உலகம் முழுக்க தொழிலாளர்களின் முன்னுள்ள பிரச்சனைகளின் சுருக்கம்
கீழ்கண்ட புள்ளி விபரங்கள் என்ன சொல்கிறது நாள்தோறும் உழைக்கும் மக்கள் பல்வேறு வடிவங்களில் ஒடுக்கப்படுகிறார்கள் இதன் மூலம் வறுமை வளரத்தான் செய்யும் என்கிறாது ETI என்கிற உலக தொழிலாளர்களின் நலம் பேணும் அமைப்பு
1.உலகம் முழுக்க 12.03 மில்லியன் மக்கள் தங்களது தொழிலை செய்ய கட்டாயபடுத்தப்படுகிறார்கள்
2.ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் தொழிலாளர்கள் தங்களது வேலையை இழக்கிறார்கள் டிரேட் யூனியனில் சேர்ந்ததற்கு தண்டனையாக
3.ஒவ்வொரு நாளும் 6000 பேர் பணியின் போதும் நடக்கும் விபத்தினாலும் பணி சம்பந்தமான நோயினாலும் இறக்கிறார்கள்
4.உலகமெங்கும் 218 மில்லியன் குழந்தை தொழிலாளர்கள் பணிக்கு செல்வதன் மூலம் குடும்பத்துக்கு பணம் தருகிறார்கள் மேலும் வேலையின் காரணமாக உடல் நிலையை ஆரோக்கியத்தை குலைத்து கொள்கிறார்கள்
5.உலகமெங்கும் 3 மில்லியன் மக்கள் 2 டாலருக்கும் குறைவான
வருமானத்தில் வாழ்கிறார்கள் இதுவே குழந்தை தொழிலாளர் பிரச்சனைக்கு காரணம்
6.உலகமெங்கும் 8 மணிநேரத்துக்கு அதிகமான நேரங்கள் தொழிலாளர்கள் உழைப்பு சுரண்டப்படுகிறது இது அவர்களின் உடல்நிலையை சீர் குலைக்கிறது
7.உலகமெங்கும் பெண்களும் இன்னும் சில சிறுபான்மையினரும்
குறைந்த கூலிக்கு அமர்த்தபடுகிறார்கள் இவர்களுக்கு பிரமோசன்
ரத்து செய்யப்படுகிறது
8.பெரும்பாலான வேலை ஆட்களுக்கு லே ஆப் எந்த ஈடு மின்றி வழங்கப்படுகிறது முதலாளியின் நலத்தை முன்னிட்டே லே ஆப்
வழங்கப்படுகிறது
9.பெரும்பாலான தொழிலாளர்கள் அனேகமாக எங்குமே திட்டுதல் அடித்தல் மற்றும் மனரீதியான துன்புறுத்தல் பெண்களை பாலியல் துன்புறுத்தல் சாதாரணமாக காணக்கிடைக்கிறது
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================
Tags
கம்யூனிசம்