எந்திரன் -புதியகள்ளு பழைய மொந்தை

ஒரு விஞ்ஞானிக்கு உலகின் அற்புத திறன்களை கொண்ட அதிமானுடன் ஒருவன் தேவை படுகிறான் அப்படி எந்த மனிதனும் பிறக்கமுடியாதென்பதால் இயந்திர மனிதனை படைக்கிறான் .

ஏன் இவ்ளோ திறன்களுடன் கூடிய ஒரு இயந்திரமனிதன் தேவைபடுகிறான்.

காரணம் போரில் ஈடுபடுத்தப்பட ஆக அறிவியலின் வளர்ச்சி கூட அறிவை வளர்க்கவில்லை அந்த விஞ்ஞானிக்கு.

சரி உருவாக்கிவிட்டார் பிறகு அடுத்த கட்டத்தை பார்த்தால் அந்த இயந்திரமனிதனுக்கு உணர்வை கொடுக்கிறார்கள்.

கிட்டத்தட்ட கிழக்கையும் மேற்கையும் இணைத்து இடையில் திசைகள் இல்லாமல் செய்வது போன்றது!

இயந்திரம் என்றாலே உணர்வற்றது அதற்கு உணர்வா என நிமிர்ந்தால்

அது செய்யும் வேலை அடுத்தவன் காதலியை லவுட்டுவது

அட இங்கேயும் பிற்போக்கான்னு பார்த்தால் ஆம் பிற்போக்கேதான்

ஏற்கனவே எழுதப்பட்ட இதிகாசங்கள் டிராய் நகரம் அழிந்தது முதல் இலங்கை அழிந்தது வரை அடுத்தவன் பெண்டாட்டியை தொட்டதால்தான் என்றால்;இங்கும் இந்த அதிநவீன ரோபோட்டும் அதைத்தான் செய்கிறது.

என்ன வித்தியாசம் இதற்கு ஆணுறுப்பில்லை என்பது மட்டும் இந்த படத்தை விஞ்ஞான படமாக்குகிறது.

மற்றபடி இத்தகைய ஒரு படமெடுக்க செலவிடப்படும் திறன்கள் செலவுகள் எல்லாம் எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது என்றால் அந்த படம் சொல்லும் விசயத்தை வைத்து மட்டுமே

1.காதலியை அல்லது நண்பியை காப்பாற்ற போராடும் ரோபோ

2.பிட்டு அடிக்க உதவும் ரோபோவென

அதி உயர் அறிவியலை கூட அசட்டுதனங்களுக்கு உபயோகிப்பது அறிவியல் வளர்ந்தாலும் அறிவின்
உன்னதம் தெரியாதவர்களிடம் கிடைக்கும் கடலை மிட்டாய்தான் என்பது விளங்கிறது

மனிதன் செல்லமுடியாத சாக்கடை குழிகளுக்கும் சென்று அடைப்பெடுக்கவும்

மனிதனால் செய்ய முடியாத அறுவை சிகிச்சைகளை செய்யவும்

மனிதனால் நடக்கமுடியாத வெப்பநிலையில் குளிர் நிலையில்
நின்று வேலை செய்யவும் நமக்கு இயந்திர மனிதன் தேவைப்படலாம்

அப்போது அவனை இயக்கும் மனிதன்
சமூக கலாசாரரீதியாக அதி உன்னத நிலையில் இருப்பான்

அவனுக்கு போர் என்பதே தேவைப்படாத ஒரு விசயமாக இருக்கும்

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post