ரஜினிக்கு கடிதம்


அன்புள்ள ரஜினிகாந்த்

உங்கள் படம் தியேட்டர்களில் ஓடிகொண்டு இருப்பதை நன்கு உணருகிறேன் ஏன் மண்டையில் அடித்து உணரசெய்துவிட்டார்கள்

ஆடுவெட்டுதல் பாலாபிசேகம் செய்தல், அழகுகுத்துதல் என உங்களை கடவுளாக்கில் கண்மூடி பக்தர்கள் தியேட்டரில் ரஜினிபடம் ஓடுவதை பறைசாற்றிவிட்டார்கள் .

நீங்கள் பேசியகூட்டத்தை திரும்ப திரும்ப ஒளிபரப்புது சன் டிவி . எந்திரன் , எந்திரன் என்று மந்திரம்போல
முனுமுனுக்க செய்வதென நோக்கமாய் திரிகிறார்கள் .

நான் ஒரு நாளுக்கு நூறு ரூபாய் வாங்கும் கூலிக்காரன் என்னைவிட நீங்கள் எந்த வகையில் உசத்தி.

என்னுடைய உழைப்பும் இந்த சமூகத்துக்கு போகிறது நீங்களும் இந்த சமூகத்தில்  தான் இருக்கிறீர்கள்

அப்போ என்னைவிட உங்களுக்கு சமூக  அக்கறை இருக்கவேண்டும் என்கிறேன்  சரிதானே .

இந்த சமூகம் எனக்கு மாதம் தரும் சம்பளம் மூவாயிரம் உங்களுக்கு சுமார்  மூன்றுகோடிக்கு மேலே இருக்கலாம்

நீங்கள் ஒன்றும் மற்றவகள் உழைப்பில்லாம் சமூகத்தில் வந்து குதித்துவிடவில்லையே

இந்த சமூகத்தின் ஒரு உற்பத்தி பொருள்தானே நீங்கள்  என்னைகாட்டிலும் நிரம்ப சமூக அக்கறை
உங்களைபோன்றவர்களுக்கு வேண்டும் அல்லவா

என்னை கடவுளாக்காதீர்கள் நான் மனிதன் என புத்தரே சொன்னார்

நீங்களோ உங்களை கடவுளாக்குவதை   சரி என்கிறீர்கள் போல தெரிகிறது

அட ரசிகர்களே இப்படி கிறுக்குதனம் செய்தால் நான் நடிக்கமாட்டேன் என
சொல்லத்தான் முடியுமா உங்களால்

அமைதியாக ஏற்றுகொள்வதால் இவர்களின்  கிறுக்குத்தனம் வளர்ந்து வருகிறதை அறிவீர்களா?

உங்களுக்கென்று ஏதேனும் சமூகத்தின் மீது  கொஞ்சம் அக்கறை இருக்கும் பட்சத்தில்
இதை தடுத்து இருப்பீர்கள்

இன்னும் சில பத்தாண்டுகளில் ஒரு நடிகனாக உங்களை மறந்துவிடுவார்கள்

எம்ஜி ஆருக்கு இருந்த புகழில் ஒரு துளிதான் உங்களுக்கு இருக்கிறது

இப்போது எம்ஜிஆர் எங்கே   ஆகவே பெரிய நடிகனாக வாழ்ந்து மறைந்து விடுதலை காட்டிலும்

சமூகத்தில் ஒரு மனிதனாக (சமூகத்தை பற்றி கவலை படாதவர்களை மனிதனாக
நான் மதிப்பதில்லை) வாழ்ந்து மறைந்துவிடுதல் உத்தமம்

உங்கள் மணிமகுடங்களில் உங்களை கிறுத்தனமாக ரசிக்கும் ரசிகர்கள்
குத்திய கொடிகள் இருப்பதை விட

உங்களின் சமூக அக்கறையை பாராட்டியவர்களின் வரிகள் இருப்பது
நல்லது ..

ஏன் மனிதனாக இருக்கனும் , ஏன் சிந்திப்பவனாக இருக்கனும் என்ற
கேள்விக்கு பதில்சொல்லபோவதில்லை

வணக்கம்



--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

5 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post