ஏன் கம்யூனிச சிந்தனை புரியவில்லை

நண்பர் ஒரு கேள்வியை எழுப்பினார் நான் மகாநதி ஒரு தனிமனிதனின் சோகம்
சமூகத்தின் சோகமாக மாற்றீடு செய்யப்பட்ட படம் என்றதும் அவருக்கு
கோபம் பொத்துகொண்டு வந்தது

”கம்யூனிஸ்டுகளாகிய ஒழுங்க நீங்களெல்லாம்
எத்தனை சம்பளம் வாங்கிறீங்க அல்லாத்தையும் மக்களுக்கு கொடுங்க என்றார்”



தொழிற் சங்கத்தில் இருக்கும் ஒருவன் அதையே தனது சோம்பேறித்தனத்துக்கு உபயோகிப்பதில்லையா

நமது சொந்த பந்தங்களில் எத்தனை பேர் அரசு அலுவலகங்களில் வேலை செய்கிறார்கள் அவர்களை தட்டி கேட்டோமா?, என அடுக்கடுக்கான கேள்விகள்
எல்லாமே ஒரே புள்ளியில் கூடுகின்றன அதுதான் தனிமனிதந்திருந்தினால் நாடு
திருந்தும் என்ற கோட்பாடு

தனிமனித ஒழுக்கமின்மை ஊழல் லஞ்சம் அனைத்துக்கும் காரணம் எனவே தனிமனிதனாக திருந்துங்கள் என்கிறார்கள்


தனிமனிதன் கோட்பாடு தீர்வற்றது:
----------------------------------

சமூகம் தனிநபரால் ஆகி இருந்தாலும் உற்பத்தி தனிநபர் சாராமல் அதன் விதிப்படி இயங்குகிறது
-----------------------------------
சரி இந்த விசயத்தை ஆராய்வோம்

நான் திருந்துவது , பக்கத்து வீட்டுகாரனை திருத்துவது அல்லது என்னை பார்த்து சுயநலமில்லாமல் நல்லவனாக அவன் மாறுவது இப்படி ஒவ்வொரு முடியாக திருத்தி அழகான சிகை அழங்காரமாக்க முடிவு செய்யும் வாதம் இது


எந்த அடிப்படையில் இந்த வாதம் எழுகிறது என்றால் இயக்கமறுப்பியல் தன்மை கொண்டது

எப்படி இந்த சமூகம் என்பது தனிமனிதர்களின் சேர்க்கை எனவே தனிநபர்
மாறினால் சமூகம் மாறும்

ஒரு வகையில் சரி இதைத்தான் கருத்துமுதல் வாதிகள் ஆதிகாலந்தொட்டு சொல்லிவருகிறார்கள் ஆன்மீக சொற்பொழிவுகளில் தெருவெங்கும் கிருத்தவ
அழைப்புகளில் பாவிகளே மனந்திரும்புகள் என சொல்கிறார்கள்

ஆனால் சமூகம் ஏன் மாறவில்லை மாறாது ஏனெனில் முக்கிய விசயத்தை விட்டுவிட்டார்கள்


சமூகம் வர்க்கமாக பிரிந்துள்ளது :
----------------------------------

சமூகத்தில் நிலவுங் போராட்டங்களின் பின்னுள்ள வர்க்க போராட்டத்தை காணவிடாமல் இவர்களது சிந்தனை தடுக்கிறது
-----------------------------------

அதுதான் இந்த சமூகத்தில் இருக்கும் முரண்பாடு

நல்லவன் கெட்டவன் இந்து முஸ்லீமுக்கு மேலே சமூகம் வர்க்கமாக பிரிந்துள்ளதை மறுக்கும் கோட்பாடு

இரண்டு பெரிய வர்க்கங்களின் போராட்டமே சமூகத்தில் நடக்கும் போரட்டங்களின்
மொத்தமாக விளைவு என்பதை காணாதது இவர்களிடம் பேச புகுந்தால் எப்படியோ
கம்யூனிசம் பேசுகிறேன் என்பதை கண்டு பிடிச்சு வரலாற்றை மறுக்கிறார்கள்

ஆமாம் வரலாறு என்பதே திரிபாம்

எப்படி திரிபுன்னா அது ரகசியம் அவனவன் கோணத்தில் எழுதப்பட்ட வரலாறு என்கிறார்கள் அதென்ன கோணம் இங்கேயும் பாருங்கள் கருத்து முதல் வாதம் என்ன கருத்து முதல் வாதம்



வரலாற்றை கற்பது முதல்படி

-----------------
மனிதன் என்பதைவிட மனிதம் வளர்ந்துள்ளது அதன் வளர்ச்சி போக்கை ஆராயாமல் எந்த தீர்வும் கிடைக்காது
--------------------
சமூகத்தை பார்ப்பது என்கிறா தனிநபர் கருத்துதான் வரலாறென தப்பாக புரியும் விசயம்

சரி ஏன் தனிநபரில் அவனது சிந்தனையில் போய் நிக்கிறார்கள் என்றால் அவர்கள்
தனிநபராக சிந்தித்து தன்னை சுத்திய உலகை இப்போது இருப்பது மாதிரி ஆயிரம் ஆண்டுக்கும் முன்புன் இருந்திருக்கும் என கற்பனை செய்து கொள்கிறார்கள்

ஆகவே விசயங்கள் என்பவை மாறி வந்திருக்கு என்பதை மறுப்பதுடன்

எப்பவுமே இப்படித்தான் இருக்கிறது பாத்திரம் மட்டுமே மாறி இருக்கிறது என மறுத்து மறுபடியும்
இயக்கமறுப்பியல் போக்கில் விழுகிறார்கள்

இதனால்தான் இவர்களுக்கு சுட்டாலும் கம்யூனிச சிந்தனை பிடிபடவில்லை

ஏனெனில் அடிப்ப்டையே தப்பு அப்புறம் நாம் சொல்வது எல்லாமே தப்பாகத்தான் போகும்

என்ன செய்யலாம் அவர்கள் சிந்தனை போக்கை மாற்றனும்

அதற்கு என்ன செய்யனும் அவர்கள் துணிந்து தனது சிந்தனை போக்கு எந்த திசையில் இருக்கு என்கிறதை கண்டு மாற்று சிந்தனை போக்கை கைகொள்ளனும்


சிந்தனையின் பங்கு ஆர்வத்தின் பங்கு :
---------------------------------

சிந்திக்காமல் ரெடிமேடாக எதுவும் கிடைக்காது
-----------------------------------------

இதில் அவர்களின் பங்குதான் மிக அதிகம்

ஆக நடப்பில் இருக்கும் சமூகத்தை அறிய வரலாற்றை படிக்கவேண்டும்

அறிவியலை படிக்க வேண்டும் சமூகத்தின் போக்கை அறிய அதன் புரட்சிகளை

படிக்க வேண்டும்

இதற்கெல்லாம் பொறுமை வேண்டும்

அப்போதான் கம்யூனிசம் புரியும்
--


தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post