ஷோபாசக்தி

ஷோபாசக்தி

விக்கியில் இவரை பற்றிய வரிகள்

இவரது வலைதளம்
சமூபகாலமாக ஈழத்து எழுத்தாளர்கள், புலத்திலிருந்து ஈழ எழுச்சிக்காக எழுதியும், பேசியும் வருபவர்களில் முக்கியமானவர் ஷோபாசக்தி .

எளிமையை காட்டுவதாக பேச்சு உடை மற்றும் பழகும் விதம் ஆகியவற்றில் இடதுசாரி தோழரை அனுகுவது போன்றே அமைந்தது .

எனது வலைப்பக்கத்தை பற்றி அறிமுகம் செய்து கொண்டு நான் பேச ஆரம்பித்தேன்
என்னுடன் எழுத்தாளர் H. பீர் முகமது. ,ஸ்டாலின்பெலிக்ஸ் , இன்னும் சில நண்பர்கள் இருந்தார்கள்

எனது கேள்வியின் மையமாக ஈழப்போராட்டத்தின் பின்னடைவு பற்றியதாக இருந்தது
அவரது பார்வையானது மொத்த ஈழத்தின் வரலாற்றில் அது ஒரு நிகழ்வு என்பதாக இருந்தது .
பின்னடைவுக்கு காரணம் ,

1.புலிகளின் போர்முறைதான் என்பதை மட்டும் அவர் கூறவில்லை
2.தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் (இதோ நாப்பது சீட் கிடைத்துவிடும் பிஜேபி வந்தால் ஈழ போர் திசை மாறிவிடும் என சொன்ன தமிழக அரசியல்வாதிகளை மிகவும் கோபித்தார்)
3.குறைந்த அளவு மக்களே அங்கிருந்து ஆயுதபோராட்டம் நடத்த (சுமார் 3 லட்சம் )பெரும்பான்மையானவர்கள்(சுமார் 10 லட்சம்)பேர் வெளிநாடு சென்றுவிட்டது
4.ஈழமக்களுக்கு அரசியலை போதிக்காமல் ஆயுதத்தை மட்டும் போதித்தது

(எந்த அரசியல் பற்றியும் பேசாமல் ஒரு தலைமுறை வளர்ந்துள்ளது அவனிடம் போய்
மாற்று கருத்தை பேசினால் மண்டையில் போடுவதுமட்டும்தான் சொல்லிதரப்பட்டுள்ளது )

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என சொல்லி அரசியல் செய்பவர்களையும் மிக கடுமையாக குற்றச்சாட்டினார் -அவர் இல்லை என்பதை உறுதியாக சொன்னார் .

”இருக்கிறார்” ”இருக்கிறார்” என்கிற பூச்சாண்டி இருக்கும்வரை மற்றொரு போராட்டம்
நடத்துவது அல்லது மாற்றுசிந்தனை வளரவே செய்யாது என்பதே அவரது பார்வை

அதெப்படி அவ்வளவு போராடியபின் சரணடைந்து மரணித்து இருப்பார் என்ற கேள்விக்கு
அது ஒரு டீல் என்றால் அந்த டீல் இப்படி நடந்தது மூன்றாம் தரப்பு ஈடுபட்டு பேசியதால்
நம்பி சரணடைந்தார்கள் என சொன்னார் .

அவரது உயிரிழப்பு அவருக்கு பெரிசில்லை ஏனெனில் அவர் சாவைகண்டு அஞ்சுபவரல்ல
ஆனால் பெரும்பான்மை மக்களை கொல்ல கொடுத்து சாக கூடாது என்றார் .

அடுத்து எனது கேள்விகள் அரசியல்ரீதியாக அமைந்தது

இலங்கையில் நடந்த போராட்டத்தை ஒரு வர்க்கபோராட்டமாக மக்களை திரட்டிய அரசியல் போராட்டமாக நடத்தி இருந்தால் இப்படி பட்ட ஒரு நிலை வந்து இருக்குமா என்ற எனது கேள்விக்கு

ஆரம்பத்தில் மக்கள் ஆதரவுடன் நடந்த போராட்டமாக இருந்தது என்றும் பிறகு புலிகள் சகோதர இயக்கங்களை கொலை செய்ததன் மூலம் பெரிய தவறு செய்துவிட்டார்கள் மேலும் மேலும் ,அவர்கள் நட்பு சக்திகளையும் மக்களையும் கொலை செய்யவும் அச்சுருத்தவும் செய்ததானது இந்த போராட்டத்தை ஒரு தலைமை ஒரு அமைப்பை சார்ந்ததாக்கி அதன் அழிவினூடாக அடுத்தகட்ட மீள்வளர்ச்சியை தடைசெய்தது என்கிற நிலமைக்கு தள்ளியதை சொன்னார்.

இந்த சந்திப்பினூடாக நான் முன்வைத்தது பிரிந்து பிரிந்து போராடாமல் ஈழ ஆதரவு சக்திகளை ஒருகிணைத்து போராடலாமே என்ற கோரிக்கைதான் .

இனி என்ன செய்யலாம் என்பதை பேச வரலாற்றை எடுத்து கொள்ளலாம் ஆனால் அந்த பேச்சானது செயலுக்கு அழைத்து செல்லாமல் செயலின்மைக்கு தள்ள கூடாது என்பதே எனது ஆர்வம்.

மக இக குறித்து:
முதலிலேயே மக இகவின் அரசியல் செயல்பாடுகளில் புலத்தில் அந்த இயக்கத்துக்கு இருந்த நல்லபெயர் கெட்டுவிட்டதை சொன்னார். சுட்டி(http://www.vinavu.com/2010/10/05/split/)
http://www.shobasakthi.com/shobasakthi/?p=760
முப்பதாண்டுகால அவர்களின் செயல்பாடுகள் புலத்து மக்களால் பாராட்டபட்டதையும்
இந்த சின்னவிசயத்தில் அவர்கள் பெயர் கெட்டுவிட்டதையும் சொன்னார் இதை பற்றி இரண்டொரு வார்த்தைகளோடு முடித்துகொண்டார் .

நான் முன்பு மக இக அனுதாபியாக இருந்தவன் என்ற முறையில் அவர்களது தற்போதைய செயல்பாடுகளை பற்றி அறியவில்லை என தெரியபடுத்தினேன் .

(எனது முரண்பாடுகளின் ஊடாக இவர் சொல்வதை கவனியாகம் இந்த விசயத்தின் உள்ள விமர்சனத்தை காணும்படி தோழர்களை வேண்டுகிறேன்)

முத்தாய்ப்பாக:
புலிகளுக்காக தானே ஆயுதம் எடுத்து போராடியும் பிறகு அவர்களது பாசிச செயல்பாடுகளால்
மனம்மாறி சுயமாக தனது கருத்துக்களை வெளியிடும் இவரும் தோழர் இரயாகரனும் சந்திக்கும் புள்ளிகளை நான் சுட்டிகாட்டினேன்

அதற்கு ஈழத்து மக்களுக்கு நன்மை நடக்கவேண்டும் என்பதில் எனக்கும் அவருக்கும் ஒரே கருத்துதான் இருக்கிறது ஆனால் சில விசங்களில் வேறு படுகிறேன் என்றார்

ஆக தமிழ்நாட்டில் இருந்து நாம் ஒரு தீர்வு கொடுப்பதற்கு பதில்
பிரிந்து கிடக்கும் ஈழ ஆதரவாளர்களின் ஒருங்கிணைப்புக்கு எதாவது செய்தால் அதுவே பெரிய பாரிய உபகாரமாக இருக்கும்

2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post