பந்தாடப்படும் மெட்ரிக் மாணவர்கள் - ஏழை அழுத கண்ணீர்


திமுக ஆட்சி என்பது பேய் ஆட்சி என கருதி பிசாசை உக்கார வைத்த மக்களுக்கு நன்றி இப்போது பிசாசு தனது வேலையை தொடங்கி விட்டது அதான் சமச்சீர் கல்வி ரத்து அல்லது ஒத்திவைப்பு கருணாநிதி வலம்போனால் இவர் இடம் போவார் மக்கள் எங்க போவதுன்னு தெரியலை . ஜூன் 1 ம் தேதி எந்த பள்ளி கூடமும் ஆரம்பிக்க இயலாது ஏன் என்றால் அடிக்கப்பட்ட சமச்சீர் கல்வி நூல்கள் தான் இருக்கின்றன இனிமேல் மெட்ரிகுலேசன் நூல்களை புதிதாக அச்சிட வேண்டும் ஸ்டேட் போர்ட் மாணவர்களை முன்னேற்ற துடித்த கருணாநிதி மெட்ரிக் மாணவர்களை தாழ்த்தி விட்டார் என்றும் பாடதிட்டம் தரமானதல்ல வென்றும் குதிக்கிறது பணக்கார தமிழ் நாடு

பணக்கார தமிழ் நாட்டுடன் கலக்க நினைக்கும் ஏழை தமிழ் நாடோ அநியாய பீஸ் வாங்குவதை இனிமேல் கேள்வி கேட்க முடியாது அதான் சொல்லிட்டாரே( வீ வோண்ட் இண்டர்பியர் இன் பீஸ் சிஸ்டம்னு )
//''சமச்சீர் கல்வி குறித்து மெட்ரிக் பள்ளிகளின் கவலைகளை போக்க, மெட்ரிக் பள்ளிகளின் கூட்டமைப்பு நடத்திய கூட்டத்தில் பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசும்போது, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் தொடரும், மெட்ரிக் பள்ளிகளில் ஆங்கில வழி தொடரும், சமச்சீர் கல்வி மெட்ரிக் பள்ளிகளுக்கு எதிரானது அல்ல என்று தெரிவித்துள்ளார். //

இந்த ஸ்டேட்மெண்டை பார்த்து யாரும் குழம்ப வேண்டாம் முன்பிருந்த மாதிரி தனி சிலபஸ் இருக்கும்னு சொல்றார் .

இன்னொரு செய்தி ஏற்கனவே அரசின் வழிகாட்டலின் படி கட்டிய கட்டணங்கள் இரத்து இன்னும் பழைய பாக்கி இருக்குன்னு மெட்ரிக் பள்ளிகள் கிளம்பிடுச்சு .

//நெல்லை: விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க இன்னும் 13 தினங்களே உள்ள நிலையில் மெட்ரிக் பள்ளிகள் கட்டண வசூலில் ஈடுபட்டு வருகின்றன.

கோடை காலம் முடிந்தவுடன் நெல்லை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை களை கட்டும். பெற்றோரும் தங்கள் குழந்தைகளை பிரபலமான பள்ளிகளில் சேர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சில தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகள் தங்களி்ன் வருமானத்தை பெருக்கிக்கொள்ள இப்போதே வசூலில் இறங்கிவிட்டன.

புதிதாக ஒரு மாணவரை பள்ளியில் சேர்க்க குறைந்த பட்சம் ரூ.10 ஆயிரமாவது வேண்டும் என மெட்ரிக் பள்ளிகள் நச்சரிக்கின்றன. அவர்களுக்கு கல்வி கட்டணம், புத்தக கட்டணம், சுற்று கட்டணம் என அடுத்தடுத்து பல அதிர்ச்சிக்ள் காத்திருக்கின்றன. ஏற்கனவே பளளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும், இவ்வாண்டு சில புதிய விதிமுறைகளை பிறபிக்கத் துவங்கியுள்ளன. பாளையி்ல் ஒரு பள்ளியில் கடந்த வாரத்துக்கு முன்பு பெறறோர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி புத்தக கட்டணமாக ரூ.2000 முதல் 5000 வரை செலுத்த கேட்டுக்கொள்ளப்பட்டது. நேற்று இறுதி நாள் என்பதால் பணத்தை கட்ட சென்ற பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் மேலும் ரூ.6 ஆயிரம் செலுத்துமாறு கூறியது. 4, 5-ம் வகுப்பு செல்லும் மாணவர்கள் கூட ரூ.8,500 செலுத்துமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.

பெறறோர்கள் அவசரம், அவசரமாக ஏ.டி.எம்.மில் பணத்தை எடுத்து செலுத்தியபோது ரூ. 4 ஆயிரத்துக்கு ஒரு டிராப்ட் பெயரில் பில் போடப்பட்டது. மீதி தொகைக்கு பின் பில் தருகிறோம் என கூறி பெற்றோர்களை திருப்பி அனுப்பி விட்டது. பாளையில் உள்ள மற்றொரு மெட்ரிக் பள்ளி இவ்வாண்டு பல மாணவர்களுக்கு தேர்ச்சி அட்டைகளை அனுப்பவில்லை. பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று விசாரித்ததில் கடந்த ஆண்டு பாக்கி தொகையை முழுமையாக கட்டினால் மட்டுமே அடுத்த வகுப்புக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டது. அரசு அறிவிப்பின்படி கடந்த ஆண்டு பல பெற்றோர்கள் குறைவான கட்டணத்தை கட்டியது குறிப்பிடத்தக்கது.

பழைய கட்டணத்தோடு, புதிய கட்டணத்தையும் செலுத்த வேண்டியிருப்பதால் பல பெற்றோர்கள் இப்போதே நகைகளை அடகு வைக்கத் துவங்கிவிட்டனர். பள்ளிகள் துவங்கும் முன்பே வசூலிக்கப்படும் இத்தகைய கட்டணங்களால் பெற்றோர்கள் கண்ணீர் விடுகின்றனர்//

கல்வி வேலை வாய்ப்பு வாழ்க்கை தரம் இவற்றில் எந்த முன்னேற்றத்தையும் கொண்டு வரவேண்டுமென்றால் பொருளாதார ரீதியாக பலமான தமிழ் நாட்டை உருவாக்க வேண்டும் அதற்கு உற்பத்தி சக்திகளை அதிகபடுத்து மக்களின் வாங்கு திறனை அதிகபடுத்த வேண்டும்

அதை செய்யாமல் மெட்ரிக் பள்ளிகளின் பீசை குறைப்பது பாடத்தை குறைப்பதும் சாதாரணம் மாணவனின் கல்வியை உயர்த்த பயன்படாது

அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த்த திட்டம் ஏதுமில்லாமல் மெட்ரிக் பள்ளிகளின் தரத்தையும் பீசையும் குறைக்க முயல்வது இம்மாதிரி குழப்பத்துக்கு காரணம் .

மெட்ரிக் பள்ளி தனியாரிடம் இருக்கும் வரை அதன் பீஸ் ஸ்ரெக்சரை மாற்ற இயலும் என்பது நடக்காது

ஒரு பக்கம் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தி கொண்டே மறுபக்கம் தனியார் பள்ளிகளை அரசுடமை ஆக்க வேண்டும் அப்போது தானாகவே
அரசு செய்ய நினைக்கும் சமச்சீர் என்பது

பாடத்திலும் பீசிலும் நடக்கும் அதுவரை கஸ்டப்பட போவது பெற்றோரும் பிள்ளைகளுமே



--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post