கர்மயோகமும் கடைத்தேறலும்

கர்ம யோகம் கூறுகிறது "கர்மத்தை செய்; பலனை எதிர்பாராதே "என இதை பல்வேறு விதமாக உரைநிகழ்த்தி நியாயபடுத்தி இருக்கிறார்கள்  கீதையின் இந்த போதனையை ”வேலையை செய் பலனை எதிர்பாராதே” என கூறுவதாக வைத்துகொண்டால்,
அது முதலாளித்துவத்துக்கு அல்லது ஒடுக்கும் ஒரு அமைப்புக்கு எப்படி உதவி செய்கிறது என்பதை காணலாம்.

தொழிலாளி தனது வேலையில் இருந்து  முற்றிலும் அந்நியப்பட்டுத்தான் போய் விட்டான் அதை புறாவய உலகமே நிகழ்த்துகிறது தனது ஆன்மீக விடுதலைக்காக அவன் சுய ஈடுபாட்டுடன் நிகழ்த்தவில்லை எங்கெல்ஸ் எழுதுகிறார் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் முதலாளித்துவம் பிறந்த போது

//உழைப்பு, தனித்தனித் தொழிலாளர்களுக்கிடையே மேலும் மேலும் பிரித்துக் கொடுக்கப்பட்டது. எனவே, முன்பெல்லாம் ஒரு முழுப் பொருளையும் உருவாக்கிய ஒரு தொழிலாளி இப்போது அந்தப் பொருளின் ஒருபகுதியை மட்டுமே உற்பத்தி செய்தான். இந்த உழைப்புப் பிரிவினை, பொருட்களை முன்பைவிட விரைவாகவும் மலிவாகவும் உற்பத்தி செய்வதைச் சாத்தியம் ஆக்கியது. இது ஒவ்வொரு தொழிலாளியின் பணியையும், இடையறாது திரும்பத்திரும்ப நிகழும் எளிதான எந்திர இயக்கமாகக் குறைத்தது//

வேலையே (கர்மா) சிறு சிறு பகுதிகளாக பிரித்து செய்யப்படும்போது அதன்மீது அவனின் பற்று அல்லது பாசம் அல்லது அதன் பயன் அவனை சார்ந்ததாக இல்லாமல் போய் விட்டது முடிவாக அவன் செய்வது இப்போது கர்மயோகமே(?) என்றால் அவனுக்கு ஆத்ம விடுதலை கிடைத்து இருக்கனும் ஏன் கிடைக்கவில்லை  எங்கெல்சின் நூல்லில் இருந்து

//ஆனால், அதேவேளையில் அத்தொழில்துறைகள் பெரும் முதலாளிகளின் கைகளில் மாட்டிக் கொள்ளவும் செய்தன. மேலும் அவற்றின் தொழிலாளர்கள் தங்களிடம் மிஞ்சியிருந்த கொஞ்சநஞ்ச சுதந்திரத்தையும் பறிகொடுத்தனர். பெரும் முதலாளிகள் மிகப்பெரிய தொழிற்கூடங்களை அமைப்பதன்மூலம் சிறிய கைவினைத் தொழில் விற்பன்னர்களை மிகப் பெருமளவில் வேலையிழக்கச் செய்தனர். இத்தொழிற்கூடங்கள் பல செலவுகளைச் சிக்கனப்படுத்தின; மிக விரிவான உழைப்புப் பிரிவினைக்கும் வழிவகுத்தன. இதன் காரணமாய்ச் சீரான பட்டறைத் தொழில் மட்டுமல்ல, கைவினைத் தொழில்களும்கூடப் படிப்படியாக ஆலை முறையின் ஆதிக்கத்தின்கீழ் வந்தன.

இவ்வாறாகவே, நாகரிகமடைந்த நாடுகளில், தற்போதைய காலகட்டத்தில், ஏறத்தாழ உழைப்பின் அனைத்து வடிவங்களும் தொழிற்கூடங்களில் நிறைவேற்றப்படுகின்றன. அனேகமாக வேலையின் அனைத்துப் பிரிவுகளிலும், கைவினைத் தொழிலும், பட்டறைத் தொழிலும் விழுங்கப்பட்டுவிட்டன. இந்த நிகழ்ச்சிப்போக்கு, முன்னெப்போதையும்விட மிகப் பெருமளவில், பழைய நடுத்தர வர்க்கத்தைக் குறிப்பாக சிறிய கைவினைத் தொழில்முனைவோரைச் சிதைத்து அழித்துவிட்டது; தொழிலாளர்களின் வாழ்நிலையை முற்றிலுமாக மாற்றி அமைத்துவிட்டது; இரண்டு புதிய வர்க்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன//

இரண்டு புதிய வர்க்கங்கள் உருவான இந்த இடத்தில் கர்மா எப்படி இருவருக்கும் ஒன்றாக இருக்கும் என கீதை சொல்லுமா சொல்லாது ஏனெனில் அது நிலபிரபுத்துவ காலகட்டதில் எழுதப்பட்டு அது கடவுள் சொன்னதாக் ஏற்றிவிடப்பட்ட தத்துவம்

தொழிலுக்கு உரிய கர்மயோகம் இல்லாத போது கர்மயோகம் என்று எதைத்தான் சொல்கிறார்கள் என்பது அந்த கிருஸ்ணனுக்குத்தான் வெளிச்சம்  ஆலை முறை தோன்றியவுடன் இரண்டு பெரும் வர்க்கங்களும் சுரண்டலும் தோன்றிய கட்டத்தில் மேலே சொன்ன கர்மா என்பது இரண்டாகி விட்டது  அதாவது ஒடுக்குபவனின் கர்மா ஒடுக்கப்படுபவனது கர்மா

ஒடுக்கப்படுபவன் தனது கர்மாவை மாற்ற கிளர்ந்தெழுந்து புரட்சி செய்கிறான் இதை எந்த மதமாவது ஆதரிக்கிறதா

மாறாக இந்த உலகம் ஒரு சோதனை சாலை அதில் நீ பாசாவது பரலோகத்தின் இருக்கும் கடவுளை வேண்டுவதில் தான் உள்ளது என அடுத்த குண்டை போடுகிறது  அடடா செயலின் மூலம் விடுதலை என்றீர்களே என நாம் திருப்பி கேட்டால்
திரு திரு வென முழிக்கிறது 

இயந்திரதனமாக வேலை வாங்கப்படுபவனுக்கு தியானம் , பஜனை என்பவை தீர்வாக வைக்கப்படுகிறது

தனது உழைப்பில் இருந்து அன்னியமான மனம் தற்காலிகமாக இந்த தியானபுள்ளியில் தன்னை மறக்கிறது

அல்லது மறைக்கிறது

ஏன் கர்மாவே ஆனந்தமாகவல்லவா இருக்கவேண்டும் ஏன் இல்லை  அந்த கர்ம யோகத்தின் செயல்வடிவம்
ஆனந்த தரவல்லவா வேண்டும்  ஏன் தரவில்லை

அங்குதான் சமூகத்தின் வர்க்கபிரிவினை வருகிறது  ஒருவர்க்கம் உழைப்பில் ஈடுபட
இன்னொருவர்க்கம் சுரண்டுகிறது அவர்களின் சுகபோகவாழ்க்கைக்கு காரணம் கேட்கிறான் முன்சென்ம கர்மா என மழுப்புகிறது மதம்

அதெப்படி பெரும்பான்மையான மக்கள் ஒட்ட சுரண்டப்பட முன்சென்ம கர்மாமட்டும் காரணமாக இருக்கமுடியும் என்ற கேள்வியை வைக்கிறான்

அப்போ உங்க தத்துவங்கள் மிக குறிப்பிட்ட ஒருசாரருக்கானது எனவே அது பாட்டாளிகளுக்கு எதிரானது என முழங்குகிறான்

அந்தோ பரிதாபம் இந்த சாமியார்கள் மீண்டும் அவனை விடுவதாக இல்லை

மதம் எனும் அபினியை மேலும் பலவகையில் ஊட்டுகிறார்கள் நீ பக்தி செய் முக்தியடைவாய் என்கிறார்கள்

பக்தியோ பல்வேறு படிக்கட்டுகளால் ஆனாது முதல் படி குரு குரு பக்தி முக்கியம் என்றால் குருவை தேடு என்கிறது மதம்

குருவோ நித்தியானந்தாவை போல  கார்பரேட் சாமியார்கள்  அவர்களோ பெண்களின் கர்மாவை அறிய அவர்களின் உடல்மீது ஒப்பந்தம் போடுகிறார்கள்  இது ஒருவகை கர்மா என கூறப்படுகிறது

எந்த கர்மத்தை அறிய ஒருவன் பக்தனானானோ அதே கர்மம் அவனை வீழ்த்துகிறது  சாமியார்கள் முதலாளிகளின் கூட்டு புதிதாக என்ன சொல்கிறது  நீ என்னை காப்பாற்று நான் உன்னை காப்பாற்றுகிறேன்

இங்கே இடையில் ஒரு சிலர் வேண்டும் அவர்கள்தான் முதலாளித்துவ எழுத்தாளர்கள்

ஜெயமோகன் போன்றவர்கள் இதை பல்வேறுவிதமாக வியாக்கியானம் செய்யவேண்டும்

-------------------------------------------------------------
---தர்மத்தின் இயக்கமுறையின் நுட்பமான  சித்திரம் ஒன்று இந்த அழகிய பாடலில்

உள்ளது. பிரபஞ்ச நிகழ்வை கூர்ந்து  நோக்கினால் இந்த வினா எழும். 'எப்படி

ஒரு கருத்து பொருள் வயமான  வெளிப்பாடாக ஆகிறது?' இந்தப்

பொருள்வயமான பிரபஞ்சத்தில் ஒரு கருத்து உள்ளுறைந்திருப்பதை நாம்

காண்கிறோம். பொருண்மை விதிகளாகவும் விதிகளுக்குள் உள்ள

ஒத்திசைவாகவும் உள்ளது அந்தக் கருத்து. அவ்வாறு இந்த பிரபஞ்சத்தை

குறுக்கியபடியே சென்றால் இறுதியில் அதை ஒரு கருத்துநிலையாக சுருக்க

முடியுமென்றால் அதை பிரம்மம் என்று கூறலாம். பெளத்த சொற்களில் தம்மம்

அல்லது தர்மம் எனலாம். நவீன மொழியில் பிரபஞ்ச மனம் (Cosmic Mind)

எனலாம்.அந்த பிரபஞ்ச மனம் அல்லது பிரம்மம்  அல்லது தர்மம் எப்படி பொருள்வயமாக 

நாம் காணும் இந்த பெரும் விரிவாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது?

அதற்கான விளக்கமே அந்தப்பாடலில் உள்ளது. அதை எளியதோர் கவித்துவ

உருவகமாக கூறிச்செல்கிறது கீதை. இந்த கவியுருவகத்தை அது வேதங்களில்

இருந்து பெற்றுக்கொண்டு தனக்குரிய தத்துவார்த்தமான கோணத்தில்

விரிவாக்கம் செய்கிறது.
------------------------------------------

இவர்கள் சொல்லும் கருத்து எது அந்த கருத்தைத்தான் ஏற்கனவே இரண்டாக உடைத்து விட்டார்கள்


அதாவது :பிரபஞ்ச இயக்கத்துக்கு மழை காரணம்
மழைக்கு காரணம் வேள்வி இங்கு வேள்வி என்பது கர்மா என்றால்
ஒட்டு மொத்த சமூகத்தின் செயலே கர்மா என கொண்டால் அதனை
பற்றற்று செய்ய சொல்கிறார்கள் கர்ம யோகிகள்

அதாவது கூலி உயர்வுக்கான போராட்டமே தவ்றென கொள்ளலாம்
தன் பெண்டாட்டி பிள்ளைக்காக வேலைக்கு போவதே தவறென கொள்ளலாம்
அப்படி செய்தாலும் அதை உலகத்தின் சேமத்துக்கு செய்யவேணும் என்கிறார்கள்

சங்கம் வைப்பது கூலி கேட்பதா மூச் )



ஹெகல் கூறிய கருத்துமுதல் வாதம் இதுதான் பிரம்மம் பிரபஞ்ச மனம் காஸ்மிக்
ஆன்மா கடவுள் இதெல்லாம் என்ன ஏற்கனவே இந்த கருத்து இருக்கிறது அது தன்னை வெளிபடுத்த இயங்குகிறது என சொல்லி அவராவது ஒரு இயக்கவியல் கோட்பாட்டை வைத்தார் ஆனால் இவர்களோ
கருத்து உலகின் புறவய உலகை கடக்க என்ன செய்யவேண்டும் பற்றற்று செயல் செய்ய வேண்டும் என்கிறார்கள்
-----------------------------
கட்டுரையை மறுபடி வாசிக்கவும்
----------------------------------
பூசணிக்காயை இவர்கள் எப்படி மறைத்தாலும் நன்றாக தெரிகிறது
சுயநலம்

ஒரு வர்க்கத்துக்கானது இல்லை என்றால் வர்க்கமாக பிரிந்த சமூகத்துக்கு என்ன விளக்கம் இருக்க முடியும்

இவற்றை ஆராயாமல் பேசாமல் நீங்கள் கர்ம யோகத்துக்குள்ளோ பக்தியோகத்துக்குள்ளோ விழுந்தால்

மனம் பிளவுபடுவது உறுதி பிறகு கஞ்சாதான் மருந்தாகும்



அடுத்து உழைப்பானது ஒரு பண்டமாகி எப்படி அவனது அன்றாட செலவுக்கு மட்டுமே
வாய்பளிக்கும் ஒரு விசயமான பின்பு அதன் மேல் பற்றோ பாசமோ வைக்கமுடியாதென்றும்
அதன் பலனை எதிர்பாராமல் ஒருவன் வாழவே முடியாதெனவும் ஆகிறது

அதெப்படி என கீழே எங்கெல்ஸ் எழுதுவதை பாருங்கள்
//பாட்டாளிகளின் உழைப்பு முதலாளிகளுக்கு விற்கப்படுவது எந்த நிலைமைகளின் கீழ் நடைபெறுகிறது?

உழைப்பு என்பது ஏனைய பண்டங்களைப் போலவே ஒரு பண்டமாகும். எனவே, அதன் விலையும் பிற பண்டங்களின் விலையைத் தீர்மானிக்கும் அதே விதிகளாலேயே தீர்மானிக்கப்படுகிறது. பெருவீதத் தொழில்துறை அல்லது கட்டற்ற போட்டியின் – இந்த இரண்டும் ஒன்றிலேயே முடியும் என்பதை நாம் காண இருக்கிறோம் – ஆதிக்கத்தில் சராசரியாக ஒரு பண்டத்தின் விலை எப்போதும் அந்தப் பண்டத்தின் உற்பத்திச் செலவுக்குச் சமமானதாக இருக்கிறது. எனவே உழைப்பின் விலையும் அந்த உழைப்பின் உற்பத்திச் செலவுக்குச் சமமானதாக இருக்கிறது.

உழைப்பின் உற்பத்திச் செலவு என்பது, தொடர்ந்து வேலை செய்துவருவதற்கான சக்தியைத் தொழிலாளிக்கு வழங்கவும், தொழிலாளி வர்க்கத்தை அழிந்துபோய் விடாமல் தடுக்கவும் தேவைப்படுகின்ற பிழைப்புச் சாதனங்களின் அளவையே துல்லியமாய்க் குறிக்கிறது. எனவே, இந்த நோக்கத்துக்குத் தேவைப்படுவதைக் காட்டிலும் அதிகமாகத் தொழிலாளி தனது உழைப்புக்காகப் பெறப்போவதில்லை. வேறு வகையாகக் கூறுவதெனில், உழைப்புக்கான விலை அல்லது கூலியானது, ஆகக் குறைந்ததாக, வாழ்க்கைப் பராமரிப்புக்குத் தேவைப்படுகின்ற குறைந்தபட்ச அளவாக இருக்கும்.

என்றபோதிலும், வணிக நிலைமை சிலவேளை நன்றாகவும், சிலவேளை மோசமாகவும் இருப்பதால், தொழிலதிபர் தமது பண்டத்துக்குச் சிலவேளை அதிகமாகவும், சிலவேளை குறைவாகவும் பெறுவதைப் போன்றே தொழிலாளியும் சிலவேளை அதிகமாகவும், சிலவேளை குறைவாகவும் பெறுகிறார். ஆனால் தொழிலதிபர் சராசரியாக, நல்ல நிலைமையிலும் சரி, மோசமான நிலைமையிலும் சரி தமது பண்டத்துக்கு அதன் உற்பத்திச் செலவைக் காட்டிலும் கூடுதலாகவோ குறைவாகவோ பெறுவதில்லை. அதுபோலவே தொழிலாளி சராசரியாக, அவனது குறைந்தபட்சத் தேவைக்கு அதிகமாகவோ குறைவாகவோ பெறுவதில்லை.

உற்பத்தியின் அனைத்துப் பிரிவுகளையும் பெரும் தொழில்துறை எந்த அளவுக்கு அதிகமாகத் தன் வசப்படுத்திக் கொள்கிறதோ அந்த அளவுக்குக் கண்டிப்பாக, கூலி தொடர்பான இந்தப் பொருளாதார விதி செயல்படுகிறது.//


உழைப்பு சக்தி என்பதை அழிந்துவிடாமல் இருக்கத்தான் கூலி தரப்படுகிறது

எனவே அந்த கூலியை எதிர்பார்க்காமல் வேலை செய்ய முடியாது

//உழைப்பின் உற்பத்திச் செலவு என்பது, தொடர்ந்து வேலை செய்துவருவதற்கான சக்தியைத் தொழிலாளிக்கு வழங்கவும், தொழிலாளி வர்க்கத்தை அழிந்துபோய் விடாமல் தடுக்கவும் தேவைப்படுகின்ற பிழைப்புச் சாதனங்களின் அளவையே துல்லியமாய்க் குறிக்கிறது.//

ஆக சமகாலத்தில் நிலவும் சமூகத்தினை அதன் செயலினை எடுத்துரைக்க இயலாததாக கீதை இருக்கிறது

1.பலனை எதிர்பார்க்காத செயல் என ஒன்று இருக்கமுடியாது
2.வர்க்கமாக பிரிந்த சமூகத்தில் செயல்களின் பலனும் வர்க்கத்தின் சார்பானது
3.ஆசையை ஒழித்தால் துன்பமில்லை என்பது எப்படி குறைபட்ட கருத்தோ
அதை போலவே பற்றற்ற செயலும் விடுதலை தரும் என்பதும் குறைபட்ட கருத்தே
--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post