முதலில் இவரை அறிமுகம் செய்துவைத்தார்கள் அப்போது இவர் பாடகி சின்மயின்னு தெரியலை - அது முக்கியமில்லை
என்னவிசயமென்றால் சின்மயி சொல்றாங்க ஏன் இடஒதுக்கீடு சாதின்னு ஒன்னுமில்லை , ஒடுக்குமுறை எல்லாம் ஒருகாலத்தில் இருந்திருக்கலாம் இப்போ இல்லை , என பல அதிர்ச்சிகரமான தகவல்களை அள்ளி வீசினாங்க இதற்கு ஒத்து ஊதவும் பலர் டிவிட்டரில் கொட்டி கிடக்கிறாங்க இந்த விவாதத்தின் அடுத்த தாவலாக இசைக்கு போயிட்டாங்க .
சுட்டி :http://twitter.theinfo.org/22667842079952896
(இதில் ஏழரை மற்றும் நானும் சின்மயியுடன் பேசி இருப்போம்)
எனது டிவிட்டுகள் சிலவை காணோம் )
வடிவேலு காமெடில ஒருத்தன் சொல்றதுமாதி இசை எங்கும் இருக்குன்னு ஆரம்பிச்சுட்டாங்க
அப்போவும் நான் விடாம ஒடுக்கபட்டவர்களின் இசை தெரியுமா இசையும் சாதி வர்க்க வேறுபாடற்றதுன்னு சொல்லமுடியாதுன்ன்னு பேசவும் போதும்டா சாமி என்னை ஆளவிட்டுவிடுன்னு போய்ட்டாங்க?
நாம இந்த விசயத்தை ஒரு சாதரண நிகழ்வா பார்க்க முடியாது. இசையை பற்றி இவ்ளோ பேசுபவர் சமூகத்தில் என்ன நடக்குதுன்னு கொஞ்சம் தெரிஞ்சுக்கனும்
சாதியின் அடிப்படை என்னவென கொஞ்சமாவது புரிந்து இருக்கனும்
அல்லது நாம் பேசுவதை கேட்கும் மனநிலையிலாவது இருக்கனும்
இவர்களின் பாடல்கள் கேட்க இதமா இருக்கு என்பதை விட இவர்களின் கருத்துக்கள் விடும் நாராசமான சத்தம் சமூகத்துக்கு கேடு