரசு போன்று தோன்றவில்லை . வடிவேலு தனிபட்ட முறையில் தாக்கினார் பேசினார் என்பதை காரணமாக கொண்டு அவர்மீது அடிதடி நடத்த எத்தனிக்கும் தேமு திக தொண்டர்கள் நாட்டில் மக்களின் தீர்ப்பை காலின் கீழே போட்டவர்களே.
மக்கள் உன்னை செயிக்க வைத்தது என்னை அடிப்பதற்காகவா என வடிவேலு நியாயமாக கேட்கிறார்
இணையமெங்கும் வடிவேலு அடிவாங்குவது போன்ற படங்கள் காமெடிகள் வந்தது அதை ரசிக்கும் பதிவர்கள் நிசமாகவே வடிவேலுவின் வீடு தாக்கபடும்போது எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை .
ஜெயலலிதாவின் முன்னுள்ள கடமைகளில் ஒன்றுதான் எதிரிகளை பழிவாங்கு தென தெரிகிறது
திமுகாவின் அராஜக ஆட்சியை ஒழித்த கையோடு மக்களுக்கு தேமுதிகாவை அதன் அராஜகத்தை
கண்டுகொள்ளாத அதிமுக ஆட்சி என்கிற காட்சியைத்தான் காட்டுகிறார்கள் .
வடிவேலுவின் தனிபட்ட தாக்குதலுக்கு கோர்ட் மூலம் நியாயமான தண்டனை பெற்று தருவதுதான் சரியான முறை .
மக்கள் தமது சிரிப்பு நடிப்புக்கு தந்த ஆதரவை நிச்சயமாக வடிவேலுவும் தனது தனிபட்டமோதலின்
பழியை தீர்த்து கொள்ள பயன்படுத்தியது முட்டால்தனமானதாகும் . அவரை போன்று சினிமா துறையில் உள்ளவர்கள் இதை ஒரு பாடமாக கருதவேண்டும் .
தனிபட்ட நலன் வேறு சமூகத்தின் ஒட்டுமொத்த நலன் வேறு என்பதை பிரித்து பார்த்து சுயநல முடிவுகளுக்கு ஆட்படாமல் நடந்தால் இத்தனை காலம் உழைத்து சேர்த்த பேரை காப்பாற்றி கொள்ளலாம்
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================
Tags
அரசியல்