மகளுக்கு கடிதம்

அன்பு மகளுக்கு

வசந்தகாலத்தின் கடைசி வாரத்தின் முதல் நாள் உனக்கு கடிதம் எழுதுவேன் என்று நினைக்கவில்லை எப்படி இருக்கிறாய் ,உனது நண்பர்கள்  எப்படி இருக்கிறார்கள் .

இந்த முறை இணையத்தில் நீ உலவுவதாகவும் கதை கவிதைகள் எழுதுவதாகவும் சொல்லி இருந்தாய் மகளே மிக்க மகிழ்ச்சி ..
 
இணைய உறவுகளை பற்றி உன்னைவிட நான் நன்கறிந்தவன் என்ற முறையில்  சில வார்த்தைகள்.

இணையம் என்பது ஒரு சுழல்காடுன்னு சொல்லலாம் கருத்துக்கள் மோதிக்கொள்ளும் வெளி அது அங்கே நீ யாருடனும் பகைத்து கொள்ள கூடாதென  நான் விரும்புகிறேன்

நீ உனது கல்லூரி நண்பர்களை போல நினைத்து யாருடனும் குடும்ப விபரங்களையோ அல்லது உன்னைபற்றிய தனிபட்ட விபரங்களையோ பகிர்ந்து கொள்ளாதே .

நாளை அவர்கள் அதை உனக்கு எதிராக பயன்படுத்த ஏதுவாகும் .

என்னடா எடுத்தவுடன் எதிர்மறையாக பேசுகிறேன் என்று நினைக்காதே .

நட்பும் பிரிவும் சகஜம் ஆனால் இணையத்தில் பிரிவு என்பது மிகுந்த வலிதர கூடியது .

இணைய உலகவாசிகளின் குறுகியமனம் சின்ன விசயத்துக்கெல்லாம் உன்னை தூக்கி எறியும் ..

உன்னைபோல மெல்லிய இதயம்படைத்தவர்கள் நிச்சயம் மனவேதனை படுவார்கள் .

இணையத்தில் எப்போதும் எந்த பற்றும் வைக்காமல் நிச்சலாந்தியாந்தியாக இருக்க பழகிக்கொள்.

ஆண் நண்பர்களை பற்றி உனக்கு நன்றாகவே தெரியும் அவர்களையும் நீ  கவனத்துடன் பரிசீலித்து பழகவேண்டும் ஏனெனில் எல்லாரும் ஒரே மாதிரியாக  இருப்பார்கள் என சொல்லவோ யூகிக்கவோ முடியாது .

உனது கைபேசி எண் அல்லது கல்லூரி விலாசம் அல்லது நமது சொந்த ஊரின்  விலாசத்தை எக்காரணத்தை கொண்டும்  அரட்டையில் தெரிவிக்காதே  ஆண்களிடமோ ,பெண்களிடமோ.

இங்கே பெண் உருவில் சில ஆண்களும் இருக்கிறார்கள் .

நல்லவர்களை தேர்ந்தெடுப்பது சிரமம் எனவே அனைவர் மீதும் ஒரு கண்காணிப்பு வைத்திரு .

அன்பை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தகவல்களை பகிர்ந்து கொள்ளாதே.

நீ காபி சாப்பிட்டதை கூட கிண்டலாக பேசும் உலகம் இது.

ஆனால் இணைய உலகம் நான் சொல்லி தராததை உனக்கு சொல்லிதரும்  கற்றுகொள்ள ஆர்வம் இருந்தாம் நீ
நிறைய விசயங்களை கற்று கொள்வாய்  இங்கு  மனதை பூப்போல வைத்துக்கொள்

சின்ன குழந்தையின் பரவசத்துடன் இரு  !மலர்களை நேசி ! அதிகம் கவிதைகள் எழுது !

அங்கு வரும்போது நிறைய பேசலாம் உனது நண்பர்களை கேட்டதாக சொல்!


--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post