நடிகைகளும் வாழ்க்கை முரண்களும்

கண்நிறைந்த கணவன் , நல்ல வேளை வீடு குழந்தைகள் என்கிற கனவு எல்லா பெண்களுக்கும் இருக்கும் ஆனால் சினிமாவின் தாரகைகள்  இருந்து வீழ்ந்து விடுகிறார்கள் கனவு நிறைவேறாமலேயே

நட்சத்திரங்களை பார்பவர்களுக்கு அதன் பிரகாசம் பேசப்படகூடிய ஒரு விசயமாக இருக்கிறது

பார் எவ்வளவு அழகா மின்னுதுபார்னு ஆனால் நட்சத்திரங்களோ குழாயடிக்கு வர முடியாமல் தெருவில் வளைய வரமுடியாமல் போகிறது 

வாழ்க்கையின் பல்வேறு சிடுக்குகளை  சாதாரண மனிதனுக்கு வழங்கும் சமூகம்  அதையே வேறு வடிவில் நட்சத்திரங்களுக்கு வழங்குகிறது .

மின்னிக்கொண்டே விழுந்து விட்டால் பரவாயில்லை ஆனால் ஒளி இழந்து வானிலேயே இருந்து நீ யெல்லாம் ஒரு நட்சத்திரமா என இகழப்பட்டு விழுந்துவிடுவோமோ என இந்த தாரகைகள் ஒளியுடன் விழுந்துவிடுகிறது

நடிகைகள் என எடுத்துகொண்டால் குடும்ப அமைப்பை அவர்கள் நுழைவதற்கே மிகுந்த சிரமத்துடன் நுழைகிறார்கள்

சினிமாவுக்கும் வாழ்க்கைக்கும் இடையே ஒரு கோடு இருப்பதை உணர்பவர்கள் நடிகைகளை புரிந்து கொள்ளமுடியும்

அந்த கோட்டின் மேல் அடிக்கடி சந்தேகம் கொள்பவர்கள் நடிகைகளை தவறாகத்தான் பார்கிறார்கள்

நடிகைகளை ஒரு பக்கம் சுரண்ட சினிமா முதலாளிகள் அலைகிறார்கள்

சுரண்டி முடித்தததும் எச்சிலையாக தூக்கி எறியப்படும் நடிகைகள் வேதனை தாழாமல் சாகிறார்கள்

இதோ ஷோபனா இறந்துவிட்டார்  நம்மை சிரிக்கவைத்தவர் இறந்துவிட்டார்

அவர் இறப்பின் காரணம் சமூகமாக இருந்தாலும் தனிவிசயமாக இருந்தாலும் நாம் கவலை கொள்ள போவதில்லை

நமக்கு அடுத்த வேலை காத்திருக்கிறது

நாமெல்லாம் தனிதனியாக போய்விட்டோம் ஒருத்தரின் கஸ்டத்தை ஒருத்தருக்கு புரியவைக்க இயலவில்லை

அதான் மிகப்பெரிய இறப்பு

இந்த இணையதளம் சில விசயங்களை சொல்கிறது
காலத்தின் பின்னோக்கி பார்த்தால்// தியாகராஜபாகவதர் பி.யு.சின்னப்பா காலத்து சினிமா அமைதியாக இருந்தது. லட்சுமி காந்தன் கொலை வழக்கு சம்பவம் தவிர நடிகர், நடிகைகள் மகிழ்ச் சியாகவே வாழ்ந்தனர்.எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்திலும் அது தொடர்ந்தது. அப்போதைய முன்னணி கதாநாயகிகள் கே.ஆர். விஜயா, வைஜெயந்தி மாலா, பத்மினி, சரோஜாதேவி, சுஜாதா என பலர் திருமணம் செய்து சந்தோஷமாக குடும்பம் நடத்தினர். விவாகரத்து சிந்தனைகளே எழவில்லை. அந்த நடிகைகள் சிலரின் மகன், மகள்கள், டாக்டர், என்ஜினீயர், என உயர் அந்தஸ்தில் இன்று இருக்கிறார்கள்.//

இது ஏன் அந்த காலத்தில் இல்லாத வாழ்க்கை சிக்கல் இப்போது ஏன் ஏற்பட்டது

//அதன் பிறகு நிலைமை தலைகீழானது. தற்கொலைகள் விவாகரத்துகள், குடும்ப சண்டைகள் என பல பிரச்சினைகள் கோடம் பாக்கத்தை பிடித்து ஆட்டுகிறது.

படாபட் ஜெயலட்சுமி, ஷோபா, சில்க்ஸ் ஸ்மிதா, விஜியின் சாவுகளை திரையுலகம் மறக்கவில்லை. படாபட் ஜெயலட்சுமி “அவள் ஒரு தொடர் கதை”க்கு பின் பிரபலமானார். “ஆறிலிருந்து அறுபது வரை” படத்தில் ரஜினியுடன் ஜோடியானார். காதல் தோல்வி அவரை காவு வாங்கியது. “முள்ளும் மலரும்” படத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் ஷோபா. அவரும் காதல் தோல்வியாலேயே இறந் தார். பிரதியூஷா, மோனல், போன்ற சமீப கால நடிகை கள் தற்கொலைகளும் இப்படியே நடந்தன.//


படாபட் லட்சுமி முதல் இன்றைய சோபனா வரை இறந்தமைக்கு நிறைவேறாத காதல் மட்டுமல்ல குடும்ப சண்டைகள் முதல்தரமான காரணமாக் இருக்கிறது

ஏன் குடும்ப சண்டை வருகிறது சம்பாதிக்கும் நடிகையோ நடிகனோ எதோ ஒருவகையில் குடும்பத்தில் ஏமாற்றபடும்போது சண்டை வருகிறது .

நடிகர்களிடம் பெண்நடிகைகளுடனான காதல் கட்டுபாடற்ற முறையில் வளர்கிறது
திருமண உறவை அவர்களால் பேணமுடியவில்லை

/குடும்ப சண்டைகளால் விவாகரத்துகளும் பெருகியுள்ளது. ரஜினி, கமலுடன் ஜோடியாக வந்த அம்பிகா கணவனை பிரிந்தார். நடிகர் ராமராஜனை காதலித்து மணந்த நளினி விவாகரத்து பெற்று விலகினார். இயக்குனர் பார்த்திபனை மணந்த சீதாவும் அவரை விட்டு விலகினார். விந்தியா, கவுதமி, சுகன்யா, காவ்யா மாதவன் என பட்டியல் நீள்கிறது. இவர்களிடம் பேசினால் கணவர்கள் பற்றி அடுக்கடுக்கான குறை பட்டியலை வாசிக்கிறார்கள். இவர்களில் பலர் கணவர் குடும்பத்தாரால் சித்ரவதைகளும் அனுபவித்துள்ளனர்.//

தமது சொந்த வாழ்க்கையில் நேர்மையை கடைபிடிக்கமுடியாத நடிகர்கள் சொந்த வாழ்க்கை
சிக்கலை தீர்க்கமுடியாத இவர்கள் சமூக பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்ல கிளம்பி விடுவது இன்னொரு வேடிக்கை கட்சி ஆரம்பிப்பதும் நான் அடுத்த முதல்வர் என்பது காலகொடுமை

அடுத்து சகநடிக நடிகையர்களுடன் இவர்களால் சுமூகபோக்கை கடைபிடிக்க இயலவில்லை

//சக நடிகர், நடிகைகளுடன் நடக்கும் சண்டைகளும் இப்போது வீதிக்கு வந்துள்ளது. சீதாவும் பக்கத்து வீட்டில் வசிக்கும் மாயாவும் மோதிக் கொண்டு போலீஸ் நிலையம் வரை சென்றுள்ளனர் வடிவேலு, சிங்க முத்து தகராறும் பற்றி எறிந்தது. இப்போது உச்சகட்டமாக விஜயகுமார், வனிதா இடையே தந்தை மகள் சண்டை என பரிணாமம் பெற்றுள்ளது.
//

பொதுவாகவே இவர்களின் மனமுதிர்ச்சியற்ற தன்மையை பிரதிபலிக்கிறது
கார் நிப்பாட்டுவதற்கெல்லாம் சண்டை விஜயகாந்தை தோற்கடிக்க போட்டு தேர்தலில் நிற்பேன் என சொன்னவர் வடிவேலு//கூட்டு குடும்ப சிதைவும் மேலை நாகரீக தாக்கமுமே இவற்றுக்கு காரணம் என்கின்றனர்.

கதாநாயகிகள் ஒன்றரை கோடி சம்பளம் பெறுவது அவர்களை தனித்து வாழவும் சொந்தமாக முடிவு எடுக்கவும் தூண்டுகிறது. பெரும் பணம் சேர்வதால் சொந்த பந்தங்களை ஒதுக்குகின்றனர். வாழ்க்கை துணையை அவசரப்பட்டு தேர்வு செய்கின்றனர். அதை விட அவசரமாகவே முறித்தும் கொள்கின்றனர்.//

இயல்பாகவே மேலை நாகரீக தாக்கத்தில் நடிக நடிகையர் விழுகிறார்கள்
பிறகு வாழ்க்கை முறையும் மேலை நாகரீக வகையில் அமைத்து சிக்கல்
வந்தது கீழை நாட்டானை போல தற்கொலை செய்கிறார்கள் .


இவற்றை இந்த இணையதளம் சொல்வதைபோல வெறும் குடும்ப சிக்கலாக மட்டும் பார்க்காமல் அந்த நடிக நடிகையரின் அதிகப்படியான வறுமானத்தை கவனத்தில் கொள்ளவேண்டும் ஒருபக்கம் பணம் புகழ் மறுபக்கம் இவ்ளோ பணத்துக்கு நாம் என்ன உழைப்பை செய்துள்ளோம் என்கிற கேள்வி இல்லாமை சராசரியாக உழைத்து முன்னேறும்
நபர்களின் வாழ்க்கை சிக்கலை யோசித்து தீர்ப்பார்கள் ஒரு சிலரே தற்கொலை செய்வார்கள்
ஆனால் திடீரென கிடைக்கும் பணம் வாழ்க்கை பற்றிய புரிதலை வழங்குவதில்லை
--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

5 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post