பாப்கார்ன் தலைமுறையா

முதலாளித்துவம் சிந்திக்கும் ஆற்றலை ஒழித்து விட்டது அது நம்மை சிந்திக்க விடுவதில்லை என்கிறார்கள்

ஒரு சின்ன உதாரணம் நாமெல்லாம் சின்ன பிள்ளையாய் இருந்தது சுமார் பத்து இருபது வருடத்துக்கு முன்பு

நாம் விளையாடிய பெரிய கேமே பம்பரமும் கிட்டி புல்லும்தான்  பெரிய கணக்கீடோ திறமை வெளிக்காட்டும் விளையாட்டோ கிடையாது

இப்போது சிறுவர்கள் விளையாடும் விடியோ கேம்மில் ஒரு சின்ன நகர்த்தலை கூட நம்மால் விளையாட முடியவில்லை

இதன் விளைவாக நான் முதலாளித்துவம் அறிவை வளர்த்திருக்கிறது என எதிராக விவாதிக்க வரவில்லை

மக்களின் அறிவு எங்கோ ஒரு மூளையில் தறிகெட்டு ஓடி கவுந்து விட்டது என சொல்லும் மேட்டிமைதனத்தை கண்டிக்கிறேன்

எல்லாம் பொருட்களும் வளர்கின்றன மனிதமூளையும் அப்படித்தான் முன்பு முன்னா என்ற கேமே பிரதானம் கம்யூட்டர் வந்த முதல் காலம்   இப்போது வந்திருக்கும் விளையாட்டுக்கள் ஏப்பை சாப்பையானவர்கள் விளையாட முடியாது

எம்பரர் என்கிற கேமை எடுத்து கொள்ளுங்கள் (இதுவே பழசுதான்)
ஒரு நாட்டை பிடிக்க உணவு தயாரிக்க வரலாற்றை புரிந்து கொள்ள இயக்கவியல் போக்கு எப்படி ஆகிறது என தெரிந்து கொள்ள இந்த விளையாட்டை விளையாடிப்பாருங்கள்  சமூக வளர்ச்சியை தெளிவாக்கும் விளையாட்டு இது

சமூகத்தில் அறிவு பட்டுபோய்விடவில்லை மேலும் அது புட்டிபால் குடிக்கவும் இல்லை  சமூகத்தின் அறிவு நேற்றை விட இன்றைக்கு வளர்ந்துள்ளது

ஏன் ஒரு விசயத்தில் நாம் ரொம்ப நேரம் குந்தியிருப்பதில்லை வேகம் வேகம் சிந்தனையில் வேகம்
விசயத்தை கிரகித்து கொள்வதில் வேகம் பிறந்து விட்டது

அல்ஜீப்ரா கணக்கு பிளஸ் டூவில் நடத்தப்பட்டது இப்போது ஐந்தாம் வகுப்பில் கற்றுதரப்படுகிறது நாம் அறிவாளிகளா இப்போது படிக்கும் மழலைகள் அறிவாளிகளா நமக்கு ஏபிசிடி மூன்றாம் வகுப்பில் வந்தது இப்போது ஆரம்பமே ஏபிசிடிதான்

வாழ்க்கையில் பொருள்தேடல் அறிவை தேட சொல்கிறது அந்த போட்டியில் அறிவு வளர்ந்து இருக்கிறது அதை மறுப்பது இயக்கத்தை மறுப்பதாகும்  அடுத்து வரலாற்றுக்கு வருவோம்

வரலாறு புவியியல் என இரண்டு பேப்பர் இப்போது சமூகவியல் எனும் ஒரு பேப்பர் இருக்கிறது

ஆளுமை எப்படி காலியாகும்

எந்த படிப்பிலும் ஆளுமை காலியாகாது மாறாக ஒரே கட்சி வெளியீடுகளை மட்டும் படிக்கும் இவர்களின் கட்சிகாரர்களின் ஆளுமை காலியாகிவிட்டதை கண்கூடாக பார்த்தேன்

இலக்கியம் என்றால் என்னவென ஒரு கேள்விக்கு இந்த கட்சி கண்மணிகள் பெரிசா விளக்கம் கொடுப்பார்கள்
ஆனால் நவீனத்துவ இலக்கியத்து நடைவாசல் கூட போயிருக்க மாட்டார்கள் இப்போது சொல்லுங்கள்

ஆளுமையை தனித்த விருபத்தை சொந்த மூளையை இழந்தது இவர்களது கட்சி கண்மணிகள் தாம்


மனப்பாட கல்விதான் இன்னைக்கும் இருக்கிறது அது மைனஸ் ஆனால்
குழந்தைகளின் கேள்வி அதிகரித்துவிட்டது எல்லாத்தையும் கேள்விகேட்கிறார்கள்

மார்க்சியத்தை அதன் வளர்சியதை அதில் ஏற்பட்ட தோல்விகளை பற்றி கேள்விகளும் இந்த இளைஞர்களிடம் இருந்து வருகிறது

விமர்சனம் வருகிறது பெண்ணிய கவிஞர்கள் வந்து கவிதைகள் எழுதுகிறார்கள்

கருத்துக்கள் எதிர்கருத்துக்கள் முட்டி மோதும் இடத்தில் இவர்கள் என்ன செய்கிறார்கள்

ஒடுக்குகிறார்கள் விளக்கமளிக்கவோ  விவாதிக்கவோ மறுக்கிறார்கள்

கேள்வி கேட்கும் நபர்களை இந்த கட்சிகள் ஊக்குவிப்பதில்லை ஏன்

அவர்களை திட்டி ஒதுக்கிவிடுகிறார்கள்  ஏன்

நாம் சொல்வதை படி கட்சி வேலையை செய் கேள்வி கேட்காதே என்பது அராஜகமில்லையா
ஒரு பக்கம் உபதேசம் மறுபக்கம் தடை முரண் நகை இது

1.சமூகத்தின் ஆளுமைகள் மூளை எல்லாம் வரண்டு போச்சு என சொல்லும் மருதைய்யனுக்கு இது பற்றி புத்தகத்தை மருத்துவர் ருத்திரன் கொடுத்தாராம்

ஆனால் என்ன தமாஸ் என்றால் இதை கொடுத்த மருத்துவரின் மண்டை
கழண்டு ரெண்டு நாளாகுது எல்லார் கூடயும் சண்டை போட்டு மிரட்டிகொண்டு திரிகிறார்

சுட்டி தரலாம் ஆனால் அது சுட்டிதனமா போயிடும்

2.இலக்கியம் குறித்த அசட்டு பார்வை கொண்டிருக்கும் தோழர்களிடம் இலக்கியத்தை படிக்க சொல்கிறார் நல்லவிசயம்
அதே போல மாற்று இலக்கியமெல்லாம் குப்பை என சொல்லி அதை பற்றி கிசு கிசு எழுதி தள்ள வேணாம்னு சொல்லுங்கய்யா

3.மற்றபடி வரலாற்றை படித்து ஓவியர் மருதுவின் ஓவியத்தை பார்க்க சொல்வது சரி

நவீன பாணி ஓவியங்களை எப்படி பார்க்கனும் என ஓவியருக்கும் மற்ற தோழர்களுக்கும் சொல்லிகொடுத்துடுங்க

ஏன்னா சோசலிச யதார்த்தவாதத்துக்கு அப்புறம் இலக்கியம் பயணமாகிடுச்சு
மருதுவின் ஓவியத்துக்கு அடுத்தும் ஓவியமும் பயணமாகிடுச்சு



--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

9 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post