நான் அந்த மடத்தினுள் புகும்போது காரல் மார்க்ஸ் படம் பெரிய சைசில் மாட்டப்பட்டு பூச்சூடபட்டு இருந்தது
தாடிகிழவன் அழகாய் இருந்தார் பக்கத்தில் லெனினும் ஸ்டாலினும் இருந்தார்கள் மடாதிபதி முன்புறம் ஒரு சேர் போட்டு
அமர்ந்து இருந்தார் .
என் பெயர் தியாகு என்று அறிமுகபடுத்தி கொண்டதும் பேச தொடங்கினோம் வாருங்கள் சாப்பிட்டு போகலாம் என்றார்
சாப்பாடு முடிந்தது ருஸ்யா உட்பட அனைத்து புரட்சிகளையும் விலாவாரியாக பேசினோம்
பிறகு நான் கேட்டேன் ஏன் தோழர் மார்க்ஸ் மதம் மக்களை மயக்கும் அபினி என்றாரே நீங்கள் மார்க்ஸ் க்கு கோவில் கட்டியது சரியா என்றேன்.
மெதுவாக பேசுங்கள் என்றார் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு தோழர் நீங்கள் இம்மாதிரி கேள்விகளை தவிர்ப்பது நல்லது இங்கே இருக்கும் தோழர்களுக்கு இம்மாதிரி கேள்விகள் பிடிக்காது என்றார் .
வாயை மூடிக்கொண்டு அவர் பேசுவதை மட்டுமே கேட்கலானேன் மதிய பூசைக்கு ஏற்பாடு நடக்கிறது வாருங்கள் சற்று உலவிவிட்டு வருவோம் என்றார்.
பாதையெங்கும் பல்வேறு காலகட்டங்களில் இருந்த உற்பத்தி கருவிகள் மற்றும் புரட்சியை விளக்கும் பொம்மை காட்சிகள் தத்ரூபமாக இருந்தது.
லேசாக எட்டி பார்த்த போது விவாதம் செய்ய தனி தனி வகுப்புகள் எடுக்கப்பட்டு கொண்டிருப்பதாக யூகித்தேன்
கடுமையான வார்த்தைகளை மென்மையாக பேசுவதற்கும்,மென்மையான வார்தைகளை
கடுமையாக்கி சொல்வதற்கும் பயிற்சிகள் உண்டு என்றார்
மார்க்ஸுக்கும் எங்கெல்சுக்கு மட்டும் தினசரி பூசையும் நைவேத்தியமும் படைக்கப்படுவதாகவும் லெனின் உட்பட மற்ற தலைவர்களின் பிறந்த நாளின்போது சிறப்பான விழா நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
மற்றபடி மந்திரித்தல் உட்பட அனைத்து சடங்குகளும் இருக்கும் என்றும் அவர் பழைய உலகின் முறைப்படி இல்லாமல்
வேறு மாதியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்
எனது ஜீரண சக்தி வரவர குறைந்து கொண்டே வந்தது .
சோசலிச காலகட்டதிற்கான தயாரிப்பு நடந்து வருவதால் கொஞ்சம் கடுமையாகத்தான் தோழர்கள் இருப்பார்கள் எனவே நீங்கள் தனியாக மடத்தில் எங்கும் போகவேண்டாமென சொன்னார்.
இரண்டு நாள் தங்கலாம் என நினைத்து சென்ற எனக்கு அந்த சிகப்பு அங்கி பாதிர்யாரின் நடத்தைகள் அஜீரண படுத்த
மெதுவாக பேச்சை எடுத்தேன் தோழர் நான் போயிட்டு இன்னொரு நாள் வரவா
சரி போங்கள் ஆனால் முழுவிலாசம் கொடுத்து விட்டு போங்கள் என்றார்
ஏன் என வினவ "இல்லை போய் எங்களை பற்றி ஏதேனும் எழுதினால் " உங்களை உடனே எங்கள் ஆட்கள் தேடி வரனும் அதுக்குத்தான் என பதிலளிக்க
எழுதிவைத்து விட்டு வந்து விட்டேன்
நான் இதை எழுதுவதால் எனக்கு ஏதும் நடக்கலாம் என்றாலும் இதை சொல்லாமல் விட்டால் மார்க்ஸ் மன்னிக்க மாட்டார்
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================