அப்துல்கலாம் நினைவாக,
எங்கள் பகுதி மக்கள் அன்று காலைமுதலே குவிய ஆரம்பித்தனர் எங்கள் பகுதியில் வைத்துள்ள அவரது பேனர் முன்பு , கணிசமான அளவில் குழந்தைகள் கலந்து கொண்டது மிகவும் சிறப்பானதாக அமைந்தது.
வாழும்போது ஒரு
மனிதன் சொல்லும் விசயங்கள் அவரின் வாழ்க்கைக்கு பிறகுதான் விரும்பப்படுகிறது கொண்டாடபடுகிறது
, ஏசு , புத்தர்,பாரதி ,மார்க்ஸ் &எங்கெல்ஸ் ,சாக்ரடிஸ் இந்த வரிசை நீளமானது.
அவன் வாழுகின்றவரையில்
அவர் மீது மக்களுக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது போலும் – அவன் இப்படி பேசி பேசி நம்மை
ஏமாற்றுகிறானோ ,
தனியே சொத்து சேர்கிறானோ
என்றுதான்.
அதனால்தான் மிகப்பெரிய
தத்துவஞானி அரிஸ்டாடிலின் மாணவன் அலெக்ஸ்சாண்டர் தனது கைகளை சவபெட்டியின் வெளியே இருக்கும்படி
வைக்க சொன்னானோ?
மக்களுக்காக சிந்தித்து
அவர்களுக்காக ஆட்கள் கூடும் இடங்களிலெல்லாம் பேசினார் சாக்ரடீஸ் , இயக்கவியலை ஆரம்பகட்டத்தில்
அவரது விவாதங்கள் மூலமாகத்தான் உலகம் அறிந்தது.
அவருக்கு கலகம்
செய்கிறார் என சொல்லி நஞ்சு தரப்பட்டது .
அப்துல் கலாம்
விஞ்ஞான பாதையில் பயணம் செய்தார் . தனிபட்ட முறையில் அவரது வாழ்வு ஒரு மாணவனுக்கு எடுத்து
காட்டும் விசயங்கள் இவைதாம்
1.எளிமை 2.கடும்
உழைப்பு 3.மாற்றம் வரும் என்ற நம்பிக்கை 4.லட்சியத்தை நோக்கி கனவு மற்றும் அதில் நம்பிக்கை
அவர் எந்த விசயத்திலாவது
பொய் பேசி இருக்கிறார் என்று சொன்னால் அப்படி ஏதும் இல்லை .
அணு உலைகள் ஆபத்தானவை
என்கிற காந்திய பார்வையை உதயகுமாரிடம் எதிர்பார்க்கலாம் ஆனால் அப்துல்கலாமிடமோ மாவோவிடமோ
எதிர்பார்க்க முடியுமா ?
“முதலில்
உற்பத்தி உறவுகள் மாற்றப்படவேண்டும். அதன்
பிறகு மட்டுமே உற்பத்தி சக்திகள்
பரந்த அளவில் வளர்ச்சியடைய முடியும்.
இது ஒரு உலகுதழுவிய விதி”
-மாவோ
சீனாவில் அணுகுண்டு
தயாரித்தார்களே மாவோ காலத்தில் அதற்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள் என கேட்டால்
–அப்போது உலகம் முழுக்க எதிர்ப்பு இருந்தது அதனால் அந்த எதிர்ப்பை சமாளிக்க என பதில்
சொல்வார்கள்.
இது குறித்து நான்
ஏற்கனவே எழுதிய பதிவுகளில் விபரங்கள் உள்ளன.
அணுகுண்டு அணு
விஞ்ஞான வளர்ச்சி என்பது பிற்போக்கா முற்போக்கா என்றால் முற்போக்குதான் .
இந்தியா அணுகுண்டை
தயாரிக்க வில்லை என்றால் சீனாவே இந்தியாவை தனது கட்டுபாட்டில் எடுத்திருக்கும் என்பதில்
ஐயமில்லை.’
ஆகவே அணுகுண்டு
சோதனையை திறம்பட நடத்தியவர் என்கிற அடிப்படையிலும். மாணவர்கள் முன்னேற்றத்தை பெரிதும்
விரும்பி அவரகளை தொடர்ச்சியாக சந்தித்தவர் என்ற வகையிலும் . தனிபட்ட முறையில் நேர்மையான
மனிதர் என்றவகையிலும் நாம் அவரை அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்த கடமைபட்டுள்ளோம்.
//அவருடைய சொந்தத் தேவைகள் எளிமையானவை. பிரம்மச்சாரி. சைவ உணவு. எந்தவிதக் கெட்ட பழக்கமும் கிடையாது. இதனுடன் ஆதாரமான முஸ்லீமின் நல்லொழுக்க குணங்களும் சேர்ந்து அவரை அத்தனை பெரிய பதவியின் சபலங்களிலிருந்து வெகு தூரம் தள்ளிவைத்தன. தெஹல்கா டேப்களில் கலாம் பெரிய இடத்து லஞ்சங்களுக்கு ஒரு பெரிய முட்டுக்கட்டையாகத்தான் குறிப்பிடப்பட்டிருக்கிறார்.// -சுஜாதா எழுதியது

தனிபட்ட நேர்மையை
கணக்கில் எடுக்க முடியாது என்றால்
தனிபட்ட ஒழுங்கீனத்தையும்
நீங்கள் கணக்கில் எடுக்க கூடாது
சமூக நேர்மை என்பது
தனிபட்ட விவகாரமாக அவர்கள் நினைத்தது இந்த அமைப்பின் தவறு – ஆனால் விமர்சனத்துக்கு
அப்பாற்பட்டவரல்ல அவர் என்பது எனது கருத்து .
அவருக்கு உரிய
மரியாதையை செலுத்தி அவரால் கண்டுபிடிக்கவும் அறிந்து கொள்ளவும் முடியாமல் போன இந்த
முதலாளித்துவ அமைப்பின் விதிகளை சொல்லி விவாதத்தை ஆரோக்கியமாகவே நகர்த்த வேண்டும்
.
மாறாக அவரது கேலி
சித்திரத்தை அவரது அடக்க நாளன்று வெளியிட்டு அல்ல .
30ம் தேதி அன்று காலைமுதல் அந்த பகுதி மக்களை திரட்ட முயன்றோம் சுமார் 250 பேர் கலந்து கொண்டு அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்
கலந்து கொண்டவர்களில் சுமார் 30 குழந்தைகள் மரக்கன்றுகளை நட்டனர் .
இந்த பூ அலங்காரம் செய்தது எல்லாமே எங்கள் பகுதி பெண்கள் மற்றும் குழந்தைகள் , குழந்தைகள் பைகளில் பூக்களை அவருக்காக கொண்டுவந்தது அழகான காட்சியாகும்.
ஆளுக்கு ஒரு மரசெடி வாங்கி வந்தனர் குழந்தைகள் அதில் ஒரு மரசெடி பொது இடத்தில் நட்டு வைத்தனர் . அதை நடும்போது அவர்களது முகத்தில் மிகப்பெரிய நிம்மதியை பாருங்கள் .
பெரிய தலைவர்கள் எனப்படுபவர்கள் இப்படி மக்களின் மனதை தொடவேண்டும் என்பதற்கு கலாம் சிறந்த எடுத்துக்காட்டு.
//அவர் ஐ.எஸ்.ஆர்.ஓ-வின் ‘எஸ்.எல்.வி’ போன்ற ராக்கெட்டுகளின் வடிவமைப்பில் பங்கு கொண்டிருந்தார். அப்போதே கடினமான உழைப்பின் அடையாளங்கள் தெரிந்தன. கலாம், அரசாங்க ஏணியில் விரைவாக உயர்வார் என்பதை சுற்றுப்பட்டவர்கள் அப்போதே சொன்னார்கள். பின்னர் அவர் ஸ்பேஸ் டிபார்ட்மெண்டிலிருந்த ஐதராபாத் டி.ஆர்.டி.ஓ. நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்று இந்திய அரசின் ‘ப்ருத்வி’, ‘அக்னி’ ‘ஆகாஷ்’, ‘நாக்’ போன்ற ஏவுகணைகளின் வடிவமைப்பை வெற்றிகரமாகச் செய்து முடித்தார்// சுஜாதாவின் அதே கட்டுரை

Tags
abdulkalam