பார்பானுக்கும் பார்பனியத்துக்கும் சம்பந்தம் இல்லையாம்

 

பார்பனியம் என்பது அதற்கெதிரான போராட்டம் வலுபெற்ற இன்றைய காலகட்டத்தில் சில ஆதிக்க சாதி பார்பனர்கள் பார்பனர்களுக்கு பார்பனிய
சாதி ஒடுக்கு முறைக்கும் சம்பந்தமே இல்லை என விவாதிக்கிறார்கள்
அத்தகைய ஒருவிவாதததில் நான் வேறொரு இடத்தில் விவாதித்ததை கீழே
தறுகிறேன்

-தியாகு

-----------------------------------------------------------------------
 
 
 ராஜ சங்கர்உங்களுக்கு பதில் கீழே

//நீங்கள் பார்பனர்கள் எப்போது உயர்ந்த சாதியானார்கள் என்று கேட்டால் அப்படி ஒரு கேள்வியே தவறானது என்றுதான் சொல்வேன். இது இரண்டு வகையான ஊகங்களை உள்ளடக்கியது//


நான் பேசுவது எல்லாம் யூகம் என்றும் நீங்கள் சொல்வது எல்லாம் சரியான
நடைமுறை மற்றும் விஞ்ஞான ரீதியானது என்றும் எப்படி அய்யா முடிவுக்கு வருகிறீர்கள் பிறகு அதற்கு நீங்களா யூகிச்சு ஒரு பதில சொல்லிட்டு
பிறகு கேட்கும் எல்லா கேள்விக்கும் கீழ்கண்ட யூகபதிலை சொல்லிகிட்டே
இருக்கீங்க அல்லது சொல்லியாச்சுன்னு சொல்லி முடிச்சுகிறீங்க

 //1. பார்பனர்கள் வரலாற்றில் எல்லா நேரத்தில் ஒரே இனக்குழுவாக, குலமாக இருந்துவந்துள்ளனர்.
2. அவர்கள் எப்போதும் அரசதிகாரத்தில் இருந்தனர்.

//

பார்ப்பனர்கள் வரலாற்றில் ஒரே இனகுழுவாக இருந்துள்ளார்களா அல்லது
மற்ற இனகுழுவுடன் சேர்ந்து இருந்தார்களா என்பது வாதமாகவே இல்லை மேலும்  பார்பனர்கள் அதிகாரத்துக்கு வந்தது குறித்தும் பேசவில்லை

மாறாக பார்பனர்கள் தங்களது சாதிபடிநிலை அமைப்பை எப்படி கொண்டுவந்தார்கள் எப்படி அனைத்து சாதிக்கும் மேலே சாதியாக உக்கார்ந்தார்கள் அதை நியாயபடுத்த யாரும் கேள்விகேட்காமல் இருக்க
உனக்கு கீழே இவன் அவனுக்கு கீழேஇவன் என சொல்லி அதையும்
தாங்கள் சொல்லாமல் கடவுளின் பேரால் சாட்டி விட்டார்கள்

இந்த படிநிலை அமைப்பால் அவர்கள் என்ன லாபம் அடைந்தார்கள் என்பதைவிட  இன்றுவரை சமூகத்தில் ஒரு பகுதி மக்கள்
மலம் அள்ளவும், செருப்பு தைக்கவும் வைக்ககூடிய ,பெண்களை ஒடுக்கக்கூடிய
ஒரு கருத்தியலான பார்ப்பனியம் இருந்துவருகிறது என்பது பேசப்படவேண்டியது

//இந்திய வரலாற்றில் இந்த இரண்டும் நடந்ததில்லை. ஆங்கிலேயர் அரசு அமைத்தபின் 1920க்கு மேலிருந்துதான் கிளார்க்குகளாகவும் மற்ற பதவிகளும் பார்பனர்கள் பெரும் பங்கு வகித்தனர். அதற்கு முன் கிடையாது. இந்தியா சுதந்திரம் அடையும் முன் இந்த சம்ஸ்தானங்களில் மந்திரி பதவிகளில் பார்பனர்கள் எத்துனை சதவீதம் என்று பார்த்தால் எல்லா ஆதிக்க, இடைநிலை சாதிகள் போலவே அவர்களும் பதிவி வகித்துள்ளனர். //

மேற்கண்ட உங்கள் கூற்று நகைப்புக்கிடமானது  ஏனெனில் மதம்
வேதம் இதை அமல்படுத்த ஒருவன் கிளார்க்காக மத சடங்கை செய்ய சொல்ல
ஒருவன் மந்திரியாக இருக்கவேண்டியதில்லை  மாறாக அவன் கடவுளின் தூதுவனாக  சாமிக்கு அடுத்தபடியாக் மக்கள் தன்னையும் சாமின்னு அழைக்கும்படியாக இயற்கையாக மக்களுக்கு இயற்கை மற்றும்பேரழிவுக்கு காரணம் கண்ணுக்கு தெரியாமல் தங்களை ஆட்டிவைக்கும் சக்தி
எதுவென தெரியாமல் இருப்பதால் உருவாகிய பயத்தை தங்களுக்கு சாதகமாக்குபவனாக இருந்தால்தான் ஒரு இனகுழு மற்றவர்களை அடக்கி
ஆள முடியும் எனவே  அந்த பார்ட்டை எடுட்து கொண்டீர்கள்

மதசம்பந்தமான சில இயமநியங்களையும் கூற்றுகளையும் தேவநாகரி என்ற
சாதாரண ஜனங்களுக்கு புரியாத மொழியில் இயற்றி அதை தேவபாசை என சொல்லி அதன்மூலம் இயங்கினார்கள்

எல்லாமே திட்டமிட்ட ஒரு மேலாண்மை உத்தி இதை செய்ய அவர்கள் பல
உத்திகளை கையாண்டார்கள் அதுதான் அரசனுடன் நெருங்கி முதலில் ஆளும்
வர்க்கத்தை கைக்குள் போடுவது .

நாம் நோக்கும் பட்சத்தில் இவர்கள் ஆளும்வர்க்கமாக இல்லாமல் இருப்பது
தெரியும் ஆனால் ஆளும் கருத்துக்கள் இவர்களுடையதாக இருக்கும்
எதையும் தான் செய்யாமல் இன்னொருத்தனை செய்யவைப்பதென்ற
கலையும் உத்தியும் தான் இங்கு செயல்பட்டவை என்னைபோன்று
முற்காலத்தில் யாரும் கேள்வி எழுப்பினால் அதற்கு பதில் சொல்வதும் ஒடுக்குவது பார்பனர்களாக இருக்க மாட்டார்கள் கேள்விகேட்பவன் ஒரு சாதிக்குள் இருப்பான் எனவே அவனை ஒடுக்க அவனுக்கு மேல் இருக்கும் சாதி வந்துவிடும் அல்லது அதிகாரத்தில் இருப்போர் வந்துவிடுவர்.

இதையெல்லாம் ஒருவன் கல்விகற்றால்தான் அறிந்துகொள்ள முடியும் என்பதால் கல்வி திட்டமிட்டு தடைசெய்யப்பட்டு இருக்கிறது.

//
கேரளாவில் நம்பூதிரிகள் ஆட்சி முறை இருந்தது. மார்த்தாண்டவர்மா அதை எளிதாக ஒழித்து நாயர் அரசு முறை கொணர்ந்தார். ராணி மங்கம்மா ஆட்சியில் செளராஷ்டிரர்களும் பூணூல் அணிந்து பிராமணர்களுக்கு ஈடாக நடத்தப்படும் உரிமையை அரசிடம் இருந்து பெருகின்றனர். இதே போல் நிறைய எடுத்துக்காட்டுக்களை பார்க்கமுடியும். இது பார்பனர்கள் எல்லா காலத்திலும் ஆதிக்க சாதி/உயர்ந்த சாதி என்ற கருத்துக்கு என்னுடைய பதில்
//
பூணூல் அணிந்துவர்கள் எல்லாம் பிராமணர்களுக்கு ஈடாக நடத்தபட்டார்கள்
என சொல்வது மிகப்பெரிய தவறு செளராஸ்டிரர்கள் பூசை புனஸ்காரங்கள்
செய்ய அல்லதுசெய்விக்க தகுதி கொடுக்கப்பட்டவர்கள் அல்ல
இங்கு பூணுல்ல் என்பது நிறைய சாதிகள் போட்டு இருந்தார்கள் ,
செட்டியார் ,ஆசாரி இவர்களும் இவர்கள் ஆதிக்க சாதியாக இருந்தாலும்
பார்பனர்களுக்கு கீழேதன் இருந்துவந்து இருக்கிறார்கள்

எந்த நூலிலும் இவர்கள் பார்பனர்களுக்கு மேல் மத விசயங்களில் அதிகாரம் பெற்றவர்களாக சொல்லப்படவில்லை
 
//இன்றைக்கு தீட்சிதர்கள் என்று சொல்லிக்கும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருக்கும் பூசாரிகளுக்கும் வடக்கே தீக்ஷித் என்றும் ஆந்திராவில் தீக்ஷிதலு என்று போட்டுகொள்பவர்களுக்கும் மண உறவோ தொடர்போ கிடையாது. இதேபோல் ஆங்காங்கு இருக்கும் சாதிகளுக்கும். இன்றைக்கு சிதம்பரத்தில் இருப்பவர்களுக்கு அனுபவ பாத்யதை பற்றி செப்பேடோ மற்றயதோ இருப்பதாக உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள், என் கருத்தை திரும்ப பெற்றுக்கொள்கிறேன். இது பார்பனர்கள் ஒரு குழுவாக இருந்து மற்ற எல்லோரையும் அடிமைப்படுத்தினார்கள் என்பதற்கு என்னுடைய பதில்
//
பார்பனர்கள் ஒரு குழுவாக இயங்கவில்லை   என்பதற்கு ஆதாரமாக அவர்களுக்கு இடையே மண உறவை சொல்கிறீர்கள்
இன்றும் வடகலை தென்கலை என்றும் எத்தனையோ கிளை சாதிகள் பிரிந்து போனாலும் அவர்கள் ஐயர்களாக ஐயங்கார்களாக வலம்வந்தாலும்
தன் உயர்சாதி அந்தஸ்தை விட்டு அடுத்த சாதியில் மணம்முடிக்கவில்லை என்பதே பார்பனிய சாதி அடுக்கை அவர்கள் பராமரித்து வந்தார்கள் எனப்தற்கு பதில்

அதாவது பெண்கிடைக்காவிட்டால் ஐயங்கார் ஒரு ஆசார் இனத்திலோ
பறையர் இனத்திலோ பெண் எடுக்கவில்லை என்பதுதான் பதில்
ஆக உட்பிரிவுகள் இருப்பது ஒன்றும்  சாதி மறுப்போ அல்லது பார்பனிய அழிவோ அல்லது சாதி ஆதிக்கத்துக்கு எதிரான சாட்சியமோ அல்ல 

//இந்த பார்பனர்கள் உயர்ந்த சாதி என்பது வெள்ளைக்காரர்கள் ஆட்சி செய்ய கொண்டு வந்த பிரித்தாளும் கொள்கையும், மார்க்சியர்கள் ஒரு பொது எதிரியை கட்டமைக்க வேண்டி செய்த பிரச்சாரத்தின் விளைவு. இந்த கட்டமைப்பு எப்படி நடக்கிறது என்பதற்கு ஒரு உதாரணமும் சொல்கிறேன்.
//

//இன்றைக்கு அதிசங்கரரால் நிறுவப்பட்டதாக சொல்லப்படும் காஞ்சி சங்கர மடம் அவரால் நிறுவப்படவில்லை. சிருங்கேரி சங்கர மடம் ஒரு காலத்தில் கும்பகோணத்தில் இருந்து செயல்பட்டது. அப்போது சங்கர மடத்தில் மூத்தவருக்கும் இளையவருக்கும் பிரிவு ஏற்பட்டு இளையவர் கும்பகோணத்திலேயே தனியாக மடம் ஆரம்பித்தார். பின்பு காஞ்சியில் மடம் வந்ததெல்லாம் தனிக்கதை.  பத்து வருடங்களுக்கு முன்பு கூட சென்னையில் காஞ்சி சங்கராச்சாரியை கும்பகோணம் ஸ்வாமிகள் என்று என்னிடம் சொல்லக்கேட்டு இருக்கிறேன்.
//

வெள்ளைகாரன் வந்தபிறகுதான் சாதியே வந்ததுன்னு சொல்வீர்கள் போல தெரிகிறது அய்யா வெள்ளைகாரன் சாதியை உருவாக்கவில்லை அவன் கல்வியை உருவக்கினான் உண்மையில் அவனுக்கு குமாஸ்தாவாக இருந்து சர்பட்டம் வாங்கிய பார்ப்பனர்கள் பல அவனது கைக்கூலிகளக
இருந்துள்ளனர் இதில் இருந்து தெரிவது வேறென்ன அவன் இயல்பாவே ஆதிக்க சக்தி அவனுடன் இருக்கவேண்டும் என்றால்நம்ம ஆட்களை காட்டிகொடுக்கவேண்டும் வேறு என்ன செய்து சர்பட்டம் வாங்கி
இருப்பார்கள்

மேலும் ஏற்கனவே பார்பனர்கள் மத்தியில் இருந்த கல்வி அறிவானது ஆங்கிலேயனின் பேச்சை கிரகித்து பேச போதுமானதாக இருந்தது சொல்லவா வேணும் நம்ம பார்பனர்கள் ஆங்கிலேயர் ஆட்சியில் ஆங்கிலேயருக்கு அடுத்த இடத்தில் இருந்தார்கள்

//அப்புறம் நீதிக்கட்சியில் இருந்த பெரும்பணக்கரார்களுக்கு அவர்களை திட்டாமல் வேறு ஒரு கூட்டத்தை திட்டுவது நல்லதாக போனதால் இதுவே முன்னெடுக்கப்பட்டது.
//

நீதிகட்சி பார்பனர்களை திட்டத்தான் ஆரம்பிக்கப்பட்டது என நீங்கள் சொல்வது
உங்கார்ந்து ரூம்போட்டு சாதியத்தை கொண்டு வந்தார்களோன்னு நீங்க கேட்பது போல அது ஒரு கட்சியின் கொள்கை மீது அற்ப குற்றச்சாட்டை வைப்பதாகும்
ஒரு சாதியை திட்ட கட்சி ஆரம்பித்தால் அதற்கு மக்கள் ஆதரவு கிடைக்கும் என்றால் நிறைய கட்சிகள் உருவாகி ஆட்சியை பிடித்து இருக்கும்
மேலும் திட்டும் வசவும் ஒரு தத்துவ கூறுகாளாகி வழிகாட்டி இருக்கும் ஆட்சி
நடத்த


//
என்னைப்பொறுத்தவரையில் பார்பனர்களை நடந்த அனைத்துக்கும் பொறுப்பாளி ஆக்குவது சாதீயம் பற்றிய விவாதத்தை நடக்கவிடாமல் செய்கிறது. எல்லாரும் ஒரு காலத்தில் சாதிக்கொடுமைக்கு ஆளானார்கள், மற்றவர்களை கொடுமை படுத்தினார்கள் என்ற புரிதல் தான் சக மனிதனை
மனிதனாக மதிப்பதை கற்றுத்தரும்.
//

போகிற போக்கில் ஒரு கிரேட் எஸ்கேப்நீங்க சொல்வது எல்லாரும் சாதிகொடுமைக்கு உள்ளானார்கள் என சொல்லி சாதிகொடுமைகளுக்கு காரணமானவர்களை தப்ப செய்வது பார்பனர்கள் சாதிகொடுமைக்கு உள்ளானார்கள் என சொல்கிறீர்களா எந்த சாதி கொடுமை படுத்தியது
எந்த நூலில் அப்படி உள்ளது சொல்ல முடியுமா?

பார்பனர்களை நாம் பொறுப்பாளி ஆக்குவது என்ற பிரச்சனைக்கே இங்கு இடமில்லை ஏனெனில் அவர்கள்தான் பொறுப்பாக ஏற்கனவே இருந்துள்ளார்கள்
அதை அம்பலமாக்குவதே நமது வேலை இதை செய்தால் திட்டுகிறான் என்று
சொல்வது உண்மையை மறைப்பதாகும்

 

/
நீங்கள் சாதீய கொடுமை/அடக்குமுறை, ஆண்டான் அடிமை விவகாரம் எல்லாமே பார்பனர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது என்கிறீர்கள்.
//

வேறு யார் ஆரம்பித்து இருக்க முடியும் ஆரம்பித்து வளர்த்தெடுக்க அவர்களுக்கு
உதவிய கருத்து அதாவது தத்துவம் என்ன
என்பதை விளக்காமல் விடுகிறீர்கள்
இந்த இடத்தில்

//நான் இல்லை, எந்த சாதியும் அதுபோன்ற செயலில் ஈடுபட்டிருக்க முடியும். பார்பனர்களை குற்றவாளி ஆக்குவது அல்லது குற்றம் தொடங்கப்பட்டதற்கு காரணமாக்கப்பட்டது தான் தவறு என்கிறேன். ஆண்டான் அடிமை என்பது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் பூராவும் இருந்தது. இந்தியாவில் பார்பனர்களால் அவர்கள் எழுதிய மனுஸ்மிருதியால் சாதி வந்தது என்பது தவறு என்கிறேன்.

நான் முன்வைக்கும் கருத்து சாதீய கொடுமை சரி என்றோ அதனால் யாரும் பாதிக்கப்படவில்லை என்பது அல்ல.


பார்பனர்களை ஒட்டுமொத்த குற்றவாளி ஆக்குவது தான் சாதி ஒழியாமல் இருக்க காரணம் என்கிறேன். சாதிக்கொடுமை என்பது தனி மனிதன் அதிகாரம் தேடும் அடிமை தேடும் செயலாக பார்க்கபடவேண்டுமே தவிர எப்போது யார் எழுதினார்கள் என்று தெரியாமல் இருக்கும் மனுஸ்மிருதியை பிடித்து தொங்குவது அல்ல.
//

நீங்கள் மட்டும் யூகம் செய்யலாம் என்ற
சலுகையை நீங்களே உங்களுக்கு வழங்கி கொள்வது சிரிப்பான விசயம்
கடைசியில் உண்மையை ஒத்து கொண்டதற்கு நன்றி அதாவது சாதிய ஒடுக்குமுறை இருக்கு அதுக்கு பார்ப்பான மட்டும் பொறுப்பாக்க வேண்டாம் இதுதான்
நீங்கள் மைய்யமாக சொல்லும் விசயம்
மொத்த விவாதத்தின் அடித்தளமே இதுதான்

நாம் சாதியத்தின் ஆணிவேரை மறைத்தும் ஒழித்தும் சொல்லி எப்படி சாதியத்தை ஒழிக்க முடியும் மாறாக அவங்கள கண்டுக்காம சாதிய ஒழியுங்கள் என சொல்வது ஒரு பத்துபேர் சேர்ந்து செய்த குற்றத்தின் முதல் குற்றவாளி மற்ற ஒன்பது பேர் மேல குற்றம் சாட்டுவது போலத்தான்
யார் வெட்டி உயிர் போச்சுன்னு சரியா சொல்லமுடியாததால இந்தவழக்கில்
முதல் குற்றவாளியை விடுதலை செய்துடலாம்னு சொல்வதுதான் இந்த வாதத்தின் பொருள் அப்படி செய்துட முடியாதே.
நீங்களே சொல்கிறீர்கள் குற்றம் நடந்தது உண்மை ஆனால் அவர்கள் பொறுப்பல்ல யாராவேணாலும் இருக்கலாம் என்று
வேறு யாராக இருக்கமுடியும் என இந்த இடத்தில் ருசுபிக்க வேண்டியது நீங்களே

 

 





--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post