அக்னி சிறகுகளுக்கு நினைவஞ்சலி






அணுஅறிவியல்  அவர் பயின்றார்

அணுகுண்டை தயார் செய்தார்

ஆயினும் குழந்தைகளை கொஞ்சினார் !

இயன்றதெல்லாம் அறிவியல்
ஈகை யெல்லாம் கவிதையெனவே
உல்லாச மாளிகைகள்
உசந்து நிற்கும் கோபுரங்கள்

உச்சி முகர உவந்தன


ஊசலாட்டம் பேச்சிலில்லை
ஊமை கொண்ட கனவுமில்லை

எதிர்த்து நிற்கும் வல்லரசு
ஏமாந்து வந்த இந்தியா 
ஐயிக்கமாய் அறிவியலில்
ஐயமது இல்லாமல்

ஒரு நாளில் வெடிக்க வைத்தார்
ஓர் நூற்றாண்டின் கண் திறந்தார்

கண்ணில் கனவிருக்கட்டும்

கைகள் அது  செயல்படட்டும் - என
கவிதைகளை படைத்திட்டார்
கனவாக மறைந்திட்டார் 

நெஞ்சம் அழுகிறது
நினைவுகள் விம்மையிலே
நெருப்பிடவோ அவர் உடலை
நெருப்புமே பொசுக்காதே

மதங்கடந்த மனிதர் அவர்
மனகவர்ந்த நேசனவர்
இனங்கடந்த எங்கள் அன்பு
அப்துல் கலாம் வாழியவே !

பூத உடலை புதைத்தாலும்
புகழுடம்பு அழியாது
ஏழைகளின் நேசனைத்தான்
காலமது அழித்திடுமோ

தமிழகத்தில் சொத்தாகி
தரணி எங்கும் புகழ் படைத்த
மனங்கவர்ந்த தூய எங்கள்
அப்துல் கலாம் வாழியவே!

உறங்கும் போது கான்பதல்ல -உன்னை
உறங்கவிடாமல் செய்வது  கனவென்றார்
கனவுகளை காண்கையிலே
கனவாக போய் விட்டார்!

தமிழன்னை கொடுத்துவைத்த
தாய்பாலால் தமிழ் கற்றார்
அண்டமெல்லாம் ஆய்தறிந்து
அனையாத புகழ் பெற்ற
அப்துல் கலாம் அய்யா வாழியவே !





    அக்னி இறகுகள் நூல் டவுண்லோடு செய்ய சுட்டி



Question Stats



What are A. P. J. Abdul Kalam's greatest achievements?





Jatin Makwana
Jatin Makwana, Entrepreneur, Shivam Railing, www.shivamrailing.com










Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post