கலாமை விமர்சிப்பவர்கள் யார்?



கலாமை விமர்சிப்பவர்கள் யார்?

இடதுசாரிகள் மற்றும் புலம்பெயர் தமிழர்களும் இன்னும் சிலரும் என்கிறார்கள். முதலில் ஒரு விசயம் இழவு வீட்டில் விவாதம் செய்ய கூடாது. அவர் ஈழபடுகொலையை கண்டிக்கவில்லையே குஜராத் படுகொலையை கண்டிக்கவில்லையே என்கிறார்கள்.
 அப்துல்கலாம் ஒரு அரசியல்வாதி அல்ல , அரசியல் வாதிகளே ஒரு நாள் உண்ணாவிரதம் என அறிவித்து அவசர அவசரமாக உண்ணாவிரதத்தை முடித்து கொண்டதை பார்க்கிறோம்.
நான் பிரபாகரனிடம் துப்பாக்கி சுட பயின்றேன் என சொல்லி ஓட்டு வாங்கும் அரசியல் வாதிகளை பார்க்கிறோம் – ஈழ இனப்படுகொலை நடந்து 6 வருடம் முடிந்த பின்னும் இன்னும் பிரபாகரன் இருக்கிறார் இதோ வந்துடுவார்னு சொல்லி மக்களை ஏமாற்றும் கும்பலை பார்கிறோம். எத்தனையோ துரோகிகளை ஈழமும் தமிழ் நாடும் பார்த்துவிட்டது .





அனைத்திற்கும் மெளனசாட்சியாக ஈழ கடலும் , இந்திய தமிழ்நாட்டின் மக்களும் இருக்கிறார்கள் .
அப்துல்கலாம் ஒரு கலக காரர் அல்ல பெரும்பாலும் சரித்திரத்தில் எந்த விஞ்ஞானியும் கலககாரர்கள் அல்ல . தனது கருத்தையே கலகம் என கருதி
தூக்கு தண்டனை அறிவித்த பின் அந்த கோர்ட்டில் ஏறிய கலிலியோ பூமி தட்டை என்பதை ஒத்து கொண்டார். பின்னர் வெளிவந்தபின் இருந்தாலும் பூமி உருண்டைதான் என சொல்லி இருக்கிறார்.
அவருக்கு தெரியும் இந்த முட்டாள்கள் தம்மை கொன்று விடுவார்கள் எனவே இந்த இடத்தில் இருந்து தப்பிக்க பொய் சொல்லலாம் என்று.
ஆனால் சாக்ரடீஸ் அப்படி இல்லை அவர் கலக காரன் தனக்கு கொடுக்கப்படும் விசம் கூட உரிய நேரத்தில் தரப்பட வேண்டும் என சொன்னார்.










பகத் சிங் மன்னிப்பு கேட்டு விடுதலை பெற கடைசிவரை முயலவில்லை.
ஆனால் பாருங்கள் நாம் எல்லாரையும் எல்லாருடனும் ஒப்பிடுகிறோம்.
இதற்கு காரணம் என்னவென்றால் , தலைவர்கள் சரித்திரத்தை உருவாக்குகிறார்கள் என்ற மனப்பாங்குதான்.
உண்மையில் சரித்திரமே தலைவர்களை உருவாக்குகிறது .
இலங்கையின்  சமூக பொருளாதார வாழ்வின் வெளிப்பாடாகவே பிரபாகரன் தலைவரானாரே தவிர . பிரபாகரன் வருவார் என சமூகம் காத்துகொண்டு இருக்கவில்லை .
மேலும் – நமக்கு வழங்கப்படும் கல்வி அடிமை மனநிலையை உறுதி படுத்துகிறது . இந்த மெக்காலே கல்வி கலாமையும் அப்படி ஆக்கியதில் வியப்பில்லை.
அவரை மழுங்கி போனவர் என்றும் பயந்தவர் என்றும் என்னால் கருத முடியவில்லை .
அவரளவுக்கு இந்த சமூகத்தை பற்றி என்ன நினைத்தாரோ அதை பேசினார் எழுதினார் அவருக்கு அவர் நேர்மையாக இருந்தார்
அவரிடம் நடிப்பில்லை,
அவரிடம் நடிப்பு இல்லை என்பது இன்று அவர் பிரிவால் அழும் கோடிக்கணக்கான மாணவர்களே சாட்சி .
ஒரு மாணவனின் கேள்வி தன்னை தூங்க விடாமல் செய்ததாக ஆதங்க பட்டிருக்கிறார்.
அவனது கேள்வி “மற்றவர்களிடம் இருந்து உங்களை வேறுபடித்தி காட்டும்
செயல்பாடு என்ன ?
பாமர மொழியில் “ நீங்க இந்த சமூகத்துக்கு புதிசா என்ன செய்துட்டீங்க? “
என்பதுன்னு வச்சிக்கலாம் ” அதற்கு அவர் எதோ பதில் அளித்து இருக்கிறார் ஆனால் தனது இருப்பிடத்துக்கு வந்தபின்னும் அவனுக்கு தான் அளித்த பதில் முழுமையானது இல்லை என வருத்தபட்டிருக்கிறார்,

அப்துல்கலாம் போன்றவர்கள் தான் உண்டு தனது கடமை உண்டு என வாழ்பவர்கள் இவர்களுக்கு இந்திய அரசியலில் முதலாளித்துவம் என்ன செய்கிறது / அமெரிக்காவின் அரசியல் பங்கு என்ன என்பதெல்லாம் தேவை இல்லை .

தனது வாழ்நாளில் இந்த முதலாளித்துவ சமூகத்துக்கு அவரால் என்ன செய்யமுடியுமோ அதை செய்திருக்கிறார். அவரது கருத்தில் இந்த சமூகம்தான் உலகம் அவர் செய்தது எல்லாம் நாட்டுக்குத்தான்.

வெறும் பணத்துக்கு –அல்லது புகழுக்கு பேசுபவர்கள் மத்தியில் உண்மையாக
கனவு காணுங்கள் இந்தியா முன்னேறும் என சொன்னார்
அவர் சொன்ன கனவு காணும் கருத்து நமக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம் .
சமூக மாற்றம் புரட்சி குறித்து அவரிடம் இருந்து எந்த கருத்தும் வராமல் இருக்கலாம் . ஆனால் அவர் மக்களை உண்மையிலேயே நேசித்தார்.
இன்று சாருமஜூம்தான் நினைவு தினம் .   எங்கே எங்கெ என்று தேடி பார்க்கிறேன் ஒரு பதிவு அல்லது ஒரு நினைவு கூறல் அல்லது எதேனும் கட்டுரையை காண முடியவில்லை .
அதற்காக சாருமஜூம்தார் செய்த தியாகம் குறைத்து மதிப்பிட கூடியதில்லை
ஆனால்  மக்களுக்கு அவர்களுக்கு புரிகிற மாதிரி பேசி அவர்களை உண்மையில் நேசித்த தலைவர்களை மக்கள் நம்புகிறார்கள்.
அவர்களின் இறப்பு மக்களை துக்கமடைய செய்கிறது. கூடங்குளம் அணு உலை பிரச்சனைக்கும் அப்துல்கலாமை  வசை பாடினார்கள்.
தனது கடமையை தொடர்ந்து செய்து , கடைசி மூச்சு உள்ளவரை மாணவர்களுக்காக பேசிய நமது அப்துல்கலாம் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவர் .தனது தன்னம்பிக்கையால் உயர்ந்த சிகரங்களை தொட்டவர்.
அதற்காக தனது உழைப்பை சிந்தியவர் அதன பலனை அறுவடை செய்து தனது குடும்பத்தை வாழ வைத்தவர் அல்ல.
தனக்கு தனது பேரனுக்கு கொள்ளு பேரனுக்கு என்று இந்தியாவெங்கும் சொத்துக்களை வாங்கி குவிக்கவில்லை .
தனது குடும்பத்தினர் ஜனாதிபதி மாளிகையில் தங்கிய செலவு 2.5 லட்சத்தை தனது சம்பளத்தில் இருந்து கொடுத்திருக்கிறார்.
இவருக்கு அஞ்சலி செலுத்தாமல் யாருக்காக காத்திருக்கிறீர்கள்
இவரை எள்ளி நகையாடி விட்டு யாரை வாழ்த்த போகிறீர்கள்
இன்று இவருக்கு ஒரு அஞ்சலியை எழுதாத உங்கள் கரங்களை பார்த்து
உங்களை பார்த்து மக்கள் நகைக்கிறார்கள் .

இதை போலத்தால் சுஜாதா மறைந்த போது மாற்று கருத்து இதழில் அனுதாப கட்டுரை வந்ததற்கு எதிர்பு தெரிவித்தார்கள் .
//இருப்பினும் அவர் தனது எழுத்துக்களிலும், திரைப்பட வசனங்களிலும் பிரதிபலித்த ஜனநாயக மனிதாபிமானப் போக்கும் சமூகக் கோளாறுகளை கிண்டல் செய்து அவர் சாடிய விதமும் அவர் இறந்த வேளையில் அவருக்கு ஒரு இரங்கல் செய்தி வெளியிட வேண்டும் என்ற உணர்வினை நமக்கு ஏற்படுத்தியது. இந்த உணர்வினை பதிவு செய்யும் முன்பு அவர் எந்த ஜாதியை சேர்ந்தவர். அவர் பூணுல் போட்டிருந்தாரா? இல்லையா? என்றெல்லாம் பார்க்க வேண்டிய அவசியம் எதுவும் நமக்கில்லை.//
சுஜாதா எழுதிய பல கதைகளை படித்து பார்த்து சுஜாதா என்ற எழுத்தாளன் உண்மையிலேயே மனிதர்களை நேசித்தவன் சமூக முரண்பாடுகளை தனக்கே உரிய பாணியில் வெளிப்படுத்தியவன் என்ற அடிப்படையில் ஒரு இரங்கல் செய்தியை போட்டதை கூட ஏற்று கொள்ளாதவர்கள் இந்த தீவிர இடது சாரிகள் .
ஆக வலதுசாரி எழுத்தாளர்கள் , வலதுசாரி விஞ்ஞானிகள் என யார் இறந்தாலும் இவர்கள் அமைதிகாக்கிறார்கள் அல்லது அனுதாபம் தெரிவிப்பவர்மேல் பாய்கிறார்கள் என்பது கண்கூடு .
யார் இரங்கல் தெரிவித்தாலும் தெரிவிக்கா விட்டாலும் அவரது உடல் புதைக்கப்படவோ போகிறது ஆனால்
அவரச அவசிய காலகட்டங்களில் தங்களது வெறிநாய் மனநிலையை இவர்கள் காமிக்க தவறுவது இல்லை 

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு இருந்தது போல சமூக அரசியல் கருத்துக்கள் எல்லா விஞ்ஞானிகளுக்கும் இருந்ததில்லை 

Einstein thought highly of Lenin, saying: "I honor Lenin as a man who completely sacrificed himself and devoted all his energy to the realization of social justice. I do not consider his methods practical, but one thing is certain: men of his type are the guardians and restorers of humanity."[51][52]

அவரே லெனினை ஏற்று கொள்ளவில்லை என்பதற்காக இவர்கள் மறுக்கிறார்கள் என்பதற்காக அவர் மாபெரும் விஞ்ஞானியாக இல்லாமல் போய்விடுவாரா?  






Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post