மூலதனம் என்பது நிலமாக கருவிகளாக .அடிமைகளாக
இருந்த போது அதன்வளர்ச்சியை ஆராய இயலவில்லை ஆனால் மூலதன எப்போது
பண வடிவில் வந்ததோ அப்போது அதை ஆராய முடிந்தது.
தொழில் ஆரம்பிக்கும் முன்பு இந்த மூலதனம்
இருந்ததான்னு கேட்டீங்கன்னா இல்லை என்பதே பதில், கைவினைஞர்கள் இருந்தார்கள் .
அவர்கள் ஒரு பொருளை தயாரிக்க எடுத்து கொள்ளும்
நேரத்தை கணக்கிட்டு விற்றார்கள் அல்லது பொருளை கொடுத்து பண்டங்களை வாங்கி சென்றார்கள்.
சிறு பட்டறைகள் எல்லாம் அப்படித்தான் இயங்கின.
எப்போது நீராவி இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டு
பெரு அளவில் உற்பத்தி துவங்கியதோ அப்போதுதான் முதலீடு தேவை பட்டது ( உற்பத்தி கருவிகளின்
வளர்ச்சி அல்லது முன்னேற்றம்).
முதலீடுகளை போட்டு ஆரம்பித்தது யாருன்னு
பார்த்தால் இந்த நிலபிரபுக்களில் சிலர்தான். தொழில் முதலாளிகளாக வளர்ச்சி அடைந்தார்கள்.
ஒவ்வொரு சமூகத்தின் அடிவயிற்றில் இருந்துதான் அடுத்த சமூகம் பிரசவிக்கிறது என்கிறார்
மார்க்ஸ் –
மூலதனம் உபரி மதிப்பை தோற்று விக்கிறது
இந்த உபரி மதிப்பை
எப்படி கணக்கிடுவது (இந்த பகுதிகள் இன்னொரு தோழரின் பிளாக்கில் இருந்து
எடுத்தாண்டு இருக்கிறேன் )
நம்முடைய உதாரணத்தை எடுத்துக்கொள்வோம் இதில் இரண்டு வழி முறைகள் உள்ளன, முதலாளித்துவ வழிமுறை, மார்க்சிய வழிமுறை
முதலில் முதலாளித்துவ வழிமுறையைப் பார்ப்போம் நிலம்,

கட்டிடம்
இவற்றின் ஒரு நாள் வாடகை
= 10 ரூபாய்
மின்சார செலவு = 10 ரூபாய்
இயந்திரத்தின் ஒரு நாள் வாடகை = 10 ரூபாய்
மூலப் பொருள் = 100 ரூபாய்
கூலி (12 மணிநேர உழைப்புக்கு) = 100 ரூபாய்
இவற்றில் நிலம், கட்டிடம், இயந்திரம் ஆகியவை நிலைத்த மூலதனம் என்றும், மின்சார செலவு, மூலப் பொருள், கூலி ஆகியவை சுற்றோட்ட மூலதனம் என்றும் பிரிக்கப்படுகிறது.
உபரி மதிப்பின் வீதம் = (உபரி உழைப்பின் மதிப்பு / மொத்த மூலதனம்) X 100
8 மணிநேர உழைபுக்கு 100 ரூபாய் கூலி என்றால், 12 மணிநேரத்துக்கு 150 ரூபாய் ஆகும்.
எனவே உபரி உழைப்பின் மதிப்பு 50 ரூபாய் ஆகிறது. உபரி மதிப்பின் வீதம் = (50/230)X100 = 21.73% ~ 20% ஆகிறது. முதலாளித்துவ சமூகம் உபரிமதிப்பை இப்படிதான் கணக்கிடுகிறது.
ஆனால் மார்க்ஸ் இது தவறு என்று நிரூபிக்கிறார்: எப்படி
மார்க்சிய வழிமுறை உபரி மதிப்பை கணக்கிடும் போது எந்த மூலதனம் உபரியை தருகிறதோ அதை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும், மொத்த மூலதனத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது. அதாவது மார்க்ஸ் மூலதனத்தை இரண்டு பிரிவுகளாக பிரிக்கிறார் நிலம், கட்டிடம், இயந்திரம், மின்சார செலவு, மூலப்பொருள் இவை எல்லாம் உபரி மதிப்பை தோற்றுவிப்பதில்லை என்பதால் இவை மாறா மூலதனம் எனப்படுகிறது.
கூலி மட்டுமே உபரி மதிப்பைத் தோற்றுவிப்பதால், அது மட்டுமே மாறும் மூலதனம் ஆகும். இதை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்
உபரி மதிப்பின் வீதம் = (உபரி உழைப்பின் மதிப்பு / மாறும் மூலதனம்) X 100
உபரி மதிப்பின் வீதம் = (50 / 100) X 100 = 50% எனவே முதலாளித்துவ அறிஞர்கள் சொல்வது போல, உபரி மதிப்பின் வீதம் 20% அல்ல, அது 50% என்பதை மார்க்ஸ் நிரூபிக்கிறார்.
8 மணிநேர உழைப்புக்கான கூலியை பெற்றுக் கொண்டு ஒரு தொழிலாளி 12 மணிநேரம் உழைக்கிறார். கூடுதலான அந்த 4 மணிநேர உழைப்பின் மதிப்பை முதலாளி எடுத்துக் கொள்கிறார். ஏன்,
உற்பத்திசாதனங்கள் (நிலம், கட்டிடம், இயந்திரம்) எல்லாம் முதலாளிக்கு சொந்தமாக இருக்கிறது. தொழிலாளிக்கு தன்னுடைய உழைப்பு சக்தியைத் தவிர வேறு எதுவுமே சொந்தமாக இல்லை. இதனாலேயே, உபரி மதிப்பை முதலாளி எடுத்துக் கொள்வது என்பது நியாயப்படுத்தப்படுகிறது. இயந்திரம், கட்டிடம் எல்லாம் வானத்தில் இருந்து வந்தவை அல்ல, அதுவும் தொழிலாளர்களின் உழைப்புதான். இதைதான் மார்க்ஸ் இறந்த கால உழைப்பின் மீது நிகழ்கால உழைப்பு வினை புரிகிறது என்றார்.
(உற்பத்தி சாதனங்கள் எல்லாம் ஒரு தனி மனிதனுக்கு எப்படி சொந்தமானது என்பது தனி வரலாறு.)
நம்முடைய உதாரணத்தில் 270 ரூபாய் மதிப்புக்கொண்ட நூலை 230 ரூபாய்க்கே தயாரித்துவிடுகிறார் அந்த முதலாளி. அதில் 50 ரூபாய் உபரிமதிப்பு என்று ஆகிறது.

250 ரூபாய்க்கு மொத்த வியாபாரியிடம் விற்று 30 ரூபாயை தான் எடுத்துக்கொள்கிறார். மொத்தவியாபாரி, 260 ரூபாய்க்கு சில்லறைவியாபாரியிடம் விற்று 10 ரூபாயை தான் எடுத்துக் கொள்கிறார்.
சில்லறைவியாபாரி, அதன் உண்மை மதிப்பான 270 ரூபாய்க்கு நுகர்வோரிடம் விற்று 10 ரூபாயை தான் எடுத்துக் கொள்கிறார். இப்படியாக ஒரு தொழிலாளியால் உற்பத்தி செய்யப்பட்ட உபரிமதிப்பை, இந்த சமூகம் பலவாறாக தனக்குள் பிரித்துக்கொள்கிறது.
ஆகவே உண்மையாகவே முதல் மூலதனம் என்பதை முதலாளி போட்டாலும் உழைப்பாளர்களின் உழைப்பு மூலமே - கேபிடல் வளருகிறது
Surplus value is an economic theory
used by the German philosopher and economist Karl Marx to condemn
capitalist-style economic systems. It is the difference between a
worker’s wage and the price of a good or service produced by that
worker. This theory is based on the fact that workers provide value
through the labor used to produce goods and services. Marx also believed
that other economic concepts, such as capitalism or imperialism, did
not properly value the workers to produce goods or the surplus value
created by their labor.
This type of value does not relate to the actual value of a physical economic resource or good. This added value is realized through the labor needed to produce the resource or good, which increases the value of the item above its original cost. Marx believed that individual workers and their productivity is what really determined the value of consumer goods or services.

The amount of labor used to produce a good or service is
how Marx believed profit could be accumulated in the economy. The
surplus value concept used by Marx stated that workers not only create economic value
through the wages paid to them, but also through the additional value
of transforming economic resources into valuable products. This allowed
economies to experience more profit through producing goods, rather than
simply earning income from the sale of property. Marx believed this
additional income could be used to benefit individual works by allowing
them to keep a certain amount of their value added through labor.
Marx developed the economic formula known as the label theory of value based on his belief in surplus value. This formula was used to determine how much value an individual worker’s labor provided in the economic environment. The basic formula for this theory was to divide the total profits from goods sold by the total cost of wages paid to produce those goods. The result of this formula is the rate of surplus value, which Marx believed should be appropriated from companies to the employees. Businesses should able to maximize the rate of surplus value by paying sufficient wages to workers for a set amount of hours, with the expectation of a set amount of productivity. Underpaying workers would allow companies to exploit the labor force while demanding the same amount of productivity. This would drive down the surplus value of goods produced and weaken the overall economy, according to Marx’s theory.

கூலியுழைப்பும் மூலதனமும்
(கார்ல் மார்க்ஸ்)
தமிழாக்கம்: மு.சிவலிங்கம்
(கார்ல் மார்க்ஸ்)
தமிழாக்கம்: மு.சிவலிங்கம்
கூலி என்பது என்ன? அது எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?
“உங்களுக்குக் கிடைக்கும் கூலி எவ்வளவு?” என்று பல தொழிலாளர்களிடம்
கேட்டால், ஒருவர் ”எனக்கு ஒரு ஷில்லிங் கிடைக்கிறது” என்றும், இன்னொருவர்
“எனக்கு இரண்டு ஷில்லிங் கிடைக்கிறது” என்றும் பலவகையாகப் பதில் அளிப்பர்.
ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்து முடிப்பதற்குத் தத்தம் முதலாளிகளிடமிருந்து
பெறுகின்ற கூலியாக அவர்கள் வேலை செய்யும் தொழில்துறையின் வெவ்வேறு
பிரிவுகளுக்கு ஏற்ப வெவ்வேறு தொகையைக் குறிப்பிடுவர். எடுத்துக்காட்டாக,
ஒரு கஜம் துணி நெய்வதற்காக அல்லது ஓர் அச்சுப் படிவத்துக்கு வேண்டிய
அச்சுகளைக் கோப்பதற்காக எனக் குறிப்பிடலாம். இவர்களின் கூற்றுகள் பலவிதமாக
இருப்பினும், ஒரு விஷயம் குறித்து இவர்கள் அனைவரும் உடன்படுவர்:
குறிப்பிட்ட வேலைநேரத்துக்காக அல்லது குறிப்பிட்ட அளவு வேலைக்காக முதலாளி
வழங்கும் பணத்தொகையே கூலி ஆகும்.
இதிலிருந்து, முதலாளி பணம்கொடுத்து இவர்களின் உழைப்பை வாங்குவதாகவும், பணத்துக்காக இவர்கள் தம் உழைப்பை முதலாளிக்கு விற்பதாகவும் தோன்றுகிறது. ஆனால் இது வெறும் பொய்த்தோற்றமே ஆகும். உண்மையில், தொழிலாளர்கள் பணத்துக்காக முதலாளியிடம் விற்பது அவர்களின் உழைப்புச் சக்தியை. இந்த உழைப்புச் சக்தியை ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதம் என்பதுபோல [ஒரு கால அளவுக்கு] முதலாளி விலைக்கு வாங்குகிறார். இவ்வாறு உழைப்புச் சக்தியை விலைக்கு வாங்கியபின், குறிப்பிட்ட அந்தக் கால அளவுக்குத் தொழிலாளியை வேலை செய்ய வைப்பதன்மூலம், அவர் அதைப் பயன்படுத்திக் கொள்கிறார். தொழிலாளியின் உழைப்புச் சக்தியை முதலாளி வாங்கிய அதே பணத்துக்கு (எடுத்துக்காட்டாக இரண்டு ஷில்லிங்), அவர் குறிப்பிட்ட அளவு சர்க்கரையை வாங்கியிருக்கலாம் அல்லது வேறொரு பண்டத்தை வாங்கியிருக்கலாம். இரண்டு ஷில்லிங் கொடுத்து 20 பவுண்டு சர்க்கரை வாங்கியிருப்பின், அந்த இரண்டு ஷில்லிங், 20 பவுண்டு சர்க்கரையின் விலை ஆகிறது. 12 மணிநேரப் பயன்பாட்டுக்கென உழைப்புச் சக்தியை வாங்க அவர் கொடுத்த இரண்டு ஷில்லிங், 12 மணிநேர உழைப்புக்கான விலை ஆகும். ஆக, உழைப்புச் சக்தியும் சர்க்கரையைப் போன்றே சற்றும் கூடக்குறைவின்றி ஒரு பண்டமே ஆகும். முன்னது கடிகாரத்தின்மூலம் அளக்கப்படுகிறது, பின்னது தராசுமூலம் அளக்கப்படுகிறது.
தொழிலாளர்கள் தங்கள் பண்டமாகிய உழைப்புச் சக்தியை முதலாளியின் பண்டத்துக்காக அதாவது பணத்துக்காகப் பரிவர்த்தனை செய்கின்றனர். இந்தப் பரிவர்த்தனை குறிப்பிட்ட ஒரு விகிதத்தில் நடைபெறுகிறது. இவ்வளவு நேரம் உழைப்புச் சக்தியைப் பயன்படுத்திக்கொள்ள இவ்வளவு பணம் என்பதாக. 12 மணிநேர நெசவுக்கு இரண்டு ஷில்லிங் என்போம். இந்த இரண்டு ஷில்லிங் என்பது, இரண்டு ஷில்லிங்குக்கு நான் வாங்கக்கூடிய பிற பண்டங்கள் அனைத்தையும் குறிப்பிடுகிறது அல்லவா? ஆகவே, உண்மையில் தொழிலாளி தம் பண்டமாகிய உழைப்புச் சக்தியை அனைத்து வகையான பண்டங்களுக்காகவும் பரிவர்த்தனை செய்துகொள்கிறார். தவிரவும், குறிப்பிட்ட ஒரு விகிதத்தில் பரிவர்த்தனை செய்து கொள்கிறார். முதலாளி தொழிலாளிக்கு இரண்டு ஷில்லிங் கொடுப்பதன்மூலம், அவரின் ஒருநாள் உழைப்புக்குப் பதிலாகக் கொஞ்சம் இறைச்சியும், கொஞ்சம் துணிமணியும், கொஞ்சம் விறகும், விளக்கு வெளிச்சமும், இன்ன பிறவும் தந்துள்ளார். எனவே, இரண்டு ஷில்லிங் என்பது பிற பண்டங்களுக்காக உழைப்புச் சக்தியைப் பரிவர்த்தனை செய்துகொள்ளும் விகிதத்தைக் குறிக்கிறது. அதாவது, உழைப்புச் சக்தியின் பரிவர்த்தனை மதிப்பைக் குறிக்கிறது.
பணத்தில் கணக்கிடப்படும் ஒரு பண்டத்தின் பரிவர்த்தனை மதிப்பு அப்பண்டத்தின் விலை எனப்படுகிறது. எனவே, கூலி என்பது உழைப்புச் சக்தியின் விலையைக் குறிக்கும் ஒரு தனிச்சிறப்பான பெயராகும். பொதுவாக, இது உழைப்பின் விலை என்று அழைக்கப்படுகிறது. மனிதனின் சதையையும் குருதியையும் தவிர வேறு சேமிப்பிடம் இல்லாத இந்தத் தனித்துவம் கொண்ட பண்டத்தின் [உழைப்புச் சக்தியின்] விலையைக் குறிக்கும் தனிச்சிறப்பான பெயர்தான் கூலி.
யாரேனும் ஒரு தொழிலாளியை எடுத்துக் கொள்வோம். எடுத்துக்காட்டாக, ஒரு நெசவாளியை எடுத்துக் கொள்வோம். முதலாளி இவருக்குத் தறியும் நூலும் தருகிறார். நெசவாளி வேலையில் ஈடுபடுகிறார். நூல் துணியாக மாற்றப்படுகிறது. முதலாளி இந்தத் துணியைத் தன்வசமாக்கிக் கொண்டு அதனை விற்கிறார். 20 ஷில்லிங்குக்கு விற்பதாகக் கொள்வோம். இப்போது நெசவாளிக்குக் கிடைக்கும் கூலியானது துணியில் ஒரு பங்கா? 20 ஷில்லிங்கில் ஒரு பங்கா? அவருடைய உழைப்பில் உருவான பொருளில் ஒரு பங்கா? இல்லவே இல்லை. துணி விற்கப்படுவதற்குப் பல நாட்கள் முன்பே, அனேகமாக அது நெய்து முடிக்கப்படுவதற்குப் பல நாட்கள் முன்பே, நெசவாளி தன் கூலியைப் பெற்றுக் கொண்டுவிடுகிறார். அதாவது, முதலாளி இந்தத் துணியின்மூலம் தாம் பெறப்போகும் பணத்திலிருந்து நெசவாளியின் கூலியைத் தரவில்லை. ஏற்கெனவே தம் கையிருப்பிலுள்ள பணத்திலிருந்துதான் தருகிறார். தறியும் நூலும் முதலாளி நெசவாளிக்குத் தந்தவையே தவிர, நெசவாளி உற்பத்தி செய்த பொருள்கள் அல்ல. அதுபோலவே, நெசவாளி தன் பண்டமாகிய உழைப்புச் சக்திக்குப் பரிவர்த்தனையாகப் பெற்றுக்கொள்ளும் பண்டங்களும் அவர் உற்பத்தி செய்த பொருள்கள் அல்ல. முதலாளி விற்கும் துணியை வாங்குவதற்கு ஒருவர்கூட இல்லாமல் போகலாம். முதலாளிக்குத் துணியின் விற்பனையிலிருந்து கூலியின் தொகைகூடக் கிடைக்காமல் போகலாம். நெசவாளியின் கூலியோடு ஒப்பிடுகையில் மிகவும் இலாபகரமாக முதலாளி துணியை விற்பதும் சாத்தியமே. ஆனால், இவற்றோடெல்லாம் நெசவாளிக்கு எந்தத் தொடர்பும் இல்லை. முதலாளி தம்மிடம் ஏற்கெனவே உள்ள செல்வத்தின் அதாவது தமது மூலதனத்தின் ஒரு பகுதியைக் கொண்டு நெசவாளியின் உழைப்புச் சக்தியை விலைக்கு வாங்குகிறார். தம் செல்வத்தின் பிறிதொரு பகுதியைக் கொண்டு மூலப்பொருளான நூலையும் உழைப்புக் கருவியாகிய தறியையும் எப்படி அவர் விலைக்கு வாங்கியுள்ளாரோ முற்றிலும் அதே முறையில்தான் நெசவாளியின் உழைப்புச் சக்தியையும் வாங்குகிறார். துணியின் உற்பத்திக்குத் தேவையான உழைப்புச் சக்தி உட்பட இவை அனைத்தையும் வாங்கியபின் முதலாளி தமக்குச் சொந்தமான மூலப் பொருள்களையும் உழைப்புக் கருவிகளையும் மட்டுமே கொண்டு துணியை உற்பத்தி செய்கிறார். ஏனெனில், நமது அருமை நெசவாளியும் இந்த உழைப்புக் கருவிகளுள் ஒரு கருவியாகவே இருக்கிறார். இந்த வகையில் நெசவாளியும் தறியைப் போலவேதான். உற்பத்திப் பொருளிலோ (துணி), அப்பொருளுக்குக் கிடைக்கும் விலையிலோ தறிக்குக் கிடைக்கும் பங்கைவிட[!] நெசவாளிக்குக் கூடுதலான பங்கு எதுவும் இல்லை.
ஆக, கூலியானது தொழிலாளி உற்பத்தி செய்யும் பண்டத்தில் அவருக்குரிய பங்கு அல்ல. ஏற்கெனவே இருந்துவரும் பண்டங்களில் எப்பகுதியைக் கொண்டு முதலாளி உற்பத்தித் திறனுள்ள ஒரு குறிப்பிட்ட அளவு உழைப்புச் சக்தியை வாங்குகிறாரோ, அப்பகுதியே கூலியாகும்.
இவ்விதமாக, உழைப்புச் சக்தி என்பது அதன் உடைமையாளராகிய கூலித் தொழிலாளி, முதலாளிக்கு விற்கும் ஒரு பண்டமாகும். ஏன் அவர் அதை விற்கிறார்? உயிர் வாழ்வதன் பொருட்டு.
ஆனால், உழைப்புச் சக்தியைச் செயலாக்குவது அதாவது வேலையில் ஈடுபடுவது தொழிலாளியினுடைய சொந்த உயிரின் துடிப்பான வெளிப்பாடாகும். அவருக்குத் தேவையான பிழைப்பாதாரப் பொருள்களைப் பெறும்பொருட்டு, இந்த உயிர்ச் செயல்பாட்டை அவர் வேறொரு நபருக்கு விற்கிறார். எனவே, அவருடைய உயிர்ச் செயற்பாடு என்பதே அவர் தன் சொந்தப் பிழைப்பை நடத்துவதற்கான ஒரு வழிமுறையே ஆகும். தன்னை உயிரோடு வைத்துக் கொள்ளவே வேலை செய்கிறார். உழைப்பையேகூட அவர் தன் வாழ்வின் ஒரு பகுதியாகக் கருதவில்லை. சொல்லப்போனால் அவருடைய வாழ்வின் தியாகமாகவே கருதலாம். உழைப்பு என்பது அவர் வேறொருவருக்குக் கூவி விற்றுவிட்ட ஒரு பண்டமாகும். எனவே, அவருடைய செயல்பாட்டில் உற்பத்தியான பொருள் அவருடைய செயல்பாட்டின் குறிக்கோள் அல்ல. அவர் தனக்காக உற்பத்தி செய்வது, அவர் நெய்யும் பட்டல்ல, சுரங்கத்தின் ஆழ்குழியில் அவர் வெட்டியெடுக்கும் தங்கம் அல்ல, அவர் கட்டியெழுப்பும் மாளிகை அல்ல. அவர் தனக்காக உற்பத்தி செய்வது கூலி மட்டுமே. [அவர் உற்பத்தி செய்யும்] பட்டும், தங்கமும், மாளிகையும், வாழ்க்கைத் தேவைகளான குறிப்பிட்ட அளவுள்ள சில பொருள்களாக அவருக்கென உருமாற்றம் பெற்றுக் கிடைகின்றன. அவை அனேகமாக பருத்தியாலான ஒரு கோட்டு, சில செப்புக் காசுகள், தரைகீழ்த் தளத்தில் ஓர் உறைவிடமாக இருக்கலாம். மேலும் தொழிலாளி 12 மணிநேரம் தொடர்ந்து நெய்கிறார், நூற்கிறார், துளையிடுகிறார், கடைகிறார், கட்டடம் கட்டுகிறார், மண் வெட்டுகிறார், கல் உடைக்கிறார், சுமை தூக்குகிறார், இன்னபிற வேலையைச் செய்கிறார். இந்த 12 மணிநேர நெய்தல், நூற்றல், துளைத்தல், கடைதல், கட்டுதல், மண்வெட்டல், கல் உடைத்தல் வேலையைத் தொழிலாளி தன் வாழ்வின் புலப்பாடாக, தன் வாழ்வாகக் கருதுகிறாரா? இல்லை, நிலைமை முற்றிலும் நேர்மாறானது. இந்தச் செயல்பாடு முடிவடைந்த பிறகுதான் அவருக்குச் சாப்பாட்டு மேஜையில், மது விடுதியில், படுக்கையில் வாழ்வு தொடங்குகிறது. இன்னொரு புறம், இந்த 12 மணிநேர வேலை என்பது அவரைப் பொறுத்தவரை நெய்தல், நூற்றல், துளைத்தல் என்றெல்லாம் அர்த்தப்படவில்லை. சாப்பாட்டு மேஜைமுன் உட்கார, மது விடுதியில் தனக்கு இருக்கை பெற, ஒரு படுக்கையில் படுத்துறங்க – இவற்றை அவருக்குப் பெற்றுத் தருகிற ஊதியம் என்று மட்டுமே அர்த்தப்படுகிறது. பட்டு நூலை உருவாக்குவதில் பட்டுப்புழுவின் நோக்கம், புழுவாகவே தன் இருப்பை நீட்டிக்கத்தான் என்று இருக்குமாயின், கூலித் தொழிலாளி என்பதற்குப் பட்டுப்புழு மிகவும் பொருத்தமான ஓர் எடுத்துக்காட்டாய் ஆகிவிடும்.
உழைப்புச் சக்தி எல்லாக் காலங்களிலும் ஒரு பண்டமாக இருக்கவில்லை. உழைப்பு எல்லாக் காலங்களிலும் கூலியுழைப்பாக அதாவது சுதந்திர உழைப்பாக இருக்கவில்லை. அடிமை தன் உழைப்புச் சக்தியை அடிமையுடைமையாளருக்கு விற்கவில்லை – காளைமாடு தன் உழைப்பை விவசாயிக்கு விற்பதில்லை, அதுபோல. அடிமை, அவனுடைய உழைப்புச் சக்தியோடு சேர்த்து, உடைமையாளனுக்கு என்றைக்குமாய் விற்கப்பட்டுவிட்டான். அடிமை என்பவன் ஓர் உடைமையாளன் கையிலிருந்து இன்னொருவன் கைக்கு மாறிச் செல்லக்கூடிய ஒரு பண்டம். அவனே ஒரு பண்டம். ஆனால் அவனுடைய உழைப்புச் சக்தி அவனுடைய பண்டமாக இல்லை. பண்ணையடிமையோ தன் உழைப்புச் சக்தியில் ஒருபகுதியை மட்டுமே விற்கிறான். [உண்மையில் ’விற்கிறான்’ என்ற சொல் இங்கு பொருந்தாது. காரணம், பண்ணையடிமைக்கும் நிலவுடைமையாளனுக்கும் இடையே விற்பது, வாங்குவது என்கிற உறவு கிடையாது. பண்ணையடிமை தன் கப்பத்தை உழைப்பாகவும், பொருளாகவும் நிலவுடையாளனுக்குத் தருகிறான். ‘பதிலீடாகத் தருகிறான்’ என்கிற பொதுவான பொருளிலிலேயே ’விற்கிறான்’ என்ற சொல்லை மார்க்ஸ் பயன்படுத்தியுள்ளார் என்பதை அடுத்த வாக்கியம் தெளிவுபடுத்தும்]. நிலத்தின் உடைமையாளனிடமிருந்து அவன் கூலி பெறுவதில்லை; சொல்லப் போனால் நிலத்தின் உடைமையாளன்தான் அவனிடமிருந்து கப்பம் பெறுகிறான். பண்ணையடிமை நிலத்துக்கு உரித்தானவன். நிலத்தின் விளைச்சலை அவன் அந்நிலத்தின் உடைமையாளனிடம் ஒப்படைக்கிறான். சுதந்திரத் தொழிலாளியோ அவ்வாறில்லாமல், தன்னையே விற்கிறான். அதுவும் சிறுகச் சிறுக விற்கிறான். ஒவ்வொரு நாளும் தன்னுடைய 8, 10, 12, 15 மணிநேர வாழ்க்கையை அதிக விலை தருபவர்க்கு விற்கிறான். மூலப்பொருள்கள், உழைப்புக் கருவிகள், வாழ்க்கைச் சாதனங்கள் இவற்றின் உடைமையாளருக்கு அதாவது முதலாளிக்கு விற்கிறான். தொழிலாளி ஓர் உடைமையாளருக்கோ, நிலத்துக்கோ உரித்தானவன் இல்லை. ஆனால், அவனுடைய 8, 10, 12, 15 மணிநேர அன்றாட வாழ்க்கை அதை எவர் விலைகொடுத்து வாங்கினாலும் அவருக்கு உரித்தாகின்றது. தொழிலாளி தன்னை விற்றுக் கொண்ட முதலாளியிடமிருந்து விலகுவதும், இன்னொரு முதலாளியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதும் அடிக்கடி நிகழ்கிறது. அதேபோல முதலாளியும் தொழிலாளியைத் தகுதியானவன் என்று கருதும்போது சேர்த்துக் கொள்வதும், அவனால் இனி எதுவும் பயனில்லை அல்லது உகந்த பயனில்லை என்று கருதும்போது, அவனை வேலையிலிருந்து தூக்கிவிடுவதும் அடிக்கடி நிகழ்கிறது. ஆனால், தன் உழைப்புச் சக்தியை விற்பதே வருமானத்துக்கான ஒரே ஆதாரமாகக் கொண்டுள்ள தொழிலாளி, ஒட்டுமொத்த வாங்கும் வர்க்கத்திடமிருந்து அதாவது முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து விலகிவிட முடியாது. தன் சொந்தப் பிழைப்பையே உதறித் தள்ளினால் ஒழிய, அது நடக்காது. தொழிலாளி எந்தவொரு தனி முதலாளிக்கும் உரியவன் அல்ல. அவன் முதலாளித்துவ வர்க்கத்துக்கே உரித்தானவன். தன் முதலாளியை அவன் தேடிக்கொள்ள வேண்டும். அதாவது இந்த முதலாளித்துவ வர்க்கத்தினினுள் தன்னை வாங்கிக் கொள்ளும் ஒருவரைத் தேடிக்கொள்ள வேண்டும்.
மூலதனத்துக்கும் கூலியுழைப்புக்கும் உள்ள உறவுபற்றி மேலும் நெருங்கிச் சென்று ஆராயப் புகுமுன், கூலியை நிர்ணயிப்பதில் நம் கவனத்துக்கு வருகின்ற மிகவும் பொதுப்படையான நிலைமைகளைச் சுருக்கமாக இனி எடுத்துரைப்போம்.
நாம் மேலே கண்டவாறு, கூலி என்பது குறிப்பிட்ட ஒரு பண்டத்தின், அதாவது உழைப்புச் சக்தியின் விலை ஆகும். எனவே, ஏனைய பிற பண்டங்களின் விலையை நிர்ணயிக்கும் அதே விதிகள்தாம் கூலியையும் நிர்ணயிக்கின்றன. ஆக, ஒரு பண்டத்தின் விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது என்பதே இங்குள்ள கேள்வி.

Tags
communism