உலகம் எங்கே செல்கிறது
நமக்கு நம்மூர் செய்தியே படிச்சி மாளவில்லை எதுக்கு இந்த லோகத்தில்
என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்கனும்னு பலபேரு சும்மா இருந்துடுறோம் ஆனால் அதிர்ச்சி
தரதக்க செய்திகள் நம்மை வந்து அடையும் போது என்ன செய்றது படிச்சிதான் ஆகனும்
சுற்றுலா கழகம் கவனிக்கவும்:
அறிமுகம் இல்லாத
நபருடன் உடலுறவு கொள்ளவே சுற்றுலா செல்கிறோம் என சொல்கிறார்களாம் இந்த பெண்கள். அமெரிக்காவின்
இல்லினாய்ஸ் பல்கலைகழக மாணவி லிசா பெர்டிசெவ்ஸ்கி இன்னொருவருடன் இணைந்து சுமார்
850 அமெரிக்க பெண்களிடம் நடத்திய ஆய்வில் தெரியவந்தது.
High alcohol consumption was the primary facilitator of risky sex with strangers, the researchers found.
"It provided them with 'liquid courage' and 'a psychological excuse' to transcend their usual sexual boundaries or taboos for experiences they were curious about, but reluctant to try in their everyday lives," said researchers Liza Berdychevsky from University of Illinois and Heather Gibson from University of Florida.
http://www.freepressjournal.in/women-tourists-prefer-group-tours-for-casual-sex-study/
ஒரு பெண்ணும் நாயும் கல்யாணம்:
நெதர்லாந்தை சேர்ந்த
பெண் ஒருவர் தனது செல்ல நாயை திருமணம் செய்துட்டாராம் – உனக்கு நாயை கட்டிவைப்பேன்னு
சண்டையில் இனிமேல் இவரை சொல்ல முடியாது
பேரு டொம்னிக்
வயது 41 தனது கணவரான டிராஸ் (நாயை )2003 ல்
சந்தித்தாராம் முதல்ல இவரு பூனையை கல்யாணம் செய்திருக்கார் பாவம் .
முத்தமும் தண்டனையும் :
சீனாவில் ரயில்வே
சப்வேவில் ஒரு ஜோடி முத்தமிட்டதற்கு பயங்கர எதிர்ப்பு கிளம்பிடுச்சாம் . முத்தம் என்பது அறைக்குள்தானே கொடுக்கனும்னு நம்ம
கிச்சா கேட்டாரு .
ஐன்ஸ்டீனுக்கு மரியாதை:
பிரபல விஞ்ஞானி
ஐன்ஸ்டீனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக 300 ஐன்ஸ்டீன் களை ஒரே சமயத்தில் கொண்டுவந்து
நிறுத்துகிறார்களாம் மாறுவேடத்தில் – அதிமுக கட்சிகாரவுகளுக்கு சொல்லிபுடாதீங்க
அம்மா பிறந்த நாளைக்கு
பாலோ பண்ணிடுவாங்க .
பேஸ்புக் மோகம்:
எல்லாத்தையும்
இணையத்தில் காட்டுவது இப்போது அதிகமாகிட்டு வருது அதில் இந்த பெண் தனது 2.5 வயது குழந்தையை
வாசிங் மெசினில் அடைச்சி வச்சி காமிச்சு இருக்காக .
நல்லா இருங்கம்மா
: ஏம்மா இப்படி பண்றீங்களேம்மான்னு கேக்க தோணுதா?
புதிய பூமிய :
எம்ஜி
யார் ஒரு படத்தில் நம்ம பூமியில் இருந்துட்டே புதிய வானம் புதிய பூமி ந்னு பாடி
இருப்பார் அதுபோல புதிய பூமியை கண்டு பிடிச்சி இருக்காகலாம் விஞ்ஞானிகள். நம்மால்
ஒருத்தன் அங்கே பேஸ்புக் இருக்கான்னு கேட்கிறான்.
(CNN)NASA said Thursday that its
Kepler spacecraft has spotted "Earth's bigger, older cousin": the
first nearly Earth-size planet to be found in the habitable zone of a star
similar to our own.
Though NASA can't say for sure
whether the planet is rocky like ours or has water and air, it's the closest
match yet found.
"Today, Earth is
a little less lonely," Kepler researcher Jon Jenkins said.
இந்தியா:
உலகம் பூரா சுற்றினார் மோடி எந்த பிரதமரும் கேள்விகளை முன்வைக்கவில்லை ஆனால் இந்தியாவி வுடுவோமா ?
இதோ பீகார் வரும் மோடிக்கு நிதிஸ் குமார் முன்வைக்கும் கேள்விகள்
இந்தியா:
உலகம் பூரா சுற்றினார் மோடி எந்த பிரதமரும் கேள்விகளை முன்வைக்கவில்லை ஆனால் இந்தியாவி வுடுவோமா ?
இதோ பீகார் வரும் மோடிக்கு நிதிஸ் குமார் முன்வைக்கும் கேள்விகள்
1. பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்றீர்கள். மக்கள் 14
மாதங்களாக அதற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். அது எப்போது
நிறைவேற்றப்படும்?
கமெண்ட்: தேர்தல் அறிக்கையை அப்போதுமட்டுமே பார்க்கவேண்டும்
அதுக்கு உடனே எக்ஸ் பயரி டேட் உண்டு
|
2. 14 நிதி ஆணைய அறிக்கையும், பிற்படுத்தப்பட்ட மண்டலத்துக்கான நிதி
ஒதுக்கீடு திரும்பப்பெறப்பட்டதும் பிஹார் மாநிலம் 5 ஆண்டுகளில் ரூ.50,000
கோடி இழப்பை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது. இது தான் நீங்கள் கூறிய
கூட்டாட்சி தத்துவமா?
|
3. கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியருக்கும் ரூ.15 லட்சம் முதல்
ரூ.20 லட்சம் வரை தரப்படும் என்றீர்களே? அதைப் பற்றி ஏதாவது தகவல்
இருக்கிறதா?
கமெண்ட்:எனக்கும் பதினைந்து லட்சம் வரும்னு ஒவ்வொரு இந்தியனும் வாயை பிளக்க வேண்டியதுதான் எங்களோட டெக்னிக் அடுத்த தேர்தலில் மறுந்துடுவாங்க பாஸ்
|
4. விவசாயிகள் நலனுக்காக குரல் கொடுத்தீர்கள். பின்னர் முதல் பல்டியாக
குறைந்தபட்ச ஆதார விலையில் கை வைத்தீர்கள். அதன் பிறகு விவசாயிகள் துயரை
அதிகரிக்க நிலச் சட்டத்தை முன்னெடுத்துள்ளீர். இதுதான் விவசாயிகள் நலன்
பேணும் விதமா?
கமெண்ட்: ஹ ஹா நோ கமெண்ட்ஸ் பிளீஸ்
|
5. 2022-க்குள் அனைவருக்கும் குடிநீர், மின்சார வசதியுடன் வீட்டு வசதி
செய்துதரப்படும் எனக் கூறினீர்கள். ஆனால், இதுவரை இத்திட்டத்துக்கு எவ்வித
நிதியும் ஒதுக்கப்படாமல் இது எப்படி சாத்தியமாகும்?
கமெண்ட் : அடுத்த வருசம் பார்க்கலாம்
|
6. ஜன் தன் திட்டத்தை துவக்கி வைத்தீர்கள். இன்று நிறைய பேருக்கு வங்கிக்
கணக்கு இருக்கிறது. ஆனால் அதனால் மட்டும் ஏழைகளுக்கு என்ன பயன் கிடைக்கும்?
இன்று ஜன்தன் திட்டம் மூலம் தொடங்கப்பட்ட 70% வங்கிக் கணக்குகள்
செயல்படாமல் இருக்கின்றன.
கமெண்ட் : அடுத்த வருசம் பார்க்கலாம்
|
7. பாஜக அரசால் சில கார்ப்பரேட் முதலாளிகள் பயனடைந்துள்ளது உண்மையே.ஆனால், சாமானியனுக்கு 'நல்ல நாள்' வருவது எப்போது?
|
கமெண்ட்: ஹ ஹா நோ கமெண்ட்ஸ் பிளீஸ்
விவசாயிகள் தற்கொலைக்கு காரணம் வட்டிகடைகாரவுகளாம் :
விவசாயிகள் தற்கொலைக்கு காரணம் வட்டிகடைகாரவுகளாம் :
கர்நாடகா மாநிலத்தில் கடந்த இரு மாதங்களாக விவசாயிகள் தற்கொலை அதிகரித்து
வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் ஒரு பெண் உட்பட 13 விவசாயிகள் தற்கொலை
செய்துள்ளனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த
சம்பவத்தால், கர்நாடகா அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் கடந்த மார்ச் முதல் ஜூலை 20-ம் தேதி வரை பல்வேறு
காரணங்களால் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயி கள் தற்கொலை செய்து கொண்
டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரி விக்கின்றன. கடன் தொல்லை, கந்து வட்டி
பிரச்சினை காரணமாக விவசாயிகள் தற்கொலைக்கு தூண்டப்படுவதாக ஊடகங்களில்
செய்தி வெளியானதால், பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
இதற்காக மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசை கண்டித்து எதிர்க்கட்சிகளான
பாஜக, மதசார் பற்ற ஜனதா தளம், இடதுசாரிகள் உள்ளிட்டவையும், விவசாய
சங்கங்களும் மாநிலம் முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளின் தற்கொலை குறித்து கர்நாடகா அரசு அறிக்கை அளிக்கும்படி உள்துறை
அமைச்சகமும், ஆளுநர் வாஜூபாய் வாலாவும் உத்தரவிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து முதல்வர் சித்தராமையா அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடம்
அவசர ஆலோசனை நடத்தினார். மேலும் வங்கிகளுக்கும், கூட்டுறவு
நிறுவனங்களுக்கும், தனியார் நிதி நிறுவனங்களுக்கும் விவசாயிகளுக்கு
நெருக்கடி தரக் கூடாது என உத்தரவிட்டார். மேலும் வட்டிக் கேட்டு விவசாயிகளை
அச்சுறுத்தும் கந்து வட்டிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி
போலீஸாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மாநிலம் முழுவதும் 600-க்கும்
மேற்பட்ட கந்து வட்டிக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூன்று மணிநேரத்தில் வீடு சீனாவில் சாதனை: நம்மூர்ல குறைந்தது மூன்று மாதம் ஆவுது ஒரு வீடு கட்ட ஆனால் மூன்று மணிநேரத்தில் செய்திருக்காங்க ஒரு வீட்டை
மூன்று மணிநேரத்தில் வீடு சீனாவில் சாதனை: நம்மூர்ல குறைந்தது மூன்று மாதம் ஆவுது ஒரு வீடு கட்ட ஆனால் மூன்று மணிநேரத்தில் செய்திருக்காங்க ஒரு வீட்டை
சீனாவில் இரண்டு தளங்கள் கொண்ட ஒரு வீட்டை 3 மணி நேரங்களில் உருவாக்கி
சாதித்துவிட்டனர். தொழில்நுட்பத்தில் இது மிகப் பெரிய புரட்சியாகக்
கருதப்படுகிறது. மத்திய சீனாவில் இயங்கி வரும் ஸுவோடா கட்டுமான நிறுவனம்
இந்தப் புதுமையைச் செய்திருக்கிறது. ஹால், அறைகள், சமையலறை, குளியலறை, மாடி
என்று தனித்தனியாகத் தொழிற்சாலையில் உருவாக்குகிறார்கள். உருவாக்கிய
அறைகளை க்ரேன் மூலம் கொண்டு வந்து, தேவையான இடத்தில் பொருத்தி
விடுகிறார்கள். இந்த வீடுகளுக்கு சிமெண்ட் பயன்படுத்துவதில்லை.
அதற்குப் பதிலாக விலை மலிவான, அதிகம் உழைக்கக்கூடிய பொருட்களைக்கொண்டு
வீட்டை உருவாக்குகிறார்கள். இந்த வீடு குறைந்தது 150 வருடங்களுக்குத்
தாக்குப் பிடிக்கும்.
Tags
News