சமச்சீரற்ற சமூகத்தில் சமச்சீர்கல்வி ?

திறமை இருக்கிறவன் படிக்கிறான் அவன் திறமைக்கு தீணி போடுவதில் என்ன தவறுன்னு அப்பாவித்தனமான வாதம் வைக்கப்படுகிறது .
திறமை என்பது கல்வி கற்பதிலா பீசுகட்டுவதிலா என்கிற கேள்விக்கு
கல்வி கற்பதில் திறமை என பேசி பீசுகட்டுவதில் உள்ள திறமை
கேள்வி கேட்காமலேயே விடப்படுகிறது . ஏற்றதாழ்வற்ற சமூகத்தில்தான்
ஏற்றதாழ்வற்ற கல்வி சாத்தியம் என்கிற வாதத்தின் உடனேயே
ஏற்றதாழ்வான சமூகம் சாத்தியமல்லவென மறுத்து ஏற்றதாழ்வான கல்வி
சாத்தியம் என்கிற வாதம் சத்தின்றியே வைக்கப்படுகிறது


எதில் ஏற்ற தாழ்வு இருக்கனும் எதில் இருக்க கூடாது என்பது கண்ணுக்கு முன்பு தெரியும் ஒரு திடபொருள் போல தெரிந்தாலும் வர்க்க குணம் அதை மறுக்கிறது .

கல்வி வியாபாரமானதும்தான் அது ஏழைக்கு கிடைக்காமல் போக கூடிய சாத்தியம் அதிகமாகிறது

நாற்பதாயிரம் கட்டி அரைகிளாசுக்கு அனுப்ப முடியாது நீங்களும் நானும்
அனுப்ப முடிந்தவன் நல்லா படிக்கிறான் இயல்பாகவே அதிக ஊக்கத்துடன்
அதிக விழிப்புடன் சொல்லிதரப்படும் குறைந்த கவனிப்பு திறன் உள்ள மாணவன் கூட நன்றாகபடிக்கிறான் .

இந்த கவனிப்பும் அக்கரையும் ஏன் அரசு பள்ளிகளில் இல்லை ஏன் அந்த வாத்தியார்களுக்கு சம்பளம் தரப்படவில்லையா ?

வகுப்பை சரிவர நடத்தாத வாத்தியார்கள் வகுப்பரையில்லாமல் தவிக்கும் மாணவர்கள் என குறைபாடே கல்வியாக ஒரு புறம் வளர்ந்து நிற்க்க
அதன் காரணமாகவே சிறந்த கல்வி வேண்டுமா காசு கொடுன்னு தனியார்
பள்ளிகள் வளர்ந்தன.

காரணம் அரசு பள்ளிகள் விளைவு தனியார் பள்ளிகள்

காரணம் கவனகுறைவான போதனை விளவு தனியார் பள்ளிகள்

என காரணம் நிறைய வைத்து கொண்டு இருந்த அரசுகள்

இதை ஒன்றும் செய்ய முடியாமல் என்ன செய்தன ஒரே கல்வி சமச்சீர்
கல்வியை கொண்டு வந்து திணிக்கிறது

யாரிடம் ஏற்கனவே வேறு ஒரு பாடதிட்டத்தில் அதற்கான திறமைகளை
வளர்த்து கொண்டு அதற்கான சிஸ்டத்தில் இயங்கும் தனியார்பள்ளிகளில்
திறனை குறைத்து

மிகவும் திறன் குறைந்த பாடதிட்டங்கள் உள்ள அரசு பள்ளிகளை கொஞ்சம்
திறன் உயர்த்தி இரண்டைடும் ஒன்றாக்க முயற்ச்சி நடந்தது .

இது சரியா இல்லை ஆனால் ஆமா என்ற இரண்டு பதிலையும் சொல்லலாம்

இது தேவைதான் ஆனால் இதை செய்யும் முறை இதுவா என்பதே கேள்வி

கல்வி என்பது தனியாருக்கு இல்லை அதை அரசு நடத்தவேண்டும் எப்படி
இப்போது தனியார் நடத்தும் கல்வியை போல தரமானதாக இருக்கனும்

அதற்கு என்ன செய்யவேண்டும் என அரசு யோசிக்கனும் அதுதான் நல்ல தீர்வை தரும்


--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post