கம்யூனிசம் என்றால் என்ன?-17





மூலதனம்தனத்தை ஆராய்ந்த மார்க்ஸ் அதில் உபரிமதிப்பு கோட்பாட்டை உருவாக்கி விளக்கினார். அதற்கு முன்பு ஒரு பொருளின் விலையை பற்றிய விளக்கம் முதலாளித்துவ பொருளாதார மேதைகளால் விளக்க முடியாமல் இருந்ததும் அதற்கு மார்க்ஸ் என்ற பேரறிஞர் வரவேண்டி இருந்தது.
நாம் இப்போது நமது பாடத்தின் அடிநாதத்திற்கு வருவோம் , முதலாளித்துவ சமூகம் என்பது அதில் இருக்கும் உற்பத்தி சக்திகள் மற்றும் உற்பத்தி உறவுகளை கொண்டுதான் தீர்மானிக்கப்படுகிறது என்றோம்
இரண்டு முரண்பட்ட வர்க்கங்கள் இருப்பதே சமூகத்தின் வளர்ச்சி இயக்கத்திற்கு காரணம் தற்போது முதலாளித்துவம் வந்துவிட்டதல்லவா
இந்த தரவுகளின் அடிப்படையில் சமூக மாற்றம் என்பது அடுத்து
பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம் நடக்கும் சாத்தியப்பாடு இருப்பதை
முன் அனுமானித்தார் மார்க்ஸ்.

அப்போ சோசலிசம் என்றால் என்ன? ருஸ்யாவின் சோசலிசத்துக்கும் ம்,சீனாவின் மக்கள் புரட்சிக்கும் என்ன வேறுபாடு என்பதை காண்போம்


முரண்பட்ட வர்க்கங்கள்
பாட்டாளி வர்க்கம் ,முதலாளி வர்க்கம்
உற்பத்தி உறவு
முதலாளித்துவ உற்பத்தி உறவு
உற்பத்தி சக்திகள்
வளர்ச்சி பெற்று ஆனால் முதலாளிகள் வசம் உள்ளது
முரண்பாடு முற்றும் போது
உற்பத்தி சக்திகளான , நிலம் , தொழிற்சாலை ஆகியவற்ற பாட்டாளி வர்க்கம் கைப்பற்றும்


படிக்க :



கூலியுழைப்பும் மூலதனமும்
(கார்ல் மார்க்ஸ்)
தமிழாக்கம்: மு.சிவலிங்கம்

கூலி, இலாபம் இவற்றின் ஏற்ற இறக்கத்தைத் தீர்மானிக்கும் பொது விதி

நாம் மேலே கூறினோம் [பகுதி 1-இல்]: ”கூலியானது தொழிலாளி உற்பத்தி செய்யும் பண்டத்தில் அவருக்குரிய பங்கு அல்ல. ஏற்கெனவே இருந்துவரும் பண்டங்களில் எப்பகுதியைக் கொண்டு முதலாளி உற்பத்தித் திறனுள்ள ஒரு குறிப்பிட்ட அளவு உழைப்புச் சக்தியை வாங்குகிறாரோ, அப்பகுதியே கூலியாகும்”. ஆனால் முதலாளி தான் விற்கின்ற, தொழிலாளி உற்பத்தி செய்த பொருளின் விலையிலிருந்து இந்தக் கூலியைத் திருப்பி எடுத்தாக வேண்டும். முதலாளி தான் செலவிட்ட உற்பத்திச் செலவுக்கு மேலாக ஓரளவு உபரி தனக்கு எஞ்சும்படி, அதாவது அவருக்கு ஓரளவு இலாபம் கிடைக்குமாறு, அவர் இந்தக் கூலியைத் திருப்பி எடுத்தாக வேண்டும்.
முதலாளியின் கண்ணோட்டத்தின்படி, தொழிலாளி உற்பத்தி செய்யும் பண்டங்களின் விற்பனை விலை மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது:
முதலாவது, உற்பத்தியில் முதலாளி ஈடுபடுத்தும் மூலப்பொருள்களின் விலையை ஈடுகட்டவும், அத்தோடுகூட உற்பத்தியில் அவ்வாறே ஈடுபடுத்தும் கருவிகள், எந்திரங்கள், இன்னபிற உழைப்புச் சாதனங்களின் தேய்மானத்தை ஈடுகட்டவும் ஆகும் பகுதி.
இரண்டாவது, அவரால் தரப்பட்ட கூலியை ஈடுகட்டும் பகுதி.
மூன்றாவது, எஞ்சுகின்ற உபரி - அதாவது முதலாளியின் இலாபம்.
முதலாவது பகுதி முன்பே இருந்துவரும் மதிப்புகளை ஈடுகட்டுகிறது. அதே வேளையில், கூலியை ஈடுகட்டும் பகுதியும், உபரியாக எஞ்சும் பகுதியும் (முதலாளியின் இலாபம்) முழுவதுமாகத் தொழிலாளியின் உழைப்பால் உற்பத்தி செய்யப்பட்டு, மூலப் பொருள்களுடன் சேர்க்கப்பட்ட புதிய மதிப்பிலிருந்து எடுக்கப்படுபவை என்பது கண்கூடு. இந்த வகையில், நாம் கூலியையும் இலாபத்தையும், அவற்றை ஒன்றோடொன்று ஒப்பிட்டுப் பார்க்கும் பொருட்டு, தொழிலாளி உற்பத்தி செய்யும் பொருளில் அடங்கியுள்ள பங்குகளாகக் கருதலாம்.
உண்மையான கூலி மாறாமல் அப்படியே இருக்கலாம், இன்னும் உயரலாம். எனினும் ஒப்பீட்டுக் கூலி குறைந்துவிடலாம். ஒரு நிகழ்வை எடுத்துக் கொள்வோம். பிழைப்பாதாரப் பொருள்கள் அனைத்தும் 2/3 பங்கு விலை குறைகிறது எனவும், அதேவேளை ஒருநாள் கூலி 1/3 பங்கு குறைகிறது எனவும், எடுத்துக்காட்டாக, மூன்று ஷில்லிங்கிலிருந்து இரண்டு ஷில்லிங்காகக் குறைகிறது எனவும் வைத்துக்கொள்வோம். தொழிலாளி முன்பு மூன்று ஷில்லிங்குகளைக் கொண்டு வாங்க முடிந்ததைவிட அதிக அளவு பண்டங்களை தற்போது இந்த இரண்டு ஷில்லிங்குகளைக் கொண்டு வாங்க முடிகிறது. என்றாலும், முதலாளியின் ஆதாயத்துக்குச் சரிவிகிதத்தில் தொழிலாளியின் கூலி குறைந்துவிட்டது. முதலாளியின் (எடுத்துக்காட்டாக, ஒரு தொழிலதிபரின்) இலாபம் ஒரு ஷில்லிங் அதிகரித்துள்ளது. இதன் பொருள், தனக்கு முதலாளி தருகின்ற முன்னைவிடக் குறைந்த அளவிலான பரிவர்த்தனை மதிப்புகளுக்காகத் தொழிலாளி, முன்னைவிட அதிக அளவிலான பரிவர்த்தனை மதிப்புகளை உற்பத்தி செய்தாக வேண்டும். உழைப்புக்குக் கிடைக்கும் பங்குடன் ஒப்பிடும்போது, மூலதனத்துக்குக் கிடைக்கும் பங்கு அதிகரித்துள்ளது. மூலதனத்துக்கும் உழைப்புக்கும் இடையே சமூகச் செல்வவளத்தின் பகிர்மானம் முன்னைவிட இன்னும் அதிகச் சமமின்மையாய் ஆகிவிட்டது. முதலாளி அதே [முந்தைய] அளவு மூலனத்தைக் கொண்டு முன்னைவிட அதிக அளவு உழைப்பை வாங்கிப் பயன்படுத்துகிறார். தொழிலாளி வர்க்கத்தின்மீது முதலாளித்துவ வர்க்கத்தின் ஆதிக்கம் வளர்ந்துவிட்டது. தொழிலாளியின் சமூக நிலை மேலும் மோசமாகிவிட்டது. முதலாளியின் நிலையைவிட இன்னும் ஒருபடி கீழே வலிந்து தாழ்த்தப்பட்டுவிட்டது.
அப்படியெனில், கூலி, இலாபம் இவற்றுக்கு இடையேயான எதிரிடை உறவில், அவற்றின் ஏற்றத்தையும் இறக்கத்தையும் நிர்ணயிக்கும் பொது விதி எது?
அவை இரண்டும் ஒன்றுக்கொன்று தலைகீழ் விகிதப் பொருத்தம் கொண்டுள்ளன. உழைப்பின் பங்கு (கூலி) வீழும் அதே விகிதத்தில் மூலதனத்தின் பங்கு (இலாபம்) அதிகரிக்கிறது. எதிர்மாறாகக் கூலி உயரும்போது இலாபம் குறைகிறது. கூலி எந்த அளவுக்குக் குறைகிறதோ அந்த அளவுக்கு இலாபம் உயர்கிறது; கூலி எந்த அளவுக்கு உயர்கிறதோ அந்த அளவுக்கு இலாபம் குறைகிறது.
முதலாளித்துவ வர்க்கத்தினர் தம் உற்பத்திப் பொருள்களைத் தமக்குச் சாதகமான முறையில் பிற முதலாளிகளுடன் பரிவர்த்தனை செய்து கொள்வதாலும், அவர்தம் பண்டங்களுக்கான தேவை அதிகரிப்பதாலும் ஆதாயம் பெற முடியும். புதிய சந்தைகள் திறக்கப்படுவதன் விளைவாக அல்லது பழைய சந்தைகளில் தற்காலிகமாகத் தேவை அதிகரிப்பதன் விளைவாக அல்லது இன்னபிற காரணங்களினால் [முதலாளிகளுக்கு] இத்தகைய சாதகமான நிலைமை ஏற்படலாம். எனவே, முதலாளி தம் இலாபத்தைக் கூலியின் ஏற்ற இறக்கத்தைச் சாராமல், உழைப்புச் சக்தியின் பரிவர்த்தனை மதிப்பைச் சாராமல், பிற முதலாளிகளை முந்திச் செல்வதன்மூலம் பெருக்கிக்கொள்ள முடியும். அல்லது, உழைப்புக் கருவிகளில் ஏற்படும் முன்னேற்றங்கள், இயற்கைச் சக்திகளின் புதிய பயன்பாடுகள், இன்னபிற காரணங்களாலும் முதலாளியின் இலாபம் அதிகரிக்க முடியும். அனேகமாக, இவ்வாறெல்லாம் வாதிடப்படலாம்.
முதலாவதாக, ஓர் எதிரான வழிமுறையில் ஏற்பட்டாலும்கூட விளைவு மாறப் போவதில்லை என்பதை ஏற்றுக்கொண்டாக வேண்டும். கூலி குறைந்ததால் இலாபம் உயரவில்லை என்பது மெய்தான். ஆனால், இலாபம் அதிகரித்த காரணத்தால் கூலி குறைந்துவிட்டது. மற்றொரு மனிதனின் அதே அளவு உழைப்பைக் கொண்டு, முதலாளி அதிக அளவிலான பரிவர்த்தனை மதிப்புகளைப் பெறுகிறார். ஆனால் இந்த உழைப்புக்காக அவர் அதிக விலை கொடுக்கவில்லை. அதாவது, உழைப்பானது முதலாளிக்குப் பெற்றுத்தரும் நிகர ஆதாயத்தைவிட ஒப்பீட்டளவில் குறைவாகவே உழைப்புக்கு விலை தரப்படுகிறது.
இரண்டாவதாக, பண்டங்களின் விலைகளில் ஏற்றயிறக்கங்கள் ஏற்பட்ட போதிலும் ஒவ்வொரு பண்டத்தின் சராசரி விலை, அதாவது பிற பண்டங்களுடன் அது பரிவர்த்தனை செய்யப்படும் விகிதம், அந்தப் பண்டத்தின் உற்பத்திச் செலவால் நிர்ணயிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொண்டாக வேண்டும். எனவே முதலாளித்துவ வர்க்கத்தினருள்ளே ஒருவரையொருவர் முந்துகின்ற, ஒருவரைவிட இன்னொருவர் அனுகூலம் பெறுகின்ற நடவடிக்கைகள் தம்மைத்தாமே சரிக்கட்டிக் கொள்கின்றன. எந்திர சாதனங்களின் மேம்பாடுகள், உற்பத்திச் சேவையில் இயற்கைச் சக்திகளின் புதிய பயன்பாடுகள், ஒரு குறிப்பிட்ட நேர அளவில், அதே அளவு உழைப்பையும் மூலதனத்தையும் கொண்டு, முன்னைவிட அதிக அளவிலான பொருள்களை உற்பத்தி செய்வதைச் சாத்தியமாக்குகின்றன. ஆனால், எவ்விதத்திலும் முன்னைவிட அதிக அளவிலான பரிவர்த்தனை மதிப்புகளைத் தோற்றுவிக்க வழிசெய்வதில்லை. ஒருமணி நேரத்தில், நூற்பு எந்திரத்தைப் பயன்படுத்துவதன்மூலம், அது கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு உற்பத்தி செய்ததைக் காட்டிலும் இரு மடங்கான நூலை, எடுத்துக்காட்டாக, 50 பவுண்டுக்குப் பதிலாக 100 பவுண்டு நூலை நான் உற்பத்தி செய்ய முடியும். எனினும், நாளடைவில் இந்த 100 பவுண்டு நூலுக்குப் பதிலாக, முன்பு 50 பவுண்டு நூலுக்குப் பெற்ற பண்டங்களைவிட அதிகமான பண்டங்களை நான் பெற முடியாது. காரணம், [நூலின்] உற்பத்திச் செலவு சரிபாதியாகக் குறைந்துவிட்டது. அதாவது, அதே செலவில் இரு மடங்கு நூலை [தற்போது] நான் உற்பத்தி செய்ய முடிகிறது.
முடிவாக, முதலாளித்துவ வர்க்கத்தினர், ஒரு நாட்டைச் சேர்ந்தவராயினும், ஒட்டுமொத்த உலகச் சந்தையைச் சேர்ந்தவராயினும், உற்பத்தியின் நிகர வருமானத்தைத் தமக்குள்ளே எந்தவொரு விகிதத்தில் பகிர்ந்துகொண்ட போதிலும், இந்த நிகர வருமானத்தில் உள்ளடங்கியுள்ள மொத்தத் தொகை, எப்போதுமே, நேரடி உழைப்பின் விளைபயனால் திரட்டி வைக்கப்பட்ட உழைப்பு எவ்வளவு அதிகரிக்கிறதோ அவ்வளவு தொகை மட்டுமே ஆகும். எனவே, இந்த மொத்தத் தொகை, உழைப்பானது மூலதனத்தைப் பெருகச்செய்யும் அதே விகிதத்தில், அதாவது கூலியுடன் ஒப்பிடுகையில் இலாபம் அதிகரிக்கும் அதே விகிதத்தில் வளர்கிறது.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post