வினவு கேட்கும் நன்கொடையை கேலி செய்யும் அற்பவாதிகள்

வினவு தனது வலைத்தள பராமரிப்புக்கும் அதில் பணியாற்றும் ஊழியருக்கு சம்பளம் கொடுக்கவும் மக்களிடம் விண்ணப்பித்து இருக்கிறது
இது ஒரு நேர்மையான அனுகுமுறைதானே .

உழைக்கும் மக்களிடம் பணம் வாங்கியே புதிய ஜனநாயகம் புதிய கலாசாரம் எல்லாம் நடத்தப்படுகிறது இன்னும் அந்த பத்திரிக்கைகள் கடனில்தான் இயங்கு கிறது தமிழ் நாட்டில் இடது சாரி இயக்கங்கள் பத்திரிக்கையில் புத்தக வெளியீட்டில் தொய்வடைந்து ஜாதக புத்தகங்கள் விற்க ஆரம்பித்த நிலையில் பத்திரிக்கை இணையம் , புத்தக வெளியீடு என மக இக தோழர்கள் மிகுந்த சிரமத்துக்கிடையே இந்த கடமைகளை செய்து வருகிறார்கள்

வினவின் மீது எனக்கு விமர்சனங்கள் இருந்தாலும் அதன் பாட்டாளி வர்க்கத்துக்கான பணியின் மீது சந்தேகம் இல்லை

மேலும் இணையத்தில் பாட்டி வடை சுட்ட கதையை நாமெல்லாம் எழுதிகொண்டு இருந்த போது அரசியல் கட்டுரைகள் சிந்திக்க வைத்த கேள்விகளை எழுதியது வினவு என்றால் மிகையல்ல

வினவில் கேள்வி கேட்பவர்களை அனானி தாக்குதல் நடத்தி விரட்டுவார்கள் என்பதும் உண்மை நான் மேற்சொன்னதும் உண்மை ஆனால் தற்போதெல்லாம் வினவு தனது அனுகுமுறையை மாற்றி கேள்விபதில் பகுதிகளை அறிமுகபடுத்தி வலைதளத்தை அமைப்பை மாற்றி தன்னை சுயவிமர்சனம் செய்துகொண்டு முன்னேறுகிறது .

ஆகவே வினவின் இந்த கோரிக்கைகளை கிண்டல் செய்யாமல் இருப்போம்

--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post