உற்பத்தி முறை -தொடர்ச்சி


//முன்னது மிகவும் வளர்ந்த நிலையில் இருந்தால், பின்னதும் அவ்வாறேஇருக்கும். இன்னும் இதை ஆழமாகச் சொல்ல வேண்டுமானால்,சமுதாய அமைப்பில் எந்தவொரு சிறிய அல்லது பெரிய மாற்றம் நிகழ வேண்டும் என்றாலும் கூட அதற்கு முன்பாக உற்பத்தி முறையில் மாற்றம் நடக்க வேண்டும்

உற்பத்தி நடைமுறையில் எந்த மாற்றமும் செய்யாத வெறும் ஆட்சி மாற்றம் அல்ல புரட்சி அடுத்து உற்பத்தி சக்திகள் தேவை அதென்ன உற்பத்தி சக்திகள் என்றால் ஒரு தொழிலை செய்யும் கருவிகள் அதற்கான அறிவு அதற்கான இடம்அந்த தொழிலை செய்ய தேவையான உற்பத்தி திறன் இவை எல்லாமே

உற்பத்தி சக்திகள் என்கிறோம் .

இந்த உற்பத்தி சக்தி எந்தளவு வளர்ச்சி பெற்று இருக்கிறதோ அதைபொறுத்தே சமூகத்தின் வளர்ச்சி இருக்கும் மாறாக இலவசம் வழங்குவதால் அல்ல


//

உற்பத்தி முறையை தீர்மானிப்பது எது அந்த சமூகத்தில் வளர்ந்துள்ள முரண்பாடுதான் அடுத்த உற்பத்தி முறைக்கு போகவும் அதற்கேற்ப உற்பத்தி உறவுகளை அமைத்து கொள்ளவும் காரணம்

அதென்ன முரண்பாடு என்றால் உதாரணமாக இந்த முதலாளித்துவ அமைப்பை எடுத்து கொள்வோம் என்ன முரண்பாடு இருக்கிறது

எல்லா முதலாளிகளும் பண்டத்தை உற்பத்தி செய்கிறான்

சமூகத்தின் தேவை என்பது ஒரு அளவு மட்டுமே உதாரணமாக்
1 லட்சம் காலனிகள் தேவைபடும் சமூகத்தில் பல முதலாளிகள் சேர்ந்து
பல லட்சம் காலனிகளை உற்பத்தி செய்கிறார்கள் எல்லாம் சந்தையில் வந்து மோதும் போது விலை குறையுமல்லவா

மேலும் சந்தைக்கான உற்பத்தி என்பது நிலையற்றது திட்டமிடாதது
எனவே பொருளாதார தேக்க நிலைக்கு உட்படுகிறது

இதே உற்பத்தி ஆதியில் எப்படி இருந்தது ஒரு பட்டறை தொழிலாளி தனக்கு தேவையானதை தனது பட்டறையில் செய்தான் அதற்கு கூலி கொடுத்தாலும் அது வெறுமனே பண்ட உற்பத்தியை அபரிமிதமாக செய்து
மூலதனம் திரட்டும் நோக்கத்துடன் செய்யப்படுவதில்லை
சுருக்கமாக அது தேவைக்கான உற்பத்தியாக இருந்தது்

பண்ட உற்பத்தி என்பது தேவைக்கு ஏற்ப இருந்த வரை அதில் முரண்பாடும் தேக்கமும் எழவில்லை .

மேலும் தனிநபர் உற்பத்தி செய்து தனிநபர் அனுபவித்தான் உதாரணமாக
கைவினைஞர்கள் யாருக்கும் அடிமை அல்ல அவன் தான் அந்த பண்டத்தின் எஜமானன் அவன் தேவைக்கு போகவே மீதியை விற்பனை செய்தான் பிறகு வந்த முதலாளித்துவ உற்பத்தியில் தொழிலாளிக்கு
அந்த பண்டம் சொந்தமல்ல அவனுக்கு கூலிதான் சொந்தம்
ஆனால் இங்கே நிலமை மாறிவிட்டது

சமூகம் முழுக்க சேர்ந்து செய்யும் உற்பத்தி பொருளானது அதன் ஆதாயமானது தனியான ஒரு முதலாளியின் பாக்கெட்டில் போய் விழுகிறது இந்த முரண்பாடு காரணமாக் முரண்பாடு தோன்றுகிறது

இப்போது சமூகம் மொத்தத்துக்குமான தேவைக்கேற்ப உற்பத்தியும்
அதன் பயன் சமூகம் மொத்தத்துக்கும் பிரித்து வழங்கப்படும் போது
இந்த முரண்பாடு முடிகிறது
--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post