இந்த விவாதத்தில் காந்தியின் செயல்முறை
அவரின் சாதிய ,பொருளாதார கருத்துக்கள்
அவற்றின் குறைபாடுகள் குறித்து செல்வன் இட்ட பஸ்ஸில் நான் கேட்டக் கேள்விகளும் அதற்கு அய்யாசமி என்ற
நண்பர் சொன்ன பதில்களுமாய் இருக்கும்
இதில் சில இடங்களில் நானும் மற்றவர்களும் காப்பி பேஸ்டு செய்து பேசி
இருப்போம் எனவே அவை நாங்கள் தட்டச்சியது என எடுத்துகொள்ள வேண்டாம் -
விவாதம் பெரிதாக இருப்பதால் விரும்பியவர்கள் மட்டுமே மேற்கொண்டு படிக்கலாம் -தியாகு
செல்வன்:
காந்தி மீது சுமத்தபடும் குற்றசாட்டுகள் பெரும்பாலும் கான்ஸ்பைரசி தியரி.தாஜ்மகால் சிவன் கோயிலாக இருந்தது, நிலவில் மனிதன் காலடி எடுத்து வைக்கவில்லை, ஒபாமா ஒரு முஸ்லிம், 9/11 நிகழ்த்தியது யூதர்கள்/அமெரிக்க அரசு என்பது போல ஆதாரமே இல்லாத, வரலாற்று ஆய்வாளர்களால் புறக்கணிக்கபட்ட/ஒதுக்கப்பட்ட கான்ஸ்பைரசி தியரிகள்.கான்ஸ்பைரசி தியரிகளுக்கு ஒரு சந்தை உண்டு.அதை நம்புகிறவர்களை மாற்ரவே இயலாது.அடிப்படையில் நமக்கு காந்தியை பிடிக்காது என்றால் அவர் மேல் சுமத்தபடும் எந்த குற்றசாட்டையும் ஏற்கும் மனோநிலைக்கு தள்ளபடுவோம்.அவரது சாதனைகள் சாதனைகளே இல்லை என வாதிடுவோம்.அதேபோல் தான் இங்கேயும் நடக்கிறது.நேதாஜியை காந்தி கொன்றார், பகத்சிங்கை காப்பாற்றவில்லை, இந்திய சுதந்திரம் கிடைக்க காந்தி காரணம் அல்ல, கடற்படை ஸ்ட்ரைக்கே காரணம் என்பது எல்லாம் அடிப்படை ஆதாரம் இல்லாத, மெயின்ஸ்ட்ரீம் வரலாற்று ஆசிரியர்களால் நிராகரிக்கபட்ட தியரிகள்.
வெல்பவர்களால் வரலாறு எழுதபடுகிறது என்பது உண்மை.அந்த லாஜிக்படி இங்கே வரலாறு காந்தியின் சீடர்களால் எழுதபட்டதே வென்றது காந்திதான் என்பதை அல்லவா காட்டுகிறது?உலகெங்கும் உள்ல வரலாற்று ஆசிரியர்கள், மாபெரும் ஞானிகள், தலைவர்கள், மேதைகள், பொதுமக்கள் அனைவரும் காந்தியின் ஆளுமை குறித்தும் அது உலக வரலாற்றில் ஏற்படுத்திய மாற்றம் குறித்தும் பேசுகிறார்கள்.நோபல் அமைதி விருதுக்கு காந்தியின் பெயர் பலமுறை பரிசீலிக்கபட்டு அன்றைய அரசியல் சூழல் காரணமாக,ப்ரிட்டனை பகைத்துகொள்ள விருப்பாததன் காரனமாக காந்திக்கு வழங்கபடவில்லை.கருப்பர்களின் விடுதலை இயக்க பேரொளிகளான மார்ட்டின் லூதர் கிஙும், மண்டேலாவும் காந்திய வழிமுரையே தமக்கு ஆதர்சத்தை அளித்தது என்கிரார்கள்.அதே அகிம்சையை பயன்படுத்தி வெற்றி அடைகிறார்கள்.அப்புறமும் காந்தி கயவன் என கூறுபவர்களுக்கு வரலாற்று புரிதல் எந்த அளவுக்கு உள்லது என்பதே எனக்கு சந்தேகமாக உள்லது.ஒரு பரந்துபட்ட வரலாற்று பார்வை இவர்களிடம் இல்லை.ஒரு சித்தாந்தத்தின் ஊடாக நின்று அதனுள் நிற்காத அனைவரையும் எதிரிகளாக,மூடர்களாக பார்க்கும் மனபோக்கு மட்டுமே இவர்களிடம் உள்ளது.பொதுமக்கள் மூடர்கள், உலக மக்கள் மூடர்கள், காந்தி நயவஞ்சகர் அனைவரையும் ஏய்த்து வரலாற்று புத்தகத்தில் இடம்பெற்று விட்டார்.நான் தான் அதிமேதாவி.இதை உலகுக்கு எடுத்து சொல்லி அனைவரையும் திருத்த போகிரேன் என்ர மனஒப்போக்கு தான் இங்கே காந்தி மனிதனே இல்லை என கூறுபவர்களிடம் காணபடுகிறது.
"காந்தி மகாத்மா இல்லை, மனிதன் மட்டுமே" என இன்னொரு தரப்பு கூறுகிறது.இதை முதலில் யாரும் மறுக்கவில்லை.காந்தி மனிதர்,ஆனால் அவர் சாதாரண மனிதர் அல்லர்.அசாதாரணமானவர். உலக வரலாற்றில் காணகிடைத்த மனிதர்களில், தலைவர்களில் மிக மேன்மையானவர்.அவருக்கு ஒப்பான விடுதலை போராட்ட தலைவர்களை காண்பதே மிக அரிது.மொழியால், இனத்தாம்,மதத்தால் பிரிந்து கிடந்த மக்களை கட்டி இனைத்து ஒரு தேசத்தை உருவாக்கியவர்.சூரியனே அஸ்தமிக்காத ப்ரிட்டிஷ் அரசை வெறும் முப்பதாண்டு கால போரில் தோற்கடித்து காட்டியவர். ராஜதந்திரத்தால் இந்தியாவை கைபற்றி ஆண்ட ப்ரிட்டிஷாரை அதே ராஜதந்திரத்தால் ஜெயித்து காட்டிய ஸ்ட்ராடஜிஸ்ட்.காந்தியின் நிர்வாக மேலாண்மை திறன்கள் என ஒரு புத்தகமே எழுதி கல்லூரியில் வைக்கும் அளவுக்கு ராஜதந்திரத்தில் கைதேர்ந்தவர்.
சுயநலனை துறந்து,பொதுநலனை,தேசநலனை மட்டுமே சிந்தித்த தலைவர்.அவர் பதவி வெறியர், சர்வாதிகாரி என குற்றம் சாட்டுபவர்கள் அவர் எதற்கு அதிகாரத்தை விரும்பினார் என்பதை மறந்துவிடுகிரார்கள்.அவர் என்ன காசுக்கும், பதவிக்குமா அதிகாரம் கேட்டார்?அவர் அப்படிப்பட்டவராக இருந்திருந்தால் இந்தியாவின் ஒருங்கினைந்த பிரதமராக அவரால் ஆகியிருக்க முடியும்.அவர் அதை முற்றிலும் மறுத்தவர்.காசு பனம் சேர்க்காதவர்.வாரிசுகளை அரியணையில் அமர்த்தாதவர்.தன் உயிர்மூச்சான சத்தியாகிரக கொள்கையிலிருந்து கட்சி விலை செல்வதை தடுக்கவே அவர் நேதாஜியை சகலவிதமான ராஜதந்திரஙக்ளை பயன்படுத்தியும் வென்றார்.அவரை வழிநடத்தியது அவரது கொள்கை.அந்த கொள்கைக்கு தான் அவர் உயிர்வாழ்ந்தார்.அதனாலேயே உயிரையும் இழந்தார்.
இப்படிப்பட்ட மனிதரை உலகவராற்றில் எங்கும் காண்பது அரிது.காந்திக்கு ஒப்பன மனிதனே பூமியில் இதுவரை பிறந்ததில்லை.இனியும் பிறக்க வாய்ப்பு இல்லை.காந்தி ஏசுவை போன்ற கருணாமூர்த்தி, ஜார்ஜ் வாஷின்டனை போன்ற தேச தந்தை, கார்ல் வான் க்ளாஸ்விட்சையொத்த ராஜதந்திரி, கரிபால்டியை போன்ற அப்பழுக்கற்ற தேசபக்தர், முனிவர்களை ஒத்த ஆன்மிகவாதி, வள்ளுவரை ஒத்த செக்யூலரிஸ்ட், இத்தனைபேரையும் ஒரு தராசில் நிறுத்தி மறுதராஅசில் காந்தியை நிறுத்தினால் வேண்டுமானால் காந்திக்கு சமமானவர்கள் கிடைத்தார்கள் என கூறலாமே ஒழிய காந்திக்கு சமமான இன்னொருவரை உலகவராலற்றில் நாம் எங்கும் கானவே இயலாது.இத்தகையவருக்கு மகாத்மா பட்டம் பொருந்தாது என கூறினால் அப்புறம் அது வேறு யாருக்கு தான் பொருந்தும் என்பதை அறிய நான் ஆவலாக இருக்கிறேன்.
காந்தியிடம் தவறுகள் இல்லையா?இருந்தது.பெரும் தலைவர்கள் அனைவரிடமும் காணப்படும் தவறுகள் காந்தியிடமும் இருந்தது.மார்ட்டின் லூதர் கிங் விபசாரிகளுடன் க்ரூப் செக்ஸ் வைத்து கொண்டவர், மண்டேலா பெண்கள் விசகய்த்தில் படுவீக், ஜார்ஜ் வாசிங்க்டன் அடிமைகளை வைத்திருந்தவர்,,,அடுக்கிகொண்டே போகலாம்...குரைகள் இல்லாத மனிதன் இல்லை.நான் சொல்லுவது குறை,நிறை இரண்டையும் வைத்து ஒரு மனிதனை அளவிடுங்கள் என்பதே.அந்த அளவீட்டின்படி பார்த்தால் காந்திக்கு அருகே கூட யாரும் தென்படவில்லை.ஒப்புயர்வற்ற மாபெரும் மனிதர் அவர்.அவரை பற்றி உங்களுக்கு நல்ல கருத்து இருக்கோ, கெட்டவர் என்ற கருத்து இருக்கோ..அது வேறு விஷாய்ம்.அவரை குழுவதும் படியுங்கள் உள்வாங்குங்கள்.ஒற்றைபரிமான கண்ணோட்டங்களையும், சித்தாந்த பின்புலத்தின்பாற்பட்டும் அவரை அணுகாதீர்கள்.அதன்பின் காந்தி மகாத்மாவா,மனிதனா,கயவனா என யாரும் சொல்லாமலே உங்களுக்கே புரியும்.
---------------------------------------------------------------------
Collapse this post
--------------------------------------------------------------
தியாக ராஜன் - தலைவர் வழிபாடு சரியல்ல ஆனால் சேறு பூசுதலும் சரியலEdit5 OctDeleteUndo deleteReport spamNot spam
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

Prime Point Srinivasan - //"அடுக்கிகொண்டே போகலாம்...குரைகள் இல்லாத மனிதன் இல்லை."// மற்றவர்கள் எல்லாம், தங்கள் குறைகளைப்பற்றி பேசுவதில்லை. ஆனால் ம்காத்மாவோ, தன்னுடைய குறைகளை வெளிப்படையாக கூறி, அந்த குறைகள் தன்னிடம் மீண்டும் இல்லாதவாறு பார்த்துக்கொண்டார். அந்த துணிவு யாரிடமும் இருக்காது. அந்த ஒரு காரணத்திற்காகவே, அவர் 'மகாத்மா' ஆகிறார்.
"My life is my message" என்று எழுதி, தன் கையொப்பமிட்டு கொடுத்தவர். அந்த துணிவுதான் என்னை அதிகம் அவரிடம் கவர்ந்தது. அவரது எழுத்துக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம்.
http://www.facebook.com/photo.php?pid=3559704&id=659143139&ref=fbx_album
-----------------------------------------------------------------------
அவரது கருத்துககளில், கொள்கையில் மாறலாம். ஆனால், அவரது நோக்கத்திலோ அல்லது வாழ்க்கைமுறையிலோ, பழுது இல்லை. அவர் ஒரு மகாத்மாதான். அவ்ரை கொச்சைப்படுத்தி எழுதுவது பாவம்.5 OctDeleteUndo deleteReport spamNot spam
"My life is my message" என்று எழுதி, தன் கையொப்பமிட்டு கொடுத்தவர். அந்த துணிவுதான் என்னை அதிகம் அவரிடம் கவர்ந்தது. அவரது எழுத்துக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம்.
http://www.facebook.com/photo.php?pid=3559704&id=659143139&ref=fbx_album
-----------------------------------------------------------------------
அவரது கருத்துககளில், கொள்கையில் மாறலாம். ஆனால், அவரது நோக்கத்திலோ அல்லது வாழ்க்கைமுறையிலோ, பழுது இல்லை. அவர் ஒரு மகாத்மாதான். அவ்ரை கொச்சைப்படுத்தி எழுதுவது பாவம்.5 OctDeleteUndo deleteReport spamNot spam
--------------------------------------------------------------
தியாக ராஜன் - தலைவர் வழிபாடு சரியல்ல ஆனால் சேறு பூசுதலும் சரியலEdit5 OctDeleteUndo deleteReport spamNot spam
Arangasamy K.V - காந்தி மோசமான மனிதர் அல்லது தலைவர் என்றால் அந்த குறைகள் இல்லாத மனிதர் அல்லது தலைவர் உலகில் யாருண்டு ? அவற்றில் இருந்து ஒவ்வொன்றாக விடுபட்டு மேலேறிய லச்சிய உதாரண மனிதல்லவா காந்தி ?5 OctDeleteUndo deleteReport spamNot spam
தியாக ராஜன் - காந்தியை புரட்சிகாரர்கள் ஏற்றுகொள்ள முடியாது ஏனெனில் புரட்சி காந்தியின் அஜெண்டா அல்ல
நிராகரிக்க காரணங்கள் கண்டுபிடிக்கிறார்கள்Edit5 OctDeleteUndo deleteReport spamNot spam

Siddharth Venkatesan - செல்வன்... காந்தியின் மீதான இந்த குற்றச்சாட்டுகள் வெறும் காழ்ப்புகளில் இருந்து முளைத்தெழுபவை. இது இன்று நேற்றல்ல... காந்தியின் காலத்திலிருந்தே இருந்துவரும் ஒன்று தான். அ. மார்க்ஸ் எழுதிய "காந்தியும் தமிழ் சனாதனிகளும்" நூலின் பின்னிணைப்பாக நீலகண்ட சித்தாந்தி என்பவரால் 1932ல் வெளியிடப்பட்ட "தீண்டாதார் ஆலயப்பிரவேச நிக்ரஹம்" என்ற சிறு நூல் இருக்கிறது. காந்தியை காட்டமாக விமர்சிக்கும் நூல் இது. தீண்டாமை என்பது மிக நல்ல விஷயம் என்றும் அதை களைய முயற்சிக்கும் காந்திக்கு நரகமே கிட்டும் என்றும் சொல்லிச்செல்கிறது இந்த நூல். :)
இன்று காந்தி என்ற தனிமனிதரின் வரலாற்று இடத்தை தாண்டி காந்தியத்தின் சமகால relevance குறித்து அதிகம் பேச வேண்டும் என்று தோன்றுகிறது.5 OctDeleteUndo deleteReport spamNot spam

தியாக ராஜன் - காந்திக்கு சமூகத்தின் வளர்ச்சி பற்றிய ஒரு புரிதல் எல்லாம் இருந்ததாக தெரியவில்லை !
இருந்தால் அவர் புரட்சிகாரர் ஆகியிருப்பார்
சீர்திருத்தவாதியாகி இருக்க மாட்டார்
சமூகம் எப்படி மாறிவருகிறது அதில் வர்க்கங்களின் பங்கு என்ன
ஆளும் வர்க்கத்திற்கு அரசு என்ன உதவி செய்கிறது
என்பதெல்லாம் பற்றி காந்திக்கு தத்துவஞான புரிதல் இல்லைன்னு நினைக்கிறேன்
இருக்கிற நிலமைகள் மனம் மாறினால் மாறிடும் என
மட்டும் சொல்ல நினைத்தார்
அதனால் தான் பணக்காரர்கள் டிரஸ்டியா இருக்கட்டும் என்றார்
இதெல்லாம் சாத்தியமில்லாத விசயங்கள்Edit5 OctDeleteUndo deleteReport spamNot spam

tamil payani - அவர் புரட்சியாளரோ, சீர்திருத்தவாதியோ அது அவரவர் கண்ணோட்டத்தை சார்ந்தது.
ஆனால் கட்டாயம் கட்டுரையாளர் கருத்து போல ஒரு மோசமானவர் அல்ல.5 OctDeleteUndo deleteReport spamNot spam

செல்வன் - Thanks siddarth, thiyagu and tamil payani.
Gandhi is not a radical.He was a reformer.His method was love and ahimsa.Ahimsa can bring peace over long term.Radicalism will bring in quick results, but can also backfire.So we cannot blame gandhi for not being a radical.That was not his method at all.09:27DeleteUndo deleteReport spamNot spam

Siddharth Venkatesan - செல்வன்... வாய்ப்பு கிடைத்தால் Oxford Press வெளியிட்டுள்ள The Postmodern Gandhi நூலினை படியுங்களேன். அதில் Gandhi and the new courage என்ற கட்டுரை இந்த பிரச்சனையை அலசுகிறது. ஆங்கிலேயர்களுக்கு விசுவாசமான பிரஜைகளாக இருந்தபடி கோரிக்கைகளை வைக்கும் தரப்பினருக்கும் ஆயுதமேந்தி ஆங்கிலேயர்களை விரட்ட எத்தனித்த தரப்பினருக்கும் எதிராகவே சத்தியாகிரக போராட்ட வடிவத்தை காந்தி தேர்ந்தெடுத்தார். இத்தனை பெரிய மக்கள் கூட்டத்தை ரத்த ஆறு ஓடாத படி வழிநடத்த இதுவே மிகச்சிறந்த வழி. இந்த போராட்டமுறை நாடெங்கும் உருவாக்கிய தைரியம் புது வகையானது.11:37DeleteUndo deleteReport spamNot spam
செல்வன் - உண்மைதான் சித்தார்த். அகிம்சையை காந்தி முதலில் தென்னாபிரிக்காவில் பரிசோதித்தார்.அதை இந்தியாவில் பயன்படுத்தி வென்றார். தம் கட்சியினரை, தம் மக்களை திருத்த பலசமயங்களில் உண்னாவிரதம் இருந்தார்.நீங்கள் சொன்ன நூலை படிக்கிறேன்.11:40DeleteUndo deleteReport spamNot spam
Siddharth Venkatesan - சத்தியாகிரகத்தின் வெற்றிக்கு மிகச்சிறந்த உதாரணம் எல்லை காந்தி என்று அழைக்கப்பட்ட கான் அப்துல் கஃபார் கான் வடமேற்கு எல்லை மாகாணத்தில் உருவாக்கிய குதாய் கித்மத்கர் (கடவுளின் சேவகர்கள்) என்ற அமைப்பு. பாஷ்தூன்கள் வரலாற்று ரீதியாக மிக ஆக்ரோஷமானவர்கள். அந்த பாஷ்துன்களை கொண்டு காந்திய வழியில் துவங்கப்பட்ட போராட்ட அமைப்பு குதாய் கித்மத்கர். ஆங்கிலேயர்கள் இவர்களின் மேல் கொடூரமான முறையில் அடக்குமுறையை செலுத்தினர். அமைப்பின் உறுப்பினர் ஒருவரின் வரிகள் கீழே....
The British used to torture us, throw us into ponds in wintertime, shave our beards, but even then Badshah Khan told his followers not to lose patience. He said 'there is an answer to violence, which is more violence. But nothing can conquer nonviolence. You cannot kill it. It keeps standing up. The British sent their horses and cars to run over us, but I took my shawl in my mouth to keep from screaming. We were human beings, but we should not cry or express in any way that we were injured or weak." -- Musharraf Din (Baldauf)
கான் அப்துல் கஃபார் கான் பற்றிய கட்டுரை :
http://angumingum.wordpress.com/2006/08/29/basha_khan/11:53DeleteUndo deleteReport spamNot spam

Arangasamy K.V - காந்தியை பற்றி சரியான புரிதலுக்கு சிறந்த புத்தகங்களாக நான் கருதுவது,
1.காந்தி வாழ்க்கை, மூலம் லூயி ஃபிஷர், தமிழில் தி.ஜ.ர, பழனியப்பா பிரதர்ஸ். - ஐரோப்பிய மனநிலையில் காந்தியை அலசும் புத்தகம் , அவரை அருகில் இருந்து கவனித்த அமரிக்க பத்திரிக்கையாளரின் நல்ல பார்வை
2.இன்றைய காந்தி - ஜெயமோகன் .தமிழினி- காந்தியை பற்றிய எல்லா அவதூறுகளுக்கும் சிறந்த வாதங்களுடன் பதில் சொல்லும் புத்தகம் , காந்தி எனும் பனியா என்னை மிக கவர்ந்த பகுதி .11:58DeleteUndo deleteReport spamNot spam

Siddharth Venkatesan - அரங்கசாமி... காந்தியின் இறுதி 200 நாட்கள் (வி. ராமமூர்த்தி, தமிழாக்கம் : இலக்குவன், பாரதி புத்தகாலயம்) நூலையும் இந்த பட்டியலில் சேர்க்கலாம். காந்தியின் இறுதி 200 நாட்களின் நிகழ்வுகளை ஒரு நாளேட்டின் நுணுக்கத்துடன் விவரிக்கும் நூல் இது. இந்த நூலினை படிக்கும் பொழுது அவரை மிக அணுக்கமாக உணரத்துவங்கிவிடுவோம் என்று தோன்றுகிறது. காந்தியை சுற்றி பின்னப்பட்டுள்ள புனித/போலியான பிம்பங்களை தாண்டி காந்தியை ஒரு யதார்த்தமான மனிதராக எனக்கு இந்த நூல் அறிமுகம் செய்தது.14:16DeleteUndo deleteReport spamNot spam
தியாக ராஜன் - " 'காந்தியம் என்று ஒன்றில்லை' எனக் காந்திஜி அறிவித்திருந்தபோதும், அதே தலைப்பில் அவருடைய சம்மதத்துடனேயே ஏராளமான புத்தகங்கள் வெளியாயின; இந்திய வானில் புதிதாக உதித்த கோட்பாடே காந்தியம் என்பதற்கான ஆதாரம் இது" என்ற குறிப்புரையுடன்தான் காந்தியம் பற்றிய தன்னுடைய விவாதத்தை டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் தொடங்குகிறார். தான் பிரதிநிதித்துவப்படுத்தும் அடித்தள மக்கள் பிரிவைக் காந்தியம் எப்படிப் பாதிக்கிறது என்பதையே அம்பேத்கர் முதன்மையாக ஆராய்கிறார். தீண்டத்தகாதவரைப் பொறுத்த வரை, பொதுவாகக் கருதப்படுவது போலக் காந்தியம் வரமல்ல; அது ஒரு பொறி என்னும் முடிவுக்கு வந்து சேருகிறார். அதற்கான நியாயங்களையும் அவர் ஒவ்வொன்றாக முன் வைக்கிறார்.
சமூகத்தின் புறம்போக்கு வெளியில் வீசியெறியப்பட்ட தீண்டத் தகாதவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் காந்தி எவ்வாறு தோல்வியடைந்தார் என்பதை விளங்கிக்கொள்ள காந்தியத்தின் அடிப்படை உணர்வுகளை ஆராய வேண்டும். தன்னிறைவு பெற்ற கிராமங்களை நோக்கித் திரும்பச் செல்வதே காந்தியத்தின் அடையாளம் என்னும் பார்வை எளிமைப்படுத்தப்பட்ட ஒன்று. "என்னுடைய அபிப்பிராயத்தில் காந்தியம் அவ்வளவு எளிமையானதோ களங்கமற்றதோ அல்ல; பிராந்தியவாதத்தைவிடவும் வலுவானது அதன் உள்ளடக்கம். பிராந்தியவாதம் அதன் ஒரு அம்சம் மட்டுமே. அதற்கு ஒரு சமூகப் பார்வையும் பொருளாதாரப் பார்வையும் உண்டு. அவை இரண்டையும் விட்டுவிட்டு காந்தியத்தைப் புரிந்துகொள்வது அதைப் பற்றிப் பிழையான சித்திரத்தை முன்வைப்பதாகும்" என்று எழுதுகிறார் அம்பேத்கர்.
இந்து மதத்தில் நிலவும் சாதிய மரபைப் பற்றிய காந்தியின் கண்ணோட்டமே, சமூகப் பிரச்சினைகளில் அவருடைய நிலைபாட்டை வெளிப்படுத்தவும் உதவுகிறது. நவஜீவன் என்னும் குஜராத்தி மொழி வெளியீட்டில் காந்தி எழுதிய நீண்ட கட்டுரை சாதியக் கட்டுமானங்களில் அவருக்குள்ள வலுவான நம்பிக்கையைப் பகிரங்கப்படுத்துகிறது. சுயராஜ்ஜியத்தின் விதைகள் சாதி அடிப்படையில் உருவாக வேண்டும் எனக் காந்தி அதில் குறிப்பிடுகிறார். சாதிக் கட்டுமானத்தை வலுப்படுத்துவதன் மூலம் இந்தியாவில் கல்வியையும் அரசியல் பாதுகாப்பையும் அடைய முடியும் என்ற கண்ணோட்டத்தையும் காந்தி முன்வைக்கிறார். சாதியை ஒரு கட்டுக்கோப்பாகக் காணும் அவர் யாரும் சாதியின் எல்லைகளை மீறக் கூடாது என்றும் விரும்புகிறார். 'சமூகத்துக்கு இயற்கை வழங்கிய முறையே சாதியமைப்பு' என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
சாதி அமைப்புப் பற்றிக் காந்தி பல சந்தர்ப்பங்களில் நடத்திய அறிவிப்புகளை வரிசைப்படுத்தி அம்பேத்கர் விளக்குவது இந்தியாவில் நிலவும் சாதியமைப்பிலிருந்து காந்தியம் யாரையும் விடுதலை செய்யாது என்பதைத்தான்.
அம்பேத்கரின் விமர்சனத்துக்கு இலக்காகும் இரண்டாம் பொருள் காந்தியத்தின் பொருளாதாரக் கண்ணோட்டம். மேற்கத்திய நாடுகளின் முன்னேற்றங்களுடனும் எந்திர நாகரிகத்துடனும் காந்திக்கு இருந்த எதிர்ப்புணர்வு பிரசித்தமானது. நவீன எந்திர நாகரிகம் மனிதனை உழைப்பிலிருந்து விடுவிக்கிறது. அதன் மூலம் அவன் சிந்திக்கவும் செயல்படவும் வாய்ப்புகளை அளிக்கிறது என்பது அம்பேத்கரின் கண்ணோட்டம். தொழில் நாகரிகத்தை எதிர்ப்பதன் மூலம் மக்கள் சுதந்திரம் பெறும் வாய்ப்பைக் காந்தி மறுக்கிறார் என்பது அம்பேத்கரின் மதிப்பீடு.
தொழிலாளி வர்க்கத்துக்கும் முதலாளிகளுக்கும் இடையில் உருவாகும் பிரச்சினைகளில் காந்தி முற்றாக முதலாளிகளின் தரப்பிலேயே இருக்கிறார் என்பது காந்தியத்துக்கு எதிராக அம்பேத்கர் முன்வைக்கும் மூன்றாம் விமர்சனம். பம்பாயில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, கூலி உயர்வுக்காகத் தொழிலாளர்கள் வன்முறையின் மொழியில் பேசுவது உசிதமான வழியல்ல என்றே காந்தி குறிப்பிட்டார். "ஐரோப்பாவைப் பாருங்கள், அங்குள்ள யாரும் திருப்தியாக இல்லை. தொழிலாளிகள் முதலாளிகளை நம்புவதில்லை. முதலாளிகளுக்கும் தொழிலாளிகள் மீது நம்பிக்கையில்லை" எனச் சுட்டிக்காட்டிவிட்டு "தொழிலாளர்கள் தொழிலாளர்களாக இல்லாமல் போனால் முதலாளிகள் புத்தியையும் தந்திரத்தையும் பயன்படுத்துவார்கள்" என்றும் குறிப்பிடுகிறார். இது தொடர்பான காந்தியின் சொற்பொழிவுகளை மதிப்பீடு செய்த பின்னர் இவ்வாறு எழுதுகிறார்:
"சொத்துடைமை வர்க்கத்துக்குக் கீறல் ஏற்பட்டுவிடக் கூடாது என்றே மிஸ்டர். காந்தி விரும்புகிறார். அவர்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதையும் அவர் எதிர்க்கிறார். பொருளாதாரச் சமத்துவம் என்னும் உணர்வு அவருக்கில்லை. பொன்முட்டையிடும் வாத்தைக் கொல்லத் தான் விரும்பவில்லை என்று பணக்கார வர்க்கத்தை முன்னிறுத்தி அண்மையில் அவர் குறிப்பிட்டுள்ளார். உடைமையாளருக்கும் தொழிலாளருக்கும், பணக்காரர்களுக்கும் தரித்திரர்களுக்கும் நிலவுடமையாளர்களுக்கும் குடியானவர்களுக்கும் இடையில் உள்ள பிரச்சினைகளுக்குக் காந்தியின் தீர்வு எளிமையானது. சொத்துகளைத் துறக்க வேண்டாம். தாங்கள் சொத்துகளின் அறங்காவலர்கள் மட்டுமே என்று அறிவித்தால் போதும். அதுவுங்கூடத் தங்கள் விருப்பப்படி நிறைவேற்ற வேண்டிய ஓர் ஆன்மீகக் கடமை"
சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளைப் பொறுத்தவரை ரூசோவும் ரச்கினும் டால்ஸ்டாயும் சொன்னதைத்தான் காந்தி திரும்பச் சொல்கிறார் என்பது அம்பேத்கரின் கருத்து. காந்தியத்தை உருவாக்கியது பழமையான கருத்துகள்தாம். மீண்டும் விலங்கு நிலை வாழ்க்கைக்குக் கொண்டு செல்பவை அவை. 'எளிமை' மட்டுமே அவற்றின் சிறப்பியல்பு. அது போன்ற கருத்துகளை எல்லாக் காலத்திலும் சில சாமியார்கள் சொல்லிக்கொண்டு திரிவார்கள் என்றும் அம்பேத்கர் கேலி செய்கிறார். முன்னேற்றத்துக்கான பாதையைத் தேடும் நடைமுறை உணர்வுள்ள சமூகம் அவற்றை எதிர்த்துப் புறக்கணிக்கும் என்றும் குறிப்பிடுகிறார். "எதிர்பார்க்க எதுவும் இல்லாத மாயையே காந்தியப் பொருளாதாரம்" என்று முடிவும் செய்கிறார்.
சாதாரணனுக்குக் காந்தியம் எந்தவித நம்பிக்கையையும் வழங்குவதில்லை என்று உறுதியாகச் சொல்லும் அம்பேத்கர் அதற்குக் காரணமாகச் சுட்டிக்காட்டுவது, கலாச்சாரத்தை உயர் வருணத்தவருக்கு மட்டுமே உரியது என்று அது நிலைப்படுத்துகிறது என்பதைத்தான். ஓய்வும் கலாச்சாரமும் எல்லாக் குடி மக்களுக்கும் உரியது என்னும் ஜனநாயக விழுமியத்தைக் காந்தி ஏற்பதில்லை. உழைப்பவர்கள் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். விலங்குக்கொப்பான வாழ் நிலையையே அது சாதாரண மனிதனுக்கு அளிக்கிறது. பெரும்பான்மை மக்களைப் பொருத்தவரை 'இயற்கையை நோக்கித் திரும்புதல் என்னும் காந்திய அறைகூவல் அவர்களை வறுமையையும் அறியாமையையும் நோக்கியே கொண்டு செல்லும். வருண அடிப்படையில் வேர்கொண்ட காந்தியம் சாதாரண மனிதர்களிடையே சிக்கலான அடிமை உணர்வையே வளர்க்கும். அதிகாரமும் செல்வமும் மமதையும் போலிப் பெருமைகளும் ஒரு புறம் குவியும்போது, பாதுகாப்பின்மையும் பட்டினியும் வீழ்ச்சியும் இழிவுகளும் மற்றொரு பக்கம் பெருகுகின்றன. இப்படிப்பட்ட ஒரு அமைப்பையே காந்தியம் நம்புகிறது.
சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வாகக் காந்தி முன்வைக்கும் தர்மகர்த்தா வாழ்க்கைமுறை நடப்பு எதார்த்தங்களுடன் தொடர்பில்லாத அபத்தம் என்பது அம்பேத்கருடைய பார்வை. சாதியை அல்லது வருணாசிரம தருமத்தைச் சமுதாய இலட்சியமாக ஏற்கும் காந்தியம் ஜனநாயகத்துக்கு எதிரானது. வெளிநாட்டு ஆதிக்கச் சக்திகளிடம் நிபந்தனையற்றுச் சரணடைந்த வரலாற்றைக் கொண்டவர்கள் உயர் சாதி இந்துக்கள். அவர்கள் தரப்பிலிருந்து எந்தவிதமான எதிர்ப்பும் உருவானதில்லை. அடிமைத்தனத்தை அவர்கள் ஆறுதலாகக் கண்டார்கள். சாதியமைப்புத்தான் இந்துச் சமூகத்தை இது போன்ற கையறுநிலைக்குத் தள்ளிவிட்டிருக்கிறது. ராணுவ ஆற்றலை வளர்க்கச் சாதியமைப்பைப் பயன்படுத்தலாம் என்ற காந்தியின் வாதத்தை அம்பேத்கர் கேலி செய்கிறார். வெவ்வேறு சாதியினர் ஒன்றாக அமர்ந்து உண்ணும் சமபந்தி விருந்தைக் கூட்டு மலங்கழிப்பு என்று உவமித்த காந்தியின் வாதம் பைத்தியக்காரத்தனம் என்று கண்டிக்கிறார். சாதியப் பிரிவினை இயற்கையானது என்னும் வாதத்தை மிக அபாயகரமானதாகவும் அம்பேத்கர் கருதுகிறார். வரலாற்று அடிப்படையிலும் இந்த வாதம் முட்டாள்தனமானது என்று மனுதர்மத்தை மேற்கோள்காட்டி நிறுவுகிறார்.
பின்னர் காந்தி சாதியப் பிரிவினையிலிருந்து வருணங்களுக்கு மாறுகிறார். ஆனால் இரண்டும் ஏற்படுத்தும் விளைவுகளில் வித்தியாசம் இல்லை என்பது அம்பேத்கரின் தரப்பு. 'வருண'த்திலிருந்து உருவானதுதான் 'சாதி'. வருணாசிரம நிலைபாடுகள்மீது பவுத்தர்கள் முன்வைத்த விமர்சனங்களுக்குப் பதில் சொல்லச் சனாதனிகளால் முடியவில்லை. பகவத் கீதை உயர்த்திக்காட்டும் வருணாசிரம தர்மம் பிறப்பை அடிப்படையாகக்கொண்டதல்ல; ஒருவன் தன் தகப்பனின் தொழிலையே செய்ய வேண்டும் என்று கீதை உபதேசம் செய்யவுமில்லை. தனிநபரின் உள்ளார்ந்த இயல்புகள்தாம் வருணாசிரமத்தின் அடிப்படை. கீதையின் இந்தக் கருத்தை அடையாளம் காண முடியாதபடி காந்தி தலைகீழாக மாற்றிவிட்டார் என்று அம்பேத்கர் குற்றம் சாட்டுகிறார். 'வருணத்தை' மரபுவழிப்பட்டதாகக் காந்தி மாற்றுகிறார். அதனால்தான் காந்தியின் வருணத்துக்கும் சாதிக்கும் இடைவெளியில்லாமல் போகிறது. தன்னுடைய சாதியக் கோட்பாட்டைவிட்டு வெளியேறக் காந்தியால் முடியவில்லை என்று அம்பேத்கர் முடிவு செய்கிறார்.
ஜனநாயகத்துக்கு ஆதரவாகவோ முதலாளித்துவத்துக்கு எதிராகவோ காந்தி ஒருபோதும் பேசியதில்லை. வெளிநாட்டவரிடம் சுதந்திரத்துக்காக வாதாடும்போதே சமுதாயத் தாழ்வுகள் பிறப்பிலேயே உள்ளவை எனச் சொன்னது காந்தியத்தின் முரண்பாடு. 'சுயராஜ்ஜிய' முழக்கத்துக்கு உயர் சாதி இந்துக்களின் ஆதரவைப் பெறுவதுதான் காந்தியின் நோக்கமாக இருந்திருக்குமோ? ஆம் என்பதுதான் பதில் என்றால் காந்தியம் உண்மையானது என்று எப்படிச் சொல்ல முடியும் என்பது அம்பேத்கரின் கேள்வி.
இருப்பவரை இருப்பவராகவும் இல்லாதவரை இல்லாதவராகவும் நிலைநிறுத்துவதுதான் காந்தியத் தத்துவம் என்பது அம்பேத்கரின் கருத்து. இல்லாதவன் அவனுடைய உரிமையைக் கேட்டுப் பெறுவதைக் காந்தியம் தடைசெய்கிறது. 'சொத்துக்கு ஆசைப்படாதே' என்பதுதான் சூத்திரனுக்குக் காந்தி வழங்கும் உபதேசம். தோட்டிகள் தொடர்ந்து அதே தொழிலைச் செய்ய வேண்டும் என்பதற்காகவே காந்தி அந்தத் தொழிலுக்கு மகத்துவம் கற்பித்தார் என்று அம்பேத்கர் வாதாடுகிறார்.
தீண்டத்தகாதவர்கள் பற்றிக் காந்தி சொன்ன எதுவும் தீண்டாமையை ஒழிக்கும் நோக்கம் கொண்டதல்ல என்னும் முடிவுக்கே காந்திய விமர்சனத்தின் இறுதியில் அம்பேத்கர் வந்து சேருகிறார். தீண்டத்தகாதவர்களை 'ஹரிஜனங்கள்' என்று அழைப்பதன் மூலம் காந்தி ஒரே கல்லில் இரண்டு பறவைகளை வீழ்த்துகிறார். தீண்டத்தகாதவர்களைச் சூத்திரர் என்று குறிப்பிடாததன் மூலம் வருணாசிரம கட்டமைப்புக்குள் அவர்களை நுழைய முடியாமல் தடைசெய்தாகிவிட்டது. அவர்களுக்குப் புதிய பெயர் சூட்டியதன் மூலம் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். தீண்டத்தகாதவர்களுக்குக் கல்வி அவசியம் என்று காந்தி ஒப்புக்கொள்கிறார். ஆனால், அந்தக் கல்வியைப் பயன்படுத்தும் வாய்ப்புகளை அவர் மறுக்கிறார் என்று கண்டடைகிறார் அம்பேத்கர். சட்டமோ மருத்துவமோ பொறியியலோ படித்தாலும் தீண்டத்தகாதவர்கள் தமது குலத்தொழிலைச் செய்ய வேண்டும். முன்பு உருவாக்கப்பட்ட சட்டங்கள் ஒருபோதும் மாற்றப்படக் கூடாது என்பதே காந்தியின் கொள்கை.
சாதி இந்துத்துவத்தின் விழுமியங்களையே காந்தியம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. கர்மா கோட்பாடு, பசு வழிபாடு, அவதாரங்கள் பற்றிய நம்பிக்கை, விக்கிரக வழிபாடு இவையெல்லாம் காந்தியத்தின் தவிர்க்க முடியாத அம்சங்கள். அதனால் காந்தியம் தாழ்த்தப்பட்டவர்களின் விடுதலைக்கான வழியல்ல என்னும் கண்ணோட்டத்தை அடைகிறார் அம்பேத்கர்.
*******************************************************************
அம்பேத்கர் மறைவு செய்தி கேட்ட பெரியார்!
இந்தியாவின் சிறந்த அறிஞர்களில் முன்னணியிலுள்ள அறிஞரும்,ஏராளமான விஷயங்களைக் கற்றுத் தேர்ந்த கலாநிதியுமான அம்பேத்கர் அவர்கள் முடிவெய்திவிட்டார் என்ற செய்தி கேட்டவுடன் திடுக்கிட்டுப் பதறிவிட்டேன்!!
உலகத்தரால் மதிக்கப்படும் மாபெரும் தலைவரான காந்தியாரை,வெகு சாதாரணமாக மதித்ததோடு,அவருடைய பல கருத்துக்களை சின்னாபின்னமாகும்படி மக்களிடம் விளக்கம் மேதாவியாக இருந்தார்.இந்துமதம் என்பதான ஆரிய-ஆத்திக மதக்கோட்பாடுகளை வெகு அலட்சியமாகவும்,ஆபாசமாகவும்.அர்த்தமற்றதாகவும் மக்கள் கருதும்படியாக பேசியும் எழுதியும் வந்தார்.உதாராணம் சொல்ல வேண்டும்மானால்,காந்தியாரையே ஒரு பத்தாம் பசிலி பிற்போக்கு வாதி என்றும் அவரால் பிரமாதமாகப் படிக்கப்பட்டு வந்த கீதையே முட்டாளின் உளறல்கள் என்றும் சொன்னதோடு,காந்தியாரின் கடவுளான இராமனை மகாக் கொடியவன் என்றும் இராமணக் காவியம் எரிக்கத் தகுந்தது என்றும் சொல்லி பல்லாயிரக்கணக்கான மக்களிடையில் இராமாயணத்தை சுட்டு எரித்தும்ச் சாம்பலாக்கினார்!
இந்துமதம் உள்ளவரையில் தீண்டாமையும் சாதிப் பிரிவும் அவற்றால் ஏற்பட்ட கொடுமையும் ஒழியவே ஒழியாது என்றும் ஓங்கி அறைந்தார்! மேற்கண்ட இந்தக் கருத்துக்கள் தழுவும்படியாக ஏராளமான புத்தகங்களை எழுதி வெளியிட்டார்,இப்படியாக அநேக அரிய காரியங்களை செய்த ஒரு மாபெரும் பகுத்தறிவாதியும்,ஆராய்ச்சி நிருபுணரும்,சீர்திருத்தப் புரட்சி வீரருமான டாக்டர் அம்பேதகர் முடிவு எய்தியது இந்தியாவுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் ,பகுத்தறிவு வளச்சிக்கும் எளிதில் பரிகரிக்க முடியாத பெரியதொரு குறைவேயாகும்.
அம்பேத்கரின் மறைவு எனும் செய்தி திடிரென்று மொட்டையாக வெளியானதிலிருந்து,அவரது மரணத்துக்குப் பின்னர் சில இரகசியங்கள் இருக்கலாம்மென்று கருதுகிறேன்.அதாவது காந்தியார் மரணத்திற்க்கு உண்டான காரணங்களும் அதற்க்கு ஆதாரமான பல சங்கதிகளும் ,டாக்டர் அம்பேதகர் மரணத்திற்க்கும் இருக்கக் கூடும் என்பதேஆகும்.
பெரியார் இப்படி குறிப்பிட்டது விடுதலை 8-12-1956 யில்Edit16:07DeleteUndo deleteReport spamNot spam

Arangasamy K.V - //'சமூகத்துக்கு இயற்கை வழங்கிய முறையே சாதியமைப்பு' என்றும் அவர் குறிப்பிடுகிறார். //
தென்னாப்ப்ரிகாவிலிருந்து திருப்பியபோது காந்தியின் மனநிலை , நீண்ட இந்திய சுற்றுப்பயணம் , நாராயணகுரு , அம்பேத்கார் சந்திப்புக்கு பின் காந்தியின் மனநிலை "சாதி அடுக்கு இந்தியாவின் கேடு" என்ற மனநிலைக்கு வந்து சேர்ந்தார் ,
அதன்பின் கடுமையான எதிர்ப்பிக்கிடையே தலித்களுடன் சேர்ந்து வாழ , அவர்களுக்காக வாழ்த்துவங்கினார் .17:08DeleteUndo deleteReport spamNot spam

Arangasamy K.V - காந்திய ஆய்வாளரான மார்க் லிண்ட்லே [Prof. Dr. Mark Lindley ] காந்தியைப்பற்றிய ஆய்வுகளைச் செய்த ஐரோப்பியர்களில் முக்கியமானவர். இசைஆய்வாளரும் இந்திய வரலாற்றாசிரியருமான மார்க் லிண்ட்லே அமெரிக்காவில் வாஷிங்டன் டி.சியில் 1937ல் பிறந்தார். ஹார்வார்ட் பல்கலையில் சமூகவியல் கற்றார். கொலம்பியா பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றார். பல்வேறு பல்கலைகளில் ஆய்வுப்பேராசிரியராக பணியாற்றினார்.
லிண்ட்லே காந்தியின் எழுத்துக்களை முழுமையாகத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். காந்தி, நாம் அறிந்த வகையிலேயே [ Gandhi as We Have Known Him] என்ற நூல் முக்கியமானது. ஜெ.சி.குமரப்பாவின் வாழ்க்கை வரலாற்றையும், கோராவின் வாழ்க்கை வரலாற்றையும் நூல்களாக எழுதியிருக்கிறார். ஒரு கட்டுரையில் லிண்ட்லே காந்தி சாதியைப்பற்றி கொண்டிருந்த கருத்துக்களை தொகுத்து முன்வைக்கிறார்.
1920ல் காந்தி எழுதினார் :''சாதியமைப்பு இந்துமதத்தை அழிவிலிருந்து காப்பாற்றியது என நான் நினைக்கிறேன். ஆனால் எல்லா நிறுவனங்களையும்போல அதுவும் சீரழிந்துவிட்டது. நால்வருணம் என்ற பிரிவினை அடிபப்டையானது இயல்பானது தேவையானது என்றே எண்ணுகிறேன். எண்ணிக்கையிலடங்காத துணைச்சாதிகள் சிலசமயம் வசதியானவை சிலசமயம் தடையாக ஆகின்றவை. அவை எந்த அளவு சீக்கிரம் இணையுமோ அந்த அளவுக்கு நல்லது.
ஒருமுறை என்னைப் பேட்டிகண்ட ஒருவர் கேட்டார் நாம் இந்திய சாதியமைப்பை உதறிவிட்டு ஐரோப்பாவின் வர்க்க அமைப்பை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று "அதன்மூலம் சாதியமைப்பில் உள்ள பிறப்பு அடிப்படையை களையலாமென அவர் எண்ணுகிறார் என்று நான் ஊகிக்கிறேன் பிறப்பின் அடிபப்டையிலான அடையாளம் என்பது எப்போதைக்கும் உரியது என்றும் அதை மாற்ற நினைப்பதென்பது பெரும் குழப்பத்துக்கே இட்டுச்செல்லும் என்றும் எனக்குப் படுகிறது.''
1920ல் காந்தி மேலும் எழுதினார். ''சாதியமைப்பின் அழகு என்னவென்றால் அது செல்வத்தின் அடிப்படையில் அமைந்திருக்கவில்லை என்பதே. வரலாறு காட்டுவதைப்போல பணம் என்பது மிகப்பெரிய ஓர் அழிவுச்சக்திதான். சாதி என்பது குடும்பம் என்ற விதியின் நீட்சிதான். பாரம்பரியம் ரத்தஉறவு ஆகியவற்றின் அடிப்படையில் அவை நிர்வகிக்கப்படுகின்றன. மேலைநாட்டு அறிவியலறிஞர்கள் பாரம்பரியம் என்பது ஒரு பிரமைதான் என்றும் சூழல்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்றும் காட்ட கடுமையாக முயன்றுவருகிறார்கள். ஆனால் பலநாடுகளில் உள்ள அனுபவம் என்பது அந்த முடிவுகளுக்கு நேர் எதிரானதாகவே செல்கிறது. ஆனால் சூழலே எல்லாம் என்ற அவர்களின் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டாலும் கூட வர்க்க அமைப்பைவிட சாதியமைப்பில்தான் சூழலை பாதுகாப்பதும் மேம்படுத்துவதும் எளிது என்று சொல்லலாம்.
சமூக வாழ்க்கையில் மாற்றம் என்பது மிகமிக மெல்லத்தான் வரமுடியும் என நாம் அறிவோம். ஆகவே இன்றைய சமூக மாற்றங்களுக்கு ஏற்ப சாதியானது புதிய குழுவமைப்புகளாக தன்னை மாற்றிக்கொண்டுள்ளது. இந்த மாற்றங்கள் மேகங்களின் வடிவம் மாறுவதுபோல எளிதாகவும் இயல்பாகவும் நடைபெறுகின்றன. இதைவிட மேலான மானுட பரிணாமத்தை கற்பனை செய்வது கடினம்
சாதியமைப்பு மேல் கீழ் என்ற பேதத்தைச் சுட்டுவதில்லை. அது வாழ்க்கைநோக்கில் உள்ள வேறுபாடுகளையும் அதற்குச் சமானமான வாழ்க்கை அமைப்புகளையும் அடையாளம் காட்டுகிறது அவ்வளவுதான். ஆனால் சாதியமைப்பில் ஒரு சமூக அடுக்குமுறை உருவாகி வந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால் அது பிராமணர்களின் உருவாக்கம் என எவரும் சொல்லிவிட முடியாது. அனைவருக்கும் ஒரே வாழ்க்கை லட்சியம் உருவாகி வரும்போது ஒரு சமூகஅடுக்கு உருவாவது தடுக்கமுடியாத ஒன்று. காரணம் அந்த இலட்சியத்தை எல்லா சாதியும் ஒரே அளவில் உள்வாங்கிக்கொள்ள முடியாது''
இவ்வாறு காந்தி தன்னுடைய ஆரம்பகாலத்தில் சாதியை விளக்குகிறார். அதற்கு எதிரான கருத்துக்களுடன் வாதிடுகிறார். ஆனால் காந்தியின் குரல் மெல்ல மெல்ல மாறுபடுவதை மேற்கோள்கள் வழியாகவே மார்க் லிண்ட்லே காட்டுகிறார்.
1925ல் காந்தி எழுதினார் '' ஒருவர் பிற வருணத்தவர்களால் அவர்களின் பாரம்பரியமாக உருவாக்கப்பட்ட அறிவியல் கலை ஆகிய துறைகளின் அறிவை கற்றறிவதில் எந்த பிழையும் இல்லை. ஆனால் ஒருவன் அவனுடைய உயிர்வாழ்தலுக்கான தொழிலாக அவனது பெற்றோர் பாரம்பரியமாகச் செய்த அவனது வருணத்தின் அதே தொழிலையே செய்வதே நல்லது''
1925ல் காந்தி மேலும் எழுதினார் ''என்னைப்பொறுத்தவரை மேல் கீழ் என்ற பேச்சுக்கே இடமில்லை. தன்னை உயர்வாக எண்ணிக்கொண்டு பிற வருணத்தவரை குனிந்து நோக்கும் ஒரு பிராமணன் பிராமணனே அல்ல. அவன் முதலிடத்தில் இருக்கிறான் என்றால் ஆன்மீகமான சேவைக்கான உரிமை அவனுக்கு அதிகமாக இருக்கிறது என்பதனாலேயே''
இந்த மாற்றத்துக்கான காரணம் என்ன? காந்தி இந்தியாவுக்கு திரும்பிவந்தது இக்காலத்திலேயே. ரயிலில் இந்தியாவெங்கும் விரிவான ஒரு சுற்றுப்பயணம் செய்தார் அவர். இத்தருணத்தில் அவருக்கு ஒரு சமூகமாக இந்தியாவை தொகுக்கவேண்டியதன் அவசியம் புரிந்திருக்கக் கூடும். சாதி இந்தியாவை ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத தனி அறைகளாக பிரித்துவிடக்கூடும் என்று அவர் உணர்ந்தார் என தோன்றுகிறது. ஆகவே சாதி என்ற பிரிவினைக்கு மேலாக ஒரு பொதுவான சமத்துவத்தை உருவாக்கியாகவேண்டும் என்று அவருக்குப் பட்டிருக்கலாம்
மேலும் தன் இந்தியப் பயணங்களில் 1923ல் காந்தி நாராயணகுருவைச் சந்தித்தார். காந்தி நாராயணகுருவுடனான தன் சந்திப்பைப் பற்றி புகழ்ந்து சொல்லியிருக்கிறார். சாதி தேவைதான் என்ற தன் கருத்தை காந்தி நாராயணகுருவிடம் சொல்ல நாராயணகுரு அதை திட்டவட்டமாக மறுத்து பேசியிருக்கிறார். அதன்பின் அவர்கள் நடுவே சற்று அந்தரங்கமான உரையாடல் நடந்திருக்கிறது. நாராயணகுருவின் கருத்தை தான் பரிசீலனைசெய்வதாக காந்தி சொல்லியிருக்கிறார்.
மேலும், நாராயணகுருவிடம் காந்தி தீண்டாமையை நியாயப்படுத்தி இந்து ஞானமரபின் மூலநூல்களில் ஏதேனும் சொல்லப்பட்டிருக்கின்றனவா என்று கேட்டபோது நீதி நூல்களான ஸ்மிருதிகள் காலம் தோறும் மாறக்கூடியவை, ஞானநூல்களான சுருதிகள் அழியாதவை. சுருதிகளில் அப்படி ஏதும் சொல்லப்படவில்லை என குரு பதில் சொல்லியிருக்கிறார். ஒரு தீண்டத்தகாத சாதியினனாகிய நாராயணகுருவின் அபாரமான சம்ஸ்கிருத பயிற்சியும் இந்து மெய்யியலில் உள்ள ஞானமும் காந்தியின் மனதை ஆழமாகப் பாதித்திருக்கலாம்.
1931ல் காந்தி அம்பேத்காரைச் சந்திக்கிறார். காந்தியையும் அம்பேத்காரையும் ஒப்பிட்டு ஆராய்ந்த டி.ஆர்.நாகராஜ் காந்தியும் அம்பேத்காரும் ஒருவருக்கொருவர் முரண்பட்டு வாதிட்டு ஒருவரை ஒருவர் மாற்றியமைத்த இரு சக்திகளாக காண்கிறார். [The Flaming Feet: A Study of the Dalit Movement, D R Nagaraj ] இந்த சிந்தனை இன்றைய ஆய்வாளர் நடுவே மிகவும் வலுப்பெற்று வரக்கூடிய ஒன்றாகும். மார்க் லிண்ட்லேயும் அவ்வாறே எண்ணுகிறார்.
காந்திக்கும் அம்பேத்காருக்கும் நடுவே காந்தியின் இறப்பு வரை 17 வருடம் ஓய்வில்லாமல் விவாதம் நடந்திருக்கிறது. சில சமயம் அம்பேத்கார் சினம் கொண்டு அத்து மீறி பேசியிருக்கிறார். ஆனால் அவ்வாறு சினம் கொள்வதற்கான தார்மீகமான ஒரு உரிமை அம்பேத்காருக்கு இருப்பதாகவே மீண்டும் மீண்டும் காந்தி எண்ணினார். ஆகவே காந்தியின் குரல் பொறுமையுடன் மீள மீள அம்பேத்காருடன் உரையாடுவதாகவே இருக்கிறது.
இங்கே ஒன்றைச் சொல்லவேண்டும். காந்தி பிடிவாதம் மிக்கவர் என்ற ஒரு நம்பிக்கை பலரிடம் உண்டு. அது உண்மை. சாதாரணமாக காந்தி தன் கருத்துக்களை மாற்றிக்கொள்பவரல்ல. ஏன் என்றால் மிக விரிவான ஆராய்ச்சிகள் மூலம் தனக்குத்தானே நிரூபித்துக்கொண்டவற்றை உறுதியாக நம்பக்கூடியவர் அவர். அவற்றை ஒரு ராஜதந்திரமாகவோ பிறர் என்ன நினைப்பார்கள் என்பதற்காகவோ மாற்றிக்கொள்ளக்கூடியவர் அல்ல. சொல்லப்போனால் பிறர் தன்னைப்பற்றி என்ன நினைக்கவேண்டும் என அவர் எப்போதுமே கவலைப்பட்டதில்லை.
ஆனால் காந்தி அவரது கருத்துக்களுடன் அவரளவுக்கே ஆற்றலுடன் மோதியவர்களை கூர்ந்து கவனித்தார். அவர்களுடன் நுட்பமாக விவாதித்தார். காந்தியைப் போன்ற ஒருவரிடம் விவாதிக்கும் மூளைத்திராணியும் ஆன்மபலமும் அம்பேத்காருக்கு இருந்தது. அது நேருவுக்கு இல்லை. ஆகவேதான் காந்தி நேருவால் கொஞ்சம்கூட மாற்றப்படவில்லை. அம்பேத்காரால் தலைகீழான மாற்றத்தை அடைந்தார்.குறிப்பாக சாதி விஷயத்தில்.
1931ல் காந்தி எழுதினார் '' நான் நவீன அர்த்தத்தில் சாதி அமைப்பில் நம்பிக்கை கொள்ளவில்லை. அது ஒரு சமூகத்தீங்கு, முன்னேற்றத்துக்கு தடை. மனிதர்கள் நடுவே உள்ள எவ்வகையான ஏற்றதாழ்வுகளையும் நான் நம்பவில்லை. நாமெல்லாம் மூற்றிலும் சமம். சமத்துவம் என்பது ஆன்மாவிலே ஒழிய உடல்களில் அல்ல....புறவயமாக தெரியும் இந்த சமமின்மைக்கு நடுவேதான் அந்த சமத்துவம் உள்ளது என்று நாம் புரிந்துகொள்ளவேண்டும். எந்த ஒரு மனிதனும் சகமனிதனைவிட மேலானவனாக எண்ணிக்கொண்டானென்றால் அது கடவுளுக்கு எதிரான குற்றமாகும். ஆகவே சாதியமைப்பானது மனிதர்களிடையே தரவேற்றுமைகளை சுட்டும்வரை அது ஒரு மாபெரும் தீமையே ஆகும்.
நான் பாரம்பரியமாக தொழில்களைப் பங்கீடு செய்யும் வருண அமைப்பிலும் நம்பிக்கைகொள்ளவில்லை. நான்கு வருணங்கள் என்பவை நான்கு பொதுவான மானுடச்செயல்பாடுகளைச் சுட்டுகின்றன. அறிவை அடைதல், எளியோரைக் காத்தல், தொழிலையும் வணிகத்தையும் செய்தல், உடலால் பிறருக்குச் சேவைசெய்தல். இந்த பணிகள் எல்லா மானுடருக்கும் பொதுவானவை. ஆனால் இந்துஞானம் அவற்றை நம்முடைய இருப்பின் ஆதார விதிகளாக அடையாளம் கண்டுகொண்டு சமூக உறவுகளையும் நடத்தைகளையும் ஒழுங்குபடுத்த பயன்படுத்திக்கொண்டது...
...ஆனால் என்னுடைய வரையறையின்படி இப்போதைய இந்துமரபில் வருணப்பிரிவினை செயல்படவில்லை. பிராமணர்கள் எனபப்டுபவர்கள் அறிவை அடைதலை விட்டுவிட்டார்கள். பிறதொழில்களை அவர்கள் செய்கிறார்கள். எல்லா வர்ணத்துக்கும் கிட்டத்தட்ட இது பொருந்தும்''
1932ல் காந்தி எழுதினார் ''பண்டைய முறை எதுவாக இருந்தாலும் எந்த ஒரு மனிதனும் தன்னை உயர்குலத்தவன் என்று கூறிக்கொண்டு வாழ்ந்துவிடமுடியாது. சமூகம் அத்தகைய உரிமைபாராட்டல்களை இனிமேல் அங்கீகரிக்காது. உலகம் விழிப்புகொண்டுவிட்டது...''
ஜெயமோகனின் "இன்றைய காந்தி" நூலிலிருந்து.17:42DeleteUndo deleteReport spamNot spam

தியாக ராஜன் - //எளியோரைக் காத்தல், தொழிலையும் வணிகத்தையும் செய்தல், உடலால் பிறருக்குச் சேவைசெய்தல். இந்த பணிகள் எல்லா மானுடருக்கும் பொதுவானவை. ஆனால் இந்துஞானம் அவற்றை நம்முடைய இருப்பின் ஆதார விதிகளாக அடையாளம் கண்டுகொண்டு சமூக உறவுகளையும் நடத்தைகளையும் ஒழுங்குபடுத்த பயன்படுத்திக்கொண்டது...
...ஆனால் என்னுடைய வரையறையின்படி இப்போதைய இந்துமரபில் வருணப்பிரிவினை செயல்படவில்லை//
காந்தி சொல்லும் இந்து மதம் நடப்பில் இல்லை
அது ஒருவேளை எழுத்தில் கற்பனையில் வேண்டுமானால் இருக்கலாம்Edit18:42DeleteUndo deleteReport spamNot spam

தியாக ராஜன் - நடப்பில் இருக்கும் விசயங்களில் இருந்து
சமூகத்தை ஆய்வு செய்யனுமா
அல்லதி லட்சிய வாதத்தில் இருந்து ஆய்வு
செய்யனுமா
என்றால் நான் சொல்வது கீழிலிருந்து
மேலே செல்வதே சரிEdit18:44DeleteUndo deleteReport spamNot spam

Arangasamy K.V - நீங்கள் சொல்வதற்கும் காந்தி சொல்வதற்க்கும் கிட்டத்தட்ட எந்த வேறுபாடும் இல்லை நண்பரே .18:45DeleteUndo deleteReport spamNot spam
தியாக ராஜன் - அம்பேத்காரின் கருத்தால் கவரப்பட்ட காந்தி
கடைசி காலத்துக்கு வந்துட்டார்
அவரையும் போட்டு தள்ளிட்டாங்க
இப்போ இருந்தால் காந்தி மாற்று கருத்தை சொல்லி இருப்பார்Edit18:47DeleteUndo deleteReport spamNot spam

Arangasamy K.V - //காந்தி சொல்லும் இந்து மதம் நடப்பில் இல்லை
அது ஒருவேளை எழுத்தில் கற்பனையில் வேண்டுமானால் இருக்கலாம்//
காந்தியும் வர்ணபிரிவினை தன் எல்லா அர்த்ததையும் இழந்து விட்டது என்றுதான் சொல்கிறார்.இன்று அதை பற்றி பேசுவது பைத்தியக்காரத்தனம் என்கிறார்18:47DeleteUndo deleteReport spamNot spam

தியாக ராஜன் - சாதியை அவரளவிற்கு ஏன் கடைபிடித்தார்
என்று விளக்குங்களேன்Edit18:48DeleteUndo deleteReport spamNot spam

Arangasamy K.V - தன் பார்வை மாற்றமடைந்த பின் காந்தி எங்கே சாதியை கடை பிடித்தார் ?18:49DeleteUndo deleteReport spamNot spam
Arangasamy K.V - தன் ஆசிரமத்தில் தங்கியிருந்த தலித் விருந்தினர்களின் மலச்சட்டியை சுத்தம் செய்ய மறுத்ததற்க்காக கஸ்தூரிபாவை வீட்டை விட்டு வெளியேற சொன்னவர் காந்தி .18:50DeleteUndo deleteReport spamNot spam
Arangasamy K.V - தானே சுத்தம் செய்து ஆசிரமவாசிகளுக்கு முன்னுதாரணமாக இருந்தவர்18:51DeleteUndo deleteReport spamNot spam
தியாக ராஜன் - நல்லது இந்திய அளவில் சாதியை ஒழிக்க அவர் என்ன செய்தார் அல்லது அவர் சொல்லி தந்த வழிமுறை என்ன அல்லது அரசியல் நிலைபாடு என்னEdit18:52DeleteUndo deleteReport spamNot spam
Arangasamy K.V - முதலில் நாம் பேசிக் கொண்டிருந்த விசயம் , காந்தியில் தனி வாழ்விலோ பொது வாழ்விலோ சாதியின் எதிரியாகவே விளங்கினார் .18:54DeleteUndo deleteReport spamNot spam
தியாக ராஜன் - சரி தன்னளவில் காந்தி சாதிக்கு எதிரியாக விளங்கினார் என்பதை ஏற்றுகொள்ளலாம்
ஆனால் அவர் இந்த தேச தந்தை எனவே அவர் சாதிய மாறுபாடுகளை அதன் மருட்சிய ஒழிக்க்
தனிமனித உபயாத்தை தவிர சமூகரீதியில்ஒரு போரட்டமாக ஒரு சிந்தனையாக ஒரு வழிகாட்டுதலாக
சிலவற்றை செய்திருக்க வேண்டும்
பெரியார் செய்த சுயமரியாதை திருமணங்கள் போல
ஆனால் அவர் மகனுக்கு அவர் உயர்ந்த சாதியில் தான் மணமுடித்தார் என கேள்வி பட்டேன்Edit18:58DeleteUndo deleteReport spamNot spam

Arangasamy K.V - பிராமணர்கள் தலித்துக்களை மணம்முடிக்கவேண்டும் என்றும் சொன்ன காந்தி சமத்துவமின்மை வன்முறையை உருவாக்கும், சமத்துவமே அகிம்சையை உருவாக்கும் என்றார். அந்தக் காலகட்டம் ஐம்பது வருடங்களுக்குள் வந்துவிடும் என்று தன் நம்பிக்கையை அவர் முன்வைத்தார்
ஆரம்பத்தில் கலப்புத்திருமணங்களை ஏற்க மறுத்த காந்தி பின்னர் கலப்புத்திருமணங்களை முழுக்க ஆதரித்தார். கடைசி காலத்தில் கலப்புத்திருமணங்களை மட்டுமே அவர் ஆதரித்தார். தன் ஆதரவாளர்கள் கலப்புத்திருமணம் செய்தாகவேண்டும் என்றும் அதன்மூலம் மட்டுமே சாதியை ஒழிக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார். குறிப்பாக உயர்சாதியினர் தலித் சாதியினரை மணந்துகொள்வதை ஒரு முக்கியமான சமூகச்செயல்பாடாக காந்தி வலியுறுத்தினார்.
1945 ல் காந்தி எழுதினார். ''பெண்ணுக்கு எந்த தகுதி இருந்தாலும் திருமணம் ஒரே சாதிக்குள் என்றால் என் ஆசீர்வாதத்தை தயவுசெய்து கோராதீர்கள். அவள் வேறு சாதி என்றால் மட்டுமே நான் என் ஆசீர்வாதத்தை அனுப்புவேன்''
1946ல் காந்தியிடம் பேட்டியாளர் கேட்டார். ''கல்விகற்ற ஹரிஜனப் பெண்கள் விரலால் எண்ணக்கூடிய அளவிலேயே இருக்கிறார்கள். அவர்கள் உயர்சாதி ஆண்களை திருமணம் செய்துகொண்டால் கண்டிப்பாக தங்கள் சாதியை விட்டு துண்டிக்கப்படுவார்கள். அவர்கள் தங்கள் சொந்த சாதிக்குச் சேவை செய்யமுடியாமல் ஆகும். அவ்வாறு திருமணம் செய்வதென்றால் அந்த ஜோடி தங்கள் வாழ்க்கையை ஹரிஜன மக்களுக்கான சேவைக்கே அர்ப்பணிக்கவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் செய்யலாம்''
அதற்கு காந்தி பதில் அளித்தார். '' ஹரிஜனப்பெண்கள் உயர்சாதி ஆண்களை திருமணம் செய்துகொள்வது வரவேற்கத்தக்கது. ஆனால் அது சிறப்பானது என்று சொல்ல கொஞ்சம் தயங்குகிறேன். அது ஆண்களை விட பெண்கள் குறைவானவர்கள் என்று காட்டுவது போல ஆகிவிடும். இப்போதெல்லாம் அந்தவகையான தாழ்வுச்சிக்கல் இருப்பதை நான் அறிவேன். ஆகவே ஹரிஜன பெண் உயர்சாதி ஆணை மணம்செய்வதைவிட உயர்சாதி பெண் ஹரிஜன ஆணை மணம்செய்வது சிறந்தது என்று நான் எண்ணுகிறேன். என்னால் முடிந்தால் என் பேச்சைக்கேட்கும் எல்லா உயர்சாதிப்பெண்களையும் ஹரிஜன ஆண்களை திருமணம் செய்துகொள்ளும்படிச் சொல்வேன்.''
தன் கொள்கையை திட்டவட்டமாக வெளியிட்டது மட்டுமல்ல அதை தீவிரமாக நடைமுறைப்படுத்தவும் செய்தார் காந்தி. காந்தியால் உந்தபப்ட்ட ஹரிஜன- உயர்சாதி மணங்கள் அக்காலகட்டத்தில் ஏராளமாக நடைபெற்றன. தமிழகத்தின் புகழ்பெற்ற காந்தியவாதிகளான கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் தம்பதியினர்கூட அவ்வகையான தம்பதியினர்தான்.
கலப்புத்திருமணத்தை காங்கிரஸ் தன் முதன்மை சமூகத்திட்டமாக கொண்டுவருமா என்று 1946ல் ஒரு நிருபரின் கேள்விக்கு தீண்டாமை ஒழிப்பு, சமபந்தி போஜனம், ஹரிஜனங்களுக்கு இட ஒதுக்கீடு போன்றவற்றில் காங்கிரஸ் ஒத்த கருத்து கொண்டிருக்கிறது என்றும் விரைவிலேயே கலப்புமணத்தை நோக்கியும் காங்கிரஸை கொண்டுவந்துவிடலாம் என்றும் காந்தி சொன்னார்.
அது காங்கிரஸை அவர் தவறாகப் புரிந்துகொண்டு சொன்னது. அப்போது இந்திய சுதந்திரம் நெருங்கிவிட்டிருந்தது. அதிகாரக் கனவுகள் ஆரம்பமாகிவிட்டிருந்தன. காந்தியின் சமூகத்திட்டங்கள் நேருவின் காங்கிரஸ¤க்கு உவப்பாக இருக்கவில்லை. காங்கிரஸ் அரசியல் கட்சியாகச் செயல்படக்கூடாது என்றும் கலப்புத்திருமணம் முதலிய சாதி ஒழிப்புச் செயல்பாடுகளில் அது ஈடுபடவேண்டும் என்றும் காந்தி வாதிட்டார். கிராம சுயராஜ்யம் அமைக்க வேண்டும் என்று கோரினார். நேரு காந்தியை சந்திப்பதையே தவிர்த்தார். காந்தி கொல்லப்படும் வரை.
ஒருவேளை மத ஒற்றுமைக்காக காந்தி உயிர்த்தியாகம் செய்யவில்லை என்றால் சாதி ஒழிப்புக்காக அவர் உயிர்தியாகம் செய்ய நேரிட்டிருக்கும். அவர் சென்றுகொண்டிருந்த திசை அது.
அன்புள்ள ஜெபமாணிக்கம், தயவுசெய்து யோசித்துப்பாருங்கள். இந்த வரலாற்றுப்பின்னணியில் நீங்கள் குறிப்பிட்ட ஆரம்பகாலகட்டத்து உதிரி மேற்கோள்கள் மூலம் காந்தியை ஒரு சாதி வெறியராக முத்திரை குத்துவதனால் யாருக்கு என்ன லாபம்? அந்தப்பொய்யை நாம் சுமந்துகொண்டு காழ்ப்பை வளர்த்துக்கொள்வதனால் நாம் அடைவது என்ன?
நம்மை இந்த குரூரமான , அநீதியான பொய்யை நம்பச்செய்யும் கும்பல்களுக்கு அதனால் பெரும் லாபம் உள்ளது என உணருங்கள். காந்தி இந்த தேசத்தின் நீதியுணர்வின் அடையாளமாக நம் மனதில் இருக்கிறார். அந்த பிம்பத்தை இவ்வாறு திட்டமிட்டு உடைப்பதன் வழியாக இந்த தேசத்தின் அடித்தளமாக இருக்கும் இலட்சியங்கள் மேல் ஆழமான ஐயம் உருவாக்கப்படுகிறது. அதன் விளைவாக இந்த தேசம் பலவீனப்படுகிறது. சமூக மோதல்கள் உருவாகின்றன. நாம் போரிட்டு அழிய வாய்ப்பிருக்கிறது. அந்த உதிரத்தைக் குடிக்க எப்போதும் எங்கோ பலர் காத்திருக்கிறார்கள்.18:59DeleteUndo deleteReport spamNot spam

தியாக ராஜன் - இந்த கட்டத்துக்கு முன்பே மகன் திருமணம் முடிந்ததோEdit19:02DeleteUndo deleteReport spamNot spam
Arangasamy K.V - ஆம் , காந்தி இந்தியாவிற்க்கு வரும் போதே இரண்டு குழந்தைகளுக்கு திருமணமாகி விட்டது , கடைசி மகன் ராஜாஜியின் மகளை காதலித்த போது 5 வருடங்கள் காந்தி ஒத்துக்கொள்ளவில்லை ,19:04DeleteUndo deleteReport spamNot spam
தியாக ராஜன் - காந்தி சமூக ஆய்வில் எனது கேள்வி அவர் தொழில்துறை வளர்ச்சியை சமூக அறிவியல் ரீதியில் சிந்திக்கவில்லை உதாரணமாக் இருபதாம் நூற்றாண்டில் உலகம் தொழிற்துறை வளர்ச்சியில் சென்று கொண்டு இருந்த போது அவர் கிராமங்களையும் கதரையும் மைய்யப்படுத்தினார்
புதிய உற்பத்தி உறவின் சமூக தன்மை அதன் முக்கியத்துவம் குறித்து காந்திக்கு என்னவகையான கருத்து இருந்தது
என்பதை கூறுங்கள்Edit19:08DeleteUndo deleteReport spamNot spam

Arangasamy K.V - இன்றைக்கு எந்த நுகர்வு வெறியை கண்டு உலகமே பதறுகிறது அதற்கெதிராக அன்றே பேசியவர் காந்திதான் , அதற்க்கு பின்பு 30 ஆண்டுகள் கழித்தே சிறிய அலகுகளுக்குள் தன்னிறைவு சிந்தனை தோன்றியது.19:10DeleteUndo deleteReport spamNot spam
தியாக ராஜன் - நுகர்வு வெறி என்பது ஒரு விளைவு அதன் காரணங்கள் அதை பற்றிய புரிதலின் அடிப்படையில் சமூகத்தை புரிந்து கொள்வது அதன் அடிப்படையில் எதிர்காலத்தில் சாதி ரீதியான பொருளாதார அமைப்பு எப்படி மாறும் என கணிப்பது ஆகியவை காந்தி இடம் இருந்ததாEdit19:12DeleteUndo deleteReport spamNot spam
Arangasamy K.V - பெரிய இணைப்புகளுக்கு மன்னிக்கவும் , ஆனால் தேவைப்படுவதால் ...
//மனிதனின் மகிழ்ச்சி நுகர்வில் இல்லை என்றால் எதில் உள்ளது? அடிப்படைத்தேவைகள் அனைவருக்கும் நிறைவேறுதல். அதன் விளைவாக நிறைவான மனம் கொண்ட மக்களின் சமூகம் உருவாதல். அச்சமூகத்தில் மேலான மானுட உறவுகள் பூத்தல். இயற்கையுடன் ஒன்றி வாழ்வதனால் உடல்நலம் சிறப்பாக இருத்தல். இத்தகைய மகிழ்ச்சி கொண்ட சமூகம் வன்முறையை மெல்ல மெல்ல இழக்கும். ஏனென்றால் வன்முறை உருவாவதே மகிழ்ச்சியில்லாத சமூகம் அம்மகிழ்ச்சியின்மைக்கு பிறரே காரணம் என எண்ணுவதனாலும் , மகிழ்ச்சியை பிறரை ஒடுக்குவதில் காண விழைவதனாலும்தான்.
அத்தகைய மகிழ்ச்சியான சமூகம் ஒன்றை காந்தி கற்பனை செய்கிறார். அந்தச் சமூகத்தில் தேவையான அனைத்துமே பெரும்பாலும் அங்கேயே உற்பத்தி செய்யப்படுமாகையால் போக்குவரத்து தேவையிருக்காது. பெருமளவிலான உற்பத்தி தேவை இருக்காது. ஆகவே தொழில்நுட்பமும் பெரிய அளவில் தேவை இருக்காது. தொழில்நுட்பம் இல்லையேல் இயற்கை மீதான வன்முறையும் நிகழாது.
காந்தி நவீனத் தொழில்நுட்பத்தை மிகவும் ஐயப்பட்டார். அதன் சாராம்சமாக இருப்பது வன்முறையே என்றார். ஆகவே அதை முழுக்க நிராகரிப்பதற்கு முயன்றார். தொழில்நுட்பத்தை வன்முறையில்லாமல் நிகழ்த்துவது அனேகமாக சாத்தியமல்ல என்பதே காந்தியின் எண்ணம். ஏனென்றால் அது ஆதி நோக்கத்திலேயே இயற்கையைச் சுரண்டும் இலக்கு கொண்டது.
காந்தி சொன்ன கிராமிய அமைப்புகள் தங்களை தாங்களே முழுக்க நிர்வாகம் செய்துகொள்ளக்கூடியவை. ஆகவே அவற்றின் நிதி வெளியே உறிஞ்சப்படுவதில்லை. அவற்றுக்கான திட்டங்கள் எதுவும் வெளியே போடப்படுவதில்லை. யார் அத்திட்டங்களின் பலன்களை அனுபவிக்கிறார்களோ அவர்களே அத்திட்டங்களைச் செயல்படுத்துவார்கள். அவை தவறாக ஆனால் பாதிக்கப்படுவதும் அவர்களே. ஆகவே திட்டங்களை உடனடியாக அவர்களால் திருத்திக்கொள்ள முடியும்
அந்த அமைப்பில் அரசு என்பது ஓர் எளிய நிர்வாக-சமரச அமைப்பாக மட்டுமே இருக்கும். அதற்கு நிதி மற்றும் திட்டம் சார்ந்த வேலைகள் ஏதும் இருக்காது. மாபெரும் வரிவசூல் முறை இருக்காது. நேரடியாக அது உற்பத்தியிலும் வினியோகத்திலும் ஈடுபடாது. ஆகவே மாபெரும் அதிகாரிகள்கூட்டமைப்புக்கான தேவை இருக்காது. ஆகவே ஊழலுக்கு அங்கே இடமே இல்லை.
காந்தி இறந்து கால்நூற்றாண்டு கழிந்தபின்னர் மேலைச்சமூகத்தின் முக்கியமான அறிஞர்கள் தொழில்நுட்பத்தின் வன்முறையைப் பற்றி மிக விரிவாகவே பேசியிருக்கிறார்கள். பின்நவீனத்துவ யுகமே தொழில்நுட்பத்தின் மீதான ஐயத்தில் இருந்து உருவானதே. இன்றைய நவீனத்தொழில்நுட்பம் போரில்லாமல் வளரவே முடியாத ஒன்று என்று இப்போது கூறுபவர்கள் பின்நவீனத்துவர்கள். நவீனத்தொழில்நுட்பத்தின் மைய ஆளுமைகள் அனைவருமே போருடன் தொடர்புடையவர்கள் என்பது வரலாறு.
அந்த அளவுக்கு யோசிக்க வேண்டியதில்லை. உங்கள் வீட்டருகே ஒரு தொழிற்சாலை வருவதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா என்ற கேள்வியை மட்டும் கேட்டுக்கொண்டால் போதும். மாட்டீர்கள். அது வேறெங்காவது இருந்தாகவேண்டும். உங்களுக்காக அதை உங்களை விட எளிய வேறு எவரோ அதை சகித்துக்கொள்ள வேண்டும்.
சென்னை மக்கள் தங்கள் குப்பைகளையும் ஆலைக்கழிவுகளையும் கொடுங்கையூர் சகித்துக்கொள்ளட்டும் என எண்ணுவார்கள். சிகாகோ மக்கள் தங்கள் குப்பைகளை கப்பல் கப்பலாக ஏற்றி கொண்டுவந்து சென்னையில் கொட்டுவார்கள். உலகம் முழுக்க இன்று நடந்துகொண்டிருப்பது இதுவே. நவீனத்தொழில்நுட்பம் உலகத்திற்கு அளித்த கொடைகளை இதைப்பற்றிப் பேசாமல் எவரும் விவாதிக்க முடியாது.
காந்தி நவீனத்தொழில்நுட்பத்தை ஒட்டுமொத்தமாக எதிர்க்கிறாரா? இல்லை. அவர் எதிர்ப்பது அதில் உள்ளடங்கியிருக்கும் வன்முறையை மட்டுமே. காந்தி நவீனத்தொழில்நுட்பத்தின் பல அம்சங்களை ஏற்றுக்கொண்டவர். நவீனத்தொழில்நுட்பம் அதிலுள்ள பேராசையையும் வன்முறையையும் விட முடியுமென்றால் அது காந்திக்கு ஒவ்வாததாக இருக்க வாய்ப்பில்லை.
காந்தியின் இந்த இலட்சிய சமூக அமைப்பின் சாத்தியக்கூறுகள் என்ன? அது மனித நாகரீகத்துக்கு எதையாவது அளிக்க முடியுமா? அல்லது வெறும் கனவு மட்டும்தானா அது? நடைமுறையில் அது எங்காவது எவ்வகையிலாவது சாத்தியமாகியிருக்கிறதா?//19:19DeleteUndo deleteReport spamNot spam

Arangasamy K.V - எப்படி காந்தி தொழில்நுட்பத்தை ஐயப்பட ஆரம்பித்தார்? லண்டனில் வசித்தபோது காந்தி தொழிற்புரட்சியின் மானுடக்கழிவுகள் என்று சொல்லத்தக்க கீழ்மட்ட உழைப்பாளிகளுடன் சேர்ந்து வாழ்ந்தார். அவர்களுடன் தன்னை அடையாளம் கண்டவர் காந்தி. பின்னர் இந்தியாவின் கோடானுகோடி உழைப்பாளர்களிடம். அதாவது நவீனத் தொழில்நுட்பம் மேலான வாழ்க்கையை உருவாக்கும் என நம்பியவர்கள் அதை மேலே இருந்து பார்த்தார்கள். காந்தி அதை கீழே இருந்து பார்த்தார்.
காந்தி தொழில்நுட்பத்தில் உள்ள வன்முறையை உணர்ந்தார். அது சுரண்டலையும் ஆதிக்கத்தையும் வலிமைப்படுத்துவதை கவனித்தார். அவருக்குக் கண்கூடான உதாரணங்கள் ஏராளமாக இருந்தன. பிரிட்டனின் நெசவாலைகள் இந்திய கைத்தறி நெசவை முற்றாக அழித்து கோடிக்கணக்கான மக்களை தெருப்பிச்சைக்காரர்களாக ஆக்கி பல்லாயிரக்கணக்கில் சாகவிடுவதை அவர் கண்டார். தொழிற்சாலைக்குரிய கச்சாப்பொருட்களான அவுரியும் சணலும் பயிடுவதற்காக விளைநிலங்கள் பயன்படுத்தப்பட்டமையால் வங்கப்பஞ்சத்தில் பல லட்சம்பேர் செத்ததை கண்டார். இந்தப் பேரழிவுகள் தொழில்நுட்பம் இல்லாத காலங்களில் இல்லை என்பதை அவர் கவனித்தார்.19:21DeleteUndo deleteReport spamNot spam

Arangasamy K.V - மேலும் இயந்திரமயமாதலின் விளைவாக உருவாகும் அதீதமான உற்பத்தி என்ற கருதுகோள் சமூகத்தை அதீத நுகர்வு என்ற தளத்துக்கு தள்ளிச்செல்கிறது. உற்பத்தி செய்தபின் அதை விற்கும் பொருட்டு விளம்பரம் மூலம் தேவை உருவாக்கப்படுகிறது. இது பொருளியல்ரீதியாக பார்த்தால் தலைகீழாக நடப்பது போன்றது. இந்தவகையான உற்பத்திவெறியை இயற்கை தாங்காது, இதன் மூலம் எதிர்விளைவுகளே உருவாகும் என்று காந்தி எண்ணினார்.
ரயிலையே எடுத்துக்கொள்வோம். போக்குவரத்துக்கு ரயில் இன்றியமையாதது. அது நிலங்களை இணைக்கிறது. ஆனால் நாம் ரயிலை ஏன் பயன்படுத்துகிறோம்? ராஜஸ்தானத்து சலவைக்கல்லை வெட்டி கன்யாகுமரியில் வீட்டில் தரைபோடுவதற்கு ரயில் பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம் உருவாகும் உழைப்புச்செலவும் எரிபொருள்செலவும் அர்த்தமே இல்லாதவை. ஏன் இதைச் செய்கிறோம் என்றால் ரயில் இருப்பதனால்தான். அதாவது தொழில்நுட்பம் நுகர்வை உருவாக்குகிறது. இது ஓர் அழிவுப்போக்கு என்றார் காந்தி.
காந்தியின் காலகட்டத்தில் வாழ்ந்த அனேகமாக அனைவருமே நவீனத்தொழில்நுட்பத்தின் பக்தர்களாகவே இருந்தார்கள். நேரு, அம்பேத்கார், தாகூர். அனைவருமே காந்தியின் தொழில்நுட்பம்சார்ந்த கருத்துக்களை கடுமையாக எதிர்ப்பவர்களாக இருந்தார்கள். சொல்லப்போனால் அவர்கள் காந்தியை ஏளனம்தான் செய்தார்கள். அவர்களைப்பொறுத்தவரை நவீனத்தொழில்நுட்பம் என்பது மானுட சாதனை, மானுடத்தை அதன் அனைத்து சரிவுகளில் இருந்தும் மீட்க வந்த வரம்.
இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர்தான் நவீன தொழில்நுட்பம் மற்றும் தொழில்புரட்சியைப்பற்றிய ஐயங்களுக்கு அரசியல் முக்கியத்துவம் கிடைத்தது. அதன்பின்னர்தான் காந்தியை மேலெடுத்துச் செல்லும் சிந்தனைகள் பல தளங்களில் உருவாயின. அந்தச் சிந்தனைகளில் இருந்து பின் நவீனத்துவ சிந்தனைகள் உருவாயின. பின் நவீனத்துவ காலகட்டத்தில்தான் காந்தி மறு கண்டுபிடிப்புசெய்யப்பட்டார்.
நவீனப் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப சிந்தனையாளர்களில் காந்தியின் சிந்தனைகளுடன் பெருமளவுக்கு ஒத்துப்போகும் பலரை இன்று நாம் அடையாளம் காணலாம். அவர்கள் முறையான ஆய்வாளர்கள் என்பதனால் காந்தி சொன்ன ஐயங்களையும் மறுப்புகளையும் மிக விரிவான தரவுகள் மூலம் மேலும் ஆழமாக முன்வைத்திருக்கிறார்கள். காந்தியின் சிந்தனைகளை விரிவாக முன்னெடுத்திருக்கிறார்கள்.19:23DeleteUndo deleteReport spamNot spam

41 previous comments from Prime Point Srinivasan, தியாக ராஜன், Arangasamy K.V and 3 others
தியாக ராஜன் - தொழில் நுட்பம் வளர்ந்துள்ளதான் நமது இன்றைய உரையாடல் சாத்தியமானது
அது போக தொழில் நுட்பம் வன்முறையாக உள்ளதா உற்பத்தியின் சமூகவயமாகவும்
சுவீகரிப்பு தனியுடமையாகவும் உள்ளது
வன்முறையாக உள்ளதா
அரசின் தோற்றமே வர்க்க சார்பானதுதானே
வர்க்கம் சாதியுடன் இணைந்து நிலவுவது பற்றி
பேசாமல் வர்க்க பிரிவினையை பற்றி பேசாமல்
ஒரு ஐடியல் கிராமத்தை கற்பனை செய்வது எளிதானது
கற்பனாவாத சோசலிஸ்டுகள் செய்தது இதைத்தான் ஆனால் விஞ்ஞான ரீதியில்
உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி தவிக்க முடியாதது
அதை வன்முறை என்று கூற முடியாது
உருளை கிழங்கை வேகவைப்பது வன்முறையாகிடுமா ?
உற்பத்தி சக்திகள் வளரும்போது உற்பத்தி உறவுகள் வளர்ச்சி தவிர்க்க முடியாதவை
உற்பத்தி சக்திகளே வளரவிடாமல்
தனிஒரு தீவில் வாழ முடியுமா
தொழிற்சாலையை வீட்டின் அருகில்
வைப்பீர்களா என கேட்கிறீர்கள்
ஆனால் என்னை கேட்டுகொண்டு தொழிற்சாலை யாரும் அமைப்பதில்லை
புறவய தர்க்கம் சமூக உணர்வை சார்ந்தது இல்லை என்கிறார் லெனின்
ஆகவே உற்பத்தி சக்திகள் வர்க்க பிரிவினை
இவற்றை எல்லாம் விட்டுவிட்டு
ஒரு சமூக எப்படி முழுமையாக இருக்கும்
வன்முறை கூடாது என்பது நமது வேண்டுகோள் அல்லது ஆசை ஆனால்
சமூகம் வன்முறையால் நிரம்பி இருக்கிறது
யதார்த்தம்
ஆகவே இந்த எதார்த்தை உணர்ந்து கொண்டு அதை மாற்ற அதை ஆய்வு செய்யனு ம்
அது காந்தியிடம் இல்லை என்கிறேன்
அதிகார மையங்களே ஆகாது என சொல்லும் பின் நவீனத்துவம் கூட
தீர்வாக எதையும் சொல்வதில்லை
ஒரு பக்கம் நமது கற்பனை மறுபக்கம் சமுக உண்மை யை விஞ்ஞான ரீதியா பார்பது என்பதில் காந்தி கற்பனா வாதியாகத்தான் தெரிகிறார் இல்லையா?Edit19:33DeleteUndo deleteReport spamNot spam

தியாக ராஜன் - அய்யா இந்த விவாதத்தை எனது பிளாக்கில் சேமிக்கிறேன் -பிற்பாடு உதவும்