அப்பா நான் ஸ்கூலுக்கு போகலை ?



அப்பா நான் ஸ்கூலுக்கு போகலை ?

தூக்கத்தில் இருந்து எழும்போதே முதலாம் படிக்கும் எனது பையன்(5 வயது) பள்ளிக்கு செல்வதில்லை என்ற முனுமுனுப்போடுதான் எழுவான் . என்னதான் பிரச்சனை என்று அவனிடம் அனுசரணையாக கேட்டு பார்த்தால் – எங்க மிஸ் தலையிலேயே தட்டுறாங்கப்பா என்றான். எந்த மிஸ் என்று கேட்டால் சிஸ் மிஸ்  , இப்படி தினம் தினமும் அவனிடம் இருந்து புகார் வரவும் .
நான் எனது துணைவியாரை பள்ளிக்கு அனுப்பி வைத்தேன் . அவரிடம் நாங்கள் அடிப்பதே இல்லை என்று சொல்லி அனுப்பி இருக்கிறார்கள் .
மீண்டும் ஒரு வார காலம் எந்த பிரச்சனையும் சொல்லாமல் பள்ளிக்கி சென்றுவந்தான் மறுபடியும் இரண்டு நாட்களுக்கு முன்பு அடிக்கிறாங்க பல்லவி ஆரம்பிக்கவும் அந்த தனியார் பள்ளிக்கு சென்றேன்.
முதல்வர் இது கிறித்தவ பள்ளி யாரையும் அடிக்க மாட்டோம் நாங்கள் அன்பு நிறைந்தவர்கள் என மிகப்பெரிய லெக்சர் அடித்தார். சரி விசயத்துக்கு வாங்க ஏன் டீச்சர் அடிக்கிறாங்க என்று கேட்டதும். அவர் குழந்தைகள் அப்படித்தான் எதோ ஒரு விசயத்துக்கு பயந்து எதோ ஒன்றை சொல்கிறார்கள் என்றார்.
மெதுவாக விசாரித்து பார்த்தால் உண்மை நிலவரம் இதுதான். குறைந்த சம்பளத்தில் வேலைக்கு ஆட்களை தேடும் இம்மாதிரி பள்ளி கூடங்கள் குழந்தைகளை பற்றியோ அவர்கள் மன ஆரோக்கியம் பற்றியோ அறியாத ஆசிரியர்களை நியமித்து, அவர்களின் உழைப்பை ஒருபக்கம் சுரண்டுவதும்
மறுபக்கம் பெற்றோருக்கு நாங்கம் ஸ்மார்ட் கிளாஸ் எடுக்கிறோம் அது செய்கிறோம் இது செய்கிறோம் என படம் காட்டுவதுமாக இருக்கிறார்கள்.
குழந்தைகளுக்கு எப்படி போதிக்கனும் என்கிற நடைமுறை செயல்முறை வழிகாட்டுதல் பயிற்சி என்ற எந்த தகுதியும் இல்லாமல் (முக்கியமாக பி எட் ) இல்லாத ஆசிரியர்களை வேலைக்கு அமர்த்தி தனது கல்லா பெட்டியை மட்டும் நிரப்பி கொள்ளும் இவர்களுக்கு அரசு .
மழலை பள்ளிகளை திறக்கலாம் என்ற அறிவிப்பை கொடுத்துள்ளது.
//நான் வேலைக்குப் போன சமயத்தில், என் குழந்தையைப் பார்த்துக் கொள்ள யாரும் இல்லை. இந்த நிலைமை மற்ற குழந்தைகளுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் நானும், என் கணவரும் சேர்ந்து இப்பள்ளியை ஆரம்பித்தோம். பள்ளிக்கு அனுப்பப்படும் குழந்தைகள், மற்றவர்களைப் பார்த்து, ஒழுக்கத்தைக் கற்றுக் கொள்கிறார்கள். வரிசையாக நிற்பது, ஒருவருக்கொருவர் உதவுவது, பங்கிட்டுக் கொள்வது போன்ற குணங்கள், பள்ளிகளில்தான் வளர்க்கப்படுகின்றன.//
மழலை பள்ளிகளுக்கு ஆதரவு தரும் இந்த பெண்மணி சொல்வது கிரீச் எனப்படும் பால்வாடிகள் அல்லது குழந்தைகல் காப்பகங்களை .
அரசின் குழந்தைகள் காப்பகங்களான பால்வாடிகளில் சரியான முறையான
பராமரிப்பு இல்லாமையால் குழந்தைகளை தனியார் கிரிச்சில் விட்டார்கள் இப்போது 1.5 வயது குழ்ந்தைக்கு பள்ளியாம்.
ஒன்றரை வயது குழந்தைக்கு என்ன ஒழுக்க போதனை வேண்டி கிடக்கிறது .
நாங்கள் எல்லாம் 5 வயதில் முதலாம் வகுப்பில் சேர்ந்தோம் .
அறிவில் வளர்ச்சியடையாமல் போய்விட வில்லை . அரசாங்க பள்ளி கூடத்தில் படித்த எங்களது அறிவு எந்த விதத்திலும் குறைந்துவிடவில்லை

ஆங்கிலம் :
ஆங்கிலம் சொல்லி தருகிறோம் என சொன்னால் வேலைக்கு ஆகாது என்பதால் இன்றைய தனியார் பள்ளிகள் அனைத்து பாடத்தையும் ஆங்கிலவழி போதிக்கிறார்கள்.
ஆனால் தாய்மொழி மூலம் கல்விதான் சிறந்தது என உலகத்தினர் பெரும்பாலானவர்களின் கருத்து. இதை ஏன் தனியார் பள்ளிகள் தருவதில்லை என்றால் ஆங்கில மோகமே காரணம்.
ஆங்கில மோகம் ஏன் என்று கேட்டால் ? வேலை வாய்ப்பு
நான் உட்பட நிறைய பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு ஆங்கிலம் தெரியாத பேச தெரியாத பள்ளி கூடத்தில் சேர்க்க விரும்பவில்லை ஏனெனில் அவர்களை இந்த போட்டி மயமான உலகம் ஒன்றும் தெரியாதவர்களாக்க விரும்பவில்லை.
இந்த போட்டி மயமான உலகம் எதனால் வந்தது என்றால் முதலாளித்துவம்
ஆரம்ப பள்ளியில் ஆரம்பிக்கும் போட்டி அவனுக்கு / அவளுக்கு வேலை கிடைப்பதுவரை மெகா போட்டி இங்கு நடக்கிறது.
திறமைகள் என்பன ஆங்கிலம் பேசுதல் எழுதுதல் என்ற வாறு சுருங்கி போய் விட்டது.



உலகமயமாக்கலின் விளைவாக உலகமெங்கும் ஏற்றுமதி செய்யப்படும் கேபிடல் எனப்படும் மூலதனம் ஆங்கிலம் பேச தெரிந்த தொழிலாளிகளை கோருகிறது.
உலகமயமாக்கலை மட்டும் ஒழித்து விடனும் என்றோ / ஊழலை மட்டும் ஒழித்துவிடலாம் என்றோ யாரும் கனவு கூட கானமுடியாது ஏனெனில்.

முதலாளித்துவம் என்கிற மரத்தின் சில கிளைகளே அவை எல்லாம்.
சரி கல்வியில் தனியார் மயத்தை ஒழித்துவிட முடியுமா?
பதில் கேள்வி போட்டி மயமான உலகில் போட்டியை ஒழிக்க முடியுமா?
முடியாது . என்றால் முன்னதும் முடியாது
ஏனெனில் இப்போது இருக்கும் போட்டி மயமான உலகில் தன் பிள்ளை தோற்றுவிட கூடாது என ஒவ்வொரு தகப்பனும் நினைக்கிறான்.
அது தப்பு என்கிறீர்களா?
ஆம் எனில் அவனுக்கு நீங்கள் கொடுக்கும் தீர்வு என்ன?
அரசாங்க பள்ளிக்கு போ என்பதா? அரசாங்க பள்ளியை சீர்திருத்த போராடு என்பதா?
நாம் போராடலாம் …. ஆனால் ஒவ்வொரு அகாடமி இயர் முடியும் போதும் கல்வி திறமையை அரசாங்க பள்ளியில் படிக்கும் மாணவன் இழந்து கொண்டே வருகிறான்.
தனியார் பள்ளியில் படிக்கும் ஒரு வர்க்கம் மிக திறமையாக படித்து முன்னேறி அடுத்த தலைமுறைக்கு உழைக்கும் மக்களின் குழந்தைகளை
அடிமையாக்க தொழிலாளிகளாக்கி சுரண்ட உருவாகி வருகிறார்கள்.
தனியார் பள்ளிகளை ஒழிக்க வேண்டும் என சொல்லும் ஒவ்வொரு முறையும் அரசு பள்ளிகளை சீர்திருத்துங்கள் என்ற கோசம்தான் பதில்.

இன்றைய தனியார் பள்ளிகள் உருவாக அரசு பள்ளிகளே காரணம் . இன்றைய தனியார் மருத்துவமனைகள் உருவாக அரசு மருத்துவமனைகளே காரணம் .
இன்றைய கொரியர்கள் தனியார் வசமிருக்க . போஸ்டாபிஸ் களின் தரமற்ற சேவையே காரணம்
இதுதான் இதுதான். அரசு அதிகாரத்தில் இருக்கும் அதிகாரவர்க்க கும்பல் செய்யும் மோசடியின் விளைவாக .
அவர்களை எதிர்க்க முடியாமல் அவர்களுக்கிடையே சங்கம் வைத்துகொண்டு
அவர்களிடம் வாங்கி தின்று கட்சி வளர்க்கும் ஒவ்வொரு கட்சியும் கண்டு கொள்ளாமல் இருக்கும் இந்த அதிகார வர்க்கம் ஒழிக்கப்படவேண்டும்
அவர்கள் நாலுகையிலும் வாங்கி கொள்வார்கள் . நமது குழந்தைகளுக்கு சரியான கல்வி போதிக்க மாட்டார்கள்
அவர்களை யாரும் கேள்வி கேட்பதில்லை.
உடனே கருணாநிதி சரியில்லை / ஜெயா சரியில்லை என்று அரசியல் வாதிகளுடன் மோதல் தொடரும் ஆனால் தீர்வு கிடைக்காது.
யார் அதிகாரிகளோ அவர்கள் 58 வயதுவரை சும்மா அட்டெண்டன்ஸ் போட்டுவிட்டு சம்பளம் வாங்குவார்கள்
இந்த நாட்டில் அவர்களை எதிர்த்து நடந்த போராட்டங்கள் எத்தனை
.அவர்களை எதிர்த்து நடந்த பெற்றோர் கூட்டங்கள் எத்தனை .
கணக்கெடுத்து பார்த்தால் ஒன்றுமில்லை.

ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு நாள் பள்ளிக்கு சென்றால் இன்று என்ன பிரச்சனை வருமோன்னு தனியாரில் வேலை பார்த்து மாணவனை உருவாக்குகிறார்கள்.
ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு சென்றால் ஆசிரியர் வருவாரா? என
யோசித்து கொண்டே செல்கிறார்கள் அரசு பள்ளி மாணவர்கள்.
ஏன் இந்த சோம்பேறி ஆசியர்களுக்கு எதிராக போராட இந்த போலி கம்யூனிஸ்டுகள் தூண்டுவதில்லை தெரியுமா?
அவர்களும் தங்கள் அமைப்பில் சங்கம் வைத்துள்ளார்கள்.
அவர்களில் பெரும்பகுதி சந்தாவாக இந்த இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளையும் வாழவைக்கிறது?
இதனால் போராட வருவதில்லை.
மறுபுறம் இந்த நக்சல்பாரிகள் தனியார்மயத்தை எதிர்ப்போம் என சொல்லி
மாயமானுடன் போரிடுகிறார்கள்.
இவர்களுக்கு தத்துவ பிரச்சனை .
பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் எத்தனை பாடம் நடத்தாத பள்ளிகள் எத்தனை இவற்றுடன் ஒரு போராட்டம் கண்டன ஆர்பாட்டம் செய்யாமல்.
தனியாருக்கு தாரை வார்க்காதே என சொல்வதால் எந்த பெற்றோரும் கேட்க போவதில்லை.
ஆனால் தனியாரின் கொள்ளை வேறுவிதமானது:
அங்கே பிஎட் படித்த ஆசிரியைகளை வேலைக்கு அமர்த்துவதில்லை. குழந்தைகளின் மனதத்துவம் தெரியாத ஆசிரியைகள் . குறைந்த சம்பளம் அதிக உழைப்பினால் கலைப்படைந்து . மாணவர்களின் மேல் எரிந்து விழும்மனோ பாவமும் .
மார்க்குகளை மட்டுமே நோக்கமாக கொண்டு . அடுத்தவனை முந்து முந்து என சொல்லி சொல்லி வளர்க்கும் மனோபாவமும் .வளர்ந்து விட்டது.
என்னதான் தீர்வு என்றால். தனியாரிடம் இருக்கும் கல்வியை அரசால் தான் நடத்தப்பட வேண்டும் .
ஆனால் இப்போது தனியார் பள்ளிகள் எப்படி நடத்துகிறதோ அப்படி
மிகுந்த திறமையான மாணாக்கனை உருவாக்க்காத ஆசிரியர்களுக்கு கேள்விகள் எழுப்பப்பட வேண்டும் . அவர்கள் கேள்விக்கு உட்பட்டவர்களாக்கப்பட வேண்டும் .
இதை செய்தால் ஒரு அமைதியான ஆரோக்கியமான கல்வி நமது குழந்தைகளுக்கு கிடைக்கும் அதுவரை போராட்டம்தான்.

படிக்க :

ஆகப் பள்ளியின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஆற்றல் பெற்ற இந்த மதிப்பெண்வாங்கிகளின் வகுப்புகளுக்குத்தான் பள்ளி ஆசிரியர்களின் ஆற்றல் முழுவதுமாக அர்ப்பணம் செய்யப்படுகிறது. நம் கல்வி முறையில் கற்பித்தல், பயிற்றுவித்தல் என்னும் இரண்டு முறைகள் உள்ளன. இவற்றில் மதிப்பெண் வாங்குவதற்கு உதவுவது பயிற்றுவித்தல்தான். பயிற்றுவித்தல் என்பது மாணவர்களை மதிப்பெண் வாங்குவதற்கு ஏற்ற வகையில் தினந்தோறும் தேர்வு எழுதவைத்துப் பயிற்சி அளித்தல். பெரும்பாலும் தனியார் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்குக் கோடை விடுமுறை என்பதே கிடையாது. பத்தாம் வகுப்புத் தேர்வு முடிந்தவுடன் மதிப்பெண் புகழ் பள்ளி ஒன்றில் நுழைவுத் தேர்வு எழுதிப் பதினொன்றாம் வகுப்பில் சேர்ந்துவிடும் மாணவர்களுக்குக் கோடை விடுமுறை என்பது எட்டாம் வகுப்போடு சரி. தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்குக் கோடை விடுமுறையே இல்லை. எல்லாச் சனிக்கிழமைகளிலும் பள்ளி உண்டு. சிலசமயம் ஞாயிறுகளிலும் வகுப்புகள் உண்டு.
இப்படி ஆண்டுக்கணக்கில் விடுமுறையே இல்லாமல் தொடர்ந்து பள்ளி, பாடம், தேர்வு என்றிருக்கும் மாணவர்களின் மனநிலையைப் பற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. கோடை விடுமுறை தொடக்கத்திற்குப் பொதுவான நாள் ஒன்றை அறிவித்து அந்த நாளுக்குப் பின் எந்தப் பள்ளியும் வகுப்புகள் நடத்தக் கூடாது என்றும் கோடை விடுமுறைக் காலத்தில் பள்ளி வாகனங்கள் எதுவும் ஓடக் கூடாது என்றும் குறிப்பிட்ட நாளில்தான் எல்லாப் பள்ளிகளும் திறக்க வேண்டும் என்றும் ஒரு சமச்சீர் முறையை அரசு ஏன் நடைமுறைப்படுத்தக் கூடாது? கல்விமுறையில் மட்டுமல்ல பள்ளி நடைமுறைகளிலும் சமச்சீர் தேவை.


நிறைய அரசு பள்ளிகளில் குடிநீர் , கழிப்பறை வசதிகள் இல்லை என்கிறது இந்த செய்தி
More than a third of the schools surveyed had unusable toilets or the facilities were in poor condition, 63 per cent had no playgrounds, and 60 per cent had no boundary walls. More than 80 per cent of schools did not provide age appropriate admission to children and over 60 per cent asked for proof of age, both a violation of norms under the RTE, the survey showed.

"Every time we need to use the washroom, we have to go home," says 10-year-old Rekha who studies at a government school in Madhya Pradesh's Vidisha district. Her school doesn't have a playground, drinking water facilities or a boundary wall.  

 அரசு பள்ளிகளின்  டீச்சிங் மெத்தடாலஜி ரொம்ப பழசாக இருக்கிறது என சொல்லும் இந்த செய்தியில் 85 சதவீதம் ஆரம்ப பள்ளி படித்தவர்களில் 39 சதவீதமே மேல்நிலை பள்ளிகளுக்கு செல்கிறார்கள் என்கிறது. அதிகளவு இடைநிறுத்தலுக்கு வறுமை மட்டுமல்ல காரணம் திறமையற்ற போதனை முறையும்தான்
The curriculum and teaching methodologies stand obsolete and outdated, with the emphasis being on rote-learning and merely developing reading and writing skills instead of holistic education. Lack of vocational training and non-availability of such courses renders students with barely any employable skills at the end of their schooling. These factors, coupled with other social circumstances have lead to alarmingly high dropout rates in the country. Most schools are miles away and largely inaccessible to the students. While noting that adequate number of elementary schools is to be found at a “reasonable distance from habitations”, the ministry admits in its website that this is not the case with regard to secondary schools and colleges. The gross enrolment rate for elementary education in 2003-04 was 85 percent, but for secondary education, the enrolment figure stood at 39 percent. Figures put out by the Ministry of Human Resource Development’s Department of School Education and Literacy indicate that as many as two-thirds of those eligible for secondary and senior secondary education remain outside the school system today. These high rates of school dropouts as a result, lead to the ineffectiveness of the reservation policy in institutes of higher education.


யுனெஸ்கோவில் சமர்பிக்கபட்ட இந்த கட்டுரை சொல்வது
       
  • Excessive Non-Teaching Duties: Apart from teaching, all the government school teachers are assigned non-teaching work such as conducting census survey; facilitate polling during elections and various other activities which they have to compulsorily abide. It creates a lot of pressure on the teachers, a substantial amount of time is wasted in non-teaching work that affects the quality of education of the students as schools remains closed and even-if the schools are working, no classes are conducted.
  • Teacher Absenteeism: P Sainath, a renowned journalist in his famous book ‘Everybody loves a good drought’ had referred to government schools as Schools without Teachers. The UNESCO’s International Institute of Educational Planning study on corruption in education says that 25% teacher absenteeism in India is among the highest in the world. Most of the time the government school teachers are either in involved in non-teaching work of the Government or absent from the schools. Lack of accountability is a critical reason for the failure of public schools and also falling teaching standards.
  • Inefficient Special training programmes: A municipal school principal from Ahmedabad says that Government has launched Special training programmes for children who had dropped-out of schools or never had a chance to go to school. The programme promises free transportation to the students but most schools has no provision for providing free transportation. Most teachers have to walk their students to their home and back, especially among girls. It has resulted in teachers getting frustrated as their work is increased manifold affecting the quality of the programme.
  • Lack of Infrastructure facilities: An average government school in India can be pictured as an old dilapidated building, classrooms with broken windows, wrecked chairs and unhygienic toilets, if they are fortunate enough to have one.  A school teacher in Ahmedabad revealed that their school does have separate toilets for boys and girls and hence most girls do not feel comfortable in attending the school. A school teacher in Pune on a condition to maintain anonymity revealed that their school had submitted a request for 20 computers for the school, they did receive 20 computer but 17 of which never worked.
  • Incompetent teacher: Pune Municipal Corporation initiated 30 English medium government schools but most of the teachers in these schools were transferred from the existing regional language schools. These teachers are not competent to teach in English medium school as their own education has been in regional language schools and they have always taught in regional language schools. It has highly affected the quality of education in these schools.
  • Lack of Capacity building initiatives: The world is changing fast and the education system needs to keep up the pace but the government schools are still teaching age-old curriculums and methods. Capacity building for teachers is required so that they can cope-up with the current trends and adapt teaching methods that would keep the students motivated and interested in the studies and make the best of their education.
  • Lack of support from the families of students: All the government school officials I interacted-with shared this feedback that they face a tough time seeking the support of families of the students. Most parents doesn’t allow their daughters to continue their education after pre-primary or primary level whereas the drop-out ratio amongst boys increases manifold during high school as the parents want their sons to take-up a job and earn money for the family. Due to lack of support from the family, it becomes a very difficult task for the teachers to keep the students motivated in studies. Understanding the role of child labour issues and its interaction with the education system is a critical challenge that needs to be addressed.



Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post