ரஜினியை ஏன்யா திட்டுறாங்க

ஒரு படத்தை பார்க்கலாம் ரசிக்கலாம் ஆனால் நான் இன்னாருக்குத்தான் ரசிகன் நான் இவன் படம் வந்தால் ஒருவாரம் சம்பளப்பணம் காலியானாலும் பரவாயில்லை அதை பார்ப்பேன் என இன்று திருப்பூரில் தியேட்டர் முன்பு குவிந்த ரசிகர்களிடம் ஒரு கேள்வி.

1.ரஜினி கள்ள பணத்தை ஒழிப்பதாக படம் நடிக்கிறான் ஆனா அவன் கிட்ட உள்ள கள்ளபணம் எவ்வளவு
2.ரஜினி கடவுள்னு சொல்லி கத்துறயே உன் அம்மா அப்பாவின் காலில் விழுந்து என்னைக்காவது கும்பிட்டு இருக்கிறாயா
3.சமூகத்தில் நடக்கும் ஊழலுக்கும் விபசாரத்துக்கும் லஞ்சத்துக்கும் யார் காரணமா இருந்தாலும் அதை ஒழிக்க கிளம்பும்
ரஜினி தானே அத்தைகய ஒரு மனிதனாய் இருப்பது உனக்கு தெரியுமா ?

இந்த மூன்று கேள்விகள் கேட்டோம் . (தனியே கூட்டி வந்துதான் :))

பதில்

1.சார் ரஜினி கள்ளபணம் வச்சு இருக்கார்னு யாரு சொன்னாங்க சார் அவர் ஞானிசார் இருந்தா நிச்சயமா
மக்களுக்கு கொடுப்பார் சார்

2. அம்மா அப்பா காலில் நாங்க விழுவோம் சார் ஆனா ரஜினிங்கறவர் கடவுள் மாதிரி அவர்காலில்தான் முதலில் விழுவோம்

3.சமூகத்தில் என்ன நடந்தாலும் அதுக்கு ரஜியாசார் பொறுப்பு , ஏன் கமலும் பொறுப்புதானே அங்க போய் கேளுங்க சார்

என பதில் வந்தது


பொதுவானவர்களின் கேள்விகள்
1. ரஜினி படம் என் குழந்தைக்கு பிடிக்கும் அந்த ஸ்டைல் பிடிக்கும்
மத்தபடி நீங்க சொல்ற சமூக விசயத்தில் எனக்கு அக்கரை இல்லை
ஆனா ரஜினியும் ஒரு நடிகன் அவன் தலையில் மட்டும் உங்கள் சமூக அக்கறையை
அவர் மேல திணிக்காதீங்க

2. ரஜினி கள்ள பணம் வச்சிருந்தா என்ன இல்லாட்டி எனகேன்ன சார்
படத்தை படமா பாருங்க சார்


இதில் யார் கருத்து சரி என சொல்லுங்கள் தோழர்களே

28 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post